Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்:டர்பனில் இன்று தொடக்கம்

 
  • கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா.
    கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா.

 தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

"பாக்ஸிங் டே'வில் தொடங்கும் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என தோல்வி கண்டது. இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 2-0 என தோற்றது.

அந்த இரு தொடர்களுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெற்ற நிலையில், இப்போது இரு அணிகளும் தங்களுக்கு உகந்த வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகங்களில் களமிறங்குகின்றன.

தென் ஆப்பிரிக்க அணி தனது பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனுடன் களமிறங்குகிறது. அதனால் டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பர் பணியை கவனிக்கவுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயத்திலிருந்து மீண்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

ஆனால் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக விளையாடாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். அவர், குக்குடன் இணைந்து இங்கிலாந்தின் இன்னிங்ûஸ தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா (உத்தேச லெவன்):

ஸ்டியான் வான் ஸில், டீன் எல்கர், ஹசிம் ஆம்லா (கேப்டன்), டூபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), டெம்பா பெளமா, டுமினி, டேல் ஸ்டெயின், டேன் பீயெட், கைல் அபாட், மோர்ன் மோர்கல்.

இங்கிலாந்து (உத்தேச லெவன்): அலாஸ்டர் குக் (கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் காம்ப்ட்ன், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் ஃபின்.

துளிகள்...

 

* இந்தத் தொடரை இங்கிலாந்திடம் இழக்கும்பட்சத்தில் தரவரிசையில் முதலிடத்தை இழக்கும் தென் ஆப்பிரிக்கா. 2012-லிருந்து தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* 2004-05-ல் இங்கிலாந்திடம் தோற்ற தென் ஆப்பிரிக்கா, அதன்பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எந்த அணியிடமும் தோற்கவில்லை.

* டர்பன் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் தோற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

http://www.dinamani.com/sports/2015/12/26/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/article3196192.ece

  • தொடங்கியவர்

1079030_1147806071905154_674582542424942

 இன்றைய ஆட்ட நேரமுடிவில்   இங்கிலாந்து179/4 (65.1 ov)

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்ட நேரமுடிவில்

இங்கிலாந்து        303
தென் ஆப்ரிக்கா  137/4 (52.0 ov)
10343688_1080702915282282_72052448494912

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி அபாரம்: தோல்வியின் பிடியில் தென் ஆப்பிரிக்கா

 
  • கைல் அபாட் விக்கெட்டைக் கைப்பற்றிய மொயீன் அலி. | படம்: ஏ.பி.
    கைல் அபாட் விக்கெட்டைக் கைப்பற்றிய மொயீன் அலி. | படம்: ஏ.பி.
  • தொடக்கத்தில் இறங்கி 118 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக திகழ்ந்த டீன் எல்கர். | படம்: கெட்டி.
    தொடக்கத்தில் இறங்கி 118 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக திகழ்ந்த டீன் எல்கர். | படம்: கெட்டி.

டர்பன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 303 ரன்களை அடுத்து தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 3-ம் நாளான இன்று 214 ரன்களுக்குச் சுருண்டது.

டீன் எல்கர் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்து தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கேரி கர்ஸ்டன் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாக இருந்த பிறகு தற்போது டீன் எல்கர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

137/4 என்ற நிலையில் எல்கர் 67, பவுமா 10 ரன்கள் என்று 3-ம் நாள் இன்னிங்ஸை தொடங்கியது தென் ஆப்பிரிக்கா. நேற்று டுபிளெஸ்ஸிஸை 2 ரன்களில் காலி செய்த மொயீன் அலி இன்று மேலும் தனது சாதுரிய சுழற்பந்து வீச்சினால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்று தொடக்கத்தில் ஸ்டூவர்ட் பிராட் நேற்றைய தனது அபாரப் பந்து வீச்சின் தொடர்ச்சியாக 2-வது பந்திலேயே டெம்பா பவுமாவை பவுல்டு செய்தார், தாழ்வாக வந்த பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார் பவுமா. டீன் எல்கர் தொடர்ந்து லெக் திசையில் ரன்களை சேகரித்து வந்தார்.

