Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சிறிலங்கா – பிரித்தானிய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சிறிலங்கா – பிரித்தானிய ஊடகம்

JAN 12, 2016 | 0:00by நித்தியபாரதி

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

இவ்வாறு பிரித்தானியாவின் TheGuardian நாளிதழில், Jason Burke எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிய பின்னரும் கூட, சித்திரவதைகள், சட்ட ரீதியற்ற தடுப்பு போன்ற பல்வேறு மீறல்கள் சிறிலங்காவில்  தொடர அனுமதிக்கப்படுவதாக சிறிலங்கா அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் இடம்பெற்ற 27 தனிப்பட்டசம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக பரப்புரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்கின்ற அமைப்பானது சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்களுக்கு மருத்துவ சார் உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனமானது சித்திரவதைகளுக்கு உள்ளாகிய எட்டுப் பேரின் முறைப்பாடுகளை ஆராய்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட எட்டுப் பேரும் சிறிலங்காவைச் சேர்ந்த சிறுபான்மைத் தமிழ் சமூகத்தவர்களாவர். சிறிலங்காவின் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகளே தம்மை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா 26 ஆண்டு கால கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தீவாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் பல ஆண்டுகளாகத் தொடரப்பட்டு 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். சிறிலங்காவில் வாழும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துவதாக, அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

குறிப்பாக இவர் தனது கன்னி உரையில் சிறிலங்காவில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

தனது நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு போரின் போது இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் என்பதில் சிறிசேன உறுதியாக நிற்பதானது வரவேற்கத்தக்க மாற்றம் என ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ அமைப்பின் கொள்கை மற்றும் ஆதரவிற்கான இயக்குனர் சொன்யா சீற்ஸ் தெரிவித்துள்ளார்.

‘இவ்வாறான புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் சிறிலங்காவின் அதிபர், சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை முற்றாக ஒழிப்பதற்கான தெளிவான கோட்பாட்டை வரையறுப்பதுடன் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்க வேண்டும்’ என சொன்யா சீற்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறைகளைச் சேர்ந்தவர்களால் அந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது எவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தனது மருத்துவ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்ற அரச சார்பற்ற நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் போருக்குப் பின்னான காலப்பகுதியில் தொடரப்பட்ட ‘அரச சித்திரவதை இயந்திரமானது’ தற்போதும் மக்கள் மீது தனது சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாக இந்த அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு ஆதாரங்கள் உள்ள போதிலும் தாம் எவ்வித மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை என சிறிலங்கா இராணுவத்தினரும் காவற்துறையினரும் கூறுகின்றனர்.

‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்ற அமைப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வவுனியாவின் வடக்கிலுள்ள இராணுவ முகாம் வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ முகாமானது சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு மற்றும் சித்திரவதைக் கூடமாக இயங்கி வருவதாகவும் இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காடுகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் வைத்து தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக இதில் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் கூறுகின்றனர். இவர்களில் பலர் சித்திரவதைகளின் போது நெருப்பில் காய்ச்சப்பட்ட சூடான இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவற்றை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் காணப்படும் வடுக்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அடிக்கடி இடம்பெற்ற ‘வெள்ளை வான்’ கடத்தல்கள் தற்போதும் சிறிலங்காவில் இடம்பெறுவதாகவும் கடந்த மாதமும் கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாதவர்கள் வெள்ளை வான்களில் வந்து இவ்வாறான கடத்தல்களை மேற்கொள்வதாகவும் ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்ற அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

‘இவ்வாறான வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வழமைபோன்று ஒரு வியாபாரமாக இடம்பெறுகின்றமை கவலைக்குரியதாகும்’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தைச் சேர்ந்த ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிறிலங்காவில் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகிய 20 பேரின் சாட்சியங்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இவர்கள் தற்போது சிறிலங்காவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் வவுனியாவிலுள்ள இராணுவ முகாம் ஒன்று சித்திரவதைக் கூடமாக இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் ஒருவரது முறைப்பாடானது அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து விடுதலை ஆகிய இரண்டு அமைப்புக்களாலும் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுள் பலர் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்டவர்களாவர்.

