Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயனபடுத்தவுள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன

Featured Replies

இலங்கை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயனபடுத்தவுள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன

 

இலங்கை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயனபடுத்தவுள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன:-


மக்களின் நடமாட்டங்கள் நிதிபரிமாற்றங்கள் போன்றவற்றை கண்காணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயனபடுத்தவுள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் தேசிய டிஜிட்டல் அடையாளம் மற்றும் பரிமாற்ற கட்டமைப்பொன்றை உருவாக்கதிட்டமிட்டுள்ளது,இது பயோமெட்ரிக் தரவுகளின் டிஜிட்டல் அடையாள தரவுகளை உள்ளடக்கியதாக காணப்படும். இது பின்னர் நிதிபறிமாற்றங்கள் நிதிசாராத பரிமாற்றங்களை கண்காணிக்க கூடிய அமைப்பொன்றுடன் இணைக்கப்படும்.

இவ்வாறான அமெரிக்கா பாணியிலான டிஜிட்டல் உட்கட்டமைப்பு காரணமாக உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெற்றதை போன்று இலங்கையிலும் பிரஜைகளின் உரிமைகள் துஸ்பிரயோகம் செய்யப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இது இலங்கையின் ஏதேச்சாதிகார அரசாங்கத்திற்கு மக்களை கட்டுப்படுத்துவதற்கான இன்னொரு ஆயதமாக மாறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது குறித்து அமைச்சரவையில் விவாதிப்போம் என அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனரத்தின சமீபத்தில் தெரிவித்திருந்தார்.தனது பிரஜையொருவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டனில் 2006 இல் கொண்டுவரப்பட்ட இவ்வாறானதொரு தேசிய அடையாள சட்டம்,பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் வெளியிட்ட கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்டது.

2010 இல்கொண்டுவரப்பட்ட அடையாள அட்டை ஆவணசட்டத்தின் கீழ்  தேசிய அடையாள பதிவில் காணப்பட்ட தரவுகள் அழிக்கப்பட்டன.

பிரிட்டனில் தற்போது இவ்வாறான பயோமெட்ரிக் குடியிருப்பாளர் அனுமதிப்பத்திரங்கள் வெளிநாட்டவர்களிற்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் குறித்து நாங்கள் கவலையடையதேவையில் இன்னொரு அரசாங்கம் குறித்தே எச்சரிக்கையாகயிருக்கவேண்டியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார்.அவர்களின் கரங்களிற்கு ஓரு நாள் இதுபோய்ச்சேரும்போது ஆபத்து ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கைகளை, அவர்களது நடமாட்டங்களை, நிதிப்பறிமாற்றங்கள் மூலம் அவர்கள் ஏனையவர்களுடன் தொடர்பு கொள்வதை  கண்காணிப்பதற்காக தனியொரு தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை சிவில் உரிமை அமைப்புகள் எதிர்த்து வந்துள்ளதுடன் இதுவரை வெற்றிகரமாக தடுத்தும் வந்துள்ளன.

ஐரோப்பாவை போல இல்லாமல் அமெரிக்காவில் நாட்டின் எல்லைக்குள் உள்ள அனைவரிற்கும் அரசமைப்பு பாதுகாப்புகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், மக்கள் தங்கள் அடையாளத்தை நிருபிப்பதற்காக வாகனசாரதி அனுமதிப்பத்திரம் உட்பட பலவகையான அடையாள அட்டைகளை பயன்படுத்துகின்றனர்.

இதேவேளை குறிப்பிட்ட சட்டத்தில் பொதுமக்களின் சுதந்திரத்தையும் அந்தரங்கத்தையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் ஏதாவது உள்ளதா என நிருபர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதேவேளை குறிப்பிட்ட அட்டையை பயன்படுத்தி நிதிபரிமாற்றங்கள் மற்றும்நிதிசாராத பரிமாற்றங்கள்( தொலைபேசி கட்டணங்கள் உட்பட)உட்பட அனைத்தையும் கண்காணிக்க முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

2016 வரவுசெலவு திட்ட உரையில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்,இது தேசிய டிஜிட்டல் அடையாளம் என அழைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்-( என்டிஐ)
இலங்கையின் கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகளையும்.அவற்றின் ஏதேச்சாதிகார போக்குகளையும் கருத்தில்கொள்ளும்போது இவ்வாறான ஓரு அடையாள அட்டை காணப்படும்பட்சத்தில் ஜனவரி 8 புரட்சிபோன்ற ஓன்று சாத்தியமா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இலங்கை இந்த திட்டத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது,தற்போது வர்த்தகரீதியில் கிடைக்ககூடிய சில தொழில்நுட்பங்கள் மற்றும் கணணிமென்பொருட்களை பயன்படுத்தி எந்த பிரஜையினது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும்.

அமைச்சர் ராஜித சேனரத்தின அரசாங்கத்திற்கு மக்களை கண்காணிக்கும் அவசியம் ஏதும் இல்லை என உறுதியளித்திருந்தார்,இதேவேளை இவ்வறான டிஜிட்டல் உட்கட்டமைப்பினை கண்காணிப்பதற்கான திறமை அதிகாரிகளிற்கு உள்ளதா என்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் அவர் காணப்பட்டார்.

இதேவேளை இவ்வாறான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களின் உரிமைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் என்ன?இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் யாரிடம் செல்லும், நீதிமன்றம் இதில் தலையிட முடியுமா போன்ற விபரங்கள்  வெளியாகவில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127227/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.