இந்நிலையில் டீன் எல்கர், டுமினி ஆகிய 2 இடது கை வீரர்கள் இருந்த நிலையில் அலிஸ்டர் குக் மிகச்சரியாக ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலியை அறிமுகம் செய்தார். அஸ்வினிடம் திக்கித் திணறிய டுமினி, இம்முறை மொயீன் அலியின் அதே போன்ற அருமையான ஆஃப் ஸ்ப்ன் பந்தில் எட்ஜ் எடுக்க 2 ரன்களில் ஸ்டோக்ஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அபாட்டும் மொயீன் அலியின் ஆஃப் ஸ்பின்னுக்கு ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து சடுதியில் நடையைக் கட்டினார். மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஜேம்ஸ் டெய்லர் பிடித்த கேட்சை கள நடுவர் ஏற்கவில்லை, இதனால் 3-வது நடுவர் பார்வைக்குச் சென்று அவுட் பெறப்பட்டது.

பிறகு டேல் ஸ்டெய்ன் (17), எல்கர் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 54 ரன்களைச் சேர்த்தனர். ஸ்டெய்ன் 52 பந்துகள் தாக்குப்பிடித்து கடைசியில் மொயீன் அலி பந்தை அடிக்க முயன்று அவுட் ஆனார்.

புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் ஸ்டீவன் ஃபின் ஒரே ஓவரில் பியட் மற்றும் மோர்கெலை வீழ்த்த தென் ஆப்பிரிக்காவின் இன்னின்ஸ் 214 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. பிராட் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஃபின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

89 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் சற்று முன்வரை விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இன்று இன்னமும் 64 ஓவர்கள் மீதமுள்ளன.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article8037164.ece

  • தொடங்கியவர்

வீழ்ச்சியின் தொடக்கமா?- தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட்டில் படுதோல்வி

 
  • டிவில்லியர்ஸுக்கு எல்.பி.தீர்ப்பு. 3-வது நடுவரை அழைக்கும் டிவில்லியர்ஸ். ஆனாலும் பலனில்லை. மொயீன் அலி கொண்டாட்டம். | படம்: கெட்டி.
    டிவில்லியர்ஸுக்கு எல்.பி.தீர்ப்பு. 3-வது நடுவரை அழைக்கும் டிவில்லியர்ஸ். ஆனாலும் பலனில்லை. மொயீன் அலி கொண்டாட்டம். | படம்: கெட்டி.
  • டர்பன் டெஸ்ட்: டேல் ஸ்டெய்ன் விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இங்கிலாந்து. | படம்: ராய்ட்டர்ஸ்.
    டர்பன் டெஸ்ட்: டேல் ஸ்டெய்ன் விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இங்கிலாந்து. | படம்: ராய்ட்டர்ஸ்.

டர்பன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 241 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

416 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 136/4 என்ற நிலையில் இன்று களமிறங்கியது. ஆனால் மொயீன் அலி, ஸ்டீவ் ஃபின் ஆகியோரது அபாரப் பந்து வீச்சில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டர்பனில் 6 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி அடையும் 5-வது தோல்வியாகும் இது. மேலும் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

நேற்றைய ஸ்கோர் 37 ரன்களில் இன்று தொடர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் மேலும் ரன் சேர்க்காமல் மொயீன் அலி பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்து நேராக வர பின்னால் சென்று ஆடினார் டிவில்லியர்ஸ், பந்து சற்றே தாழ்வாக கால்காப்பில் வாங்கினார். முறையீடு எழுந்தது, நடுவர் கையை உயர்த்தினார், ஆனால் டிவில்லியர்ஸ் மேல்முறையீடு செய்தார், பலனில்லை, பந்து லெக்ஸ்டம்பை தாக்குவதாக ரிப்ளேயில் தெரிந்தது.

அடுத்ததாக பவுமா ரன் எதுவும் எடுக்காமல், மொயீன் அலியை மேலேறி வந்து ஆட முயன்றார் பந்து தாண்டிச் சென்றது பேர்ஸ்டோ ஸ்டம்பிங் செய்தார்.

இரவுக்காவலனாக இறங்கிய டேல் ஸ்டெய்ன் 2 ரன்களில் ஸ்டீவ் ஃபின் பந்தை தவறான லைனில் ஆட ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. கைல் அபாட் 2 ரன்களில் மொயீன் அலியின் பந்தில் நேராக வாங்கினார் நடையைக் கட்டினார். பியட் 27 பந்துகளைச் சந்தித்து ரன் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசியாக மோர்கெல் 8 ரன்களில் பிராட் பந்தில் நேராக வாங்கினார். ரிவியூ செய்தார், பலனில்லை. இங்கிலாந்து வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியது.

