Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனத்தைப் பணயம் வைத்து சூதாடவேண்டாம்: - ஈழத் தமிழர் நாங்கள் சிந்திப்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாம் ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமையாகச் செயற்பட்டால் தான் தேவையானதைச் சாதிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?. பொதுத்தேர்தலில் தான் தலைமையை உருவாக்கலாம். புதிய தலைமையை உருவாக்க அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் உள்நாடிலும் சர்வதேசத்திலும் நமக்குச் சாதகமான காற்றுப் பலமாக வீசுகின்றது. இந்தச் சந்தர்ப்பம்  பின்னர் நீடிக்கும் என்பது மிக மிக அருமை. எனவே இப்போதுள்ள தமிழர் தலைமையில் தவறுகள் இருப்பின் முடியுமானவரை அவர்களோடு கலந்துரையாடி தேவையானமட்டும் விவாதித்து நமது பெரும்பான்மை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு அந்த முடிவின் வெற்றிக்கு அனைவருமே அல்லும் பகலும் உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். நாம் நமது ஈழத்தமிழ் உறவுகளுக்கு எப்படி உதவலாம் என்று சிந்திக்கும் அனைவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள்.

ஆனால் தமக்கு என்ன லாபம், தமது அதிகாரத்தை எப்படி நிலைநாட்டலாம், தமது பதவியை எப்படிப் பிடிக்கலாம் என்று சிந்திப்போர் மட்டுமே வேறுவகையில் சிந்திப்பார்கள். தமது தனிப்பட்ட பகைமை அல்லது சொந்தப் பிரச்சனை காரணமாகவோ, தாம் எதிர்பார்த்த பதவி கிடைக்காமை காரணமாகவோ பொதுமக்கள் நன்மையை விட தமது விடயத்தை தமது நன்மையை பெரிதாக மதிப்பவர்கள் தான் வேறுவிதமாகச் சிந்திப்பார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாற்றுத் தலைமையை, எதிர்த் தலைமையை உருவாக்கி அதனால் மக்களுக்கு ஏதாவது செய்துவிட முடியுமா?. அப்படிச் செய்வோருக்கும், எம்மைச் சின்னா பின்னமாக்கி அழிக்க நினைக்கும் சிங்கள ஆட்சிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?. அவர்களுக்கு கொஞ்சமாவது ஈரநெஞ்சம் தமிழுணர்வு மனித நேயம் பகுத்துணர்வு இருக்கும் என்று நம்புகின்றோம். அவர்களைப் பார்த்துக் கேட்கின்றோம்.

தயவுசெய்து எமது தமிழ் இனத்தைப் பணயம் வைத்து சூதாடவேண்டாம். நீங்கள் உங்கள் வெறுப்பைச் சாதிக்க பதவிகள் பெற நன்மைகள் பெற வேறு எத்தனையோ வழிகள் உண்டு. தமிழ் இனத்தை வாழ விடுங்கள். எதிர்த் தலைமை, போட்டித் தலைமை வேண்டாம். நேசக்கரம் நீட்டுகின்றோம்.சர்வதேசத்தின் செயற்பாட்டால் உருவான இன்றைய சிங்கள அரசு அதே சர்வதேசம் எதிர்த்தால் மறுகணமே கவிழ்ந்துவிடும். அதேபோல் சர்வதேசம் விரும்புகிறது, கேட்கிறது என்பதற்காக அவற்றை எடுத்த வீச்சில் செயற்படுத்தினால் உள்நாட்டுச் சக்திகளால் அரசு கவிழும். இவற்றை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக்கொண்டுதான் தமது அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஒன்றுபடுவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.

நன்றி.

கோபாலகிருஸ்ணன் - ஆறுமுகம்

http://www.seithy.com/breifNews.php?newsID=147710&category=TamilNews&language=tamil

எத்தனை தடவை சொன்னாலும் தமிழர்களுக்குத் தெரிந்தது, தமிழ் அமைப்புக்களைத் தொடங்கும் அரசியற் தமிழர்களுக்கு உறைக்காது. அவங்கள் ஏதோ தங்களுக்குப் பின்னால் சனம் வருமென நினைக்குதுகள். அதை நம்பி எங்கடதுகள் சிலது குத்தி முறியுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.