Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சட்ட விவாதம். அரசியல் பேசாமல் விவாதிக்க வாருங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம்.

1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்)

சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார்.

பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன?

2. ஒருவர் குடும்பஸ்தர். கிரெடிட் ஹிஸ்டரி பிரச்னை காரணமாக, தனது பணத்தினை போட்டு, தனது உறவினர் அல்லது நண்பர் பெயரில் ஒரு ஆதனத்தினை வாங்குகிறார்.

சில ஆண்டுகளின் பின்னர், அவராக ஒரு வீட்டினை வாங்கக் கூடிய நிலையில் பெரிய வீடு ஒன்றை வாங்கி குடி பெயர்க்கிறார்.

எந்த நண்பர் அல்லது உறவினர் பெயரில் முதல் வீட்டினை வாங்கினாரோ அவர் தனது குடும்பத்துடன், வாடகையாளராக இவரது முதல் வீட்டில் குடி புகுகிறார்.

ஒழுங்காக வந்து கொண்டிருந்த வாடகை மெதுவாக நின்று, முழுவதுமாக நின்று கடைசியில் உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும் நிலையில் போய் நிற்கிறது.

இப்படி நிலையில் பலர், குய்யோ, முறையோ, இப்படியும் செய்யலாமா என்று உறவை / நட்பை திட்டியவாறு. ஒன்றுமே செய்ய முடியாதே என்று அடங்கிவிடுதலையும் பார்க்கிறோம்.

பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன?

உங்கள் சட்ட நியாயப் பிளப்புகளை எடுத்து விடுங்களேன்.
 

Edited by Nathamuni

இதில இருந்து என்ன புரியுதுன்னா நம்ம நாதமுனி நல்லா யாருகிட்டயோ ஏமாந்து இருக்கார் . வசமா மாட்டிகிட்டு முழிக்கிறார் . அதனால நேரடியா ஆலோசனை கேட்காம திரி போட்டு நோன்டுறார் .

முதல் கேள்விக்கு பதில் இல்லை . ஏனெனில் சாட்சிகள் அற்ற ரொக்க பண பரிமாற்றம் மட்டுமே நடந்துள்ளதால் ஒன்னும் செய்ய இயலாது .

இரண்டாவது கேள்விக்கான பதில் 
வாடகை வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் ஓரளவு வழி உண்டு. ஆனா வீடு கட்ட காசு எப்படி வந்துச்சுன்னு கேள்வி வரும் 

பினாமி, கணக்கு காட்ட முடியவில்லை எல்லாம் பழங்காலத்து கதைகள் ஆச்சே ??? எப்படி இவ்வளளவு நல்லவராக இருந்தீர் ???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம்.

1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்)

சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார்.

பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன?

சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பணம் பாதிக்க பட்டவர்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமானது. அந்த பணத்தை சேர்த்தவர் சட்டத்தின் முன் ஒரு குற்றவாளி. அந்த பணத்தை முதலீடு செய்து பெருக்க உதவியவர் இந்த குற்றத்தை அறிந்தும் அரசுக்கு அறிவிக்காத காரணத்தால் குற்றவாளியை மறைக்க உதவிய குற்றத்தை புரிந்தவர் ஆகிறார். மேலும் சட்டவிரோதமாக பெற்ற பணத்தை பெருக்க உதவி, குற்றம் செய்த குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த குற்றவாளி ஆகிறார்.

ஆகவே இருவருமே குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். இந்த குற்றங்கள் அரசுக்கு அறிவிக்க பட்டால் இருவரிலும் இப்போது ஆதனத்தை வைத்திருப்பவரே பெருமளவில் இழக்க இருக்கிறார். ஆகவே முதல் குற்றம் செய்தவர் தான் அரசிடம் உண்மையை சொல்லி அரச சார்பு சாட்சி ஆகி, அரசு ஆதனத்தை கைப்பற்றவும் தற்போது ஆதனத்தை வைத்திருப்பவரை சிறைப்படுத்தவும் உதவ முன் வந்தால் ஆதனத்தை வைத்திருப்பவர் அதை தடுக்க பின்வரும் ஒரு வழியை அணுகுவார்.