ஜே.பி.டுமினி கிறிஸ் வோக்ஸ் ஓவரில் அருமையான கவர் டிரைவ் மற்றும் நேராக ஒரு டிரைவ் பவுண்டரி ஆகியவை உட்பட 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நாட் அவுட்டாகத் தேங்கினார்.

மொத்தத்தில் நேற்று மாலை டுபிளெஸ்ஸிஸ் விக்கெட்டையும் சேர்த்து கடைசி 7 விக்கெட்டுகளை 38 ரன்களில் தென் ஆப்பிரிக்கா இழந்தது. ஸ்டீவ் ஃபின் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொயீன் அலி 7 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் இந்தியாவில் ஏற்பட்ட தோல்விகளின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை என்று வெளிப்படையாகத் தெரிந்தது.

அவர்களது ஸ்ட்ரைக் பவுலர் டேல் ஸ்டெய்ன் காயமடைந்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கு விளையாடப் போவதில்லை என்று தெரியவந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடுவது உறுதி என்பதும் தெரியவந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா இன்னும் 2 நாட்களுக்குள் கடுமையாக தங்களை ஒன்று திரட்டிக் கொள்வது அவசியமாகிறது.

பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்க வேண்டும் என்பதான பிரச்சினை அல்ல தென் ஆப்பிரிக்க அணியுடையது. மாறாக இந்தியாவுக்கு எதிரான தோல்விகளையடுத்து அந்த அணியின் ஒட்டுமொத்த மனநிலையுமே எதிர்மறைப்பாங்குடன் விளங்குகிறது. அந்த அணி கிரேம் ஸ்மித் காலத்தில் இருந்ததைப் போன்ற பாசிட்டிவான, ஆக்ரோஷமான ஆட்டத்திறனை சமீபகாலங்களில் வெளிப்படுத்த தவறி வருகிறது.

அதிரடியான ஒரு கேப்டன், ஒரு சிறந்த ஸ்ட்ரைக் பவுலர், அதிரடி ஆல்ரவுண்டர் என்று தென் ஆப்பிரிக்க அணிக்கு தேவைப்பாடு அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது.

நம்பர் 1 டெஸ்ட் அணியின் வீழ்ச்சியின் தொடக்கமாக இந்தத் தோல்விகள் இருந்துவிடக்கூடாது என்பது கிரிக்கெட்டுக்கு நன்மை பயப்பதாகும். அணித்தேர்வுகளில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மேலும் கறாராக செயல்படுவது அவசியம். டிவில்லியர்ஸ் போன்ற மேட்ச் வின்னர் மீது விக்கெட் கீப்பிங் பணிச்சுமையை ஏற்றுவது தவறான முடிவு.

ஒரு சிறந்த டெஸ்ட் அணி தங்கள் சொந்த மண்ணிலேயே எந்தவித போராட்ட குணமுமின்றி பெரிய அச்சுறுத்தலற்ற இங்கிலாந்து பந்து வீச்சில் சரணடைவது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8045470.ece

  • தொடங்கியவர்

கேப்டவுனில் இன்று 2-வது டெஸ்ட் தொடக்கம்: நெருக்கடியில் ஹஸிம் ஆம்லா- அணியின் ஆலோசகராக ஸ்மித் நியமனம்

 
 
ஹசிம் ஆம்லா படம்: பிடிஐ
ஹசிம் ஆம்லா படம்: பிடிஐ

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கேப்டவுனில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ் டில் தென் ஆப்பிரிக்கா 241 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்திய தொடரில் இழந்த பேட்டிங்கை பார்மை சொந்த மண்ணில் கூட பெறமுடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தவிக்கின்றனர்.

நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா 2015ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த வெற்றியும் பலமிழந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானது. மழை பாதிப்பால் வங்க தேசத்துக்கு எதிரான 2 போட்டியை யும், இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியையும் டிரா செய்திருந்தது. 3 டெஸ்டில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. கடைசியாக இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தது.

இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சு ஆடுகளங்களால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கருத்துகள் எழுந்த நிலையில், தனது சொந்த மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆடுகளத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது அணியின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை ஆட்டம் காண செய்துள்ளது.

