Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றார். – அ.ஈழம் சேகுவேரா-

December 21, 2015
செய்திகள்0
68
சம்பந்தன் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றார்.    – அ.ஈழம் சேகுவேரா-

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெயரால் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’ சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களினாலும், வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு என்ன வேண்டும்? என்பதை பகிரங்கமாகவே கேட்கத்தொடங்கி விட்டனர். நீதிக்காக வீதி வரைக்கும் வந்து போராடவும் தொடங்கிவிட்டனர். இன்றல்ல நேற்றல்ல, போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதற்கு பின்னரான கடந்த ஆறரை வருடங்களாக இந்த போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கைகள், போராட்டங்களுக்கு முற்றிலும் முரணான விதத்தில், விரோதமான போக்கில், சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கும்பலின் பேச்சுவார்த்தைகள் அரச தரப்பினருடன் தொடருகின்றன. மெய்யாகவே, இந்த சந்திப்புகளை ‘பேச்சுவார்த்தை’ என்ற சொல்லாடலுக்குள் விழிப்பதே தவறானது, என்பதே எனது நிலைப்பாடு.

காதோடு காது வைத்தது போல பேசி முடிப்பதற்கோ, மூடிய அறைகளுக்குள் கமுக்கமாக சம்பந்தம் கலப்பதற்கோ, இது ஒன்றும் சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கும்பலின் வீட்டுச்சடங்கு நிகழ்வுகள் அல்ல. மாறாக, தமது சுயகௌரவ வாழ்க்கைக்காக – இருப்புக்காக போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு இனத்தின் வாழ்வுரிமை பிரச்சினையாகும்.

அரசியல் தீர்வுக்கான இந்த சந்திப்புகளில், ‘ஒரு இனத்தின் வாழ்வும் வரலாறும் வளமும் நிறைவும் அமைதியும்’ தங்கியிருப்பதால், ‘கொஞ்சம் சறுக்கினாலும் அடி பலமாக விழும்’ எனும் விழிப்பு நிலையாக இந்த சந்திப்புகள் கையாளப்படல் வேண்டும்.

காலாதிகாலத்துக்கும் ‘தமிழ்த்தேசியக்குடியினம்’ என்ற சமஸ்டி அந்தஸ்துடன் வாழத்தகுதியுடைய ஒரு இனத்துக்கு, இவர்கள் தத்தமது இஸ்டத்துக்கு, சந்தர்ப்பவாதத்துக்கு பொருத்தமற்ற தீர்வொன்றை தலையில் கட்டிவிட்டுப்போக அனுமதிக்க முடியாது.

ஆதலால் இந்த சந்திப்புகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். சந்திப்புக்கு முன்னரும் பின்னரும், பேசப்பட்ட – இணக்கம் காணப்பட்ட விசயங்கள் குறித்து, சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளுடன் பொதுவெளியில் கருத்தாடல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சமுக மற்றும் அரசியல் பணி செய்கின்ற அனைவருக்கும் இந்த கருத்தாடல்களில் கலந்துகொள்வதற்கு சமபங்கும் உரிமையும் உண்டு என்பதை, எவரும் அவ்வளவு இலகுவில் மறுதளித்துவிட முடியாது. தமிழ் மக்கள், ‘தமக்கு மட்டும் தான் ஆணை’ வழங்கியுள்ளனர் என்ற மமதைப்பேச்சுக்கும், உணர்ச்சிக்கோசத்துக்கும் இங்கு முக்கியத்துவம் தரமுடியாது.

தமது வாக்குகளால் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள், எங்கு போகின்றார்கள்? யாரை சந்திக்கின்றார்கள்? என்ன பேசுகின்றார்கள்? எதைக்கேட்கின்றார்கள்? இவை பற்றியெல்லாம் அறிந்துகொள்ளும் உரிமை, கேள்வி கேட்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு.

மக்களுக்குள்ள இந்த உரிமையை நிராகரித்து, சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கும்பலால் நடத்தப்படும் சந்திப்புகள் அடிப்படை மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, அந்த மக்கள் மீது பிரயோகிக்கப்படும் ஒருவகையான வன்முறையும் கூட. தமக்கு வாக்களித்த மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாமலும், பொறுப்புக்கூறாமலும் நடத்தப்படும் குறித்த சந்திப்புகளில் உண்மைத்தன்மை, பொதுநலன் இருக்கும் என்று எப்படி நாம் நம்புவது? அதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?

