Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

2j67gc5.png

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
'அரையிறுதிக்குச் செல்ல எமக்குத் தகுதியில்லை'
 
23-03-2016 07:07 PM
Comments - 0       Views - 3

article_1458747879-TanilakakLEAD.jpgபாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருந்த நிலையில், அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அவ்வணிக்குக் கிடைத்தாலும், அரையிறுதிக்குச் செல்வதற்கு பாகிஸ்தான் அணிக்குத் தகுதி கிடையாது என, அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

சந்திகாரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, ஷர்ஜீல் கான் 25 பந்துகளில் பெற்ற 47 ஓட்டங்களின் துணையோடு, 5.2 ஓவர்களில் 53 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் தடுமாறி, இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

அணியின் இளம் வீரரான உமர் அக்மல், பின்வரிசையைவிட முன்வரிசையில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு வேண்டுமெனப் பகிரங்கமாகவே கோரிவந்ததோடு, அஹமட் ஷெஷாத், ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான குழாமில் சேர்க்கப்படாததையடுத்து, பகிரங்கமாகவே விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த வக்கார் யுனிஸ், 'தாங்கள் விரும்பிய இடத்தில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்கவில்லை எனச் சத்தமிட்டவர்களுக்கு, இது சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் பொருத்தமானவர்கள் அல்லர். நீங்கள் விரும்பியதெல்லாவற்றையும் அழலாம், நீங்கள் கதைப்பதெல்லாவற்றையும் கதைக்கலாம், நாங்கள் பொருத்தமானவர்கள் அல்லர்" என்றார்.

8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது ஜோடி சேர்ந்த உமர் அக்மல், அஹமட் ஷெஷாத் இருவரும், 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மாத்திரமே இணைப்பாட்டமாகப் பகிர்ந்து, அணியின் வாய்ப்புகளைக் குறைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே, 5ஆம் இலக்கத்தில் ஷகிட் அப்ரிடியைக் களமிறங்கியதாக, வக்கார் யுனிஸ் தெரிவித்தார். 'அந்தத் தர்க்கம் சரியானது என நினைத்தேன். நீங்கள் பார்த்தீர்களானால், 8ஆவது ஓவரிலிருந்து 15ஆவது ஓவர் வரை, நாங்கள் நகரவேயில்லை. இளைய வீரர்கள், வளர்ந்துவரும் வீரர்கள் எனச் சொல்லப்படுகின்ற இருவர், போட்டியை எதிரணியிடமிருந்து எடுத்துச் செல்லக்கூடிய நேரம் எனக் கருதிய நேரத்தில் துடுப்பெடுத்தாடினர்" எனத் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் தோற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள போதிலும், அவ்வணிக்கு இன்னமும் சிறியளவான வாய்ப்புகள் உள்ளதை ஞாபகப்படுத்திய போது பதிலளித்த வக்கார், 'நீங்கள் அவ்வாறு சொன்னால், நாம் இன்னும் நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால், நாங்கள் விளையாடிய விதத்தைப் பார்க்கும் போது, அரையிறுதிக்குச் செல்வதற்கு எங்களுக்குத் தகுதியில்லை" என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/168669/-%E0%AE%85%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.xvPEEGxn.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக வென்றிருக்க வேண்டிய மட்ச்சை வேண்டும் என்று விட்டுக் கொடுத்திட்டார்கள் மட்ச் பிக்சிங்காக இருக்கும்

  • தொடங்கியவர்

பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

 
 
தமீம் இக்பாலை ஸ்டம்பிங் செய்யும் தோனி | படம்: பிடிஐ
தமீம் இக்பாலை ஸ்டம்பிங் செய்யும் தோனி | படம்: பிடிஐ
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார்.

முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை பாண்டிய எடுக்க, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது.

கடைசி பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், ஷுவகதா ஹோம் எதிர்கொண்டார். பாண்டியா வீசிய பந்து மட்டைக்கு எட்டாமல், ஆஃப் ஸைட் உயர சென்று தோனியின் கைகளில் தஞ்சமடைந்தது. பந்தை அடிக்கவில்லையென்றாலும் ரன் எடுக்க இரண்டு பேட்ஸ்மென்களும் விரைந்தனர். கையில் உறை அணியாமல் இதற்காகவே காத்திருந்த தோனி, பந்தை பிடித்து ஓடி வந்து உடனடியாக ரன் அவுட் செய்தார். இதனால் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

இந்தியா நிர்ணயித்த 147 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர் தமீம் இக்பால் சரியான துவக்கத்தைத் தந்தார். மற்றொரு துவக்க வீரர் மிதுன் சீக்கிரம் ஆட்டமிழந்தாலும், தமீம் இந்தியாவின் பந்துவீச்சுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார். முக்கியமாக பும்ரா வீசிய 6-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

தமீம் இக்பால் ஜடேஜாவின் பந்துவீச்சில் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க பொறுப்பாக ஆடிவந்த சபீர் ரஹ்மானும் 26 ரன்களுக்கு ரெய்னாவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். 10 ஓவர்களில் 70 ரன்கள் தேவையாயிருக்க வங்கதேசத்தின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தது.

ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்தின் ரன் சேர்ப்பு வேகத்தை நெருக்கினர். தொடர்ந்து மொர்டாஸா, ஷகிப் அல் ஹசன் இருவரும் ஆட்டமிழக்க, சவும்யா சர்க்கார், அணியை வெற்றி பெறச் செய்யும் முனைப்பில் ஆடிவந்தார்.

அவரும் 18-வது ஓவரில் நெஹ்ராவின் பந்துவீச்சில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை அதிக ரன்கள் தந்துவந்த பும்ரா, தனது கடைசி ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுக்க, வங்கதேச அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாயிருந்தது.

ஜடேஜா, அஷ்வின் இருவரும் 4 ஓவர்கள் வீசி முறையே 22 ரன்களும், 20 ரன்களும் தந்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8390353.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா ஆட்டமே கடைசியாக இருக்கும்: ஓய்வு முடிவு குறித்து அப்ரீடி சூசகம்

 
ஷாகித் அப்ரீடி.
ஷாகித் அப்ரீடி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் ஆட்டம் தனது கடைசி ஆட்டமாக இருக்கும் என அப்ரீடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் கூறும்போது, நடு ஓவர்களை நியூஸிலாந்து ஓவர்கள் சிறப்பாக வீசினர். முதல் 6 ஓவர்களில் அருமையாக விளையாடிய நாங்கள் அதன்பிறகு சிறப்பாக விளையாடவில்லை. ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்தால் போதும் என்ற நிலையில் கூட சிறப்பாக செயல்பட தவறினோம்.

பந்தை நாங்கள் அடித்து விளையாடவும், பவுண்டரிக்கு விரட்டவும் முயற்சி செய்தோம். ஆனால் அதேவேளையில் அதிக பந்துகளை வீணடித்துவிட்டோம். செய்த தவறையே மீண்டும் செய்கிறோம். எல்லா ஆட்டத்திலும் இது நிகழ்கிறது. நியூஸிலாந்து ஆட்டத்தின் முடிவை மறந்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கவனம் செலுத்து வோம். இந்த ஆட்டம் எனது கடைசி ஆட்டமாக இருக்கும்.

இவ்வாறு அப்ரீடி கூறினார்.

ஆசியக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது. அப்போதே மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார் அப்ரீடி. தற்போது நியூஸிலாந்து அணியிடம் ஏற்பட்ட தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.