இவர்களில் சிலர் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட போது 18 வயதிற்கு உட்பட்டவர்களாக காணப்பட்டதுடன் புலிகள் அமைப்பில் சில வாரங்கள் மட்டுமே பணிபுரிந்தவர்களாவர். ஆகவே போரின் இறுதியில் இவர்கள் தம்மை முன்னாள் புலிகள் என இராணுவத்திடம் பதிவுசெய்யாமல் இருந்தனர்.

இவர்களில் சிலர் போரின் பின்னர் தேர்தல் பரப்புரைகள் போன்ற அரசியற் செயற்பாடிகளிலும் காணாமற்போனவர்கள் தொடர்பாக பரப்புரை செய்தவர்களாகவும் காணப்பட்டனர். இதற்காகவே இவர்கள் கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களுள் ஐந்து பெண்களும் அடங்குவர்.

கம்பிகள், வயர்கள் மற்றும் தடி போன்ற பல்வேறு பொருட்களால் தாம் தாக்கப்பட்டதாகவும் நீர் நிரம்பிய பரல்களில் அடைக்கப்பட்டும் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டும் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். போரின் இறுதியில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பிற்கு புத்துயிரளிக்கும் நோக்குடன் செயற்படுவதாக தம் மீது பழிசுமத்தப்பட்டு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் காணப்படும் காயங்கள் மற்றும் வடுக்கள் போன்றன நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர்களால் மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தாம் எங்கு வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதையும் ஆழமாக விபரித்துள்ளனர்.

‘சிறந்த அனுபவங்களைக் கொண்ட சட்டவாளர்களின் உதவியுடனேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சித்திரவதைகளுக்கு உள்ளாகி சிறிலங்காவிலிருந்து தப்பி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பேச்சாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் சிறிசேன மீது ஏற்கனவே அழுத்தம் இடப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காவில் பல்வேறு போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கடந்த செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இவ்வாறான மீறல்களை விசாரணை செய்வதற்கு ‘சிறப்பு அனைத்துலக நீதிமன்றம்’ உருவாக்கப்பட வேண்டும் எனவும் இப்பொறிமுறை மூலம் மிகவும் மோசமான மீறல்களில் ஈடுபட்ட ஒவ்வொரு தனிமனிதர்களுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியது.

சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை, படுகொலைகள், பலவந்தமான காணாமற் போதல்கள், பாலியல் மீறல்கள் போன்ற பல்வேறு கொடிய மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள், சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் போன்றன செயற்படுத்தப்பட்டதாகவும், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல்-ஹுசைன் வெளியிட்ட 220 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் அதிகளவிலான குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறையானது பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களும் பெரிதளவில் அமுல்படுத்தப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

http://www.puthinappalakai.net/2016/01/12/news/12656

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோதாரியப்பா? அங்கை எல்லாப்பிரச்சனையும் முடிஞ்சுது எண்டுறாங்கள்....இஞ்சாலை என்னடாவெண்டால் மனிதவதை இன்னும் அங்கை நடக்குது எண்டுறாங்கள்.....எனக்கெண்டால் ஒரு இழவும் விளங்கேல்லை.
ஒரு வேளை வெள்ளைக்காரன் பொய் சொல்லுறானோ?????

நாட்டில தேனும் பாலும் பாயுது என்று எவரும் சொல்லவில்லை .

மாற்றம் வந்திருக்கு அது தொடரவேண்டும் .

ஒரு இரவில் இருந்த ஒரு சிஸ்டத்தை மாற்ற எவருமே சுப்பர்மான்கள் இல்லை .

மோடி ஒபாமா எல்லோருக்கும் இதே நிலைதான் 

இதற்கு தான் சற்று உலக அரசியல் தெரியவேண்டும் என்று தொடர்ந்து எழுதுகின்றேன் 

எம்மருக்கு வாயை திறந்தால் வாயிற்குள் வைக்கும் புலிகளும் கோத்தாவும் தான் சரி .

