Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சோலையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி இணைப்பு: http://www.sencholai.org/?p=3082

செஞ்சோலையின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா
24-Jan-2016

கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் ஆண்டை பூர்த்தி செய்து பல நிறைவுகளைக் கண்டு கம்பீரமாகவும், மகிழ்வுடனும் பொலிவு தருகின்றது. இதன் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக செஞ்சோலை குடும்பத்தினரால் இன்று நிறைவுவிழா நிகழ்வுகள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதலில் விளக்கேற்றி, மாலை அணிவித்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில்

இல்ல தந்தையும் NERDO நிறுவனத்தின் செயலருமான திரு.செ.பத்மநாதன் அவர்களும்,

பிரதம விருந்தினராக
திரு.T.விஸ்வரூபன் (ஆணையாளர்- நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்)

சிறப்பு விருந்தினர்களாக
திரு.மு.முத்துக்குமரன் – (மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்)
திரு.து.துஸ்யந்தன் (மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் -கிளிநொச்சி)
திரு.ராஜன் (நிலையப்பொறுப்பு நன்னடத்தை உத்தியோகத்தர்)

கௌரவ விருந்தினர்களாக
திரு.ப.ஸ்ரீதரன் (அதிபர் – கிளி/திருவையாறு மகா வித்தியாலயம்)
திருமதி.ஜெ.தனபாலசிங்கம் (அதிபர் -கிளி/மகா வித்தியாலயம்)
திரு.பே.இன்பநாயகம் -கனடா
திருமதி இன்பநாயகம்
திரு.சி.இராசதுரை –கனடா
அருட்தந்தை யூட் அமலதாஸ் -ஆரோபணம் சிறுவர் இல்லம்

ஆசிரியர்கள், பெற்றோர்கள், முகாமைத்துவ சபையினர்

ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. தேசியகொடியினை திரு.T.விஸ்வரூபன் அவர்களும், செஞ்சோலை கொடியினை செல்வி.நிரோசா அவர்களும், NERDO கொடியினை திரு.செ.பத்மநாதன் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் இல்லத்தின் கலையரங்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து செஞ்சோலை, பாரதி, அன்பு இல்ல சிறார்களாலும், பெற்றோர்கள், ஆசிரியர்களாலும் கலையரங்கம் நிறைந்தது.

sencholai_third_1

sencholai_third_2

sencholai_third_3

sencholai_third_4

sencholai_third_5

sencholai_third_6

sencholai_third_7

sencholai_third_8

sencholai_third_9

sencholai_third_10

sencholai_third_11

sencholai_third_12

sencholai_third_13

sencholai_third_14

sencholai_third_15

sencholai_third_16

sencholai_third_17

sencholai_third_18

 

********************

கலையரங்கத்தில் செஞ்சோலை சிறுமிகளான இசைச்செல்வி, தாட்சாயினி நிகழ்வுகளை அழகாக தொகுத்து வழங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் விருந்தினர்கள் மங்கல விளக்கை ஏற்றினார்கள். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர், இல்ல சிறுமிகளான ஜெஸ்மிரா, அகிலநாயகி, டிலக்சிறி, குமுதகலா ஆகியோரால் செஞ்சோலை இல்லத்தின் கீதம் பாடப்பட்டது. அடுத்து சிறுமி ஜெஸ்மிராவால் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

தொடர்ந்து செஞ்சோலை இல்ல சிறுமி தவரஞ்சினி வரவேற்புரையை வழங்கினார். அடுத்து செஞ்சோலை இல்ல சிறுமிகளால் பாடலுக்கேற்ற அபிநயத்துடன் மிக நேர்த்தியாக வரவேற்பு நடனம் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

sencholai_third_19

sencholai_third_20

sencholai_third_21

sencholai_third_22

 

sencholai_third_23

sencholai_third_24

sencholai_third_25

sencholai_third_26

sencholai_third_27

sencholai_third_28

sencholai_third_29

 

********************

sencholai_third_30தொடர்ந்து ஆசியுரையை அருட்தந்தை யூட் அமலதாஸ் வழங்கினார். இல்ல சிறார்கள் கடவுளின் ஆசியுடன் மேன்மேலும் வளர வாழ்த்தியதுடன் இவ்வாறான நற்பணியை ஆற்றி செல்லும் இல்ல தந்தையான திரு.பத்மநாதன் அவர்களை பாராட்டியதுடன், இல்ல நிர்வாகிகளையும் பாராட்டி வாழ்த்தினார்.

