Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம்!' - சிம்பு தாயார்

Featured Replies

  • தொடங்கியவர்

பீப் பாடல் விவகாரம்: எங்களால் என்ன செய்யமுடியும்? நாசர் பரபரப்பு பேட்டி!

 

nazar%20one.jpgசென்னை: தமிழகம் முழுக்க கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள பீப் பாடல் விவகாரத்தில் சட்டப்படி நாங்கள் எதிர்கொள்கிறோம் என்று சிம்பு தரப்பில் சொன்ன பிறகு நடிகர் சங்கத்தால் என்ன செய்யமுடியும் என்று அச்சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில், நடிகர் சங்கத்தின் 3-வது செயற்குழு கூட்டம் இன்று(சனி) நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர்கள் கூறுகையில்,

" கடந்த 2 வருடத்துக்கான நடிகர் சங்க கணக்கு விபரம் முழுமையாக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டட வேலை விரைவில் தொடங்கும். உறுப்பினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுவிட்டது. பீப் பாடல் குறித்து வருத்தம் தெரிவிக்க  அவர்களிடம் சொன்னோம். ஆனால் சட்டப்படி எதிர்கொள்கிறோம் என்று சிம்பு தரப்பில் சொன்னபிறகு எங்களால் என்ன செய்யமுடியும்? " என்று தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/56858-beep-song-issueactor-nazar-interview.art

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிம்புக்கு வகுப்பெடுக்கும் புலம்பெயர் வெட்டித்தமிழர்கள்.. முதலில் தங்களின் வாரிசுகளுக்கு ஒரு வகுப்பெடுக்கட்டும் பார்க்கலாம்.. :rolleyes:tw_blush:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2015 at 2:40 PM, குமாரசாமி said:

நான் இங்கே தூசண வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதுகின்றேன் உங்கள் கருத்து என்ன?
யாழ்கள நிர்வாகம் அனுமதிக்குமா?

ஏன் யாழில் பேசாப் பொருள் என்ற தலைப்பிலும்.. தமிழக.. மற்றும் சில.. பெண் கருத்துப் புரட்சியாளர்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக்கிற சிலர் முழு தூசணத்தமிழில் எழுதிய கவிதைகளை ஒட்டிவிட்டு.. அது தூசணம் அல்ல.. உடல் அங்கங்கள் என்று.. யாழ் புரட்சி செய்யுது என்று சொன்னவையும் இங்க இருந்திருக்கினம்.. இப்பவும் இருக்கினம்.

இதோ.. தமிழக சினிமாத் தலைவரின்... கலாரசனை உள்ள பாடல்...

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

வீணையென்னும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையென்னும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பறிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பறிமாற

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

சேலை சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

என்ன ஆச்சரியம் இவற்றை எல்லாம் காலம் காலமா ரசிச்சவை.. சிம்புவை ஒரு வாங்கு வாங்குவது தான். tw_blush::rolleyes:

கூத்தாடிகள் வியாபாரிகள் இவற்றை மேடைகளிலும் பாட வைக்கினம்..

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சிம்புவுக்கு ஆதரவு அளித்த பெண்களுக்கு நன்றி... டி.ஆர். உருக்கம்!

 

காஞ்சிபுரம்: பீப் பாடல் பிரச்னையில் சிம்புவுக்கு ஆதரவு அளித்த பெண்களுக்கு நன்றி என்று காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் பூஜைகள் நடத்திய டி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்தார்.

t1.jpg

நடிகர் சிம்பு பாடியதாக சொல்லப்படும் 'பீப்'  பாடல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி, தமிழகம் முழுவதும் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என களமிறங்கி வருகிறார்கள். இதுதொடர்பாக கோவையில் சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

t2.jpg

மேலும், மழை வெள்ளத்தால் சென்னையில் மக்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில், பெண்களை இழிவுபடுத்துகின்ற வரிகளை பாடலில் பயன்படுத்தி, அதற்கு இசையமைத்து இணையதளத்தில் அப்பாடலை வெளியிட்டுள்ள நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பீப் பாடல்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
 

