Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டுக்குள்ளேயே அடங்கிவிடும் கலைப்படைப்புக்கள்! : இளையபாரதியின் ஆதங்கம்!

Featured Replies

குடாநாட்டுக்குள்ளேயே அடங்கிவிடும் கலைப்படைப்புக்கள்! : இளையபாரதியின் ஆதங்கம்!
 
 
குடாநாட்டுக்குள்ளேயே அடங்கிவிடும் கலைப்படைப்புக்கள்! : இளையபாரதியின் ஆதங்கம்!
குடாநாட்டு கலைப்படைப்புக்கள் யாவும் குடாநாட்டிலேயே அடங்கிவிடுகின்றன. அவற்றை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியையே நாம் முன்னெடுத்துள்ளதாக கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் இளைய பாரதி தெரிவித்தார். 

                                                   
 
திருநெல்வேலியிலுள்ள ப்ரைட் இன் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்து கலைஞர்களின் படைப்புகளை, அவர்களின் கலைத்திறைமைகளை புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தொலைக்காட்சிகளுக்கு வழங்கும் முகமாக இலங்கையில் ஓர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
 
புலம்பெயர்ந்த நாடுகளில் 7,8 தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு உள்ளுர் கலைஞர்களின் தயாரிப்பிற்காகவே இங்கு வந்துள்ளோம். இங்குள்ள கலைஞர்களின் படைப்புக்களை வெளிநாட்டிலுள்ள கலைஞர்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியையே நாம் முன்னெடுத்துள்ளோம்.
 
படைப்புகளை தயாரிப்பதற்கு கலைஞர்களின் தேடலுக்காகவும் கலைஞர்களின் படைப்புகளை புலம்பெயர் தொலைக்காட்சி நிறுவனங்களூடாக வெளிக்கொண்டு வருவதற்காவும் முன்னாயர்த்த நடவடிக்கையே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
மேலும் இங்குள்ள கலைஞர்களுக்கு  கோரிக்கை ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். அதாவது இங்கிருக்கும் பார்வையாளர்களைத் தவிர உங்களுக்கு பெரிய பரப்பு வெளிநாடுகளிலும் இருக்கிறது. ஆனால் அதை கண்டுகொள்வதில்லை என்ற ஆதங்கமே எங்களுடைய பயணத்தின் மூல காரணமாக அமைந்தது.
 
ஆகவே இங்குள்ள கலைஞர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தை தவறவிடாமல் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் படைப்புக்களை எடுத்தியம்ப நல்ல களத்தை அமைத்துக் கொடுத்துள்ளோம். இதில் பங்கேற்று பயன்பெறுமாறு இளைய பாரதி கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

குடாநாடு மட்டுமல்ல திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம் என இந்த நிறுவனம் விரிவடைவது கலைஞர்களின் பங்கேற்பை இலகுவாக்கும். இதற்கான நிதி அமைப்பு ஒன்றை உருவாக்கினால் நாங்களும் எங்கள் பங்கை வழங்குவதற்கு வழிசமைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பரபரப்பு நண்பர் வழி சமைத்து கொடுத்துள்ளார் போல.கனடாவில் இவரின் சேவை சொல்லி மாளாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இவரின் பரபரப்பு நண்பர் வழி சமைத்து கொடுத்துள்ளார் போல.கனடாவில் இவரின் சேவை சொல்லி மாளாது.

ஒரு சொல்லாவது சொல்............ :unsure::rolleyes: விளையாட்டாகவும் தமிழன் ஏமாறாதிருக்க :(

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.