தொடர் தோல்விகளால் டி 20 உலகக் கோப்பைக்கு பின்னர் அப்ரீடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தான் தனது கடைசி டி 20 ஆட்டமாக இருக்கும் என அப்ரீடி தெரிவித்துள்ளதால் ஆட்டத்தின் முடிவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

சர்ச்சையில் அப்ரீடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரீடி, இந்திய ரசிகர்கள் தங்கள் மீது பாகிஸ்தான் ரசிகர்களை விட அதிக அன்பு செலுத்துவதாக கூறி ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள் ளார்.

மொஹாலியில் நேற்று முன் தினம் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட பிறகு, வர்ணணையாளரான ரமீஸ் ராஜா, அப்ரீடியிடம் உங்களுக் கும், உங்கள் அணிக்கும் இங்கு ரசிகர்களின் ஆதரவு இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அப்ரீடி, "ஆமாம் நிறைய பேர் ஆதரவு அளிக்கின்றனர். இங்கு வந்து இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலோ னார் காஷ்மீரில் இருந்து வந்திருக்கின்றனர். கொல்கத்தா மக்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களும் எங்களுக்கும் ஆதரவு அளித்தனர்" என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் கூறும்போது, "அரசியல் ரீதியாக இதுபோன்ற அறிக் கைகள் சரியானது இல்லை. வீரர்கள் இதில் இருந்து விலகியே இருக்க வேண்டும். பாகிஸ்தானி லேயே அப்ரீடி விமர்சிக்கப்படு வதற்கு இது தான் காரணம்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8392220.ece

  • தொடங்கியவர்

'ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா?" போட்டியின் பின்னர் கோபமடைந்த டோனி

 

இந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர் டோனி. 24-1458802420-dhoni4564555.jpg

'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் டோனி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார். 

தனது கோபத்தையம் அவர் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று பங்களாதேஷிடம் போராடி இந்திய அணி வெற்றி பெற்றது.

 

செய்தியாளரிடம் கோபம் 

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை டோனி சந்தித்தபோது 'நெட் ரன் ரேட்' குறித்து இந்திய செய்தியாளர் ஒருவர் ஹிந்தி மொழியில் கேட்ட கேள்விக்கு கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடம்

'நெட் ரன் ரேட்'; நமக்கு சாதகமாக இல்லையே என்று அந்த செய்தியாளர் கேட்டபோது, ஒரு நிமிடம்...! இந்தியா வென்றது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று நினைக்கிறேன். உங்களுடைய  கேள்வி, கேள்வி கேட்கும் முறை எல்லாவற்றையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது என கோபமாக கூறினார்.

 சிந்தித்து பாருங்கள்

தொடர்ந்து டோனி கருத்து தெரிவிக்கையில், நாம் நாணய சுழற்சில் வெற்றி பெறவில்லை. இந்த ஆடுகளத்தில் எவ்வாறு துடுப்பெடுத்தாட முடியும் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வெளில உட்கார்ந்து கொண்டு கதைக்க கூடாது 

இந்த ஆடுகளத்தில் எம்மால் ஏன் அதிகம் ஓட்ட எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெளியில் உட்கார்ந்து கொண்டு இதைப் பற்றியெல்லாமல் யோசிக்காமல் இருந்தால் நீங்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்றார்.

 இதேவேளை குறுக்கிட்ட செய்தியாளர்,

டோனி சொல்வது போன்று  இந்த வெற்றியால் இந்தியாவுக்கு சந்தோஷம்தான் என்றாலும் கூட, நெட் ரன் ரேட் நமக்குப் பாதகமாகத்தான் உள்ளது. அடுத்து நாம்  அவுஸ்திரேலியாவுடன் இறுதி லீக் போட்டியில் ஆடவுள்ளோம். இப் போட்டியில் நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

 அப்படி வெற்றி பெறத் தவறினால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்றார்.

http://www.virakesari.lk/article/4523

  • தொடங்கியவர்

குழப்ப நிலையை நிர்வகிப்பதே வெற்றிக்கு முக்கியம்: தோனி

 
சிரித்த முகத்துடன் வந்த தோனி. முதல் கேள்விக்குப் பிறகு மறைந்த சிரிப்பு. | கோப்புப் படம்.
சிரித்த முகத்துடன் வந்த தோனி. முதல் கேள்விக்குப் பிறகு மறைந்த சிரிப்பு. | கோப்புப் படம்.

வங்கதேசத்தை பரபரப்பு போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பற்றி தோனி கூறும்போது, “குழப்ப நிலையை நிர்வகிப்பதே வெற்றிக்கு முக்கியம்” என்று தெரிவித்தார்.

முதலில் போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதைப் பார்ப்போம்:

நான் அனைத்தையும் கூற விரும்பவில்லை. கடைசி பந்தை என்ன லெந்தில் வீசுவது என்பதை முடிவு செய்தோம். என்ன லைனில் வீசுவது என்பதையும் பரிசீலித்தோம். யார்க்கர்கள் என்றால் அதற்கான பீல்டிங் அமைப்பு என்ன என்பதை கருத்தில் கொள்வதோடு, யார்க்கரின் பலம் என்ன என்பதற்கும் தயாராக இருக்க வேண்டியிருந்தது. மேலும், 20-வது ஓவர் தொடங்கியவுடனேயே, நாம் நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் நான் அறிந்திருந்தேன். எனக்கு அபராதம் விதிக்கலாம். அது அப்படித்தான் ஆகும்.

சில சமயங்களில் பெரிய ஷாட்டில் முடிக்க விருப்பப் படலாம். விக்கெட்டுகள் கையில் இருக்கும் போது மற்றவர்கள் போட்டியை முடிக்கட்டும் என்று விட்டு விடலாம். நன்றாக பேட் செய்து கொண்டிருக்கும் போது பெரிய ஷாட்களைத் தேர்வு செய்வோம். ஆனால் மஹமுதுல்லாவுக்கு இது கற்றுக்கொள்ள வேண்டிய தருணம். இதுதான் கிரிக்கெட் என்பது. சிக்ஸுக்குச் சென்றால் அது பெரிய ஷாட். கிரேட் ஷாட்டாக இருக்கும். பெரிய தைரியம். பும்ரா அபாரமாக வீசினார். 2-வது ஓவரை அவர் வீசும் போது அவர் நெருக்கடியில் இருந்தார் (4பவுண்டரி), களதடுப்பு கட்டுப்பாடுகள் இருந்தன, மேலும் அவர் அதற்கு முன்னதாக எளிதான கேட்சை விட்டிருந்தார், மிஸ் பீல்ட் என்று அவர் நெருக்கடியிலிருந்தார்.

ஆனால் அவர் அதையெல்லாம் நினைக்கக் கூடாது, நடந்ததை மறந்து விடவேண்டும் என்றுதான் நாங்கள் அவரிடம் கூறினோம். அவர் யார்க்கர்களில் சிறப்பானவர் என்றே நான் கருதுகிறேன். ஆட்டத்தில் 2 தருணங்களில் பகுதி நேர வீச்சாளர்களுக்குப் பதிலாக முன்னணி பவுலர்களையே பயன்படுத்தினோம். நல்ல பவுலிங் முயற்சி என்றே நான் கருதுகிறேன்.

(பாண்டியாவின் கடைசி பந்துக்கு முன்பாக என்ன விவாதித்தீர்கள்?). நிறைய உத்திகளை யோசித்தோம். ஒன்று யார்க்கர் வீசக்கூடாது என்பது. பேக் ஆஃப் லெந்த் பந்து என்று முடிவெடுத்தோம், ஆனால் எந்த வகையிலான பேக் ஆஃப் லெந்த் என்பதே கேள்வி. வைடு போடக்கூடாது. நாங்கள் பீல்டிங்கை தீர்மானித்தோம், பாண்டியா திட்டத்தை சரியாக செயல்படுத்தினார், என்றார் தோனி.

