Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாது : சாடும் ராவணா பலய

Featured Replies

தமிழருக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாது : சாடும் ராவணா பலய
 
 
தமிழருக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாது : சாடும் ராவணா பலய
தமிழ் மாணவன் உயிர்த் தியாகம் செய்ததை வைத்துக் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிராபரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிவிட்டால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாது என்று ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி செயலாளரை ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.
 
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி தங்களுக்கும் எதிர்கட்சித் தலைவராகவே உள்ளார் என்று குறிப்பிட்ட தேரர், எனவே தங்களது பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று பாடசாலை மாணவன் ஒருவர் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது ஏன் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான மாவீரர் தினத்தில் இடம்பெறவேண்டும்?
 
இந்த சம்பவத்தை அடுத்து குழப்பங்கள் நிகழக்கூடும் என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், வடக்கில் பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுத்ததாக முட்டாள்தனமாக கூறியிருந்தார்.
 
அப்படியென்றால் இந்த நாட்டில் பரீட்சைகளில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்களே. அவர்கள் சார்பிலும் பாடசாலைகள் மூடப்படவேண்டும் அல்லவா?
 
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் குரல் எழுப்பிவரும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ச்சியாக இனவாதத்தையும், தமிழ் தேசியத்தையுமே கூறிவருகின்றார்.
 
அதற்கு ஒருபக்கம் பந்தம் பிடிக்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், மறுபக்கத்தில் வேறு பிரிவினரை பயன்படுத்தி வேறுபாடாக கருத்துக்களை பரப்பிவருகின்றார்.
 
இந்த நிலையில் இவர்களுக்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்துவிட்டால் என்னென்ன செய்வார்கள் என்பதை நினைத்துப்பார்க்கையில் ஜீரணிக்க முடியாது என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுப்பதை விடவும்...விளைவு மோசமாக இருக்காது என்பது நிச்சயம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்து விட்டால் என்ன நடக்குமோ? - ஜீரணிக்கவே முடியவில்லையாம். 
[Tuesday 2015-12-01 09:00]

தமிழ் மாணவன் உயிர்த் தியாகம் செய்ததை வைத்துக் கொண்டு பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிவிட்டால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாதுள்ளது  என்று ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மாணவன் உயிர்த் தியாகம் செய்ததை வைத்துக் கொண்டு பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிவிட்டால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாதுள்ளது  என்று ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் மாணவன் உயிர்த் தியாகம் செய்ததை வைத்துக் கொண்டு பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிவிட்டால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாதுள்ளது என்று ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

   
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி செயலாளரை ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று பாடசாலை மாணவன் ஒருவர் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது ஏன் பிரபாகரனின் பிறந்தநாளான மாவீரர் தினத்தில் இடம்பெறவேண்டும்? இந்த சம்பவத்தை அடுத்து குழப்பங்கள் நிகழக்கூடும் என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், வடக்கில் பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுத்ததாக முட்டாள்தனமாக கூறியிருந்தார். அப்படியென்றால் இந்த நாட்டில் பரீட்சைகளில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்களே. அவர்கள் சார்பிலும் பாடசாலைகள் மூடப்படவேண்டும் அல்லவா?

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் குரல் எழுப்பிவரும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ச்சியாக இனவாதத்தையும், தமிழ் தேசியத்தையுமே கூறிவருகின்றார். அதற்கு ஒருபக்கம் பந்தம் பிடிக்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், மறுபக்கத்தில் வேறு பிரிவினரை பயன்படுத்தி வேறுபாடாக கருத்துக்களை பரப்பிவருகின்றார்.இந்த நிலையில் இவர்களுக்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்துவிட்டால் என்னென்ன செய்வார்கள் என்பதை நினைத்துப்பார்க்கையில் ஜீரணிக்க முடியாது.

இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பினேன். இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், சிறு குற்றங்கள் இழைத்த 39 பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக கூறினார். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இனியும் விடுவிக்கப்படுவார்களா? என்ற கேள்வியை எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அமைச்சர், இனியும் அவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 10ஆம் திகதி விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அமைச்சர் இந்த சந்திப்பின்போது வழங்கினார்.அதேவேளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைப்பெறும் நிலையில் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும்,படை அதிகாரிகளது விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பினேன். அத்தோடு சிங்களப் புலி என்ற காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் விடுதலை குறித்தும் வினா எழுப்பினேன்.

அவர்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட்டு நிச்சயம் விடுவிக்கப்படுவார்கள் என்ற பதிலை அதிகாரிகள் வழங்கினார்கள்.

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரசகிய முகாம் சம்பந்தமாக ஐ.நா சிறப்பு அதிகாரிகளும் கருத்து வெளியிட்டிருந்தனர். அங்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் கடற்படை சிப்பாய்கள் மூவரை கைது செய்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர், அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும், தனக்கு அதுபற்றி தெரியாது எனவும் பதிலளித்தார். எனினும் அவ்வாறானதொரு சித்திரவதை முகாம் அங்கு முன்னெடுக்கப்படவில்லை என்றும், நிலக்கீழ் ஆயதக்கிடங்கு ஒன்றே அங்கு காணப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியிருக்கிறார் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=145998&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா கட்டி வைத்து ஒருவரை உதைக்கும் போது மட்டும் இவரால் ஜீரணிக்க முடிந்திருக்கென்றால் பாருங்கோவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.