 

 

 

********************

sencholai_third_31அடுத்து இல்ல தந்தையான திரு.செ.பத்மநாதன் அவர்கள் தரைமையுரையை வழங்கினார். இவர் தனதுரையில்… வருகை தந்தோர் அனைவரையும் வரவேற்றதுடன், இல்லத்தின் வளர்ச்சியிலும், சிறார்களின் நலன்களிலும் அக்கறைகொண்டு உதவி நிற்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். தன்னோடு இல்லத்தை வழிநடத்தி செல்லும் இல்ல நிர்வாகிகளை பாராட்டினார். தொடர்ந்து… இல்லத்தில் இருந்து க.பொ.த. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமையையும், புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை சித்தி பெற்றமையையும், விளையாட்டு, கலைகளில் மாணவர்கள் பரிசில்கள் பெறுவதையும் பெருமைபொங்க குறிப்பிட்டு உரையாற்றினார். இல்லம் வரும் மாணவர்கள் ஏதாவது ஒரு மன அழுத்தத்தில் வருகிறார்கள் அவர்களிடம் முதலில் நம்பிக்கையையை ஏற்படுத்தி அவர்களை சிரிக்கவைப்பது பெரும்பாடாக அமைந்துவிடுகிறது. ஆனால் இதில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். பிள்ளைகள் இங்கு மிக மகிழ்சியாக உள்ளனர் என கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

 

********************

அடுத்து எல்லோராலும் குமுதன் மாமா என அன்பாக அழைக்கப்படும் குமுதன் அவர்களின் வாழ்த்துக் கவிதை இடம்பெற்றது. அவையடக்கத்துடன் ஆரம்பமான இக்கவிதை வரிகள் தமிழை வாரி இறைத்து கலையரங்கத்தை அமைதிகொள்ளவைத்து, எல்லோர் மனங்களிலும் உட்கார்ந்து கொண்டது. சிறுவர்களே இங்கு எல்லாம் உங்களுக்கானதே படியுங்கள்… என்ற தொனிப்பட கவிதை வரிகள் அமைந்திருந்தன.

sencholai_third_32

 

********************

தொடர்ந்து செஞ்சோலை இல்ல சிறுமிகளின் பாடலுக்கேற்ற அபிநய நடனம் இடம்பெற்றது.

sencholai_third_33

sencholai_third_34

 

********************

sencholai_third_35அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு.T.விஸ்வரூபன் (ஆணையாளர்- நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்) அவர்களின் உரை இடம்பெற்றது. சிறுவர்களின் மகிழ்ச்சியைக்கண்டு தானும் மகிழ்ச்சி அடைவதாக உரையை ஆரம்பித்து, இவ்வாறான சிற்பான பணியை ஆற்றிவரும் திரு. பத்மநாதன் அவர்களை பாராட்டினார். இல்லத்தின் வளர்ச்சியில் பங்காற்றிவரும் அனைவரும் தொடர்ந்தும் இல்லத்திற்கு உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறுவர்கள் தமது மனங்களை வேறுவிடயங்களில் அலைபாயவிடாது, கல்வியில் மட்டும் தமது கவனத்தை செலுத்தி திறமையான மாணவர்களாக வரவேண்டும் என வாழ்த்தினார். இது உங்களுக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் இதனைப் பயன்படுத்தி வாழ்வில்முன்னேறவேண்டும் என சிறுவர்களை கேட்டுக்கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.

 

********************

தொடர்ந்து தரம் 9, 10 மாணவர்களின் சங்கீத பாடல் இடம்பெற்றது. ரசிக்ககூடிய பாடல்களை மிக அழகாக சிறுமிகள் வழங்கிச் சென்றனர்.