கடந்த காலங்களில் இவர்களின் ஏதேச்சதிகாரமான, விசித்திரமான போக்குகளால்த்தான், இன்று தமிழ் இனம் சுவரில் தலையை முட்டிக்கொண்டு, போக்கிடம் இன்றி தட்டுப்பட்டு நிற்கின்றது.

சிறீலங்காவின் அதிபராக யாரை இருத்துவது? யாரை இறக்குவது? என்பதை தீர்மானிக்கும் பெரும் சக்தியாக தமிழ் மக்களே இருந்திருக்கின்றார்கள், இருக்கின்றார்கள். நடப்பாண்டின் தொடக்கத்தில் மகிந்த ராஜபக்ஸ தரப்பிலிருந்த மைத்திரிபால சிறிசேனவின் உடைவு, மைத்திரிக்கு ‘கரணம் தப்பினால் மரணம்’ எனும் கதையாகவும், மேற்குலக சமுகத்துக்கு மைத்திரியின் வெற்றி, பிராந்திய நலன்கள் சார்ந்து அவசியமானதாகவும் தேவைப்பட்ட இடர்காலக்கட்டத்தில்,

அதிபர் கனவையும் கதிரையும் தீர்மானிக்கும் தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை, பேரம் பேசும் சக்தியாக துணிகரமாக பயன்படுத்தி ‘அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து மீளக்குடியேற்றத்தை துரிதப்படுத்தல், படைக்குறைப்பு’ போன்ற, தமிழ் மக்களின் தவிர்க்க முடியாத பிரச்சினைகள் பலவற்றுக்கு மேற்குலக மத்தியஸ்தத்துடன் காத்திரமான தீர்வினை பெற்றிருக்க முடியும்.

மாறாக சம்பந்தனோ, பேரம் பேசி கிடுக்குப்பிடி போடவேண்டிய நல்ல வாய்ப்பை தகர்த்தெறிந்து, நிபந்தனை ஏதுமின்றி ஆதரவு வழங்கி, தமிழ் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்து தென்னிலங்கையிடம் அடைமானம் வைத்துள்ளார். இவர்களின் ஆளுமை – அறிவு – அநுபவம் – தகுதிக்கு இந்த அளவிடை ஒன்றே போதும்.

‘இராசதந்திரம்’ எனும் பெயரால் இவர்களால், இனியும் தமிழினம் தோற்கடிக்கப்படுவதை, இருட்டு மூலைகளில் சதிவலை பின்னப்பட்டு மூழ்கடிக்கப்படுவதை எதிர்க்காவிட்டால், இவர்கள் அதனை தமக்கான அங்கீகாரமாக கருதத்தொடங்கி விடுவர்.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் – சிறீலங்கா அரசாங்கத்துக்கும் நோர்வே மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஊடக வெளிச்சத்திலேயே நடைபெற்றன.

பேச்சுவார்த்தைகளில் புரிந்துணர்வு எட்டப்பட்ட விடையங்களின் பெறுபெறுகளை, உடனுக்குடன் உலகுக்கு வெளிப்படுத்த ஊடகவியலாளர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அங்கு மூடி மறைத்து பொத்தி வைத்துப்பேசுவதற்கு எந்த இரகசியமும் இருக்கவில்லை. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை, உரிமைகளை, அவர்களின் குறைகளை, தேவைகளை பகிரங்கமாக உரத்துப்பேசுவதற்கு யாருக்கு தயக்கம் காட்ட வேண்டும்? எதற்கு மூடிய அறைகளுக்குள் சந்திப்பு நடத்த வேண்டும்?

கள்ளமும் கபடமும், கரன்ஸியும் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கே மூடிய அறைகளுக்குள் சந்திப்பு நடத்த வேண்டும். சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கும்பலின் சந்திப்புகளும் இதையா சான்று பகர்கின்றன?

-அ.ஈழம் சேகுவேரா-
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
wetamizhar@gmail.com
eezhamcitizen@gmail.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.