 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது நீங்கள் எதோ மற்றையவர்களை எல்லாம் மொக்கன் , மடையன் கணக்கில் நினைத்துதான் கருத்து எழுதுகிறீர்கள் போல தெரிகிறது.
மாற்றம் வந்திருக்கு, மாற்றம் வந்திருக்கு அது இலங்கையில் விரல் சூப்பும் பிள்ளைகளுக்கும் தெரியும்.
இப்படி எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கு, இது ஒரு வகை மாற்றம். 
இவர் சற்று வித்தியாசம், அவர்கள் பாசையில் சொன்னால் "புலிகள் பயங்கரவாதம்" இல்லாத நாட்டில் நல்லெண்ண அடிப்படையில் சில விடயங்கள் குறித்து பேசுகிறார்கள், செய்ய முயற்சிக்கிறார்கள் , சிலதை  செய்தும் இருக்கிறார்கள். இங்கு யாரும் அதை இல்லை என்று சொல்லவில்லை.
அவர்கள்  செய்யும் மாற்றங்கள் வேணுமானால் தெற்கில் வாழும் சகோதரர்களுக்கு பெரிதாக தெரியலாம்.
30 ஆண்டுக்கு மேலாக அடக்கு முறையையும் அகதி வாழ்க்கையும்  மட்டுமே அனுபவித்த மக்களுக்கு யானைப்   பசிக்கு சோளப் பொரிதான்.
உத்தரவாதம் இல்லாத அரசியல், அரசியல்வாதிகள் இருக்கும் போது எம்மை போன்றவர்களின் ஆதங்கம் ஞாயமானதே. 
தமிழருக்கு தீர்வு என்பது  தனியே (சம்முக்கும், சும்முக்கும் ) மட்டும் உவந்ததொன்றல்ல. 
மாறாக ஒட்டுமொத்த இலங்கையில் வாழும் ஈழத்தமிழரது தீர்வாக இருக்கவேண்டும்.
இதில் புலத்தை / உங்கள் பாசையில் புல வாலுகளை கவனத்தில் கொள்ளதேவையும் இல்லை என்பது அறிவுபூர்வமானது அல்ல.
உங்களுக்கு சொந்தங்கள் ஊரில் இல்லாமல் இருக்கலாம், உங்கள் பரம்பரையே குடிபெயர்ந்து இங்கிலாந்தில் , கனடாவில் , அவுஸ்திரேலியாவில், நோர்வேயில் செழித்து வாழலாம் எனக்கு அப்படி அல்ல.
அம்மா, அண்ணாமார், யுத்தத்தில் அனைத்தையும் இழந்த அக்காமார், இப்படி என் சொந்த உடன் பிறப்புக்கள் இருக்கும் இடம் அது.

மொக்கன் மடையன் மாதிரி நடந்தால் எழுதினால் அதையும் சரி என்று தலை ஆட்டவேண்டும் என்று நினைகின்றீர்களா சசி ?

கை சூப்பும் குழந்தைக்ளுக்கு தெரிந்த பல விடயங்கள் இவர்களுக்கு தெரியாமல் போவதால் தான் இவர்கள் மொக்கர் மடையர்கள் ..

எந்த ஒரு  விடயத்தையும் திட்டமிட்டு காலம் காலமாக என்ன வடிவாக குழப்புகின்றர்க்கள் அதை விளங்காதவர்கள் விளங்கமுடியாதவர்கள் மொக்கர் மடையர்கள் தான் .

 

நாட்டில் இருக்கும் மக்கள் தேர்தலில் வெற்றி பெற வைத்தது கூட்டமைப்பை இந்த ஒன்றையே விளங்க்கிகொள்ளமுடியாதவர்கள் மொக்கர்கள் மடையர்கள் தான் .

