Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விடயத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்" தியாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விடயத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்" தியாகு

ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர்.

ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை:

ஈழம் இன்று?

ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள்.

2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழல் இருந்து வந்தது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோதே, அமைதிச் சூழலை கெடுப்பதாக வாக்குறுதி கொடுத்து தான் ஜெயித்தார். அதை நேரடியாக அவர் சொல்லாவிட்டாலும் கூட, அமைதி ஒப்பந்தத்தை திருத்தி எழுதுவோம் என்று சொல்லி ஜெயித்தார்.

அதிகாரப் பரவல் என்ற கருத்தையே நிராகரித்து, தமிழர்களின் தனி அடையாளத்தை வெறுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளின் ஆதரவோடும், கூட்டணியோடும் தான் அவர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக் கூடாது.

சிங்கள மக்களுக்கும், பேரினவாதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மீண்டும் போர் தொடுப்பது, போரின் மூலம் தீர்வு காண்பது, விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பது, தமிழீழத்திற்கான வாய்ப்பே இல்லாமல் செய்வது ஆகியவைதான் ராஜபக்ஷேவின் இப்போதைய செயல்பாடுகள்.

அதேபோல போர் நிறுத்த உடன்படிக்கையின் மிக முக்கியக் கூறுகளிலிருந்து அதாவது, மீன் பிடித் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது, அதி உயர் பாதுகாப்பு வளையங்களை அகற்றுவது, துரோக தமிழ்க் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போன்ற வாக்குறுதிகளிலிருந்து சிங்கள அரசு பின் வாங்கி விட்டது. ஜெனீவா பேச்சுவார்த்தையின்போதும் இந்தப் பிரச்சினைகள்தான் எழுப்பப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காத சிங்கள அரசு, இப்போது கூடுதலாக யாழ்ப்பாண மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உணவு, மருந்து போவதை தடுத்திருக்கிறார்கள். ஏதோ அந்த மக்கள் எல்லாம் குற்றம் செய்தவர்கள் போல, பொருளாதாரத் தடையை விதித்துள்ளனர்.

சிங்கள அரசின் இந்த செயலை, ராஜபக்ஷேவை ஆதரிக்கும் பன்னாட்டு அமைப்புகளும், ஏடுகளும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம நெடுஞ்சாலையை திறக்கப் போவது போல பேச்சு எழுந்தது. ஆனால் ஆளும் வர்க்கத்தில் இருக்கக் கூடிய சில அதிகார மையங்களும், ராணுவத் தலைமையிடமிருந்து வந்து பிடிவாதப் போக்கும் இந்த முயற்சிகளை முறியடித்து விட்டன.

அதேபோல போரின் மூலம் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க முடியும், கடலில் கூட்டு ரோந்து செல்வதன் மூலம் புலிகளை வெல்ல முடியும், பணிய வைத்து விட முடியும் என்று நம்பிக் கொண்டு, தீவிரப் போர் தயாரிப்பிலும், முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டிய காரணிகள்: ஈழத்தில் உள்ள தமிழர்களைப் போல பன் மடங்கு தமிழர்கள் இந்தியாவில் உள்ளனர். 6 கோடித் தமிழர்களின் தாயகம் இந்தியாவில் குடியிருக்கிறது. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழீழ மக்கள் பால் கொண்டுள்ள ஒருமைப்பாட்டு உணர்வை, நேச உணர்வை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

இந்த மக்களைக் கருத்தில் கொண்டு இந்தியா, தமிழீழ மக்களுக்குச் சாதகமான, குறைந்தது, அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கக் கூடிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்தியாவிடமிருந்து அது வரவில்லை.

அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு படையெடுப்பு நேர்ந்து, ஒரு சிங்களனைக் கூட இந்தியப் படைகள் கொல்லவில்லை. மாறாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இந்திய வீரர்களால் சிதைக்கப்பட்டவர்களும் தமிழ்ப் பெண்கள்தான். தமிழர்களுக்குத்தான் இந்திய அமைதிப்படை அதிக சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் வேறு வழியின்றி திரும்பி வந்தது.

