Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் உயிரிழந்து விட்டனர்! : யாழ்.வந்த ரணில் கருத்து!

Featured Replies

காணாமல் போனோர் உயிரிழந்து விட்டனர்! : யாழ்.வந்த ரணில் கருத்து!

காணாமல் போனோரில் பெரும்பாலானோர் உயிரிழந்ததாகவே கருதுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழில் தெரிவித்துள்ளார். மேலும் காணமால் போனோர் பிரச்சினை வடக்கில் மட்டுமல் தெற்கிலும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

நேற்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 ஊடகங்களுக்கு அறிவுரை

 

அரசியல் அமைப்பை திருத்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் உள்வாங்கி அரசியல அமைப்பு சபையை உருவாக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அவர்கள் வெளிப்படையாக செயற்பட வேண்டும். 18ஆவது சீர்திருத்தத்தை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்கள் சர்வாதிகாரமாக உருவாக்கியதை போல செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

 

இவர்கள், மாகாண சபையுடனும் பேசி அவர்களுடைய கருத்துகளை அறிய வேண்டும். பொதுமக்களின் கருத்துகளும் பெறவேண்டும். அரசியல் அமைப்பு என்று ஒன்று இல்லை. அவை மக்களின் கருத்தில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும்.

 

சர்வாதிகாரமாக செயற்பட்டவர்கள், தோல்வியடைந்த பின்னால் தான் வெளிப்படை பற்றி தற்போது குழறத் தொடங்கியுள்ளனர்.மீண்டும் அதனை குழப்ப வேண்டாம் என்று, சர்வாதிகாரமாக 18ஆவது சீர்த்திருத்தத்தை உருவாக்கிய ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்களுக்கு வக்காலத்து வாங்கிய ஊடகத்துக்கு சொல்கின்றேன்.வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட போது வக்காலத்து வாங்கிய ஊடகங்கள் இன்றைய சூரிய உதயத்தின் பின்னராவது மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 

 பயங்கரவாத தடைச்சட்டம் காலாவதியாகிவிட்டது.

 

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது காலாவதியான சட்டமாகும். அதனை அகற்ற எதிர்பார்த்துள்ளதுடன் சர்வதேச ரீதியில் தற்போது பயங்கரவாத பிரச்சினை இருப்பதன் காரணமாக தேவைப்பட்டால் அதற்கு தேவையான சட்டங்களை பொதுநலவாய நாடுளின் சட்டத்துக்கு அமைவாக எதிர்காலத்தில் நாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

அத்துடன், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரிடம் நேற்று மாலை பேசியதாகவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்து பின்னர் முடிவு தொடர்பில் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.இவ்வருடத்தின் நடுப்பகுதியில் அதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படும். என்றார்.

 

இராணுவத்திற்கும் புனர்வாழ்வு

 

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்ததை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளோம். தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

 

இதேவேளை, தற்போது மூன்று படைபிரிவினருக்கு பயிற்சியளித்து வரும இரகசியத்தை வெளிப்படுத்திய பிரதமர், மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக கூறினார். ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டால் சர்வதேச நாடுகளின் அமைதி  நடவடிக்கையில் இலங்கை படையினராயும் ஈடுபடுத்த முடியும் என்றும் இவர் கூறினார். இனிவரும் காலங்களில் இளம் மாணவர் படையணியை உருவாக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ருவன் விஜயவர்தன மற்றும் இராணுவ தளபதியிடம் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை முற்றாக ஒழியும் வரை கடற்படையினரின் தொகை குறைக்க முடியாது என்றும் வடக்கில் உள்ள இராணுவத்தை குறைப்பது தொடர்பில் காலகிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தற்போது உள்ள சமாதான சூழ்நிலையும் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை வைத்து படிப்படியாக வடக்கிலுள்ள இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

இலங்கையின் கடற்பகுதி மற்றும் நிலப்பகுதியை இலங்கையின் முப்படையினரால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை 2002ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலை புலிகள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்  எனவும் பிரதமர் கூறினார்.

 

காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ள பெரும்பாலானவர்கள் தற்போது நாட்டில் இல்லை. என்ற நடந்தது என்று தெரியவில்லை. அவர்கள் பெரும்பாலும் உயிரிழந்து இருக்கலாம். இதனை உங்களிடம் கூறவதையிட்டு நான் கவலையடைகின்றேன். இங்குமட்டுமல்ல இந்தநிலைமை தெற்கிலும் உள்ளது என்றார்.

 

புதிய அரசியலமைப்பு.

 

நாடாளுமன்றில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வெளிப்படையாகவே இருந்து வருகின்றனர். புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு குறித்தும் நாம் அனைவரும் வெளிப்படையாகவே இயங்கி வருகின்றோம். சர்வாதிகாரமற்ற அரசிலமைப்பே உருவாக்கப்படும் என ஜனாதிபதியும் உறுதியளித்துள்ளார். மேலும் பொறுப்புக் கூறல் பொறிமுறை அமைப்பதற்கு ஜப்பானிடமும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பதற்கு அமைப்பதற்கு உதவி கோரியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/6958

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.