செய்தியாளர்கள் சந்திப்பில் கோபமடைந்த தோனி:

இருதயம் நின்று விடும் பரபரப்பு போட்டியில் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் புன் சிரிப்புடன் வந்த தோனியின் முகத்தில் முதல் கேள்விக்குப் பிறகு புன்னகை மறைந்தது.

அதாவது நிருபர் ஒருவர், இந்தியா பெரிய ரன்விகிதத்தில் வெற்றி பெறுவதன் அவசியம் இருக்கும் போது 1 ரன் வித்தியாச வெற்றி பற்றி திருப்தி அடைந்தீர்களா என்று கேட்டார்,

அதற்கு தோனி பதிலளிக்கையில், “இந்தியா வெற்றி பெற்றது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எனக்கு புரிகிறது.” என்றார், ஆனால் நிருபர் அவருக்கு தான் கூற வந்ததை தெளிவு படுத்தும் போது, அவரை குறுக்காக மறித்து தோனி, “நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் கேள்வி, அதன் தொனி, ஆகியவற்றை பார்க்கும் போது இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றே தோன்றுகிறது. கிரிக்கெட்டைப் பற்றி பேசும் போது ஏதோ எழுதி வைத்து நடப்பதல்ல, இது ஸ்கிரிப்ட் சம்பந்தப்பட்டதல்ல.

டாஸ் தோற்ற பிறகு இந்தப் பிட்சில் எங்களால் ஏன் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை என்பதை நீங்கள் ஆராய வேண்டும். இதையெல்லாம் ஆராயாமல் வெளியில் உட்கார்ந்து கொண்டு இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது” என்றார்.

இப்படி கூறியவுடன் செய்தியாளர்கள் அறையில் பெரிய அமைதி நிலவியது, பிறகே அடுத்த கேள்விக்காக மைக் பாஸ் செய்யப்பட்டது.

“ஆட்டத்தின் அந்தச் சூழ்நிலை பெரும் குழப்பமாக அமைந்தது. இந்த நிலையில் குழப்பத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை முயற்சி செய்தோம். அனைவரும் அவர்களுக்கான கருத்துடன் வருவார்கள், ஆனால் பேட்ஸ்மென் என்ன நினைக்கிறார் என்பது பவுலர் என்ன நினைக்கிறார் என்பதிலிருந்து வேறுபட்டது. ஆனால் பேட்ஸ்மெனின் பலம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. பிட்ச் எப்படி நடந்து கொள்கிறது. அதாவது ரிவர்ஸ் ஸ்விங் இருக்கிறதா, அல்லது இல்லையா.. இவையெல்லாம்தான் முக்கியமான விஷயங்கள், கலந்தாலோசனையில் இது எனக்கு மிகவும் உதவியது.

கடைசியில் அந்த சூழ்நிலைக்கு எது நல்லதோ அப்படி வீச பவுலரை வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதைத்தான் நான் செய்ய நினைத்தேன் என்பதில் திருப்தியுற்றேன். நிறைய பேர் கருத்துகளுடன் வரும் அத்தருணத்தில் நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஜஸ்பிரித் பும்ரா, முதல் முறையாக தனது சர்வதேச போட்டியில் நெருக்கடியைச் சந்தித்தார். பவுலிங் வீசுவது பற்றிய நெருக்கடிதான் அது. பீல்டிங்கைப் பொறுத்தவரை அவர் பலவீனமானவர் என்பதை நான் அறிவேன். முதலில் மிஸ் பீல்ட், பிறகு கேட்சை விட்டது, ஒரு இளைஞராக அது அவருக்கு கடும் நெருக்கடியை பவுலிங் செய்த போது கொடுத்தது. ஆனால் நாங்கள் அவரிடம் கூறியதென்னவெனில் அதையெல்லாம் மறந்து விட்டு பவுலிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றோம். அவரிடம் மீண்டும் ஒரு முறை பேசிய போது, நான் என்ன கூறினேன் என்று கூறப்போவதில்லை, ஆனால் நான் கூறியது சரியாகவே அவருக்கு அமைந்தது என்று கூறுவேன்.

மொத்தத்தில் அணி நன்றாகவே விளையாடியது. வீரர்களில் பெரும்பாலானோருக்கு கடினமான நாள்தான். அஸ்வின் நன்றாக வீசினார். நல்ல தினமாக அமைந்தது, ஆனாலும் சில சமயங்களில் பேட்ஸ்மென் நல்ல ஷாட்டை ஆடி விடுகிறார் என்று அவர் நினைக்கும் தருணங்களில் அவரது பந்துகளில் ரன்கள் அடிக்கப்படுகின்றனர். இது ஒரு நல்ல போட்டி, குறிப்பாக இளம் வீரர்கள். இதுவரை சர்வதேச போட்டியின் அழுத்தம் என்றால் என்னவென்று அறியாதவர்கள் இந்தப் போட்டியின் மூலம் அதனை கற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகிய இளம் வீரர்கள் அழுத்தம் என்றால் என்னவென்படை இப்போதுதான் பார்க்கின்றனர், இப்படிப்பட்ட போட்டிகள்தான் அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றும். ஏனெனில் இத்தகைய போட்டிகள் தரும் நெருக்கடிதான் வித்தியாசமாக யோசிப்பதை அவர்களுக்க்குக் கற்றுக் கொடுக்கும். எனவே இவ்வகையில் இந்த வெற்றி முக்கியமான வெற்றியாகும்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8393214.ece

  • தொடங்கியவர்
உலக இருபதுக்கு-20: நாளைய போட்டிகள்
 
 

article_1458817709-tamilafPre.jpgஇந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்களுக்கான நாளைய போட்டிகளில், அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மோதவுள்ளதோடு, அடுத்த போட்டியில் தென்னாபிரிக்காவும் மேற்கிந்தியத்தீவுகளும் மோதவுள்ளன.

இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு மொஹாலியில் இடம்பெறவுள்ள குழு இரண்டுப் போட்டியொன்றில், அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று, அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா, குறைந்த ஓட்ட விகிதத்தில் வென்றாலே பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும். மறுகணம், இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறுவதுடன், அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டி காலிறுதிப் போட்டியாக மாறும்.

மறுகணம், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான குழு ஒன்று போட்டியொன்று இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், மேற்கிந்தியத்தீவுகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும். மறுகணம், அவ்வணி தோல்வியடைந்தாலும் ஆப்கானிஸ்தானுடனான அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் அவ்வணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். மறுகணம், ஒரு வெற்றி, ஒரு தோல்வி முடிவுகளைக் கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு, இப்போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கான வாய்ப்புக்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/168755/-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-#sthash.ekkqGHQh.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இலங்கை மகளிர் அணியை ஆஸி. மகளிர் அணி வென்றது
2016-03-24 20:22:10

(டெல்­லி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி)


அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் ஃபெரோஸ் ஷா கொட்லா விளை­யாட்­ட­ரங்கில் இன்று பிற்­பகல் நடை­பெற்ற மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் குழு ஏ போட்­டியில் 9 விக்­கெட்­களால் அவுஸ்­தி­ரே­லியா இல­கு­வாக வெற்­றி­பெற்­றது.


இலங்கை மகளிர் அணி­யினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 124 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை அவுஸ்­தி­ரே­லியா மகளிர் அணி 17.4 ஓவர்­களில் கடந்­தது.


இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இல­ங்கை மகளிர் அணி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­களை இழந்து 123 ஓட்­டங்­களைப் பெற்­றது.

15722_Chamari-Atapattu-600.jpg

 

சமரி அத்­துப்­பத்­துவும் டிலானி மனோ­த­ராவும் தலா 38 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் இரண்­டா­வது விக்கெட்டில் 61 பந்­து­களில் 75 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்­தனர்.

 

 


ஆனால் டிலானி ஆட்­ட­மி­ழந்த பின்னர் 6 விக்கெட்கள் 37 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் சரிந்­தன.


பந்­து­வீச்சில் மெகான் ஷூட், கிறிஸ்டென் பீம்ஸ் ஆகிய இரு­வரும் தலா 2 விக்­கெட்­களை வீழ்த்­தினர்.

 

15722Dilani-Manodara.25.jpg


பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி 17.4 ஓவர்­களில் ஒரு விக்­ெகட்­களை இழந்து 125 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.


துடுப்­பாட்­டத்தில் அணித் தலைவி மெகான் லனிங் 56 ஓட்­டங்­ளையும் எலிஸ் விலானி 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

15722erin-Osborne-and-Meg-Lanning-celebr


இவர்கள் இருவரும் வீழ்த்தப்பட்ட இரண்டாவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15722#sthash.OU8znFQy.dpuf

12512390_1205869366098824_38308728890331

12039678_1205869379432156_59323095819211

12115715_1205877426098018_95709507696325

ஒருநாள் மாட்ச் இல்லை கூத்தை பாருங்கோ .

  • தொடங்கியவர்

238089.jpg

Glenn Maxwell soaks in the colours of Holi, Chandigarh, March 24, 2016

  • தொடங்கியவர்

வங்கதேசத்திடம் தப்பிப் பிழைத்த இந்திய அணி

 
 
கடைசி பந்தில் முஸ்தாஃபிஸூர் ரஹ்மானை ரன் அவுட் செய்த தோனி. படம்: ராய்ட்டர்ஸ்.
கடைசி பந்தில் முஸ்தாஃபிஸூர் ரஹ்மானை ரன் அவுட் செய்த தோனி. படம்: ராய்ட்டர்ஸ்.

பந்தைக் கையில் எடுத்துக்கொண்டு மகேந்திர சிங் தோனி ஓடும்போது அரங்கிற்குள்ளும் வெளியிலும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் மானசீ கமாக அவருடன் ஓடியிருப்பார்கள். தோனி ஸ்டெம்பைச் சாய்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இதயம் பலவீனமான பலர் மாத்தி ரையோ சிகிச்சையோ எடுத்துக்கொண்டி ருக்கவும் கூடும். புதிதாகச் சிலருக்கு ரத்தக் கொதிப்பு வந்திருக்கலாம். இப்படி ஒரு முடிவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று கிரிக்கெட்டின் காதலர்கள் பலர் நினைத்திருப்பார்கள்.

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை என்று சொல்வார்கள். அதுதான் புதன்கிழமை பெங்களூருவில் நடந்தது. எளிதாகக் கைப்பற்றியிருக்க வேண்டிய வெற்றியை இந்தியா கிட்டத்தட்டப் பறிகொடுத்துவிட்டுக் கடைசிக் கணத்தில் மீட்டெடுத்தது. அதுவும் எதிரணியின் அபத்தமான தவறினால். கடைசி ஓவரைப் போட்ட ஹர்திக் பாண்டியா தேவையான 11 ரன்களில் 9 ரன்களை முதல் 3 பந்துகளிலேயே கொடுத்து எதிரணியை ஆசுவாசப்படுத்தினார். இந்திய அணியினரும் இந்திய ஆதரவாளர்களும் பதற்றத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.

வங்கதேசம் செய்த தவறு

இன்னும் 3 பந்துகளில் 2 ரன். ஏற்கெனவே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த முஷ்பிகுர் ரஹீம் இன்னும் 2 ரன்களைப் பதற்றமில்லாமல் எடுத்திருக்கலாம். இதே 2007 உலகக் கோப்பையில் மார்ச் 23-ம் தேதியன்று வங்கதேசம் இந்தியாவை வெளியேற்றியது. அதேபோல் இந்த மார்ச் 23-லிலும் செய்திருக்கலாம். பாண்டி யாவின் அடுத்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப நினைத்தார் முஷ்பிகுர். அளவு குறைவாகவும் சற்றே மெதுவாகவும் வந்த அந்தப் பந்தை அவரால் எல்லைக் கோட்டுக்கு அனுப்ப முடியவில்லை. அது கேட்சாக மாறியது. பாண்டியாவும் ரவிச்சந்திரன் அஸ்வினும் எளிய கேட்சுகளைக் கோட்டைவிட்டது போல ஷிகர் தவண் விடவில்லை.

அடுத்த பந்தை எதிர்கொண்ட மொஹமதுல்லா, முஷ்பிகுர் செய்த தவறையே தானும் செய்தார். அவருக்கும் ஆறு அல்லது நான்கு அடித்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை போலும். பந்தைத் தூக்கி அடித்தார். இந்த முறை ஜடேஜா பந்தை ஏந்திக்கொண்டார். இப்போது ஒரு பந்தில் இரண்டு ரன்கள். பாண்டியா அருமையாக வீசினார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே எகிறி வந்த பந்து. ஷுவாகதா ஹோம் மட்டையைக் காற்றில் வீச, பந்து தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ஷுவாகதா ரன் எடுக்க ஓட, தோனி பந்தை வீசி எறியாமல் அசுர வேகத்தில் ஓடி வந்து ஸ்டெம்பைச் சாய்த்தார். வங்க தேசத்தவரின் மனங்களும் சாய்ந்தன. ஒருவழியாக இந்தியா வென்றது. அரை இறுதி செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வென்றிருக்க வேண்டிய போட்டியே அல்ல இது. இப்படிச் சொல்வது வங்கதேசத்தைக் குறைத்துச் சொல்வதாக ஆகாது. கச்சிதமான பந்து வீச்சு, கூர்மையான தடுப்பரண், அச்சமற்ற மட்டை வீச்சு ஆகியவற்றுடன் வங்கதேசம் அற்புதமாகப் போராடியது. கடைசி மூன்று பந்துகளில் கொஞ்சம் பக்குவமாக ஆடியிருந்தால் அணி வென்றிருக்கும். அதன் கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பொருத்தமான பரிசாக அது இருந்திருக்கும். இந்தியா போட்டியை வென்றது. வங்கதேசம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.

சொதப்பிய மட்டைகள்

இந்தியாவின் நிகர ரன் விகிதம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்துட னான ஆட்டத்தில் ரன் விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்ன தோனி, அணியின் அதிரடி மட்டையாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று போட்டிக்கு முன் வெளிப்படையாகவே கூறினார். அணியில் சிலர் தடுமாறிவந்தாலும் எந்த மாற்றமுமின்றி அதே அணியைக் களமிறக்கியது இந்தியா. ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் முதல் 6 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன் என்னும் விகிதத்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் சர்மா ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவரின் முடிவில் தவண் நடையைக் கட்டினார்.

அதன் பிறகு இன்னிங்ஸின் வேகம் குறைய ஆரம்பித்தது. 23 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அடித்த 30 ரன்களைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. தோனி, யுவராஜ் சிங், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் களத்தில் இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 34 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. தோனி சொன்ன அந்த அதிரடி மட்டையாளர்கள் எங்கே என்று தேட வேண்டியிருந்தது.