அடுத்தடுத்த தோல்விகளால் கேப்டன் ஹஸிம் ஆம்லாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 இன்னிங்ஸில் அவர் சேர்த்த ரன்கள் 150. சராசரி 15. இதில் அதிகபட்ச ரன் 43 ஆகும். இதேபோல் டுபிளெஸ்ஸி, டுமினி ஆகியோரது பேட்டிங்கும் கவலை அளிக்கும் விதத்திலேயே உள்ளது. கடந்த 2015ல் டுபிளெஸ்ஸி 20 இன்னிங்ஸில் சராசரியாக 16.75 ரன்னும், டுமினி 14 ரன்களுமே சேர்த்துள்ளனர். டி வில்லியர்ஸ் மட்டுமே தனது பங்களிப்பை முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்து வருகிறார்.

முதல் டெஸ்டில் அடைந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கும், அணியை ஒழுங்குப்படுத்துவதற்கும் கால அவகாசம் இல்லாத நிலையில் இன்றைய போட்டியை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இந்த ஆண்டில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும்.

விக்கெட் கீப்பராக குயின்டன் டி காக் களமிறங்குகிறார். ஸ்டெயின், கைல் அபாட் காயத்தால் அவதிப்படுவதால் ரபாடா, ஹர்டஸ் வில்ஜோன் அல்லது கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். 26 வயதான வில்ஜோன் முதல் தர போட்டிகளில் கடைசியாக ஆடிய இரு ஆட்டத்தில் 20 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அதேவேளையில் மோரிஸ் ஆல்ரவுண்டர் என்பதால் ஆடும் லெவனில் இடம் பெற இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

பேட்டிங்கில் ஆம்லா, டுபிளெஸ்ஸி, டுமினி ஆகியோர் மீண்டும் எழுச்சி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க முடியும். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்தாலும் அதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இளம் வீரர்கள் துளிர்விட தொடங்கி யுள்ளனர். இது அந்த அணிக்கு புதுத்தெம்பாக உள்ளது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து வீரர்கள் கடும் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

ராசியான ஆடுகளம்

கேப்டவுன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 19 வெற்றிகளை குவித்துள்ளது. வெளிநாட்டு அணிகளில் ஆஸ்திரேலியா மட்டுமே இங்கு 4 முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி கண்டுள்ளது. 1992க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடி தென் ஆப்பிரிக்கா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 2014ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 245 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.

இதற்கிடையே முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹஸிம் ஆம்லாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 இன்னிங்ஸில் அவர் சேர்த்த ரன்கள் 150. சராசரி 15. இதில் அதிகபட்ச ரன் 43 ஆகும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8057446.ece

  • தொடங்கியவர்

2வது டெஸ்ட் கேப்டவுனில்

இன்று ஆட்ட நேர முடிவில்    இங்கிலாந்து  317/5

12241238_1151892444829850_58861183840686

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் நாளில் இங்கிலாந்து-317/5

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் சனிக்கிழமை தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் அலாஸ்டர் குக்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. குக் 27 ரன்களில் வெளியேற, நிக் காம்ப்டன் களம்புகுந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 96 பந்துகளில் அரை சதம் கண்டார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் அரை சதம் இது. இங்கிலாந்து 129 ரன்களை எட்டியபோது ஹேல்ஸ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோ ரூட் களமிறங்க, நிக் காம்ப்டன் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த ஜேம்ஸ் டெய்லர் டக் அவுட்டாக, பென் ஸ்டோக்ஸ் களம்புகுந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 50 ரன்கள் சேர்த்து மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸுடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 93 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 74, ஜானி பேர்ஸ்டோவ் 59 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், மோர்கல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

http://www.dinamani.com/sports/2016/01/03/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/article3208601.ece

  • தொடங்கியவர்

2வது டெஸ்ட் கேப்டவுனில்

இன்று ஆட்ட நேர முடிவில்

இங்கிலாந்து   629/6d
தென் ஆப்ரிக்கா 141/2 (43.0 ov)
10398027_1084298401589400_57483366683587
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கேப்டவுண் டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்க அணி 141 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்திருக்கின்றது. அணித்தலைவர் அம்லா 64 ஓட்டங்களையும் டிவில்லியர்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்று ஆடுகளத்தில் உள்ளனர். எல்கர் 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஸ்டோக்ஸ் ஒவ் ஸ்டம்ஸ்க்கு வெளியே வீசிய பந்தை ஆடமுனைந்து பக்வேர்ட் பொய்ண்டில் கொம்ட்டனிடம் எட்ஜாகி ஆட்டமிழந்தார். வான் ஸில் 4 ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார். முன்னதாக இங்கிலாந்து 629 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்திருந்தபோது நிறுத்திக்கொண்டது. 317/5 எந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் - பெய்ர்ஸ்டோ இணை 6 வது விக்கட்டுக்காக 399 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றது. 198 பந்துகளிள் 11 சிக்ஸர்கள் 30 பவுண்டரிகள் அடங்கலாக ஸ்டோக்ஸ் 258 ஓட்டங்களைப் பெற்று அவுட்டானார். பெய்ர்ஸ்டோ 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இங்கிலாந்தின் அணித்தலைவர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். நாளை ஆட்டத்தின் 3 நாள் ஆகும்!

