Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் 'அத்துமீறலை' ஆராய அமைச்சரவை குழு நியமனம்

Featured Replies

இந்திய மீனவர்களின் 'அத்துமீறலை' ஆராய அமைச்சரவை குழு நியமனம்

160104170242_indian_fishermen_512x288_bb

வடக்கு கடற்பரப்புக்குள் அண்மையில் நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகு ஒன்று

இலங்கை கடல் பரப்பில் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சம்பந்தமாக விசேட அமைச்சரவை குழு மூலம் ஆராய்ந்துவருவதாக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மீனவர் கூட்டுறவு சங்கங்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று அழைக்கப்பட்டபோது அரச தரப்பு இதனை அறிவித்தாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிந்தக பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போது இலங்கை கடல் பரப்புக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ் மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.

இதன் காரணமாக இந்திய மீனவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் விடுதலையாகி செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக கூறிய வழக்கறிஞர் பெர்னாண்டோ, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த மீனவர்கள் தொடர்ந்தும் தவறிழைத்துவருவதாக குற்றம்சாட்டினார்.

ஆனால், 1979 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் இந்திய மீனவர்கள் சுலபமாக தப்பிக்க முடியாது என்றும் அவர்களுக்கு கடும் நிபந்தனைகளை விதிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரங்கள் உள்ளது என்றும் அவர் கூறினார்.

கைப்பற்றப்படும் படகுகளை மீள பெறுவதற்கு அதன் உரிமையாளர்கள் இலங்கைக்கு வரவேண்டியது அவசியம் என்றும் அந்த விசேட சட்டத்தின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை குறைக்க முடியும் என்றும் வழக்கறிஞர் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வடமாகாண மீனவ கூட்டுறவு சங்கங்களின் மனுவை ஆராய்வதற்காக அமைச்சரவையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 29-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160120_indian_fishermen_lanka_case

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.