இந்தியா அதிக ரன் எடுக்க முடியாததற்கு அதன் மட்டையாளர்களின் தயக்கமும் தவறுகளும் மட்டும் காரணமல்ல. வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினார்கள். குறிப்பாக ஷாகிப் அல் ஹஸன் 4 ஓவர்களில் 24 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தடுப்பு அரண் வலுவாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் கள வியூகமும் தடுப்பாளர்களின் முனைப்பும் சிறப்பாக இருந்தன. இன்னும் குறைந்தது 20 ரன் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை மட்டையாளர்களின் தவறும் எதிரணியின் கூர்மையும் சேர்ந்து குலைத்தன.

நழுவ விடப்பட்ட வாய்ப்புகள்

146 ரன்களைக் காப்பாற்றும் முயற்சி யில் இந்தியா தொடக்கத்திலிருந்தே சொதப்ப ஆரம்பித்தது. ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த எடுப்பில் கால் திசையில் பந்து வீச, தமிம் இக்பால் அதை ஃபைன் லெக் திசைக்கு அடித்தார். கைக்கு வந்த பந்தை நழுவவிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுண்டரியைப் பரிசளித்தார். அதன் பிறகும் தடுப்பாளர்கள் நிறைய சொதப்பினார்கள். நெஹ்ரா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆளுக்கு ஒரு கேட்சை நழுவ விட்டார்கள். துடிப்புடன் ஆடிய வங்கதேசம் இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கிச் சென்றது. இந்தியா ஆடும்போது மட்டைக்கு வராமல் சண்டித்தனம் செய்த பந்து வங்கதேச மட்டையாளர்கள் ஆடும்போது சமர்த்தாக நடந்துகொண்டது. ஷாகிப், சபிர் ரஹ்மான் ஆகியோர் அனாயாசமாக அடித்த ஷாட்டுகள் இதற்குச் சான்று.

அவ்வப்போது விக்கெட்களும் விழுந்துகொண்டிருந்ததால் இந்தியாவின் நம்பிக்கையும் உயிர்ப்போடு இருந்தது. அஸ்வினின் அருமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 20 ரன் கொடுத்து 2 விக்கெட்) இந்தியாவின் நம்பிக்கையைத் தக்கவைத்தது என்றும் சொல்லலாம். பும்ரா 19-வது ஓவரை நன்றாக வீசினார். 2 ஓவர்களில் 17 ரன்கள் என்னும் நிலையில் 6 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

கடைசி ஓவரை வீசிய பாண்டியாவுக்கு தோனி, கோலி, நெஹ்ரா உள்ளிட்டோர் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். என்றாலும் நெருக்கடி பாண்டியாவைப் பாதித்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இலக்கில்லாமல் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். நான்காவது பந்து அளவு குறைவான, சற்றே மெதுவாக வந்த பந்து. அதை புல் ஷாட் அடித்த முஷ்பிகுர் ரஹீம் பிடி கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடிக்க முயன்ற மொஹமதுல் லாவும் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் முஸ்தாஃபிஸுர் ரன் அவுட் ஆக, ஒரு ரன்னில் இந்தியா வென்றது.

நான்காவது அல்லது ஐந்தாவது பந்தை மட்டையாளர் தூக்கி அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும். தேவைப்படும் ரன் 2 என்னும்போது சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கும் முனைப்பே வங்கதேசத்தைக் காவு வாங்கியது. பல தவறுகளும் செய்த இந்தியா தப்பிப் பிழைத்தது. ரன் விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியைக் காலிறுதிப் போட்டிபோல எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.

வெற்றியிலும் தோல்வியிலும் கிடைக் கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் இந்திய அணி தன் நெருக்கடி யைத் தானே உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. அணியிலோ ஆடும் முறை யிலோ மாற்றம் எதுவும் இல்லையென்றால் பெங்களூருவில் கிடைத்த அதிருஷ்டம் இந்தியாவுக்குப் பலனில்லாமல் போக லாம்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8395985.ece

  • தொடங்கியவர்

அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள்

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந் தையும், இரண்டாவது ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான இலங்கையையும் தோற்கடித்தது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தும் பட்சத்தில் குரூப் 1-ல் இருந்து முதல் அணியாக அரையிறுதியில் கால்பதிக்கும்.

தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும், கடைசி ஆட்டத்திலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8396052.ece

  • தொடங்கியவர்

இந்தியா அரையிறுதிக்கு முன்னேற இதெல்லாம் நடக்க வேண்டுமா?

ந்திய அணி உலகக் கோப்பை டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுமா? - இந்த கேள்விக்குதான் ஒட்டு மொத்த இந்தியாவும் பதில் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேற என்ன நடக்க வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆட்டமும் கூட இந்தியாவின் உலகக் கோப்பை கனவை நிர்ணயிக்கும்.  இந்தியா அரையிறுதிக்கு முன்னேற,  இந்த மூன்று விஷயங்களில் ஒன்று நடந்தே ஆகவேண்டும்.

237817.jpg

எப்படி தகுதி பெறும் இந்தியா?

முடிவு 1:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றால்,  இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் காலிறுதி ஆட்டம் போலவே மாறிவிடும்.  இந்தியா,  ஆஸ்திரேலியாவை வென்றால் மட்டும் போதும்,  அரையிறுதிக்கு சென்று விடும்.

முடிவு 2:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியாவை கட்டாயம் வென்றாக வேண்டும். அதிலும் பாகிஸ்தான் தற்போது இந்தியாவை விட அதிக ரன் ரேட்டில் உள்ளது. வென்றால் இன்னும் ரன்ரேட் அதிகரிக்கும். அதனை தாண்டும் விதத்தில் இந்தியாவுக்கு ரன் ரேட் இருக்க வேண்டும். மேலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளையும் பெற வேண்டும். இவையெல்லாம் நடந்தால் இந்தியா அரையிறுதிக்கும் முன்னேறும்.

aus.jpg

முடிவு 3:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்,  இரு அணிகளும் மூன்று புள்ளிகளோடு இருக்கும். இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் 6 புள்ளிகளோடு அரையிறுதிக்குள் நுழையும்.

ஒருவேளை  இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்,  இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா,  பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும். அப்போது 5 புள்ளிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்ணேறும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்றிலும் பொதுவாக உள்ள விஷயம் இந்தியா - ஆஸ்திரேலியாவை அபாரமாக வெல்ல வேண்டும் என்பதுதான்...கமான் இந்தியா மேக் தி மிராக்கிள்!

http://www.vikatan.com/news/sports/61246-how-can-india-qualify-for-semi-finals.art

  • தொடங்கியவர்

இது வைட் போல் இல்லையா? :shocked:

12670514_991205187593341_908105646127858

12122516_991205217593338_296271637857695

12065784_991205247593335_323948751662945

  • தொடங்கியவர்

ஸ்மித், வாட்சன் அதிரடியில் ஆஸ்திரேலியா 193 ரன்கள் குவிப்பு

 

 
மொஹாலியில் பாக். பந்து வீச்சை புரட்டி எடுத்த வாட்சன், ஸ்மித் ரன் ஓடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
மொஹாலியில் பாக். பந்து வீச்சை புரட்டி எடுத்த வாட்சன், ஸ்மித் ரன் ஓடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

மொஹாலியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, ஓய்வு அறிவித்துள்ள ஷேன் வாட்சன் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 44 ரன்கள் விளாசித்தள்ளி நாட் அவுட்டாக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் விளாசியது.

