Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புத் துறைமுகத் நகரத் திட்டம் உறுதி: ரணில் அறிவிப்பு

Featured Replies

கொழும்புத் துறைமுகத் நகரத் திட்டம் உறுதி: ரணில் அறிவிப்பு

இலங்கையில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

160120163619_ranil_wickramasingha_640x36
 சுவிஸர்லாந்து டவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க

சுவிஸர்லாந்து டவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் பல நடைமுறையிலுள்ள நிலையில், போர்ட் சிட்டி என்றழைக்கப்படும் துறைமுக நகரத் திட்டம் அதில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

150205122347_colombo_port_city_512x288_dகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மாதிரி

இந்த திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இலங்கையில் சீனாவின் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அத்தோடு இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ளும்படி சீன வர்த்தகர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்சவின் முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதனால் தேசிய பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சார்ந்தவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதன் பின்னணியில், துறைமுக நகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த கருத்து வந்துள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160121_srilanka_portcity

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.