Jump to content

ஸ்மார்ட் ஃபோன்களை கட்டுப்படுத்தும் புதிய ஆப்ஸ் 'Lock n' Lol'!


Recommended Posts

பதியப்பட்டது

ஸ்மார்ட் ஃபோன்களை கட்டுப்படுத்தும் புதிய ஆப்ஸ் 'Lock n' Lol'!

 

ன்ட்ராய்ட் தொழில்நுட்பம் பரிசளித்த மொபைல் ஃபோன்கள், நம் கையில் அணிந்தும், அணியாமலும் தொற்றிக் கொண்டிருக்கும் கை விலங்குகள். உங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்கள் உங்களை மிகவும் கட்டிப்போட்டு வைத்துள்ளதாக உணர்கிறீர்களா?

கொரியாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயலியை (Application) டிஸைன் செய்துள்ளனர். Lock n' Lol (Lock Your Smartphone and Laugh Out Loud) என்ற அந்த செயலி, நாம் ஒரு பொதுக்கூட்டத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ அல்லது ஒரு மீடிங்கிளோ இருக்கும் பொழுது நம்முடைய மொபைல் ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கும்.

Smart%20phone%20lock01.jpg

இந்த செயலியின் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு ஒரு புது ரூமைக் க்ரியேட் செய்து கொள்ளலாம் அல்லது இருக்கும் ரூமிலேயே சேர்ந்து கொள்ளலாம். அதன் யூசர்ஸ் அங்கு வருவோருக்கு அழைப்பு (இன்வைட்) அனுப்பி, அவர்களுடன் ஐ.டி.யை பகிர்ந்து கொண்டு க்ரூப்பாக லாக் செய்து கொள்ளலாம்.

லாக் மோடிற்கு சென்றவுடன், எல்லா அலாரம்களும் நோட்டிப்பிகேஷன்களும் ம்யூட் ஆகி விடும். பயன்படுத்த நினைப்பவர், அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும். அவசியம் ஏற்படும் போது, 5 நிமிடங்கள் மட்டும் தற்காலிக அன்லிமிட் மோடில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, சுற்றி இந்த செயலியை பயன்படுத்துவோரின் லொகேஷனையும் இது காட்டி, அதன் செயல்பாட்டை விருத்தி செய்கிறது.

இதுபோன்ற சில செயலிகள் நாம் எப்படி மொபைல் ஃபோன்களுக்குள் முடங்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு நினைவுக் கூறி, நம்முடைய வெளி உலக பழக்கத்தையும் செம்மை ஆக்க முயல்கிறது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ''ஸ்மார்ட் ஃபோன்கள் நம் தினசரி வாழ்க்கையில் ஆழமாக இறங்கி, நம்முடன் கலந்து விட்ட ஒன்று. இதனால், தாங்கள் செய்யும் வேலையில் கவனம் குறைவதாகவும், ஃபோனுக்கு அடிமைப்பட்டு விடுவோமோ என்கிற பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது'' என்கின்றனர்.

இந்த முயற்சி பாராட்டிற்குரியது.

http://www.vikatan.com/news/information-technology/56588-the-new-apps-for-controlling-smart-phones.art

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.