வாட்சன், ஸ்மித் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 38 பந்துகளில் 74 ரன்களைச் சேர்த்தது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் அடிப்பது என்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி வருகிறது. இன்றும் ஆஸ்திரேலியா அதனைச் செய்து காட்டியது. மாட்டிய பவுலர்கள் மொகமது சமி, வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர். கடைசி ஓவரை ஆமிர் அருமையாகவே வீசிவந்தார், ஸ்மித்தை ரன் எடுக்க விடாமல் செய்தார். ஆனால் ஸ்மித் ஒரு லெக் பை ஒன்றை ஓட, ஸ்ட்ரைக்குக்கு வந்த வாட்சன் ஸ்லோ பந்தை ஒரு சுற்று சுற்ற விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ஒரு பவுண்டரி சென்றது, அடுத்த பந்தில் வாட்சன் முன்னங்காலை விலக்கிக் கொண்டு ஒரு சுழற்று சுழற்ற மிட்விக்கெட்டில் சிக்ஸ்.

மொகமது சமிக்கு இன்று பந்துகள் சரியாக அமையவில்லை, வைடுகளை வீசியதோடும் தப்பும் தவறுமான லெந்தில் வீச 4 ஓவர்களில் 53 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார்.

தொடக்கத்தில் வஹாப் ரியாஸ் கலக்கல்:

மொகமது சமி வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே லெக் திசை பந்து ஒன்று, ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று ஆகியவற்றில் கவாஜா 2 பவுண்டரிகளை அடிக்க அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது.

4வது ஓவரில் வஹாப் ரியாஸ் கையில் பந்து அளிக்கப்பட்டது. கவாஜா அவர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்து வரவேற்றார். ஆனால் கொஞ்சம் ஓவராக ஆடி அதே ஓவரில் லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு ஷாட் ஆட முயன்ற கவாஜாவுக்கு ஒரு யார்க்கர் லெந்த் பந்தை வஹாப் வீச கவாஜா பவுல்டு ஆனார். 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்த கவாஜா ஆட்டமிழந்தார்.

வார்னர் இறங்கியவுடன் வஹாபின் அதே ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அடுத்த ஓவரில் வார்னர் சமியை அதே பாயிண்டில் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார்.

ஆனால் 9 ரன்கள் எடுத்த அவர் வஹாப் ரியாஸின் அருமையான, 148 கிமீ வேக இன்கட்டர் பந்தை லேசாக ஒதுங்கிக் கொண்டு ஆட நினைத்தார், பந்து உள்ளே வர வார்னரால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர் ஏதொ ஸ்ட்ரோக் ஆட பந்து ஸ்டம்பைத் தாக்கியது. வஹாப் ரியாஸ் 2 ஓவர்கள் 17 ரன்கள் 2 விக்கெட் என்று பாகிஸ்தானுக்கு சற்றே நம்பிக்கை அளித்தார் பாகிஸ்தான் 6 ஓவர்கல் முடிவில் 52/2 என்று இருந்தது.

ஏரோன் பிஞ்ச் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் இமாத் வாசிம் பந்து ஒன்று திரும்பாமல் உள்ளே வர பவுல்டு ஆனார். ஆஸி. வீரர்கள் 3 பேரும் பவுல்டு. 7.2 ஓவர்களில் 57/3 என்ற நிலையில் பாகிஸ்தான் சற்றே நழுவ விட்டது என்றே கூற வேண்டும்.

ஸ்மித், மேக்ஸ்வெல் கூட்டணி இணைந்து 6.2 ஓவர்களில் 62 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க 13.4 ஓவர்களில் 119 ரன்கள் என்று ஆஸ்திரேலிய ரன் விகிதம் ஒருபோதும் 8 ரன்களுக்குக் கீழ் இறங்காத போக்கில் சென்று கொண்டிருந்தது. 18 பந்துகளில் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் சிக்சருடன் 30 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் இமாத் வாசிமிடம் ஆட்டமிழந்தார். இமாத் வாசிம் இன்று பாகிஸ்தானுக்குச் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆமிர் 4 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்தார். வஹாப் 4 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்.

மேக்ஸ்வெலுக்கு பிறகு வாட்சன், ஸ்மித் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர் ஆஸ்திரேலியா 193/4 என்று முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-193-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8396718.ece?homepage=true

 

  • தொடங்கியவர்
சுனே லுஸ் சாதனை
2016-03-25 09:56:28

மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கட் போட்­டி­களில் பந்­து­வீச்­சுக்­கான புதிய சாத­னையை தென் ஆபி­ரிக்­காவின் சுனே லுஸ் நிலை­நாட்­டினார்.

 

15734_Sune-Luus-is-congratulated-by-Dane

 

அயர்­லாந்­துக்கு எதி­ரான சென்­னையில் நடை­பெற்ற போட்­டியில் 8 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களை வீழ்த்­தி­யதன் மூலம் அவர் இந்த சாத­னையை நிலை­நாட்­டினார்.

 

இதற்கு முன்னர் அதி சிறந்த பந்­துவீச்சுப் பெறுதி இந்­தி­யாவின் ப்ரியங்கா ரோய்க்கு சொந்­த­மாக இருந்­தது.

 

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதி­ராக கொழும்பில் 2012இல் நடை­பெற்ற மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பிரி­யங்கா ரோய் 16 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களை வீழ்த்தி சாதனை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

 

எவ்­வா­றா­யினும் மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் அதி சிறந்த பந்­து­வீச்சுப் பெறுதி நியூஸிலாந்தின் அமி சட்­டர்­த­வெய்ட்­டுக்கு சொந்­த­மாக இருக்­கின்­றது.

 

இவர் இங்­கி­லாந்­துக்கு எதி­ராக 2007இல் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15734#sthash.5f9ZEN73.dpuf
  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா வெற்றி

12888500_1206704399348654_68492499098221

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்

 

இந்தியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

160325132942_pak_austriala_t20_cricket_5
பாகிஸ்தானின் உலகக் கோப்பை கனவு கலைந்தது

மொஹாலில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தமது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை எடுத்தனர்.

அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அற்புதமாக ஆடி 61 ஓட்டங்களை எடுத்தார். அதில் ஏழு பவுண்ட்ரிகளும் அடங்கும்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காராக களம் இறங்கிய ஷார்ஜீல் கானும், மூன்றாவதாக ஆடவந்த காலித் லத்தீஃபும் உறுதியுடன் ஆடி ஓட்டங்களை தொடர்ச்சியாக குவித்து வந்தனர்.

எனினும் ஷார்ஜீல் கான் ஆட்டமிழந்த பிறகு காலித் லத்தீஃப், உமர் அக்மல் ஆகியோர் நிதானமாக ஆடினாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை.

பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளும் சீராக விழத் தொடங்கின. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஜேம்ஸ் ஃபால்க்னெர் மிகச்சிறப்பாக பந்துவீசி 28 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இரண்டு முறை ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பும் ஃபால்கனெருக்கு கிடைத்தது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆடவுள்ளது.

மிகமிக முக்கியமான அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160325_t20wc_pakexit?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி

 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.

160320173050_west_indies_cricket_512x288
 அசராமால் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது

நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தென் ஆப்ரிக அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.இந்தப் போட்டி தென் ஆப்ரிக்காவுக்கு மிகவும் முக்கியமான ஒரு போட்டியாகும்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்ரிக்க அணி முதல் பந்திலேயே நட்சத்திர ஆட்டக்காரரான ஹஷீம் அம்லாவை இழந்தது.

அதன் பின்னர் சீராக விக்கெட்டுகள் சரிய அந்த அணி தமது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு மொத்தமாக 122 ஓட்டங்களை எடுத்தனர்.

