Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடு கட்டும்போதெல்லாம் விக்னேஸ்வரன் ஐயாவின் முகமே கல்லில் தெரிந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வீடு கட்டும்போதெல்லாம் விக்னேஸ்வரன் ஐயாவின் முகமே கல்லில் தெரிந்தது: போரால் பாதிக்கப்பட்ட உறவு
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 12:07.10 PM GMT ]
vikky_house_open-001.jpg
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நிதி உதவியுடன் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 14 வீடுகளில் நவாலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றை முதலமைச்சர் நேற்றைய தினம் மாலை திறந்து வைத்துள்ளார்.

முதலமைச்சர் அமைச்சினால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், போரில் இழப்புக்களை சந்தித்தவர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் வடக்கில் 5 மாவட்டங்களிலும் 14 வீடுகள் தலா 6 லட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி யாழ்.நவாலி பகுதியில் போரில் படுகாயமடைந்து வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு முதலமைச்சரின் நிதியுதவியுடன், அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டை முதலமைச்சரே நேற்றைய தினம் மாலை திறந்துவைத்துள்ளார்.

தாம் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக குடிசையில் வாழ்ந்த நிலையில் தமக்கான வீட்டுத்திட்டம் வழங்குமாறு பலரிடம் கேட்டபோதும், அவர்கள் எவரும் வீட்டுத்திட்டம் வழங்கவில்லை எனவும்,

முதலமைச்சரிடம் கேட்ட மறுதினம்,வீட்டுத்திட்டம் தமக்கு வழங்கப்பட்டதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதலமைச்சருக்கு தாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் எனவும் முதலமைச்சரே தங்கள் தெய்வம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கு முதலமைச்சர் கட்டாயம் வரவேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொண்டதற்கமையவே முதலமைச்சர் குறித்த வீட்டுக்குச் சென்று வீட்டை திறந்து வைத்தார்.

vikky_house_001.jpg

vikky_house_002.jpg

vikky_house_003.jpg

vikky_house_004.jpg

vikky_house_005.jpg

 

லங்காசிறீ.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயமொன்றை முதல்வர் நிதியத்திலிருந்தும் தனிப்பட்ட நிதிவளங்களை ஒருங்கிணைத்தும் முதல்வர் செய்திருக்கின்றார். கூட்டமைப்புக்குள் கூட இருந்து குழிபறிக்கும் வேலையை விட்டுவிட்டு இவ்வாறான செயற்பாடுகளை தமக்கு புகழ்தேடும் வகையில் ஒன்று அல்லது இரண்டு மட்டில் நிறுத்திவிடாமல் தொடர்ந்தும் செய்யவேண்டும்.

நிறைகுடம் தளம்பாது! இதற்கு மேல் என்ன புகழ் வேண்டும் ... தேடுவதற்கு! ... தமிழனின் அழிவில் தாம் வாழும் அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டவர் விக்கியர்!

முன்பு குத்தி ... கோயில்களுக்கு ஒரு கொஞ்சம் பெயின்ட் அடிக்க காசு கொடுத்தால், பதிலுக்கு "அத்தி நீடூளி வாழ்க, குத்தி பல்லாண்டு வாழ்க கூட குத்தியின் மகேஸ்வரியும் வாழ்க" என்று கட்டாயம் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டுமாம், நோட்டீஸ் அடிச்சு ஊரெல்லாம் ஒட்ட வேண்டுமாம் ... இந்திய அரசியல்வாதிகளின் பாணியில்!

இங்காலை, சம், மாவைகள் இராஜபோகம் கொழும்பில் அனுபவித்துக் கொண்டு, இதுவரை தமிழருக்கு வாழ்வைத்தான் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும், அன்றாட பிரட்சனைகளையாவது தீர்த்தது இல்லை! ... அதற்குள் நிபந்தனை அற்ற ஆதரவு சிங்கள அரசிற்கு!  .. அதற்கு பதில் ஏதாவது வந்ததா?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.