இந்திய, இலங்கை அமைதி உடன்படிக்கையின் முக்கிய அம்சமான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட இன்றைக்கு கொழும்பு உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கிறபோது, அதுகுறித்து இந்தியா கவலைப்படவில்லை. ஒரு சர்வதேச உடன்படிக்கையை, இரு நாட்டுத் தலைவர்கள் சேர்ந்து செய்த உடன்படிக்கை போகிறதே, நமது வாக்குறுதி என்னவானது என்று இந்தியா கவலைப்படவில்லை.

சென்னைக் கடற்கரையில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி, அமெரிக்காவுக்குப் போகவிருந்தவரை, பயணத்தைத் தாமதப்படுத்தி, ராஜீவ் காந்தி அழைத்து வந்து, தூக்க முடியாத எம்.ஜி.ஆரின் கையைத் தூக்கிக் காட்டி, உலகத்தில் தமிழர்களுக்கு 2வது மாநிலம் உருவாகிறது என்று கூறினார்களே, அதைப் பற்றி இப்போது பேசக் கூட இல்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நேரடியாகவும், சுற்றடியாகவும், ராணுவ வகையில் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகளைச் செய்து வருகிறது. லீத்தல் வெப்பன், நான் லீத்தல் வெப்பன் என்றெல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். ரேடார் நான் லீத்தலா, லீத்தலா என்று ஆராய்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்க் கப்பல் கொடுக்கிறார்கள். பயிற்சியும் கொடுக்கிறார்கள். பயிற்சி லீத்தலா, நான் லீத்தலா? இந்தியா பதிலளிக்க வேண்டும்.

இலங்கைக்கு, அமெரிக்காவாலோ, பாகிஸ்தானாலோ, சீனாவாலோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, எனவே அந்தப் படைக்கு பயிற்சி கொடுக்கிறோம் என இந்தியாவாலேயே கூற முடியாது. அவர்களுடைய உள்நோட்டுப் பிரச்சினை எனக் கருதப்படக் கூடியது தமிழீழ பிரச்சினை மட்டுமே.

அல்லது, முன்பு ஜேவிபி கலகம் செய்தது போல சிங்களர்களுக்குள் புரட்சி நடக்கிறது, எனவே அதை ஒடுக்க ஆயுதம் தருகிறோம் என்றும் இந்தியாவால் கூற முடியாது.

இந்தியா, இலங்கைக்கு என்ன உதவிகள் செய்தாலும், அது தமிழர்களுக்கு எதிரானதுதான். இதை தெரிந்தே இந்தியா செய்து கொண்டிருக்கிறது. இரு தரப்புகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவர்கள்தான் தீர்வு காண முடியும். தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தமிழர் சார்பான அமைப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, இதை இரு நாட்டு அரசுகளின் பிரச்சினையாக கருதியதுதான் ராஜீவ் காந்தி செய்த தவறு.

1985ம் ஆண்டு நடந்த திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா, இலங்கை அமைதி ஒப்பந்தம் வரை, பொதுவாக இருந்து பேச வைக்கிற முயற்சியை, அனுசரணையாளர் என்ற பொறுப்பை தவிர்த்து விட்டு, தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, புரோகிதரே, பொண்ணுக்குத் தாலி கட்டுவது போல, இந்தியாவே இறங்கி ஒப்பந்தம் போட்டார்களே அதுதான் அடிப்படைத் தவறு.

இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலும் பேச வேண்டும். ஆனால் ஒரு தரப்போடு டூ விட்டது போல உள்ளனர். புலிகளோடு பேசுவதற்கே வழியில்லை. இன்றைக்குக் கூட இவ்வளவு நடவடிக்கை எடுத்தபோதும், இலங்கையில், புலிகளுக்கு தடை விதிக்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்து கொண்டுள்ளது. தடை பண்ணி விட்டால் யாரிடம் பேசுவது, பிற்காலத்தில் பேச வாய்ப்பே இல்லாமல் போய் விடுமே?

ஆனால் சிக்கலுக்கு நேரடித் தொடர்பில்லாத இந்தியா புலிகள் அமைப்பை தடை செய்துள்ளது. தடை செய்வதற்காக இந்தியா சொன்ன குற்றச்சாட்டுக்கள் எல்லாமே பொய்.