  • தொடங்கியவர்

ஸ்டோக்ஸ் இரட்டை சதம்: 629 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் இங்கிலாந்து

 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் படம்: கெட்டி இமேஜஸ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் படம்: கெட்டி இமேஜஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அடித்த இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங் ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 629 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கேப் டவுனில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் 74 ரன்களுடனும், பேர்ஸ்டா 39 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி மின்னல் வேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. ஸ்டோக்ஸ், பேர்ஸ்டா ஆகிய இருவரும் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசி டி20 போட்டியில் ஆடுவது போல் ஆடி தங்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 163 பந்துகளில் இரட்டை சதம் அடித்த ஸ்டோக்ஸ், மிக வேகமாக இரட்டை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 198 பந்துகளில் 258 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார். அவருக்கு தோள் கொடுத்து ஆடிய பேர்ஸ்டா 191 பந்துகளில் 150 ரன்களைக் குவித்தார். இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 629 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் குக் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி நேற்று 37 ஓவர்களின் இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்திருந்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-629-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8064086.ece

 

  • தொடங்கியவர்

2வது டெஸ்ட் கேப்டவுனில்

இன்று 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில்

இங்கிலாந்து    629/6d
தென் ஆப்ரிக்கா  353/3 (130.0 ov)
HM Amla  157 notout
F du Plessis 51 notout
10260021_1152956684723426_62501547628827

 

  • தொடங்கியவர்

201 ரன்கள் எடுத்து ஆம்லா அவுட்: தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் தவிர்ப்பு

 

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தனது 4-வது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்த ஹஷிம் ஆம்லா. | படம்: ஏ.எஃப்.பி.
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தனது 4-வது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்த ஹஷிம் ஆம்லா. | படம்: ஏ.எஃப்.பி.

கேப்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹஷிம் ஆம்லா 201 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 439 ரன்கள் எடுத்துள்ளது.

டுபிளெஸ்ஸிஸ், ஆம்லா இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 171 ரன்களைச் சேர்த்தனர்.

பென் ஸ்டோக்ஸ் அன்று அதிவேக இரட்டைச்சத உலகசாதனையை 10 பந்துகள் இடைவெளியில் தவறவிட்ட அதிரடி இன்னிங்ஸுக்கு நேர்மாறாக ஹஷிம் ஆம்லாவின் இந்த இன்னிங்ஸ் 2000-த்துக்குப் பிறகு அதிமெதுவான இரட்டை சதமாகும். இவர் 467 பந்துகளை சந்தித்து 27 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் வைடு ஆஃப் த கிரீசிலிருந்து வீசிய பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு லெக்ஸ்டம்பைத் தாக்கியது ஆம்லா 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை எட்ஜ் செய்து பென் ஸ்டோக்ஸிடம் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டுபிளெஸ்ஸிஸ்.

தற்போது பவுமா, டி காக் ஆடி வருகின்றனர்.

நேற்று 157 நாட் அவுட்டாக இருந்த ஹஷிம் ஆம்லா, 4-ம் நாளான இன்று மொயீன் அலி பந்தை மிட் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன்னை எடுத்து இரட்டைச்சதம் கண்டார். இது ஆம்லாவின் 4-வது இரட்டைச் சதமாகும்.

முன்னதாக ஆம்லா, டிவில்லியர்ஸ் (88) ஜோடி நேற்று 3-வது விக்கெட்டுக்காக 183 ரன்களைச் சேர்த்தது இங்கிலாந்தின் 'கேட்ச்விடு' கைங்கரியத்தினால் நிகழ்ந்ததே.