தென் ஆப்ரிக்க அணியில் குவிண்டன் டி காக் மட்டுமே ஓரளவுக்கு நிதானமாக ஆடி அதிகபட்சமாக 47 ஓட்டங்களை எடுத்தார்.

அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியும் துவக்கம் முதலே ஆட்டம்காண ஆரம்பித்தது. அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 4 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் அவருடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜான்ஸன் சார்ஸ்லும், பின்னர் ஆடவந்த மார்லன் சாமுவேல்ஸும் ஓரளவுக்கு அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினர்.

இரண்டு போட்டிகளில் ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடும் அழுத்தங்களுக்கு உள்ளான தென் ஆப்ரிக்க அணி அதை சமாளிக்க முடியாமல் இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் பிரிவில் இரண்டாவதாக யார் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது சனிக்கிழமை இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகே தெரியவரும்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160325_t20_sf_wi

 

  • தொடங்கியவர்

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இங்கிலாந்து - இலங்கை பலப்பரீட்சை

 
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை அணி வீரர்கள்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை அணி வீரர்கள்.

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இங்கிலாந்து மூன்று ஆட்டத்தில் இரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. சூப்பர் 10 சுற்றில் அந்த அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். 4 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து இரண்டாவது ஆட்டத் தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்கள் இலக்கை அடைந்து சாதனை படைத்தது.

ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் பலமிழந்த ஆப்கானிஸ்தானிடம் கடுமையாக திணறியது. முன்னணி வீரர்கள் கைகொடுக்காத நிலையில் மொயின் அலி ஆல்ரவுண்டராக அசத்தி வெற்றி தேடிக்கொடுத்தார். சுழலுக்கு கைகொடுக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோ ரூட், மோர்கன் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான ரங்கனா ஹெராத், ஜெப்ரே வாண்டர்ஸே சவாலாக இருக்கக்கூடும்.

நடப்பு சாம்பியனான இலங்கை அணிக்கு இது 3வது ஆட்டமாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் பலம்குறைந்த ஆப்கானிஸ்தானை வென்ற நிலையில் அடுத்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் 7 விக்கெட் வித்தியாசத் தில் தோல்வியை சந்தித்தது.

பேட்டிங்கில், மூத்த வீரரான தில்ஷானை மட்டுமே அணி நம்பி உள்ளது. அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக விளையாடும் பட்சத்திலேயே ஆட்டத்தின் முடிவு சாதகமாக அமையக்கூடும். தினேஷ் சந்திமால், ஷமரா கபுகேதரா ஆகியோருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போதுமான அளவிலான திறமை அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை.

அவர்கள் பொறுப்புடன் விளை யாடும் பட்சத்தில் அணிக்கு வலுசேர்க்கலாம். இதேபோல் ஆல்ரவுண்டர் திஷரா பெரேராவும் பொறுப்பை உணர்ந்து விளை யாடினால் நெருக்கடி தரலாம். மலிங்கா தொடரில் இருந்து விலகி யதால் 37 வயதான மூத்த சுழற் பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் துக்கு அதிக நெருக்கடி ஏற்பட் டுள்ளது. மலிங்கா இல்லாத நிலை யில் வேகப்பந்து வீச்சாளர்களான குலசேகரா, துஷ்மந்தா ஷமீரா ஆகியோரால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடிய வில்லை.

அணிகள் விவரம்:

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் பிலிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லயாம் பிளங்கெட், ரீஸ் டாப்ளே, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், லயாம் டாவ்ஸன்.

இலங்கை:

மேத்யூஸ் (கேப்டன்), தில்ஷான், தினேஷ் சந்திமால், மிலிந்தா சிறிவர்தனா, சமரா கபுகேதரா, லஹிரு திரிமானே, ரங்கனா ஹெராத், ஜெயசூரியா, நுவன் குலசேகரா, சுரங்கா லக்மல், திஷரா பெரேரா, சேனாநாயகே, ஷனகா, துஷ்மந்தா ஷமீரா, ஜெப்ரே வாண்டர்ஸே.

நேரம்: இரவு 7.30

இடம்: டெல்லி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article8398935.ece

  • தொடங்கியவர்

வங்க தேசத்துக்கு 146 ரன்கள் இலக்கு
12919864_1909995329226868_40441807423799

டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆட வந்த நியூஸி., 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக வில்லியம்சன் 42 ரன்கள் எடுத்தார். வங்கதேச வீரர் முஸ்தபிர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேசம் ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது

  • தொடங்கியவர்

கோப்பையை வெல்லும் வலுவான நம்பிக்கையுடன் வந்தோம்: டு பிளெஸ்ஸிஸ் வருத்தம்

 

மர்லன் சாமுயெல்ஸ். | படம்: கே.ஆர்.தீபக்.
மர்லன் சாமுயெல்ஸ். | படம்: கே.ஆர்.தீபக்.

நாக்பூர் பிட்ச் நேற்றும் வேலையைக் காட்ட குறைந்த ஸ்கோர் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை போராடி வீழ்த்திய மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பலரும் எதிர்பார்த்த டிவில்லியர்ஸ், கெயில் அதிரடி நேற்று கைகூடவில்லை. டிவில்லியர்ஸ் ஸ்லோயர் ஒன் பந்தில் அவுட் ஆக, கிறிஸ் கெயிலுக்கு ரபாதா வீசியது அருமையான பந்தாக குச்சி எகிறியது. 4 ரன்களில் கெயில் அவுட் ஆனார். ஆனால் மே.இ.தீவுகள் இம்ரான் தாஹிரின் கடைசி நேர முயற்சிகளையும் மீறி சாமுயெல்ஸின் நிதானப்போக்கினாலும், கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ரபாதா வீசிய பந்தை மிட்விக்கெட்டில் நம்ப முடியாதபடிக்கு மிகப்பெரிய சிக்சரை பிராத்வெய்ட் அடித்ததாலும் 19.4 ஓவர்களில் 123/7 என்று வென்றது மே.இ.தீவுகள்.

இந்த வெற்றியின் மூலம் மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு முன்னேற, தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கை-இங்கிலாந்து போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்துவதை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் ஒரு உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் முக்கிய போட்டியில் தென் ஆப்பிரிக்கா சொதப்பல் தொடர்ந்தது.

இலக்கை மே.இ.தீவுகள் துரத்தும் போது 16 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் 99/4 என்ற நிலையில் 24 பந்துகளில் 24 ரன்களே தேவை என்று இருந்தது. சாமுயெல்ஸ் 31 ரன்களுடனும் ஆந்த்ரே ரசல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பனிப்பொழிவும் இருந்தது.

17-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீச வந்தார். முதல் பந்து அருமையான கூக்ளி, உள்ளே வந்தது, அதனை கவர் திசையில் அடிக்க முயன்றார் சாமுயெல்ஸ் ஆனால் பந்து உட்புறமாக திரும்பியதால் ஷாட் நேராக காற்றில் தாஹிரிடமே கேட்சாக வந்தது. ஆனால் தாஹிர் அருமையான வாய்ப்பை நழுவ விட்டார்.

அதே ஓவரில் ஆந்த்ரே ரசல் மனம் போன போக்கில் தாஹிர் பந்தை சுழற்ற மிட்விக்கெட்டில் மில்லரிடம் கேட்ச் ஆனது. அடுத்த பந்தே கூக்ளியில் டேரன் சமி பவுல்டு ஆக மே.இ.தீவுகள் 17-வது ஓவர் முடிவில் 100/6 என்று தோல்வி முகம் காட்டத் தொடங்கியது. 18-வது ஓவரை டேவிட் வீஸ அருமையாக வீசி 3 ரன்களையே விட்டுக் கொடுக்க 2 ஓவர்களில் 20 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று பரபரப்பானது.

