Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டினிச் சாவிலிருந்தும் படுகொலைகளிலிருந்தும் தமிழரைப் பாதுகாக்க ஐ.நாவுக்கு அவசர வேண்டுகோள்.

Featured Replies

பட்டினிச் சாவிலிருந்தும் படுகொலைகளிலிருந்தும்

தமிழரைப் பாதுகாக்க ஐ.நாவுக்கு அவசர வேண்டுகோள்.

தமிழ்மக்களைப் பட்டினிச் சாவிலிருந் தும் அரச பயங்கரவாதப் படுகொலைகளி லிருந்தும் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடு கள் சபைக்கு அவசர வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது.

வாகரையில் அரசாங்கம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் ஏ9 வீதி மூடப்பட்டுள்ளதால் உண்டாகியுள்ள மனி தப் பேரவலத்துக்குக் கண்டனம் தெரிவித் தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விலாசமிட்டு கிளிநொச்சி வெகுசன அமைப்புகளின் ஒன் றியம் கையளித்த மகஜரிலேயே மேற்கண்ட அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது

சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட இன அழிப்பில் வன்முறை கள் ஜெனிவா இரண்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மிக அதிகளவில் மேற்கொள் ளப்பட்டு வருவது தங்கள் சமூகம் நன்கு அறியும். வெளிப்படையாகவே அரச பயங்கரவாத நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. சர்வதேச சமூகத்தின் விரும் புகளையும் எதிர்பார்ப்புக்களையும் புறந் தள்ளி விட்டு சிறிலங்கா அரசாங்கத் தில் திட்டமிட்ட தமிழ் மக்கள் மீதான படு கொலைச் செயற்பாடுகள் ஊக்கமளிக் கப் பட்டு முழு அளவில் வளர்க்கப்பட்டு உச்ச வடிவெடுத்துள்ளது.

அதன் வெளிப்பாடாக கடந்த 8.12.2006 தொடக்கம் தமிழீழத்தின் வாகரைப் பகுதி யில் சிறிலங்கா அரசின் எறிகணைத் தாக் குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய படுகொலைகள் நாள்தோறும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சர்வதேச சமூகத்தின் முன்பாகவே நடத்தப்படுகின்றது.

படுகொலைகளை உடன் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குக

இத்தகைய படுகொலைகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய படுகொலைகளை உடன் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின் றோம்.

கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ் பேசும் மக்கள் பல்வேறு வகைகளில் பல் வேறு தளங்களில் தொடர்ச்சியான இனப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டு வருகின் றார்கள். அதன் தொடர்ச்சியாக அரசின் அண்மைய யுத்த நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தஞ் சமடைந்துள்ள மக்கள் குழுமத்தினர் மீதும் அதன் அண்டிய மக்கள் குடியிருப்புகள் வைத்தியசாலை பாடசாலை சுற்றியல் பிர தேசங்கள் மீதும் வாகரையில் படுகொலை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் உயிர் பாதுகாப்பற்ற மாபெரும் மனிதப் பேரவலம் ஒன்று எங்கள் தாயக மண்ணில் வெளிப்படையாகவே நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய போர் இடர்களுக்கு முகம் கொடுத்த எமது மக்க ளுக்கு சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பு மிக அவசியமாகின்றது என்பதை தங்க ளுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

பட்டினி நிலைமை தமிழ் மக்கள் வாழும் தாயகத்தின் இரு பெரும் பிராந்தியங்களான கிழக்கு மாகாணம் வாகரையிலும் யாழ்.குடா நாட் டிலும் உணவு மருந்து போக்குவரத்து என் பவற்றின் மீது திட்டமிட்ட இறுக்கமான தடை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளது இதனால் மோசமான பட்டினி நிலைமை இப் பிராந்தியங்களில் நிலவுகிறது. வாக ரையிலும் யாழ்.குடாநாட்டிலும் குழந் தைகள் உள்ளிட்ட பல பொதுமக்கள் பட்டி னியாலும் மருந்தின்மையாலும் படு கொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அவல நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குழந் தைகள் சிறுவர்கள் கர்ப்பிணித் தாய் மார் கள் நோயாளிகள் வயோதிபர்கள் போன்ற விசேட கரிசனைக்குரியோரின் போசாக்கு நிலமை மோசமான நிலையை அடைந்துள் ளது.

