Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார்: கருணாநிதி மகள் கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார்: கருணாநிதி மகள் கனிமொழி

தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது:

ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசிங்கம், தமிழர்களின் பெருமைகளையும், வலிகளையும், துயரங்களையும் உலக மக்களிடையே கொண்டு சென்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை, தத்துவங்களை உலக நாடுகளிடையே எடுத்துச்சென்ற பெருமை அவருக்கு உண்டு. அவர் போர்க்களத்திற்குச் சென்று ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. ஆனால், அவரே ஒரு ஆயுதமாக விளங்கினார்.

20061222001ga9.jpg

மறைந்த பாலசிங்கம் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார். அவரை போல் மக்களின் நியாயங்களை உலக நாடுகளிடையே கொண்டு செல்ல பல குரல்கள் உருவாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலாக மாற வேண்டும். அதற்காக இந்த நேரத்தில் உறுதி எடுத்துக்கொள்வோம். அந்த மக்களுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, பயங்கரவாதிகள் அல்ல, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஒரு போராளிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியவர் அன்ரன் பாலசிங்கம். விடுதலைப் புலிகள் பற்றி தவறாக பிரசாரங்கள் செய்யப்படும் போது எல்லாம் அவர் அதை முறியடித்து தெளிவுபடுத்தினார்''என்றார்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி இராமச்சந்திரன் பேசும்போது, "விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துவைத்த சொல்வன்மை பெற்றவர் அன்ரன் பாலசிங்கம்''என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றிய குறுந்தகட்டை வீரமணி வெளியிட்டார். முதல் பிரதியை கனிமொழி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் இணை பொதுச்செயலாளர் செல்வபெருந்தகை, இயக்குனர் செல்வபாரதி, மருத்துவர் வேலாயுதம், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தி.மு.கவின் விஜயா தாயன்பன், உள்பட பலர் பேசினர்.

படம்: தினத்தந்தி

-புதினம்

தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

நன்றி : புதினம்

தமிழக முதல்வர்- ஏதாவது -தனது

அரசியல் பணி வரயறைகளுக்குட்பட்டு செய்யவேண்டுமென முயல்வதும்.....

அதனை தாண்டமுடியாத இடங்களில்.... -

குடும்ப உறவுகளின் - மூலமும் - அதனை செய்ய நினைப்பதும் - விளங்கி கொள்ளகூடியதே!

இது -ஒரு ஆத்மபலம்-எமக்கு!

காரணமே இல்லாமல்- ஒரு சர்வதேச பத்திரிகையாளர் -சந்திப்பை வைத்து -

வெறும் பொறாமையில்- இலங்கைக்கு படையை அனுப்பு - பிரபாகரனை பிடி என்று......

கத்தின - ஜெயலலிதாவும் - ஞாபகத்துக்கு வருகிறார்!

இணைப்புக்கு - நன்றி கந்தப்பு!

Edited by வர்ணன்

பாலா அண்ணா எரிக்கப்படவில்லை, ஈழத்தின் விடுதலை சுடராய் ஏற்றப்பட்டு இருக்கிறார்.

அது என்றும் அணையா விளக்காய் சுதந்திர ஈழத்தில் சுடர் விட்டு எரியும்.

அந்த விளக்கொளியின் கீழிருந்து கற்றவர்கள் அடிமைத்தளை அறுத்த

ஆபிரகாம் லிங்கன்களாய் அவதாரம் எடுக்க போவதை அகிலம் விரைவில் காணும்

இன்றைய கால கட்டத்தில் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இக்குரல் உறுதியானது. புலத்தில் எம்மில் சிலருடன் மிக நெருங்கிய தொடர்புகளை உடைய இந்த கலைஞரின் நிழலானது, எம்மீது உண்மையிலேயே அன்பு கொண்ட, எம் அழிவுகளில் துடிக்கும் உள்ளம். மிக திறமையுடைய, சிலரின் பார்வையை எம்பால் திருப்பியவரும் கனிமொழியே!

புலத்திலுள்ள நாம், இவ்வாறான தொடர்புகளை இறுகப் பற்றுவதன் மூலம் பல சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளலாம். திரும்பத் திரும்ப குப்பைகளை கிளறுவதை விடுத்து, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு எம் நகர்வுகளை மேற் கொள்ள வேண்டும்.

எம்மிலிருந்து வரும் உறுதியான கருத்துக்கள், தமிழகத்தில் இருந்து பல கனிமொழிகளை உருவக்க முற்படும். இது காலத்தின் தேவையும் கூட......

சோழன் சொல்வதை முற்றுலும் ஆமோதிக்கிறேன். (opportunities)சந்தர்ப்பங்கள் சிலவேளைதான் கதவைத் தட்டும். அதை இறுகப்பற்றிக்கொள்வதே சாமர்த்தியமானதும் பயன் தரக்குடியதும் ஆகும்.

தனி ஈழமே தீர்வு என ஈழத் தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தரத் தீர்வு: கருணாநிதி மகள் கனிமொழி

[சனிக்கிழமை, 23 டிசெம்பர் 2006, 06:27 ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கை இனப் பிரச்னைக்கு தனி ஈழமே தீர்வு என அங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தர தீர்வு என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கனிமொழி பேசியதாவது:

இலங்கை தமிழர் பிரச்னைக்கு இங்கு உட்கார்ந்து கொண்டு யாரும் தீர்வு கண்டு விட முடியாது. இப்பிரச்னைக்கு தனிஈழமே தீர்வு என அங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் நிரந்தர தீர்வு.

உலகில் எல்லா நாடுகளும் தங்கள் இன மக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுக்கின்றன. இலங்கை தமிழர்களத் நியாயமான கோரிக்கைகளை எடுத்துச் சொல்லும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றார் கனிமொழி.

http://www.eelampage.com/?cn=30216

Lift the ban on LTTE---Tamil Nadu Chief Minister’s daughter

[by Admin , Dec 23,2006]

Ms.Kanimozhi, the Tamil Nadu Chief minister’s daughter, is in the forefront of almost every Eelam rally in Chennai these days and makes no bones about her strong feelings in support of the Tigers, who she insists are the “sole representatives of the Lankan Tamils.”

“The sooner India acknowledges this by lifting the ban against the LTTE the better. The Tigers have expressed regret (Rajiv Ghandhi assassination) and we should leave things at that. We should not get stuck to the past and continue making more mistakes. Instead, we must move towards a solution and take the LTTE along, because only they are the true representatives of the Lankan Tamils,” Ms Kanimozhi, a poet and political thinker,told this newspaper.

“India should immediately put pressure on Colombo to stop the killing of innocent Tamils on the pretext of targetting the Tigers. We must take on the role of presenting the Lankan Tamil case internationally as they have no one else to seek help from. Where will they go?” she asked. It is unlikely that she has not discussed her Eelam views with her father and it is even more unlikely she would pursue her line if he had objected.

-------Deccan Chronicle-------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.