அடுத்து சிறுமி கிஸாந்தினி அவர்களின் கவிதை இடம்பெற்றது. தொடர்ந்து செஞ்சோலை இல்ல சிறுமிகள் பாடலுக்கு நடனம் ஆடினர். நடனம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

தொடர்ந்து அன்பு இல்ல சிறுவர்களின் பின்னணி இசையுடனான கராத்தே நிகழ்வு இடம்பெற்றது. துடிப்பான இந்நிகழ்வை மிக நேர்த்தியாக சிறுவர்கள் வழங்கி பாராட்டை பெற்றனர். அடுத்து பாரதி இல்ல சிறுமிகளின் அபிநயநடனம் இடம்பெற்றது.

sencholai_third_40

sencholai_third_41

sencholai_third_42

sencholai_third_43

sencholai_third_44

sencholai_third_45

sencholai_third_46

sencholai_third_47

 

********************

sencholai_third_48பின்னர், கனடாவிலிருந்து வந்திருந்த திரு.பே.இன்பநாயகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சிறுவர்களின் மகிழ்வையும், சிறுவர்கள் அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை காண்பதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.  தொடர்ந்து மூன்று வருட ஆண்டு நிறைவுவிழாக்களிலும் கலந்துகொள்கிறேன், சிறுவர்களின் வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொள்கிறேன், இப்பணியை சிறப்பாக ஆற்றிவரும் திரு.பத்மநாதன் அவர்களை பாராட்டியதுடன், இல்ல நிர்வாகிகளையும் வெகுவாக பாராட்டினார். சிறுவர்கள் மேலும் வளர வாழ்த்தி தனதுரையை நிறைவு செய்தார்.

 

********************

அடுத்து செஞ்சோலை ஆண் சிறுவர்களின் நாடகம் இடம்பெற்றது. சிறுவர்களாக இருந்தபோதும் நகைச்சுவையுடனும், கருத்தொன்றை வெளிப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்துடனும் இவர்கள் நாடகத்தை வழங்கிய விதம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

அடுத்து செஞ்சோலை இல்ல சிறுமி இசைச்செல்வியின் பின்னணி இசையுடனான பாடல் அனைவரையும் கவர்ந்து கரையரங்கத்தை ரசிக்கவைத்தது. மின்சாரம் தடைப்பட்டு பின்னணி இசை மீள ஆரம்பத்திலிருந்து வந்துபோது சிறுமி பாடலை மீண்டும் பாடியபோது அவை அமைதியுடன் ரசித்தது.

sencholai_third_49

sencholai_third_50

sencholai_third_51

 

********************

தொடர்ந்து செஞ்சோலை உயர்தர மாணவிகளின் “மாற்றம் வருமா?” என்ற நாடகம் அவசரமில்லாத நேர்த்தியான பாங்குடன் ஏழ்மையிலும் கல்வி என்ற கருத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, சிறுவர் இல்லத்தின் தேவையையும் உணர்த்தி நின்றது.

தொடர்ந்து சிறுவர்களின் சங்கீதப்பாடல் ரசிக்கும்படி அமைந்திருந்தது. தொடர்ந்து விருந்தினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, திரு.ப.ஸ்ரீதரன் (அதிபர் – கிளி/திருவையாறு மகா வித்தியாலயம்), திருமதி.ஜெ.தனபாலசிங்கம் (அதிபர் -கிளி/மகா வித்தியாலயம்) ஆகியோர் சிறுவர்களுக்கு நற்கருத்துக்களை கூறி சிற்றுரை ஆற்றினர். தொடர்ந்து…. செஞ்சோலை முகாமைத்துவசபை செயலாளர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் நன்றியுரையுடன் கலையரங்க நிகழ்வுகள் யாவும் இனிதே மாலை 2.00 மணியளவில் நிறைவுபெற்றது.

sencholai_third_52

sencholai_third_53

sencholai_third_54

sencholai_third_55

sencholai_third_56

sencholai_third_57

sencholai_third_58

sencholai_third_59

sencholai_third_60

sencholai_third_61

sencholai_third_62

sencholai_third_63

sencholai_third_64

sencholai_third_36

sencholai_third_37

sencholai_third_38

sencholai_third_39

 

********************

பின்னர், விருந்தினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறுவர்களின் மதிய உணவுடன் மூன்றாம் ஆண்டு நிகழ்வுகள் யாவும் இனிய நிறைவுபெற்றது.

sencholai_third_65

sencholai_third_66

 

********************

மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற சகல வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் இல்ல தந்தையும், செஞ்சோலை குடும்பமும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து நிற்கின்றனர்.

http://www.sencholai.org/?p=3082

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.