Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக் கோருகிறார் :வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்

Featured Replies

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக் கோருகிறார் :வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
 
பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக் கோருகிறார் :வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் மகன். கைதுசெய்யபட்ட அவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டனர்.
 
அங்கு வைத்து அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் எனக் கேட்டதற்கு ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியிருந்தனர். அவர்களை முன்னின்று கைது செய்து மூர்க்கத்தனமாக தாக்கியவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எதிர்க்கட்சித் தலைவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து பிரதிப் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டதன் பின்னரே அவர்கள் இரவு 8.00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரினால் அவ்விளைஞர்களின் மனித உரிமை முற்றாக மீறப்பட்டுள்ளது என்பதை யாழ். கச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் காரசாரமாக எடுத்துரைக்கப்பட்டது.
 
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தாம் நடவடிக்கை எடுப்பார் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்ததுடன், அது தொடர்பான முறைப்பாட்டை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் மேற்கொள்ளுமாறு வேண்டியிருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவ்விளைஞர்களிடம் தாம் செய்தது தவறு என்றும் தங்களை மன்னிக்கும்படியும் இனிமேல் இவ்வாறு தவறு இழைக்க மாட்டோம் என்றும், தங்கள் மீது முறைப்பாடு செய்யப்படின் வேலையை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் தங்கள் மீது கருணை காட்டும் படியும் வேண்டியதன் அடிப்படையில் அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுப்பதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.
 
இருந்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எனக்கு அறியத் தந்துள்ளனர். இவ்வாறாக பொலிஸாரினால் மனித உரிமைகள் எதிர்காலங்களில் மீறப்பட்டால் அது தொடர்பாக தனக்கு உடன் அறிவிக்கும் படி எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபடும் போலீசாரைப் பற்றிய முறைப்பாடுகளை செய்வதற்கு அரச அலுவலகங்களை நிறுவி பொதுமக்கள் அங்கு சுயமாக சென்று இலகுவான வழிமுறைகளில் அவர்களை தொடர்புகொள்ளவும் வழிமுறைகளை ஏற்படுத்தவேண்டும். இதை விடுத்து போலீசாரை பற்றிய முறைப்பாடுகளை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று ஒரு அரசியல்வாதி மக்களை கேட்பது சாதுரியமான ஒரு அரசியல் பொதுச்சேவையாக புலப்படவில்லை. மாறாக இச்செயல் அரசியல் இலாப நோக்கு கொண்டதாகவே கருதப்படும். மக்களுக்கு இலகுவாக சென்றடையவேண்டிய பொதுச்சேவைகளை பன்முகப்படுத்தாமல் அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் வைத்திருப்பது அதிகார துஸ்பிரயோகமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் எவ்வளவோ மனித உரிமைகள் நடந்து முடிஞ்சுது.. இன்னும் நடக்குது. அதில் உந்த தாடிக்காரக் கூட்டம் சேர்ந்து நடத்தின மனித உரிமை மீறல்கள் வேற. இப்ப தாடிக்காரக் கூட்டம் மீதே ஒருத்தன் கை வைச்சிட்டான் என்ற உடன..பதறிஅடிக்கிறதப் பார்க்க ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே உள்ளது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள் பெரியவர்கள். சுளகு தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என்றுமாம்.. என்றும் சொல்வார்கள். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.