தமிழகத்தைப் பிரிக்கப் பார்த்தார்கள், ஈழத்தை இணைத்து அகண்ட தமிழகம் அமைக்கப் பார்த்தார்கள், இந்தியப் பிரிவினைக்கு உதவி செய்தார்கள் என்று அவர்கள் கூறிய எதுவுமே உண்மை இல்லை. இது இந்திய அரசுக்கும் தெரியும். இன்றும் அந்தப் பொய்யை வைத்துக் கொண்டுள்ளதால்தான் இரு தரப்பிலும் பேச முடியவில்லை.

இரு தரப்பையும் சமமாக கருத மறுக்கிறது இந்தியா. ஆயுதத் தலையீடு, ராணுவத் தலையீடு மற்றும் இப்போது ராஜதந்திர தலையீட்டிலும் இந்தியா இறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் 2 கட்சிகளுக்கடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் பின்னணியில் இந்தியா உள்ளது. இது பகிரங்க ரகசியம்.

ரணிலை இங்கே வரவழைத்து அரசுடன் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லியது, மேனன் போன்றவர்களை அங்கே அனுப்பி பேரத்தை பேசி முடித்து வைத்தது இந்தியாதான்.

இதன் நோக்கம் என்ன?

பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும். அது அந்த மக்களுக்கான தீர்வா என்ற கவலையெல்லாம் இல்லை. ஒரு தீர்வு, அவ்வளவுதான். ராஜபக்ஷே இந்தியா வந்தபோது கூட பஞ்சாயத்து ராஜ் பற்றிப் பேசுகிறார். எனவே இது இந்திய பாணியிலான தீர்வு, இதற்கென்று வரையறை கிடையாது.

இந்தத் தீர்வுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் தமிழர் பிரதிநிதிகள், உண்மையில் அவர்கள் தமிழர்களுக்கான பிரதிநிதிகளே கிடையாது. தமிழ் மக்களின் 1 சதவீத ஓட்டுக்களைப் பெறக் கூட முடியாதவர்கள் எல்லாம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் சிங்கள ராணுவக் கூடாரத்திற்குள்தான் குடும்பம் நடத்தக் கூடிய நிலையில் உள்ளவர்களும் அங்கு உள்ளனர். இவர்களை தமிழர்களின் அடையாளமாக இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது.

இலங்கையில் 21 பேர் தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ளனர். ஆனால் தமிழர்களின் துரோகியாக கருதப்படும் டக்ளஸ் தேவானந்தாவை மட்டும் அழைத்துப் பேசுகிறார்கள். பிரதிநிதித்துவமே இல்லாத ஆட்களை வலியுறுத்தி டெல்லிக்குக் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பேசிவிட்டு பொதுவான தீர்வை எட்டி விட்டோம் என்று சொல்வதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவது, அப்படிச் செய்வதன் மூலம் ராணுவ ரீதியான தீர்வை அடைய நினைக்கிறார்கள். இப்படிச் செய்து விட்டு, புலிகள்தான் பிடிவாதமாக சண்டை போடுகிறார்கள் என்று கூறி தனிமைப்படுத்தி சர்வதேச அளவில் புலிகளை தனிமைப்படுத்துவது. இதுதான் இந்திய அரசின் எண்ணம். இது ராஜதந்திர தலையீடு, கொள்கைத் தலையீடு.

இருப்பதிலேயே இந்த கொள்கைத் தலையீடுதான் மோசமானது. இந்தியாவிலிருந்து சென்ற அமைதிப் படையினர் அங்கு 50,000 தமிழர்களைத் திரட்டி ஆயுதங்கள் கொடுத்தனர். ஆனால் ஒரு நாள் கூட அது நிலைக்கவில்லை. இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் பத்திரமாக தங்களது வீடுகளுக்குப் போய் விட்டனர்.

எந்தத் தீர்வாக இருந்தாலும் அது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என இந்தியா கூறுகிறது. இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறுகிறது. அங்கு ஒருமைப்பாடுதான் பிரச்சினையே என்கிறபோது, அதை வைத்து எப்படி தீர்வு காண முடியும்? அரசியலமைப்பே சிக்கல் என்றால் அதற்கு உட்பட்டு எப்படித் தீர்வு காண முடியும்?