இந்தியா தொடரிலிருந்தே ரன் குவிக்கக் கிடைக்க வாய்ப்பு தேடி வரும் ஆம்லா, டிவில்லியர்ஸ் போன்ற பெரிய வீரர்களுக்கு இருமுறை கேட்ச் வாய்ப்பைக் கோட்டை விட்டால் என்ன ஆகும், அதுதான் இங்கிலாந்துக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் மிகவும் மோசமாக விட்ட கேட்ச் எதுவெனில், ஆம்லா 120 ரன்களில் இருந்த போது ஸ்டீவ் ஃபின் பந்தை பேக்வர்ட் பாயிண்டில் கட் செய்தார் கைக்கு வந்ததை கோட்டை விட்டார் காம்ப்டன்.

டிவில்லியர்ஸ் 5 ரன்களில் இருந்த போது, ஆண்டர்சன் பந்தில் ஜோ ரூட் ஸ்லிப்பில் ஒரு கேட்சை விட்டார். இதற்கு பதிலடியாக ஆம்லா 76 ரன்களில் இருந்த போது ஜோ ரூட் பந்தில் ஆண்டர்சன் கேட்சை விட்டார்.

பிற்பாடு நேற்று ஃபா டுபிளெஸ்ஸிஸ் மட்டையின் முன் விளிம்பில் பட்டு வந்த கேட்சை மிட்-ஆஃபில் ஃபின் தாமதமாக வினையாற்றியதால் தவறவிட்டார். மேலும் 17-ல் டுபிளெஸ்ஸிஸ் இருந்த போது மொயீன் அலி பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் ஜேம்ஸ் டெய்லருக்கு கேட்ச் வாய்ப்பாக அமைந்தது, அவர் அதைப் பிடித்திருக்க வேண்டும், ஆனால் அவரது ரிப்ளெக்ஸ் தோதாக அமையவில்லை.

இங்கிலாந்து கேட்ச்களை பிடித்திருந்தால் தற்போது தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் கூட இழந்திருக்கலாம். கேட்சஸ் வின் மேட்சஸ் என்று கூறுவார்கள். பெரிய அணிகளுக்கு எதிராக பீல்டிங்கைத் தெளிவாக செய்யாத அணிகள் வெல்வது கடினம். முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்தியத் தோல்வியிலிருந்து மீளாத மனநிலையில் இருந்தது. ஆனால் தற்போது இங்கிலாந்து பந்துவீச்சுக்கு சவாலாகத் திகழ்ந்துள்ளது.

மைக்கேல் கிளார்க் போன்ற அதிரடி பாசிட்டிவ் கேப்டனாக இருந்தால், ஃபாலோ ஆன் தவிர்ப்பு ஸ்கோரை எட்டியவுடன் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸை டிக்ளேர் செய்து இங்கிலாந்தை 100-125 ரன்களுக்கு சுருட்ட முடியுமா என்று ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பார்.

ஹஷிம் ஆம்லாவிடம் நாம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தென் ஆப்பிரிக்காவின் மீட்சியில் இங்கிலாந்தின் கவனக்குறைவும் பங்கு செலுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/201-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8068924.ece?homepage=true

  • தொடங்கியவர்

2வது டெஸ்ட் கேப்டவுனில்

இன்று 4 ம் நாள் ஆட்ட நேர முடிவில்

 இங்கிலாந்து         629/6d & 16/0 (6.0 ov)
 தென் ஆப்ரிக்கா   627/7d
  • தொடங்கியவர்

2வது டெஸ்ட் கேப்டவுனில்

இங்கிலாந்து        629/6d & 159/6 (65.0 ov)
 தென் ஆப்ரிக்கா   627/7d
Match drawn.
Ben Stokes has been named as Man of the Match
 
  • தொடங்கியவர்

தென் ஆபிரிக்கா- இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு

January 07, 2016

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கேப் டவுனில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு செய்யப்பட்டது. இப்போட்டியில் நாணயச்சுழற்கியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதற்கேற்ப தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 125.5 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 629 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் வெளியேறியது.

CAPE TOWN, SOUTH AFRICA - JANUARY 06:  Alastair Cook of England shakes hands with Hashim Amla of South Africa after hearing Hashim will step down as captain after the match was drawn during day five of the 2nd Test at Newlands Stadium on January 6, 2016 in Cape Town, South Africa.  (Photo by Julian Finney/Getty Images)

இங்கிலாந்து அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்டோக்ஸ் 258 ஓட்டங்களையும் பேஸ்ட்ரோவ் 140 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள ஹேல்ஸ் 60, ரூட் 50 மற்றும் கொம்டன் 45 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் ரபாடா 3 விக்கெட்களையும் டோர்கல் மற்றும் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பபெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 211 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 627 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் வெளியேறியது.