t3.jpg

தன் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு, போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மனு மீதான விசாரணையை வருகின்ற ஜனவரி 4-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த பிரச்னை பூதாகரம் எடுத்துள்ள நிலையில், சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர், தனது மகனுக்காக காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினார். இதற்காக இன்று காலை சுமார் 10 மணிக்கு காஞ்சிபுரம் வந்த அவர், வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சுமார் 2 மணி நேரம் பூஜைகளும், ருத்ர யாகமும் நடத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''செய்யாத ஒரு குற்றத்திற்காக சிலர் சதி செய்து சிம்புவை இப்படி சிக்க வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் என் ரசிகர்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன், போராடி இருக்கிறேன். அதனால் தான் என் ரசிகர்களும், சிம்புவின் ரசிகர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள், தாய்மார்கள், நடுநிலையாளர்கள், சிம்புவின் ரசிகைகள், ரசிகர்கள் பக்கபலமாக இருப்பவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அத்தனைப்பேரையும் நான் மறக்கமாட்டேன்.



 

இது அனைத்திற்கும் காரணம் இறைவனின் அருள் தான். அதனால் தான் இந்த காஞ்சி மண்ணில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்துள்ளேன். வாலு பட பிரச்னையின்போதும் இந்த கடவுளை வேண்டிக்கொண்டேன். அது நல்லபடியாக தீர்ந்தது. அதனால் தான் தற்போதும் இந்த கோயிலுக்கு வந்துள்ளேன்.

சிம்பு எங்கும் தலைமறைவாக இல்லை. அவர் இங்கு தான் இருக்கிறார். அவர் சட்டத்தை எதிர்கொள்வார், அது தான் உண்மை. சிலம்புக்கு ஒரு பிரச்னை என்றால் லட்சக்கணக்கான ரசிகர்களை திரட்டும் சக்தியை எனக்கு இறைவன் கொடுத்துள்ளார். தமிழ் பண்பாட்டை காப்பாற்ற, ஒரு பெண் என்னிடம் வந்து கை கொடுத்தால் கூட நான் கை கூப்பி தான் வணங்கி நமது பன்பாட்டை காப்பாற்றுபவன்.

தமிழ்நாட்டில் நான் எத்தனையோ முதல்வர்களை எதிர்த்து போராடி இருக்கிறேன். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தபோது அவருக்காக அங்கேயே குரள் கொடுத்தவன் நான். அப்போது, தமிழ் சினிமாவில் எந்த சங்கமும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதனால் என் வீட்டில் கல் எறிந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியில் கலைஞரை கைது செய்தபோதும் நான் தான் குரல் கொடுத்தேன்" என்றார்.

இந்த வழக்கறுத்தீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகில் உள்ளது. வழக்குகளில் சிக்கி நீண்டகாலமாக தவித்து வருபவர்கள் இந்த கோயிலில் திங்கட்கிழமைகளில் 16 விளக்கு தீபத்தை தொடர்ந்து 16 வாரங்களுக்கு ஏற்றி வந்தால் அந்த வழக்குகள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.

முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றபோது, அ.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள், 2ஜி வழக்கிற்காக தி.மு.க.வினர், முக்கிய வழக்குகளுக்காக வடநாட்டினர் என பலர் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு செல்கின்றனர் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

டி.ஆரின் வீடியோவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்...

https://www.youtube.com/watch?v=kNmUyet917w&feature=youtu.be

http://www.vikatan.com/news/tamilnadu/56868-thanks-to-women-supporters-trajendar.art

On 25/12/2015 at 0:41 AM, Nathamuni said:

சிம்பர் பிஞ்சில முத்தின கேஸ்தான்.

அட இந்தச் சிம்பர்தானே கொஞ்சநாளுக்கு முதல் சித்தாந்தம் + வேதாந்தமெல்லாம் பேசி தான் துறவியாகப் போகின்றேன் என்றது. அது வெறும் கப்ஸாவா அல்லது அடுத்த சிம்பானந்தாவா?

  • தொடங்கியவர்
31 minutes ago, ஜீவன் சிவா said:

அட இந்தச் சிம்பர்தானே கொஞ்சநாளுக்கு முதல் சித்தாந்தம் + வேதாந்தமெல்லாம் பேசி தான் துறவியாகப் போகின்றேன் என்றது. அது வெறும் கப்ஸாவா அல்லது அடுத்த சிம்பானந்தாவா?

12301633_743245705810260_904248141312060:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.