ஒரு நோயைத் தீர்க்க அந்த நோய்க்குக் காரணமான காரணிகளையே வைத்து எப்படி சரி செய்ய முடியும்? வங்கதேசத்தில் சிக்கல் வந்தபோது பாகிஸ்தான் அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காண இந்தியா சொல்லவில்லை. அதேபோல பாலஸ்தீனம், இஸ்ரேல் ஒருமைப்பாட்டுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்லவில்லை. கிழக்கு தைமூர் விஷயத்திலும் அப்படிச் சொல்லவில்லை.

நமீபியா தென்னாப்பிரிக்காவிடமிருந்த

ஏம் பிரச்சினையை நல்லாக புரிந்திருகிறார் நல்ல காரமான கட்டுரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாறுங்கள் பிரனாப் முகர்ஜி இப்படிச் சொல்கிறார் -

அமைதி நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு இந்தியா இலங்கைக்கு வலியுறுத்தல்.

அமைதி முயற்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இந்திய அரசாய்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் நிலை குறித்து இந்திய கீழ் சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரனாப் முகர்ஜி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உரிய முறையில் கடைப்பிடிப்பதன் மூலம் பேச்சுவார்தைக்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-பதிவு

அப்ப தியாகு சொல்வது(தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பது போல காட்டிக் கொள்வது, இலங்கை அரசை எச்சரிக்கிறோம் என்பது போல அமைதித் தீர்வு என்பதெல்லாம் நாடகம். உண்மையில், சிங்கள அரசின் போர் முயற்சிக்கு துணை போவதுதான் இந்திய அரசின் எண்ணம்) போல கண்துடைப்புக்காகச் சொல்கிறாரா?

இந்தியாவை சுற்றிலும் எதிரிகள் இதில் பக்கத்தில் ஒரே நட்ப்பு நாடு இலங்கை, அதை ஏன் இந்திய அரசு பகைத்துக்கொண்டு தேவை இல்லாத ஒரு பிரச்சனையில் இந்தியா ஈடுபடவேன்டும். ஏற்க்கனவே பட்ட காயங்கள் ரணங்கலும் போதுமே!

இலங்கை ஈழப்பிரச்சனையை இந்தியத்தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தாலும், எங்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நினலை ஏற்ப்பட்டுவிட்டது.

இந்தியாவை சுற்றிலும் எதிரிகள் இதில் பக்கத்தில் ஒரே நட்ப்பு நாடு இலங்கை, அதை ஏன் இந்திய அரசு பகைத்துக்கொண்டு தேவை இல்லாத ஒரு பிரச்சனையில் இந்தியா ஈடுபடவேன்டும். ஏற்க்கனவே பட்ட காயங்கள் ரணங்கலும் போதுமே!

இலங்கை ஈழப்பிரச்சனையை இந்தியத்தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தாலும், எங்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நினலை ஏற்ப்பட்டுவிட்டது.

உமது புரிந்து கொள்ளல் எமக்குதேரியுமப்பா தலைவரின் முகமூடியை கிழிக்கப்பொறன் எண்டு சொன்னவர்தானே நீர்

என்னை பொறுத்தாவரையில் தலைவர் இல்லாத விடுதலை எமக்கு தேவையில்லை இதை யார்ரும் எதிர்கிறீர்களா.இந்திய **** அமைதிப்படையணி என செய்த கொடுமைகள் என்மனதிலும் எம் மக்களின் மனதிலும் ஆறாத ரணங்களை ஏற்படுத்தியிருக்குது.அது தெரியாமல் கட்டைத்தாள்தான் நீர்

இந்தியாவால் விடுவிக்கப்பட்ட பங்களாதேஸ் இன்று எதிரிகளுக்கு சப்போட் பண்ணுகிறது இதுக்கெல்ல்லாம் காரணம் இந்திய பிராமணர்களின் வெளிநாட்டுக்கொள்கை. சிங்கள அரசு இந்தீயாவுக்கு பக்க்கச்சார்பாக இருக்கும் என்பது கற்பனை அதுவும் இந்தியாவின் எதிரிகளின் கூடாரமே.எவன் போட்டாலும் பிச்சை ஏந்தும் சிங்கள அரசாங்கம்

