Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் மிதக்கும் பாலைவன நாடு! (படங்கள்)

Featured Replies

கத்தாரிலும் கனமழை! (படங்கள்)

 

த்தாரிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 

Qatar.jpg

கத்தாரில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தலைநகர் தோஹா, சல்வோர்ரோடு, அல்கூர், ஹர்ப்பா, வக்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

Qatar%201.jpg

சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Qatar%203.jpg

 

Qatar%202.jpg

http://www.vikatan.com/news/article.php?aid=55569

Edited by நவீனன்
எழுத்து பிழை திருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

காலை  flat ஐ விட்டு இறங்கினால் அந்தமாதிரி மழை பொத்துக்கொண்டு ஊத்தியது வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் 10 நிமிட நடை தூரம்தான் இன்று இதே தூரத்தை கடக்க ஆபீஸ் வாகனத்தில் 30 நிமிடம் ஆகியது.

ஆனாலும் அபூர்வமாக மழையை காணும் எங்களுக்கு இது ஓர் மகிழ்ச்சியான விடயமே.

மழையே மழையே மெத்தப்பெய் மண்ணில் வெள்ளம் நிறையப்பெய்! 

 

Edited by colomban
எழுத்துப்பிழை திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, colomban said:

காலை  flat ஐ விட்டு இறங்கினால் அந்தமாதிரி மழை பொத்துக்கொண்டு ஊத்தியது வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் 10 நிமிட நடை தூரம்தான் இன்று இதே தூரத்தை கடக்க ஆபீஸ் வாகனத்தில் 30 நிமிடம் ஆகியது.

ஆனாலும் அபூர்வமாக மழையை காணும் எங்களுக்கு இது ஓர் மகிழ்ச்சியான விடயமே.

மழையே மழையே மெத்தப்பெய் மண்ணில் வெள்ளம் நிறையப்பெய்! 

 

என்ன நன்பா , மசகு எண்ணையுடன் மழைத் தண்ணியும் கலந்து அனுப்புற பிளான் போலக் கிடக்கு....!  :)

10 minutes ago, suvy said:

என்ன நன்பா , மசகு எண்ணையுடன் மழைத் தண்ணியும் கலந்து அனுப்புற பிளான் போலக் கிடக்கு....!  :)

கத்தார், அபுதாபி போன்ற நாடுகளில் மசகெண்ணை நீருக்கடியில்(கடலுக்கடியில்) இருந்துதான் அதிகமாக எடுக்குறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தெரியும் அளவை..., சும்மா ஒரு பம்பலுக்காக எழுதியது...!   :)

11052477_1005589406177957_74831121665397

12291286_1005589402844624_51812193637413

12307341_1005590676177830_55023104973650

 

பாலைவனமா? இல்லை சோலைவனமா?

qatar%20roads.jpg

  • தொடங்கியவர்

சௌதி ,கத்தாரில் பெய்து தீர்த்த மழை

 

கத்தாரில் ஒரு ஆண்டு முழுதும் பெய்யும் மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததை அடுத்து நாடே ஏறக்குறைய ஸ்தம்பித நிலைக்கு வந்தது.

151126120213_qatar_rain_2_640x360_afp_no
சைக்கிளை ஓட்ட முடியவில்லையே ! கத்தார் மழையில் சிறுவன்

கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் கூரையினூடாக தண்ணீர் அருவி போல வழிந்தது.

விமான நிலையக் கட்டுமானத்தின் தரம் குறித்து பிரதமர் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விமான நிலையம், 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தி முடிக்கப்பட்ட கட்டிட வேலைகளில் ஒன்றாகும்.

151126115614_qatar_rain_640x360_afp_nocr

 கத்தார் சாலைகளில் மழை நீர்

அண்டை நாடான சௌதி அரேபியாவிலும் பெய்த மழையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. தலைநகர் ரியாத்தில் கார்கள் மழை நீரில் மூழ்கின.

151126151310_saudi_rain_640x360_reuters_  சௌதியில் மழை ஏற்படுத்திய குழியில் கார்

கிழக்குப் பகுதி நகரான அல் ருமய்லாவில், மழை நீர் சாலையில் ஒன்பது மீட்ட அகலமுள்ள ஒரு படுகுழியை உருவாக்கி, ஒரு காரையே விழுங்கிவிட்டது.

காரில் பயணித்த இருவர் நீந்தி உயிர் தப்பினர்.

http://www.bbc.com/tamil/global/2015/11/151126_rainqatar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.