  1. முதல் குற்றம் செய்து பணம் கொடுத்தவரை இல்லாமல் செய்வது. இது பின்னர் கொலை குற்றமாகும்.
  2. முதல் குற்றம் செய்தவருடன் உடன்பாட்டுக்கு வந்து சொத்தை பகிர்ந்து கொள்வது.

முதலாவது அணுகுமுறையையே குற்றவாளிகள் பெரும்பாலும் தேர்ந்து எடுக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒரு இருட்டறை. அதில் கறுப்புப் பூனையைத் தேடி நீதிபதிக்கு காண்பிப்பதே ஒரு வழக்கின் வெற்றி.

நம்மவர்களில் பலர் இந்த இரண்டாவது வகையில் சிக்கி, சட்டம் புரியாமல் அல்லது என்ன செய்வது என்று தெரியாமல் திட்டல், அடிபாடு, உறவினர்களை நியாயம் சொல்ல அழைப்பது என தடுமாறும் நிலையில் இது முக்கியமான ஒரு விடயம்.

ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தப் பக்கம் இன்னும் காணவில்லையே...

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இது ஒரு சிவில் பிரச்னை. ஆகவே பணம் எவ்வாறு வந்தது என்பது நீதிபதி ஒருவர் கருத்தில் எடுக்கும் பிரச்னை இல்லை.

ஆகவே இரு வழக்குகளும் முக்கியமான ஒரு விடயம் குறித்தே பார்வை செலுத்தும். அதாவது இங்கே 'Partnership' உறவு உருவாக்கி உள்ளதா என்பதே.

பலரும் தவறாக நினைப்பது, ஒன்றும் எழுத்தில் இல்லாவிடில், அவ்வளவு தான் என்று. ஆனால், எழுத்தில் இல்லாமலே, இயல்பாகவே 'partnership at will' உருவாகும் நிலைமைகள் பல நமது வாழ்வில் காண்கிறோம்.

உதாரணமாக, வாடகை வண்டியில் ஏறி அமர்கிறோம். விமான நிலையம் செல்ல வேண்டும் என்கிறோம். அங்கே எழுத்தில் இல்லாமலே 'partnership at will' (contract for services) உருவாகிறது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்டோர் பொதுவான நலன் நோக்கி இயங்குவது. விமான நிலையம் அடையும் போது டிரைவருக்கு பணமும், பயணிக்கு பயண முடிவும் பலனாக கிடைக்கிறது. அத்துடன்  'partnership at will' முடிவுக்கு வருகின்றது.

இங்கே, விமான நிலையம் அடையாவிடில், பயணிக்கு ஆன தனது கடமைப் பாட்டினை டிரைவரும், அடைந்த பின் பணம் கொடுக்கவிடில், தனது கடமைப் பாட்டினை பயணியும் நிறைவு செய்ய வில்லை என்ற வகையில்  'partnership at will' முடிவுக்கு வரவில்லை. தொடர்கிறது. Partnership at will ல் இருந்து ஒருவர் தானாக விலகவோ, விலத்தவோ முடியாது என்பதால் வழக்கு, நீதி நியாயம் என நீள்கிறது.

அதேவேளை, டிரைவர் குடிபோதையில் இருக்கிறார் என்றால், சட்ட ரீதியற்ற காரணத்தாவ், பயணி இடையில் இறங்கினால், Partnership முடிவுக்கு வருகிறது.

முக்கியமாக,  'partnership at will' அதாவது, எழுதாத, வாய் மூலமான உடன்படிக்கைக்கு சட்டம் இன்னுமொரு பாதுகாப்பினை தருகின்றது.

