Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் பார்த்த யாழ்ப்பாணம் -மூன்று .

Featured Replies

மேன்மலும் பிடிக்காதவை.......கோவில்கள்.....கள்வர்....ராணுவம் .

 

யாழ்ப்பாணத்தில் பல கோவில்கள் தமது தனித்தன்மையை இழந்துவிட்டது என்பது என் அப்பிப்பிராயம்....நல்லூர் கோவிலில்... கோவிலுக்கும் கேணிக்கும் இடையில் இருந்தபாதை இப்போ இல்லை, கேணியை கோவிலுடன் சேர்த்துக்கட்டியுள்ளார்கள், இதனால் உட்பிரகாரம் நீண்டு பிரமாண்டமாக இருக்கிறது....என்ன நோக்கம் என தெரியவில்லை....கீழே Terrazzo போட்டும், மேலே அழகான Chandelier lights போட்டு பயங்கர சோடனைகள் செய்திருக்கிறார்கள், வெளியே சுற்றுவட்டமாக கூப்பிடு தூரத்தில் Gate போட்டிருக்கிறார்கள்......மேலும் கோபுரங்களிற்கு சந்தனகலரில் வண்ணமடித்திருக்கிரார்கள்....

 

முன்பு திருவிழாவின்போது கால் புதைய நடந்த இடமெங்கே....கோபுரங்களில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என வண்ணவண்ண நிறங்களில் கண்ணை உருட்டி பயம்காட்டும் உருவங்கள்...எங்கே....அமைதியாக இரு என கைகாட்டும் சுவாமிகள்....அழகான பெண்தேவதைகள்...என எல்லாமே காணமல் போய்விட்டன.....சும்மா சந்தனத்தை கரைத்து தலையில் ஊற்றிவிட்டதுபோல் இருக்கிறது......உருவங்களுக்கு பெயிண்ட் அடித்து களைத்துவிட்டார்கள் போலும்....மேலும் நல்லூர் கந்தனை தரிசிக்க நிறைய சிங்கள மக்கள் வந்துபோகிறார்கள்.

 

செல்வச்சன்னிதி கோயிலுக்கு போயிருந்தபோது மழை பெய்துகொண்டிருந்தது உட்பிரகாரத்தில் கால்வைத்தவுடன் சர்ர்....என்று வழுக்கியது....மழை பெய்து ஒழுகி வெள்ளமாக ஓடுகிறது.....வயதுபோனவர்கள் தெரியாத்தானமாக கால் வைத்தால் நிச்சயம் அவர்கள் ஆசை நிறைவேறும்.

மருதடி பிள்ளையார் கோவில் ஏறத்தாழ உள்ளே கட்டி முடித்துவிட்டார்கள்.... மருதமரம் அப்படியே இருக்கிறது......அதை மட்டும்விட்டுவிட்டு கூரை போடப்பட்டிருக்கிறது....மூலஸ்தானத்திற்கும் மக்கள் நின்று வழிபடும் இடத்திற்கும் நீண்ட.......தூர இடைவெளி.....திருவெண்ணாமலையில் ஒளி தெரிந்தமாதிரி தான் பூசை பார்க்கமுடியும்.....ஐயர்மாருக்கு நல்ல exercise தான்....

 

அங்கு வித்தியாசமான ஒரு உண்டியல்....அதாவது....ஒரு ஆனைச்சிலை...ஒன்று கட்டி அதன் கழுத்தில் வேண்டுதல் காணிக்கை என போர்டு கொழுவியிருக்கின்றது.....உங்கள் காணிக்கையை....ஆனையின் வாய்க்குள் போட்டால் அது அப்படியே Underground இல் இருக்கும் அறைக்குள் போய்விழும்.....அருமையான Technic.....