தயவு செய்து முகமூடியை கிழிக்கிறன் பிடிகிறன் என கோசம் போடாதயூம் அப்பட்டி போடுவதானால் போய் கீழ்பாக்கத்தில் சேரும் அதுதான் உமக்கு சரி. பிரபாகரன் இல்லாத விடுதலை எமக்கு வேண்டாம் என்பதே என்க்கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை சுற்றிலும் எதிரிகள் இதில் பக்கத்தில் ஒரே நட்ப்பு நாடு இலங்கை, அதை ஏன் இந்திய அரசு பகைத்துக்கொண்டு தேவை இல்லாத ஒரு பிரச்சனையில் இந்தியா ஈடுபடவேன்டும். ஏற்க்கனவே பட்ட காயங்கள் ரணங்கலும் போதுமே!

இலங்கை ஈழப்பிரச்சனையை இந்தியத்தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தாலும், எங்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நினலை ஏற்ப்பட்டுவிட்டது.

இலங்கையின் "நட்பு" எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டது? சீறிலங்கா பாக்கிஸ்தானுடனும் சீனாவுடனும் தான் நல்ல நெருக்கமாக உள்ளது. இப்படி இருபகையாளிகளுடன் ஒரே காலத்தில் உறவு வைப்பதில் சீறிலங்கா நிபுணத்துவம் பெற்றுள்ளது. எ.கா: அமெரிக்காவுடனும் குலாவும் அதே வேளை ஈரானுடனும் இராணுவ வணிக உறவு வைத்துக்கொள்கிறது.

கடந்த காலங்களில் பல முறை இலங்கை இந்தியாவுக்கு உவப்பில்லாத வகையில் அமெரிக்காவுடன் (இந்திரா காந்தி காலத்தில்), பாக்கிஸ்தானுடன் (அவர்கள் வான்படைகளை எரிபொருள் நிரப்ப அனுமதித்தது) மற்றும் சீனாவுடன் இராணுவ/அரசியல் நட்புறவாடியுள்ளது.

தற்பொழுது தமிழீழம் இந்தியாவுக்கு கசக்கும் வகையில் உறவு வேறு நாடுகளுடன் வைத்திருக்க/எத்தனிக்க வில்லை. ஏனெனில் தமிழ்நாட்டுத் தமிழர் உணர்வுகளை மதிப்பதால், ஆனால் எமக்கு ஏதுவான சமிக்ஞைகள் இந்தியாவிலிருந்து கிடைக்காது விரக்திக்குத் தள்ளப்படும் தமிழீழத்தமிழர் சீனாவுடன் இராணுவ/அரசியல் உறவு (எ.கா: அவர்களின் இராணுவத்துடன் திருகோண்மலையில் ஒருபகுதியில் 100 வருசத்துக்கு லீஸ் போட்டால் :rolleyes: ) மேற்கொண்டால் என்ன செய்வீர்கள்?

மாறாக இந்தியா தமிழீழத்திற்கு ஆதரவு அளித்தால், நாம் உண்மையில் ஒரு நொதுமலான (neutral) நாடாகவிருப்போமல்லா?

சசிதா அவர்களே ஈழப்பிரச்சினை என்று ஒன்று இருப்பதால் தான் ஸ்ரீலங்கா இந்தியாவிற்கு நட்பு நாடு போல் நடித்து கொண்டு இருக்கிறது. இல்லை என்றால் சீனாவின் பக்கம் ஸ்ரீலங்கா சாய்ந்திருக்கும்.

1971 இந்திய பாகிஸ்த்தான் யுத்தத்தில் பாகிஸ்தான் இராணுவ விமானங்களை இலங்கை வான்வெளியில் பறக்க அனுமதித்த கதை, சசிதாவுக்கு தெரியுமா? சிங்களவர்களின் இரத்தத்தில் காலம் காலமாக ஊறிப்போன இந்திய எதிர்ப்புவாதம் உங்களுக்கு தெரியுமா?