அதாவது ஒருவர் தானாக  'partnership at will' ல் இருந்து நீங்கிக் கொள்வதோ, அல்லது அடுத்தவரை நீக்குவதோ முடியாது. ஏனெனில் அங்கே இது குறித்த தெளிவான எழுத்தில் எழுதி கை எழுத்து போடப் பட்ட ஆவணம் இல்லை ஆதலால், ஒருவர் அடுத்தவரை கழுத்து அறுபதை சட்டம் அனுமதிக்காது. மேலும் ஒரு கம்பெனி போன்று,   'partnership in business' என்பது தனியான Legal entity' ஆக கருதப் படுவதில்லை. ஆகவே மிக முக்கியமாக எந்த நோக்கதுக்காக parneship உறவுக்குள் சென்றார்களோ, அந்த நோக்கம் தொடர்பில் வாங்கப் படும் கடனுக்கு சகல பார்ட்னர்களும் பொறுப்பாவர். 

மேலே உள்ள வாடகைக் கார், பயணி விவகாரத்தில், என்னுமொரு பெரிய 'சவாரி' கிடைக்கிறது என்று, நடுவழியில் பயணியை இறக்கி விட்டு சென்று, அதனால் அவர் தனது விமானத்தினை தவற விட்டு, அதனை தொடர்ந்து முக்கியமான வியாபார டீலை இழந்தால், வாடகைக் கார் நிறுவனம் நஷ்ட ஈடு செலுத்த நேரிடும். (breach of contract). அதே போல் பயணி விமான நிலையம் சென்ற பின் குறித்த நேரத்துக்குள் பணம் கொடுத்து அனுப்பாவிடில், நேர இழப்பால் வேறு சவாரியினை இழந்தால் அந்த நஷ்ட ஈடு செலுத்த நேரிடும்.

நமது வீட்டு விசயத்துக்கு வருவோம்.

இங்கே பலர் 'partnership at will' உருவாகி இருப்பதனை அறியாமல் இருகின்றார்கள். ஆகவே ஒன்றுமே செய்ய முடியாது என நினைகின்றனர்.  மேலும் முக்கியமாக, partnership னை உறுதிபடுத்துவது முக்கியமானது. ஏனெனில் பணம் போட்டவர் இதனை அலட்சியப் படுத்தினால், அந்த ஆதனம் தனது பெயரில் இருப்பதால், மேலும் மேலும் கடன் எடுத்து விட்டு (இது மோசடிக் குற்ற சாட்டுக்கு உள்ளாகும் நடவடிக்கை, Breach of trust and fraudulent activities against a partner: ஆனால் பார்ட்னரின் அனுமதியுடன் தான் செய்தேன் என்றால் மோசடிக் குற்ற சாட்டில் இருந்து தப்பலாம்.), partner தான் பொறுப்பு என்று கூறி, partnership னை அவர் உறுதிபடுத்தினால் கதை கந்தல் தான். 

ஆகவே, இன்னொருவர் பெயரில் ஆதனம் வாங்கி, அவர் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டால், இருக்கவே இருக்கிறது சட்ட தீர்வு.

அவர் விற்பனை செய்ததால் கூட, மோசடி குற்ற சாட்டுக்கு உள்ளாகி பணத்தினை இழந்து, முதல் போட்டவருக்கு பணம் சட்டப் படி கிடைக்கும் நிலை உள்ளது. 

அதேவேளை, இன்னொருவர் பெயரை பயன்படுத்தும் நிலை வந்தால், எழுதி வாங்கி வைத்துக் கொண்டே செய்யுங்கள். முடிந்தவரை நியாயமாக, உனக்கு இந்த ஆதனத்தினை விற்பனை செய்கையில் இவ்வளவு தருவேன் என எழுத்து மூலம் சொல்லி விடுங்கள். ஆகவே அவரும் நியாயமாக இருப்பார்.
 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.