 

எனது ஊர் கோவிலான மஞ்சவனப்பதி கோவில் பிரகாரத்தை சுற்றிவரும்போது அம்மாவின் நினைப்புத்தான் வந்தது.....சிறுவயதில் அம்மாவின்பின்னால் பல கோயில்களுக்கும் அலைந்து திரிந்திருக்கிறேன்......அம்மா....தான் கொண்டுபோகும் பூவை எப்படியாவது ஐயரிடம் கொடுத்து மூலஸ்தானத்தில் இருக்கும் சாமியின் தலையில் வைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடிப்பார்... நானோ......சுற்றுப்பிரகாரங்களில் வைத்திருக்கும் மர உருவங்களான சூரன், குதிரை, காமதேனு.....ஆகியவற்றை...நோண்டிக்கொண்டிருபேன்......சூரனின் தலையை பிடித்து சுழட்டுவது......நெஞ்சைத்திறந்து......மயிலையும்...சேவலையும்.....திறந்துபார்ப்பது.......ஒருபக்கம் நாக்கை துருத்திக்கொண்டிருக்கும்......குதிரையின்...நாக்கை இழுப்பது.......மேளகாரர்...மேளத்தை....வைத்துவிட்டு வெளியே போனால்...ஒருமுறை அதை அடித்துபார்த்து....பின் அவர் ஓடிவர தூணிட்குபின்.....ஒளிந்துகொள்வது......ஐயர்...ஆறு மணிக்கு....பூசைக்கு... ஆரம்பமணியாக தனது....கையிலிருக்கும் மணியை கிலுக்க்கிகொன்டே.....பூசைக்குச் செல்ல....உடனே கோவில் பெரிய மணியை கைற்றில் தொங்கிக்கொண்டே அடிப்பதற்கு..ஓடுவேன்....எனக்கு போட்டியாக....எனது தம்பியோ...அல்லது வேறு ஒருவரோ அங்கு இருப்பார்கள்.....

 

ஏறத்தாழ எல்லாக்கோவில்களுமே பிரமாண்டங்களும், சோடனைகளும் கூடி தம் தனித்தன்மையும், அமைதியையும் இழந்துவிட்டன.......ஊருக்கு ஊர் போட்டி போட்டுகொண்டு.....கோவிலை கட்டுகிறார்கள்....... இதை விட மத மாற்றங்கள்....,அதனால் எழும்..புதுப்புது சர்ச்சுக்கள். இதைவிடுத்து.....குப்பைகளை எப்படி முறையாக அகற்றுவது, பிளாஸ்டிக்கின் பாதிப்பு, கள்ளர் பயத்தை எப்படி ஒழிக்கலாம் இப்படி பல விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்கு செலவழிக்கலாமே

 

மேலும்:

யாழ்பாணத்தில் கள்வர்கள் தொல்லை அதிகரித்துவிட்டது....அங்கே...இங்கே களவுபோய்விட்டது.... என அயலவர்கள் வந்து கூறுவார்கள்.... கள்வர்கள் இப்போ இரவில் வருவதைவிட காலையிலேயே களவுக்கு வருகிறார்கள்....காலை விடியுமுன் நாலு ஐந்து மணிக்குமுன் வீட்டுக்கு வெளியில் இருந்து ஏதாவது ஒரு சத்தத்தை ஏற்படுத்துவது......சத்தம் கேட்டு வீட்டுகாரர் வெளியே வருவார்கள் அந்நேரம் பார்த்து கள்வர் மெதுவாக உள்ளேபோய் பதுங்கி கொள்வது.....இது ஒருமுறை.... எமக்கும் இப்படியொரு சம்பவம் நடந்தது...எனது நண்பி காலை நாலுமுப்பதுக்கு எழும்பி washroom போய்விட்டு Flush பண்ணினால் தண்ணி வரவில்லை...உடனே அவர் water tank Switchஐ போட்டார்....போட்டதுமே வெளியில் இருந்த தண்ணிபைப்பிலிருந்து தண்ணி ஓடி சத்தம் கேட்டது....அவர் Tank சுவிச்சை போட்டதுமே சத்தம் கேட்டு நானும் எழும்பிவிட்டேன்....நண்பி விபரத்தை சொன்னதுமே நான் கதவுக்கு போடும் தடி(Bar)யை எடுத்துக்கொண்டு வெளியே போய் பார்ப்போம்...என வெளிக்கிட....நண்பி சொன்னார்....இது கள்ளனின் விளையாட்டு எங்களை வெளியில் வரப்பண்ணதான் இந்தவேலை....வெளியில் போனால் எமக்குத்தான் ஆபத்து விடியும் வரை பொறுத்திருந்து பாப்போம் என்றார்....எங்கள் வீட்டில் களவெடுப்பதற்கு எம்மைத்தவிர எதுவேமேயில்லை (புதுவீடு, பொருட்கள் எதுவுமேயில்லை)....நானும் நண்பியும் அவரது அக்காவின் மகனும் தான் தங்கியிருந்தோம்....எமது பாஸ்போட்டை கூட வீட்டில் வைக்கவில்லை......ஒன்றும் கிடைக்காட்டியும் கள்ளனுக்கு கோபம் வந்து அவன் கொலையும் செய்வான் என அக்காவின் மகன் பயம் காட்டினார்.....அத்துடன் பார்தடியை எறிந்துவிட்டு பேசாமல் படுத்துவிட்டேன்....இப்படியே இரண்டுநாட்கள் கள்வனும்வந்துபோனான்....நான் கனடாவிற்கு வெளிக்கிடமுதல்நாள். ...கேட்ட செய்தி....ஒன்று “உடுவிலில்....வீடுபுகுந்த கள்வர் வெளிநாட்டில் இருந்துவந்த ஒரு பெண்மணியை கத்தியால் குத்திவிட்டார்கள் ”...இப்படி...ஒவ்வொருநாளும் வெவ்வேறு இடங்களில் கள்வர்கள் வந்துபோனார்கள்...வீடுகளில் கள்வர்கள் புகுந்து வீட்டுகாரர் சத்தங்கள் போட்டாலும் அயலவர்கள் வெளியே வரமாட்டார்கள்....அவ்வளவிற்கு கள்வர் பயம்....நன்றாக விடிந்தபின்தான் என்ன ஏது என விசாரிப்பார்கள்.....

 

கள்வரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தாலும் கள்வர் தமது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்துவிடுவார்கள் அவ்வளவிற்கு கள்வருக்கும் போலீசாருக்கும் நல்ல உறவு இருக்கிறது என விபரம் தெரிந்த ஒருவர் கூறினார்...... இதனால் Townஇற்கு போவதற்கு கூட நான் எப்பவுமே ஒருவரை துணைக்கு கூட்டி போவேன்

 

இது தவிர ராணுவத்தினர் சுதந்திரமாக எல்லா இடங்களிலும் நடமாடுகின்றனர்......அவர்கள் ஒன்றுமே செய்யமாட்டார்கள்....அவர்களால் பிரச்சனை எதுவுமேயில்லை என அங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள்.......ஆனால் என்பார்வையில்...அரசாங்கம் தமிழ்மக்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வலயமே....போட்டு வைத்திருகிறது......அவர்களை மீறி....கிளர்ச்சி....போராட்டம் என்பது தற்போதைக்கு.....பகற்கனவுதான்.....

12250066_10153267999728354_1372451596356

12274520_10153267999738354_1962217476861

12294895_10153267999803354_8026606720607

12289539_10153268000018354_6477203186455

12321566_10153268000108354_1857215210583

12310435_10153268000393354_3028089744071

12316141_10153268000583354_8660091155592

12274753_10153268000438354_8062148550073

Edited by arjun
பந்தி இடைவெளி திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சபை சந்திக்கு போனாலும் குற்றம் குறை நொட்டி பிடிக்கிற கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும்...:cool:


கட்டுரையாளர்  குறிப்பிட்ட புலத்து குறைகள் ஒன்றும் புதிதல்லவே.....வேர்க்காத மண்ணில் இருந்துகொண்டு எதையும் எழுதலாம்.

சொந்த மண்ணில் இருந்துகொண்டு எழுதினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்...போயும் போயும்......

நாச்சியார் இராணுவத்துக்கும் சிங்களத்துக்கும் வக்காலத்து வாங்குவது கண்கூடாகவே தெரிகின்றது.:grin:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.