தங்கள் சமூகத்தினுடைய உயரிய கரி சனையில் செயல் விளைவையும் பிர யோகித்து எமது மக்களை பட்டினிச் சாவி லிருந்தும் அரச பயங்கரவாத படுகொலை யிலிருந்தும் பாதுகாக்குமாறும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உலகில் உணவு மருந்து போக்கு வரத்து உயிர்பாதுகாப்பு என்பவற்றை தடுக்கும் அச்சத்துக்குள்ளாக்கும் அரசு களையும் பயங்கரவாத குழுக்களையும் கண்டித்து கட்டுப்படுத்தி மனித வாழ்வில் உயர்வை மேன்மைப்படுத்துகின்ற தங்கள் சமூகம் இது விடயத்தில் விரைந்து நட வடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டு கின்றோம். உலகில் ஓர் மூலையில் உயிர் வாழ்தற்காக ஏங்கித் தவிக்கின்ற எம்மை சிறிலங்கா அரசின் திட்டமிட்ட படுகொலைகளிலிருந்தும் இன அழிப்பு நடவடிக்கை யிலிருந்தும் காப்பாற்றுங்கள் என்று மானிட தர்மத்தின் பேரால் வேண்டுகின்றோம்.

மனித சமூகத்தின் உயரின விழுமியங் கள் தொடர்பாக அக்கறை எடுத்து செயற் படும் தங்கள் சபை தங்கள் சாசனத்தின் சகல உறுப்புரைகளின்படியும். தமிழ் மக்க ளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக் கவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப் புக்களின் ஒன்றியத் தினராகிய நாங்கள் தமிழ் பேசும் மக் கள் சார்பாக உரி மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

www.uthayan.com

  • தொடங்கியவர்

அன்புக்குரிய வாசகர்களே...

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மதிப்பக்குரிய

கோபி அனான்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு

சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய பகுதியில் வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு பொருளாதாரத் தடை மற்றும் போக்குவரத்து பாதைகளை மூடி பட்டினிச் சாவிற்குள் தள்ளியுள்ளது. இவர்களைக் காப்பாற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

ஓகஸ்ட் 11ம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான ஏ9 பாதையை மூடி அங்கு வாழும் ஆறு இலட்சம் தமிழ் மக்களின் உணவு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வேறு எந்த வழியும் அற்ற நிலையில் மக்கள் நாளாந்தம் பெரும் இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.

போக்குவரத்துப் பாதை மூடியதாலும் உணவுப்பொருட்களின் விலை 10 மடங்கு அதிகரித்திருப்பதாலும். சராசரி வருமானத்தில் வாழுகின்ற மக்களின் அன்றாடத்தேவைகள் இதனால் முடக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பட்டினியால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இறந்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் வாழுகின்ற மக்களுக்கான பிரதான போக்குவரத்துப்பாதையை சிறிலங்கா அரசு மூடியதுடன் விமான மற்றும் எறிகணைவீச்சுக்களால் அப்பகுதித் தமிழ் மக்களை படுகொலை செய்வதுடன் அவர்களுக்கான உணவு மருத்துவம் உட்பட அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து தடைவிதித்துவருகின்றது.

நோய்வாய்ப்பட்டு வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல இராணுவம் மறுத்ததால் கற்பிணித்தாய் ஒருவர் மரணமானதும் அண்மையில் நிகழ்ந்தது இங்கு வாழுகின்ற 40,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பட்டினிக்கும் நோய்களுக்கும் முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்கின்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களை சிறிலங்கா அரசு தடை செய்ததன் காரணமாக மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கூட கிடைக்கப்பெறாத நிலை தோன்றியுள்ளது.

ருN மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களைச் சார்ந்தோர் ஒன்றுசேர்ந்து பட்டினிச்சாவை எதிர்நோக்கி நிற்கும் தமிழ் மக்களை காப்பாற்றுமாறும் இனிவரும் காலங்களில் ஒரு சுமூக நிலையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கு வழிவகுத்து தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

கீழ் குறிப்பிடப்படும் அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்குப்பிரயோகித்து தமிழ் மக்களுக்கு உதவுங்கள்.

போக்குவரத்துக்குரிய பாதைகளைத் திறப்பதற்கு ஆவன செய்தல்.

ஐNபுழு அமைப்புக்கள் உணவு, மருந்து, அத்தியாவசியப்பொருட்களை விநியோக்கவும் மருத்துவக் குழக்களை அனுப்பி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டி சிகிச்சைகளை மேற்க் கொள்ள அனுமதித்தல்.

தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத்தடையை நீக்கி அப்பாவி மக்கள் மீது உணவை ஒரு போராயுதமாக பயன்படுத்தவேண்டாமெனப்பணித்

பத்துநாடகளுக்கு மேலாக இந்த பெட்டிசன் பல இணையங்கள் மூலமாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆயினும் கையெழுத்து எண்ணிக்கை தான் இன்னமும் அதேயளவில் உள்ளது. களத்திலே ஒரு இரண்டு மூன்றாயிரம் பேர்கள் அங்கத்தவர் அங்கத்தவர் அல்லாத ஈழத்தமிழர் உள்ளனரே நாம் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டாலே எண்ணிக்க அதிகமாகிவிடுமே. சிங்களக் கோட்டைக்குள் இருந்தே பலர் கையெழுத்து இட்டு இருந்ததை காணக் கூடியதாக இருந்தது. எங்கே பார்ப்போம் எத்தனை பேர் செயல் வீரர்கள் என்று.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

UN demands protection of Vaharai civilians.

[TamilNet, Tuesday, 12 December 2006, 05:34 GMT]

United Nations Office of the Resident and Humanitarian Co-ordinator in Colombo, in a press statement Tuesday called on the parties, the Government of Sri Lanka (GoSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), to adhere to their responsibilities under international humanitarian law and said: "it is imperative that direct shelling where civilians reside stops and the civilian population must be granted full and unhindered freedom of movement, away from military operations."

Full text of the press release issued by the UN office in Colombo, follows:

12-12-2006

UN Demands Protection of Vaharai Civilians

Colombo 12 December: The United Nations is gravely concerned at the deteriorating prospects facing civilians in Vaharai as intense shelling continues for the fifth day in the area. An unconfirmed number of civilians are dead with dozens lying wounded at Vaharai hospital. Innocent civilians and school children suffered direct attacks on a school and private homes. In Trincomalee district, some 2,500 civilians left their homes and took refuge in Kantale.

Humanitarian agencies are delivering immediate assistance to the affected population and stand ready to undertake humanitarian response operations to address evolving needs.

The United Nations is deeply concerned about indiscriminate shelling of civilian residential areas, leading to death, injuries and evacuation of communities to Kantale and surrounding areas, out of danger zones.

“The critical need of the moment is the protection of these desperate civilians. All fundamental rights are currently being breached in areas like Vaharai and villages in Trincomalee District and it is imperative that direct shelling where civilians reside stops and the civilian population must be granted full and unhindered freedom of movement, away from military operations. The wounded need to be evacuated and assistance and protection to the civilian population must be guaranteed” warned Amin Awad, Acting UN Resident and Humanitarian Coordinator ai.

Some 35,000 people remain trapped along a sliver of land where government forces and the LTTE are engaged in a military campaign.

On November 29 a humanitarian convoy comprising 90 trucks, carrying much needed humanitarian assistance reached the area after a period of almost one month. That convoy was able to deliver essential food items as well as medical supplies. More life sustaining relief supplies are needed urgently.

We urgently expect the parties to adhere to their responsibilities under international humanitarian law to ensure protection of civilians and their freedom of movement, and unimpeded and secure access for international humanitarian actors to the north and east of the country.

www.tamilnet.com

  • தொடங்கியவர்

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் ஐ.நா கவனம் செலுத்தும்.

ஐக்கிய நாடுகள் கிழக்கில் ஏற்பட்ட ஆட்டிலறி தாக்குதலில் பல பொதுமகள் பலியானது மக்கள் இடம்பெயர்வது தொடர்பாகவும் ஆழ்ந்த கவனம் எடுப்பதாக தெரிவித்துள்ளது.

இவ் ஷெல் தாக்குதலில் பலியானவர்களும் காயமடைந்தவர்களும் பெரும்பாலும் தமிழர்கள்.

இடம்பெயர்ந்து பாதிக்காப்பட்ட மக்களிற்கு தற்போது பாதுகாப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

www.tamiloosai.com

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

பொதுமக்கள் மீது தாக்குதல்: ஐ.நா கண்டனம்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான கடுமையான எறிகணைத் தாக்குலை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரில் இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1,200-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

மேலும் கிழக்கில் தொடரும் தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்களை கவசமாகப் விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

கிட்டத்தட்ட 30,000 முதல் 35,000 வரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வாகரையில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கின்றனர். 3,000-க்கும் அதிகமான சிங்கள மக்கள் அரசாங்கத்தின் வசமுள்ள பகுதியில் வசிக்கிறார்கள்.

"வாகரை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை உரிமைகளே நசுக்கப்பட்டுள்ளன" என்று இடைக்கால ஐ.நா பிரதிநிதியும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளருமான அமின் ஆவட் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேரடியாகத் தாக்குதல்களை நடத்துவது அதிகார துஸ்ப்பிரயோகமாகும். இராணுவச் செயற்பாட்டுகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தடை எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுவதற்குப் பொதுமக்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

www.puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.