சுவாமி விவேகனந்தர் போன்றவர்களின் இலங்கை விஜயத்தையே எதிர்த்த சிங்கள மதவாதம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்திய ஆட்டோ ரிக்ஸாக்களையே ஓட்ட தடை விதித்த சிங்கள கட்சிகள் பற்றி தெரியுமா?

ஈழப்பிரச்சினை ஒற்றை இலங்கையின் கீழ் தீர்க்கப்பட்டு விட்டால், இந்திய நட்பை இந்து சமுத்திரத்தில், கணபதி சிலை போல் கரைத்துவிட்டு, ஸ்ரீலங்கா தேசம் சீனாவின் நட்பை தேடி சிறகடித்து பறக்கும் என்று தெரியுமா?

தீவிர பெளத்தமும் கம்யூனிசமும் கலந்த சிங்களவர்களின் அரசியல் பின்னணி, சீனாவுடன் எத்துணை இலகுவில் நெருங்கிவிடும் என்னும் விபரீதம், இன்னும் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு புரியாதது, விதியின் விளையாட்டாக கூட இருக்கலாம்.

இந்தியாவை சுற்றிலும் எதிரிகள் இதில் பக்கத்தில் ஒரே நட்ப்பு நாடு இலங்கை, அதை ஏன் இந்திய அரசு பகைத்துக்கொண்டு தேவை இல்லாத ஒரு பிரச்சனையில் இந்தியா ஈடுபடவேன்டும். ஏற்க்கனவே பட்ட காயங்கள் ரணங்கலும் போதுமே!

இலங்கை ஈழப்பிரச்சனையை இந்தியத்தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தாலும், எங்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நினலை ஏற்ப்பட்டுவிட்டது.

sasithA avargaLE Izappirachchinai enRu onRu iruppadhAl thAn SrIlangkA i-ndhiyAviRku natpu nAdu pOl nadiththu koNdu irukkiRadhu. illai enRAl sInAvin pakkam SrIlanggA sAy-ndhirukkum.

1971 i-nthiya pAkiSththAn yuththaththil pAkiSthAn irANuva vimAnanggaLai ilanggai vAnveLiyil paRakka anumadhiththa kadhai, sasithAvukku theriyumA? singgaLavargaLin iraththaththil kAlam kAlamAga URippOna i-ndhiya edhirppuvAdham unggaLukku theriyumA?

suvAmi vivEgana-ndhar pOnRavargaLin ilanggai vijayaththaiyE edhirththa singgaLa madhavAdham paRRi unggaLukku theriyumA? i-ndhiya AttO rikSAkkaLaiyE Otta thadai vithiththa singgaLa katchigaL paRRi theriyumA?

Izappirachchinai oRRai ilanggaiyin kIz thIrkkappattu vittAl, i-ndhiya natpai i-ndhu samuththiraththil, kaNapathi silai pOl karaiththuvittu, SrIlanggA thEsam sInAvin natpai thEdi siRagadiththu paRakkum enRu theriyumA?

thIvira beLaththamum kamyUnisamum kala-ndha singgaLavargaLin arasiyal pinnaNi, sInAvudan eththuNai ilaguvil nerunggividum ennum vibarIdham, innum i-ndhiya koLgai vaguppALargaLukku puriyAdhadhu, vidhiyin viLaiyAttAga kUda irukkalAm.

காலமும் மாறியது காட்சியும் மாறுகிறது, திரிகோணமலையில் அமெரிக்க ராணுவ முகாம் வருவதை இந்தியாவின் கடுமையான ஆட்சேபனையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு அமெரிக்க ராணுவ முகாம் வருவதை தடுத்துவிட்டது. பிரச்சனை பாகிஸ்தானோ சீனாவோ இல்லை அமெரிக்காதான், இருந்தாலும் அமெரிக்காவுடன் நெருங்கி நட்பு பாராட்டி வருகிறது. அமெரிக்க நட்புடன் இந்தியா சீனாவை எதிற்த்து நிற்க்ககூடிய பலம் பெற்று வருகிறது.

உலகின் எந்த நாடும் இந்தியாவை அவ்வளவு சுலபத்தில் தாக்கிவிடமுடியாது, வெற்றியும் பெற்றுவிடவும்முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.