நாட்டில் இப்போ நடக்கும் மாற்றங்களை காண சகிக்காது யார் துள்ளியடிக்கின்றார்கள் பார்த்தால் எல்லா உண்மையும் விளங்கும் ,

முப்பது வருடங்கள் புலிகள் கொலைகள் செய்யும் போது ,குழந்தைகளை பிடிக்கும்போது அனைத்து குற்ற செயல்களையும் செய்யும் போது உலகம் அதை சொல்லும் போது வாயை மூடியிருந்தவர்கள் தான் ,

இப்போ எங்கே தீர்வு? எதுவும் மாறவில்லை என்று கூக்குரல் இடுபவர்கள் .

இதை அறியாதவர்கள்  மொக்கர்களும் மடையர்களும்  தான் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கூட பாருங்கள் உங்களிடம் தெளிவான பதில்கள்/ கருத்துக்கள் இல்லை.
ஞாயமான கேள்விகளுக்குக் கூட நேர்மையாக பதில் தர முடியாத உங்கள் போன்றவர்களுடன் உரையாடுவதும் கூட வீண்.
இன்று CMR வானொலியில் தாயகத்தில் இருந்து பத்திரிகையாளர் அமிர்தஷன் அரசியல் ஆய்வொன்றை செய்தார். கலந்து கொண்ட 16 நேயர்களில் ஒருவர் கூட இந்த அரசியல் யாப்பு மாற்றதிலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டணியிலோ நம்பிக்கை இல்லாதவர்கள் தான். சரி இந்த புலது மொக்கர் மடையர்களை  விடுவோம், பத்திரிகையாளர் அமிர்தஷன் அவர்கள் கூட ஆணித்தரமாக, அழகாக உங்கள் (சம் + சும்) அரசியல் பற்றி விவரித்தார்கள்.

அதை எல்லாம் நீங்கள் ஏன் கேட்கப் போகிறீர்கள். ஒரு நாளைக்கு 1 படம், 2 கிரிகெட் மாட்ச், 2 சாட் அமிர்தம், முழுநேர இலங்கை  கொள்கை பரப்பு என்று நாள் போகுது.

"நாட்டில் இருக்கும் மக்கள் தேர்தலில் வெற்றி பெற வைத்தது கூட்டமைப்பை ..." 

அது மட்டும் தான் அவர்கள் செய்த மிகப் பெரும் தவறு.இன்னும் ஒருசில மாதங்களில் அந்த தவறு உணரப்படும்.

Edited by Sasi_varnam

தம்பி  வாசிப்பது மொக்கர்களின் பத்திரிகை கேட்பது மடையர்களின் வானொலி ஆனால் வாசிப்பதும் கேட்பதும் அதுவல்ல ,வித்தியாசம் அதுதான் .

முதல் பந்திக்கே பதில் எழுத நினைத்தேன் .பொய்யும் புரட்டும் தான் எம்மவர் பலர் வாழ்க்கை .உதாரணத்திற்கு .

"உங்களுக்கு சொந்தங்கள் ஊரில் இல்லாமல் இருக்கலாம், உங்கள் பரம்பரையே குடிபெயர்ந்து இங்கிலாந்தில் , கனடாவில் , அவுஸ்திரேலியாவில், நோர்வேயில் செழித்து வாழலாம் எனக்கு அப்படி அல்ல.
அம்மா, அண்ணாமார், யுத்தத்தில் அனைத்தையும் இழந்த அக்காமார், இப்படி என் சொந்த உடன் பிறப்புக்கள் இருக்கும் இடம் அது. "

இந்த பந்தியை பாருங்கள் .நான் இயக்கத்திற்கு போகும் போதே எனது குடும்பம் முழுக்க வெளிநாட்டில் தான் .உறவினர்கள் பற்றிய பிரச்சனை அல்ல இது இனத்தின் பிரச்சனை ,ஆனால் இங்கு வந்து சப்பு கட்டும் முக்கால்வாசி பேர்கள் இந்த காலகட்டத்தில் தாமும் நாட்டை விட்டு உறவுகளையும் வெளிநாட்டிற்கு இழுத்தவர்கள் .புலம் பெயர்ந்த பலரின் நிலை இதுதான் .புலி அடிக்கும் என்று கொடி காட்டி படம் பிடித்தவர்கள் .நீங்களும் அந்த பட்டியலோ என்று யோசிக்கின்றேன் ..