ஆனால் 19-வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் மோசமான பவுன்சர் ஒன்றை வீச சாமுயெல்ஸ் அதனை ஸ்லிப் வழியாக பவுண்டரி அடித்தார். மீண்டும் ஒரு பந்தை ஷார்ட் ஆகவும் வைடாகவும் மோரிஸ் வீச அதே தேர்ட்மேன் திசையில் சாமுயெல்ஸ் மேலும் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில், 43 ரன்கள் எடுத்த நிலையில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் மோரிஸ் இந்த ஓவரில் 11 ரன்களை கொடுத்ததால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரபாதா பந்தை பிராத்வெய்ட் சற்றும் எதிர்பாராதவிதமாக பெரிய சிக்ஸ் ஒன்றை அடிக்க மே.இ.தீவுகளுக்கு வெற்றி கிட்டியது.

2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் கிராண்ட் எலியட்டுக்கு டிவில்லியர்ஸ் வீசிய ஓவர் போல் தற்போது ரபாதா வீசிய ஓவர் தென் ஆப்பிரிக்காவின் தோல்வியில் முடிந்தது.

தோல்வி குறித்து டு பிளெஸ்ஸிஸ் கூறும் போது, “வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இன்று எங்களது பேட்டிங் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 130-135 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நிச்சயமாக 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

முதலில் பேட் செய்ததற்குக் காரணம் இது நிச்சயம் மும்பை பிட்ச் போல் இருக்காது என்ற நம்பிக்கையில்தான். ரன் அவுட், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தது, ரைலி அவுட் ஆனது, டிவில்லியர்ஸ் அவுட் ஆனது ஆகியவை மென்மையான ஆட்டமிழப்புகளே.

இந்த ஆட்டத்திற்குள் செல்வதற்கு முன்பாக மே.இ.தீவுகள் பவர் ஹிட்டிங் அணி, நாம் சாதுரியமாகச் செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கினோம். நிச்சயம் 10 அல்லது 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுக்க இந்த மைதானமும் பிட்சும் மிகவும் வசதியானதே.

ஒரு இன்னிங்ஸை ரன் அவுட் மூலம் தொடங்குவது விரும்பத்தக்கதல்ல. இது ஒட்டுமொத்த அணியையும் எதிர்மறை அணுகுமுறைக்குள் தள்ளுகிறது. எதிரணியினருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக 3 அல்லது 4 விக்கெடுகளை உடனடியாக இழந்தால் எந்த அணிக்கும் அது பின்னடைவே.

நாங்கள் எங்கள் சிறப்புத் தன்மைக்கு நெருக்கமாக ஆடவில்லை, இதுதான் வெறுப்பளிக்கிறது. நாம் அனைத்தையும் சரியாகச் செய்தால் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும், மே.இ.தீவுகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது (சாமுயெல்ஸுக்கு தாஹிர் விட்ட கேட்ச்).

நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். கோப்பையை வெல்லும் வலுவான நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் தற்போது மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மற்ற அணி எங்களுக்குச் சாதகம் செய்யும் நிலைமைக்கு வந்து விட்டோம், அப்படி நடக்காவிட்டால், தோல்விக்கு மன்னிப்பே கிடையாது” என்றார் டு பிளெஸ்ஸிஸ்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8399313.ece

  • தொடங்கியவர்

இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவது பெரிய சவாலே: ஷேன் வாட்சன்

 

 
 
ஷேன் வாட்சன். | கெட்டி இமேஜஸ்.
ஷேன் வாட்சன். | கெட்டி இமேஜஸ்.

இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது ஒரு பெரிய சவால், நாக்-அவுட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தயார் என்று ஷேன் வாட்சன் தெரிவித்தார்.

“நான் விளையாடிய சில போட்டிகளில் ரன் விகிதம் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் சூழ்நிலைகள் இருந்ததுண்டு, இதனால் நாங்கள் முன்னேற வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆகவே தற்போது வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை என்பது நல்லதே. இந்திய அணியை வீழ்த்த நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டி எனது கடைசி சர்வதேச போட்டியாகவும் இருக்கலாம், எனவே இது எனக்கு மிகப்பெரிய போட்டி, நாங்கள் இங்கு பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடியது எங்களுக்கு சாதகமாக உள்ளது.

வங்கதேசம் அன்று கொஞ்சம் நிதானப்போக்குடன் ஆடியிருக்கலாம் (இந்தியாவுக்கு எதிரான போட்டி), இந்த வகையில் நாங்கள் பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் எந்த ஒரு வடிவமாக இருந்தாலும் இந்தியாவை, இந்தியாவில் எதிர்கொள்வது சவாலானதே.

இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்திவிட்டால் அது ஒரு பெரிய சாதனைதான்.

நாங்கள் அனைவரும் இதனை அறிவோம், மேலும் நான் இந்த மண்ணில் நிறைய விளையாடி அனுபவம் பெற்றுள்ளேன்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா இதுவரை சரியாக ஆடவில்லை, ஆனால் நிலைமைகளும் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. எந்த அணியும் அந்தச் சூழ்நிலையில் திணறவே செய்யும். பந்து பெரிய அளவில் திரும்புகிறது, அது நாக்பூராக இருந்தாலும் கொல்கத்தாவாக இருந்தாலும்.

மொஹாலியில் ஸ்பின் பந்து வீச்சில் பந்துகள் அவ்வளவாக திரும்பவில்லை, ஆனால் இந்திய அணியில் திறமை மிக்க பேட்ஸ்மென்களும் பவுலர்களும் உள்ளனர். திடீரென அவர்களுக்கு ஆட்டம் பிடித்துவிடும், அப்படி நடந்தால் இந்திய அணியை யாராலும் வீழ்த்த முடியாது.

பெரிய போட்டிகளில் மன அளவிலான தயார்படுத்தல், அணுகுமுறையே பிரதானம். அழுத்தமான சூழ்நிலையில் நாம் நிதானத்துடன் உறுதியுடன் செயல்படுவது அவசியம். இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர், சொந்த மண்ணில் நாங்கள் வென்றோம், அதே போல் 2011-ல் இந்தியா வென்றது. எனவே நாளைய போட்டி மிகப்பெரிய போட்டியாகும்.

விராட் கோலியை வீழ்த்த பல்வேறு உத்திகளை ஆஸ்திரேலிய தொடரில் வகுத்தோம் ஆனால் அவை வேலை செய்யவில்லை. காரணம் அவர் ஆட்டம் அப்பழுக்கற்ற விதமாக உள்ளது. சில சமயங்களில் நாங்கள் அவரை வீழ்த்த கடினமாக முயற்சி செய்தோம். இரண்டு பந்துகளுக்குத்தான் அவருக்கு எதிரான உத்தி அவருக்கு பிரச்சினையாக இருந்தது, நான் ஸ்லிப்பில் அவருக்கு கேட்ச் விட்டேன்.

அவர் தனது ஆட்டத்தை நன்றாக அறிந்திருப்பவர். அவரை விரைவில் வீழ்த்தி விட வேண்டும், ஏனெனில் ஒருமுறை அவர் செட் ஆகிவிட்டால் பவுலர்கள் மீது அவர் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article8399408.ece

 

  • தொடங்கியவர்

இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டம்

இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டம்

 

இருபதுக்கு 20 சர்வதேச உலக கிண்ணப் பேட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியானது இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக அமைகின்றது.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.