துடுப்பாட்டத்தில் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் அம்லா 201 ஓட்டங்களையும் பவுமா 102 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள வில்லியர்ஸ் 88 மற்றும் பிளஸிஸ் 86 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் புரோட் மற்றும் பின் தலா 2 விக்கெட்களையும் ஸ்டோக்ஸ் மற்றும் ஆண்டர்ஸன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக தனது விக்கெட்டை இழந்தது. அதன்படி 65 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால் போட்டி சமநிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது. போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=7291&cat=2

  • தொடங்கியவர்

இன்று மூன்றாவது டெஸ்டில் தெ.ஆபிரிக்கா- இங்கிலாந்து மோதல்

January 14, 2016

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

3
முடிவடைந்த முதல் இரண்டு ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனால் இன்று ஜோகன்ஸ்பேர்க் மைதானத்தில் ஆரம்பமாகும் ஆட்டத்தில் வெற்றிபெற்றாலேயே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை தென்னாபிரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம் சமநிலையில் முடிந்தாலோ தென்னாபிரிக்காவால் தொடரை முழுமையாகக் கைப்பற்ற முடியாத நிலைமை ஏற்படும். ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்.

http://www.onlineuthayan.com/sports/?p=7707&cat=2

  • தொடங்கியவர்

ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள்:இங்கிலாந்து வெற்றி

 
  • Broad.jpg

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை கைப்பற்ற, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டவுனில் நடைபெற்ற 2-ஆவது போட்டி டிராவில் முடிந்தது.

தற்போது 3-ஆவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 313 ரன்களும், இங்கிலாந்து 323 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 33.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் 12.1 ஓவர்கள் பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராட் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 22.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

http://www.dinamani.com/sports/2016/01/17/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3230293.ece

South Africa 313 & 83
England 323 & 74/3 (22.4 ov)
  • தொடங்கியவர்
இங்கிலாந்துடனான 4 ஆவது டெஸ்ட்டில் தென் ஆபிரிக்காவின் ஸ்டீபன் குக், ஹஷிம் அம்லா சதம் குவித்தனர்
2016-01-22 20:31:40

14376Stephen-Cook-and-Hashim-Amla.jpgஇங்கிலாந்துடனான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் அறிமுக வீரர் ஸ்டீபன் குக், ஹஷிம் அம்லா ஆகியோர் சதம்குவித்துள்ளனர்.

 

சென்சுரியன் நகரில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டீன் எல்கர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஸ்டீபன் குக், முன்னாள் அணித்தலைவர் ஹஷிம் அம்லா இணைந்து 2 ஆவது விக்கெட்டுக்காக 202 ஓட்டங்களைக் குவித்தனர்.  


ஹஷிம் அம்லா 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ஏ.பி. டிவில்லியர்ஸ் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார்.


தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 33வயதுவீரரான ஸ்டீபன் குக் தேநீர் இடைவேளையின் போது 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவ்வேளையில் தென் ஆபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14376#sthash.CWhMTTSy.dpuf
  • தொடங்கியவர்

12523201_1094701890549051_39994309090137

  • தொடங்கியவர்

12645255_1095224303830143_24612888376524

  • தொடங்கியவர்

12644775_1095751817110725_42505802286213

  • தொடங்கியவர்
போட்டி தென்னாபிரிக்காவுக்கு: தொடர் இங்கிலாந்துக்கு
 
 

article_1453822483-TamilSerisEng-SA.jpgதென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி 280 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. எனினும், இத்தொடரை இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

382 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களுடன் 5ஆவது நாளைத் தொடங்கியது. எனினும், 82 பந்துகளை மாத்திரம் சந்தித்த அவ்வணி, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதிகபட்சமான 24 ஓட்டங்களை, ஜேம்ஸ் டெய்லர் பெற்றார்.

பந்துவீச்சில் கஜிஸ்கோ ரபடா, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இனிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், இப்போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் இனிங்ஸில் 475 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களையும் பெற்றதோடு, தென்னாபிரிக்க அணி தனது 2ஆவது இனிங்ஸில், 5 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக கஜிஸ்கோ ரபடா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/164734/%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-#sthash.flvgAnF2.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.