சிலர் தமிழ் ஈழம் தான் தீர்வு என்கின்றார் 

ஒருவர் ஒரு நாடு இரு தேசம் என்கின்றார் 

ஒருவர் வெற்றி பெற வையுங்கள் அரசுடன் கதைத்து நியாயமான தீர்வை பெறுகின்றோம் என்கின்றார் 

ஒருவர் ஒரே நாடு எவரும் எங்கும் வசிக்கலாம் தமிழர்களுக்கு என்று ஒரு தீர்வு தேவையில்லை என்கிறார் .

மக்கள் மூன்றாவதற்கு  வாக்கை அழித்தால் அவர்களை  மதித்து நடவுங்கள் அதுதான் ஜனநாயகம் .விமர்சனம் இருக்கலாம் அதற்காக மக்களால் தெரிவு செய்யப்படவ்ர்களை விட நாங்கள் தான் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள் சொல்வதுதான் சரி என்றுதான் சசி உங்கள் கருத்து இருக்கு .

சிங்களம் தீர்வு தரும் தராது அதை கையாள்வது எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பார்த்துகொள்வார்கள் .

சரி சிங்களம் ஒன்றும் தராது,அவர்கள் கையாள்வது பிழை அப்படியானால்  நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள். 

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்து புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என்று எழுத வெட்கமாகஇல்லை .

நான் என்றாலும் சிறிது காலம் நாட்டிற்காக போராட போனேன் உங்கள் பலருக்கு போராட்ட வாசமே தெரியாது .

 பச்சை வேணுமென்றால் தொடர்ந்து இப்படியே எழுதுங்கோ ஏனென்றால் அவர்களும்  போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்தவர்கள் தான் .

"அதை எல்லாம் நீங்கள் ஏன் கேட்கப் போகிறீர்கள். ஒரு நாளைக்கு 1 படம், 2 கிரிகெட் மாட்ச், 2 சாட் அமிர்தம், முழுநேர இலங்கை  கொள்கை பரப்பு என்று நாள் போகுது. "

பலருக்கு இதுதான் கடுப்பு ஏத்துது போல ,நேரம் இருக்கு வசதி இருக்கு செய்கின்றேன் .

ஒரு துரும்பே அசைக்காமல் இங்கிருக்கும் பலர் மாதிரி நாங்கள் தான் நாடு பிடிக்க போறம் என்று என்னையும் படமா காட்ட சொல்லுகின்றீர்கள் .

எங்கட வாழ்க்கையை பார்த்துகொண்டு நாட்டில் நடக்கும் அரசியலை விமர்சிக்கத்தான் முடியும் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, arjun said:

மொக்கன் மடையன் மாதிரி நடந்தால் எழுதினால் அதையும் சரி என்று தலை ஆட்டவேண்டும் என்று நினைகின்றீர்களா சசி ?

 

13 hours ago, arjun said:

இதை அறியாதவர்கள்  மொக்கர்களும் மடையர்களும்  தான் .

மற்றவனாலும் உதே வசனங்களை பாவிக்கமுடியும் என்பதை பணிவன்போடு தெரிவிக்கின்றேன்.

வரவர தூசணத்தை தவிர யாழில் எதுவும் எழுதலாம் போல் இருக்கின்றது. வார்த்தைக்கு வார்த்தை பண்பான முறையில் கருத்தாடவும் என சொல்லும் நிர்வாகத்திற்கு இதை  எப்படி??????

Edited by குமாரசாமி
எழுத்து திருத்தம்

அந்த சொல்லை யார் முதலில் பாவித்தார்கள் என்று பாருங்கோ 

தமிழில் இப்படி சொற்கள் இருப்பதே எனக்கு தெரியாது .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, arjun said:

அந்த சொல்லை யார் முதலில் பாவித்தார்கள் என்று பாருங்கோ 

தமிழில் இப்படி சொற்கள் இருப்பதே எனக்கு தெரியாது .

 

சரி அண்ணை! சந்தோசம் இனிமேல் உங்கடை வழிக்கே நானும் வாறன்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.