Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

[ Thursday,17 December 2015, 03:02:18 ]   
arp.gif

ஸ்ரீலங்கா சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனக்கோரி இராமேஸ்வரத்தில் மீனவக் குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று புதன்கிழமை இராமேஸ்வரம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் வைத்து மாயமான மீனவக் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற சுடலைமணி, அந்தோணி, இராமச்சந்திரன், ஹமீது உள்ளிட்ட நால்வர் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மாயமானார்கள்.

இந்நிலையில் ஹமீதுவின் உடல் ஸ்ரீலங்கா கடற்கரையில் கரை ஒதுங்கியதை அடுத்து அவரின் உடல் நேற்று புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் ஏனைய மீனவர்களின் நிலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்ற நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் எனவும் ஸ்ரீலங்கா கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறைகளிலுள் வாடும் மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதேவேளை ஸ்ரீலங்கா சிறைகளில் 47 மீனவர்ககள் உள்ளதோடு, கடற்படை வசம் உள்ள 62 படகுகள் இதுவரை மீட்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/15248

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.