Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் மீண்டும் மழை: மக்கள் அதிர்ச்சி!

Featured Replies

சென்னையில் மீண்டும் மழை: மக்கள் அதிர்ச்சி!
 

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மாடிகளிலும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், பெரும்பாலான பகுதிகளிலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர்.

rain%20with%20people01.jpg

மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வெள்ளத்தில் சிக்கி மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முதல் சென்னையில் மழை குறைந்து, மதியத்திற்கு பிறகு மழை நின்றது. இதனால், சென்னைவாசிகள் பெருமூச்சு விட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வெள்ளமும் வடியத் தொடங்கி, மெதுவாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் முதல் சென்னை வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி, தாம்பரம் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீட்பு நடவடிக்கைகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/55929-rain-lashes-chennai-again.art

Breaking Now
 
2.30 மணிவரை வெயிலடித்த நிலையில் திடீரென மழை கொட்டுகிறது
 
ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தை 20 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது
 
எம்.ஜி.ஆர்., ஜானகி எம்.ஜி.ஆரின் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது
 

ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அப்படியே வாரி சென்றது வெள்ளம்

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கிராமபோன், பரிசுப் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் போனது
 
மக்கள் கோபம்... ஜெ.வின் ஆர்.கே. நகர் தொகுதியில் 3 தமிழக அமைச்சர்கள் தப்பி ஓட்டம்
 
சென்னை, புறநகரில் மீண்டும் கனமழை- பலத்த காற்றுடன் கொட்டுகிறது
 
மயிலாப்பூரிலும் கனமழை கொட்டத் தொடங்கியுள்ளது
 
சென்னை மீட்பு பணிகளை ஆய்வு செய்ய ராணுவ தளபதி தல்பீர் சிங் வருகை
 

 
Read more at: http://tamil.oneindia.com/
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலை இந்த மழைநீர் கழுவிச் சென்றால் பரவாயில்லை. திராவிடம், இந்தியம் இந்த இரண்டையும் கடலில் தள்ள வேண்டும் இந்த மழை.

  • தொடங்கியவர்
சென்னை, புறநகரில் மீண்டும் கனமழை... பீதியில் மக்கள்
 
 சென்னை: சென்னைக்கு மழை ஆபத்து இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த சில மணிநேரங்களிலேயே கனமழை கொட்டத் தொடங்கியுள்ளது. காலை முதல் வானம் தெளிவாக தென்பட்ட நிலையில் லேசாக வெயிலடித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கனமழை கொட்டத் தொடங்கியுள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புபணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 40 மணிநேரம் விடாமல் கொட்டிய கனமழைக்கு நகரத்திலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Heavy Rain returns in Chennai
 
 
லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து, இருப்பிடங்கள் இன்றி தவித்து வருகின்றனர். ஏராளமானோர் உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவமும் வந்துள்ளது. உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் இன்று பிற்பகல் 2 மணிவரை மழை சற்றே ஓய்ந்திருந்தது. இதனால் சென்னைவாசிகளும், புறநகரில் வசிப்பவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னையில் இன்று காலை முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. வானிலை ஆய்வு மையமும், சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது என்றும், விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்தது. இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டிவருகிறது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, தரமணி, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணியில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டத்தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகளிடையே மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.
 
புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் மீண்டும் பெரு வெள்ளத்தை சந்திக்க வேண்டுமோ என்று மக்கள் பீதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டிவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம், கடலூரில் 9 செ.மீ., புதுச்சேரியில் 8 செ.மீ., செய்யாறு மற்றும் காரைக்காலில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சேத்தியாதோப்பு 6 செ.மீ, தரங்கம்பாடி, பரங்கிபேட்டை, மரக்காணம் 5 செ. மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ள மழை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-returns-chennai-dec-04-241486.html
  • தொடங்கியவர்

சென்னையில் விட்டு விட்டு மழை!

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12342597_1032003676858422_69528608645591

vikatan.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.