Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பிளவுபடுவதை தடுக்கும் முயற்சியில் இந்தியா? - சம்பந்தன்- விக்கி சந்திப்பின் பின்னணி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு பிளவுபடுவதை தடுக்கும் முயற்சியில் இந்தியா? - சம்பந்தன்- விக்கி சந்திப்பின் பின்னணி. 
[Sunday 2015-12-27 08:00]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து, வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் பேரவையால் கூட்டமைப்பு பிளவுபட்டு விடும் என்ற விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிளவைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் இந்தியா களமிறங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து, வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் பேரவையால் கூட்டமைப்பு பிளவுபட்டு விடும் என்ற விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிளவைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் இந்தியா களமிறங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சக்கட்டம் அடைந்திருந்த நிலையில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் கொழும்பில் அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியமைக்கு டில்லியின் அழுத்தமே பிரதான காரணம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைக்கப்போவதாகக் கூறி வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்டு கடந்த வாரம் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு வடக்கில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், அதன் அதிருப்தியாளர்கள் பலரும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றதால் இது கூட்டமைப்புக்கு எதிரான கூட்டு என்றும், கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேச ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை தாம் விரும்பமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். புதிய அமைப்பு குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்றும், எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது என்றும், ஓரணியில் நின்று நிரந்தர அரசியல் தீர்வைக் காணவே தாம் விரும்புகின்றோம் என்றும், குழப்பியடிக்க விரும்புவோர் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையில் வடக்கு மாகாண முதலவர் விக்னேஸ்வரன் இணைத் தலைமைப் பதவியை ஏற்றதையடுத்து வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் உருவாகியிருந்தன. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு மாகாண சபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பை உடனடியாக நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று வலியுறுத்தியும் இருந்தனர்.

இதற்கிடையில் வடக்கில் புதிதாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை தாம் வரவேற்கின்றார் என்றும், அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிகின்றார் என்றும், கிழக்கு மாகாணத்தையும் உள்வாங்கும் வகையில் மேற்படி அமைப்பு விஸ்தரிக்கப்படவேண்டும் என்றும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கருத்து வெளியிட்டும் இருந்தார். இவ்வாறான விமர்சனங்கள், கருத்துக்களினால் சீற்றமடைந்த இந்தியா, தமிழ் மக்கள் பேரவையை ஓரம்கட்டும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதைத் தடுக்கும் தீவிர நடவடிக்கையிலும், கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இந்தியத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமை பதவியேற்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் கொழும்பில் அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியமைக்கு டில்லியின் அழுத்தமே பிரதான காரணம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒன்றின் தலைவர் - பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு படுதோல்வியடைந்தவர்களும், கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களும் ஒன்றிணைந்து கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் வகையில் சிதைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை என்ற போலி அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பில், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்காமல் அமைதியாக இருந்த வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளார். இது வெட்கக்கேடானது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்ற முதல்வர் இந்தப் பதவியை ஏற்றதிற்கு கூட்டமைப்பின் தலைமை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. துரோகிகளுடன் வடக்கு முதல்வர் கைகோர்த்துள்ளதை நாம் விரும்பவில்லை.

இந்நிலையில், எமது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தியத் தூதரக அதிகாரிகளும், இராஜதந்திரிகளும் அவருக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்திருக்கலாம் என்று நாம் நினைக்கின்றோம். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று கூட்டமைப்புடன் சேர்ந்து பயணிப்பேன் என்று வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இறுதிப் போரில் வன்னியில் எமது தமிழ் உறவுகளை திட்டமிட்டு மஹிந்த அரச படைகள் கொன்றழித்தபோது மன்மோகன் சிங் - சோனியா காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்த மாதிரி, வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்படுவதை - பிளவுபடுவதை - சிதைவடைவதை தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதிலும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் போதிய அதிகாரங்களுடன் ஆட்சி நடத்த இலங்கை அரசு அனைத்து உரிமைகளையும், தீர்வுகளையும் வழங்கவேண்டும் என்பதிலும் மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு உறுதியாகவுள்ளது'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒன்றின் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையால் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் விரைவில் நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsID=147896&category=TamilNews&language=tamil

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.