Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்
பங்களாதேஷை 55 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்
2016-03-16 19:36:07

(கொல்கத்தாவிலிருந்து நெவில் அன்தனி)

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 10 சுற்றில்இன்று  நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

15561_236991.jpg

 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் முன்வரிசை துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.

 

ஆசிய கிண்ணப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவர் ஷஹீத் அவ்ரிடி ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 49 ஓட்டங்களைக் குவித்தார்.

 

அத்துடன் மூன்றாவது விக்கெட்டில் ஹஃபீஸுடன் 22 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

 

முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் கடைசி பத்து ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களைக் குவித்தது.

 

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அரபாத் சனி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில்  6 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

 

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் (50 ஆ.இ.,), சபிர் றஹ்மான் (25), தமிம் இக்பால் (24) ஆகிய மூவரே சிறப்பாக செயற்பட்டனர்.

 

பாகிஸ்தான் பந்துவீச்சில் மெஹமத் ஆமிர், ஷஹித் அவ்ரிடி ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15561#sthash.sD2gRMAw.dpuf

thumb_large_Soumya-Sarkar-stunning-bound

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 182/6....20. ஓவர். பிரிமியர் பார்டி பினிஸ்...!

  • தொடங்கியவர்
3 hours ago, suvy said:

58/3....8. அப்ரிடி போலிங்...!

71/4...10.2.

கூக்லி போலிங் பற்றி ஒரு சிறு காணொலி போட முடியுமா நவீன்...!

http://rushisbiz.com/wp-content/uploads/2010/05/googly_grip1.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

57/2...6.4.

  • தொடங்கியவர்
இங்கிலாந்து  182/6 (20/20 ov)
மேற்கு இந்தியதீவுகள்  105/3 (11.3/20 ov)
West Indies require another 78 runs with 7 wickets and 51 balls remaining
  • கருத்துக்கள உறவுகள்

113/4....12.2.

  • தொடங்கியவர்
மேற்கு இந்தியதீவுகள்  6 விக்கெட்களால் வெற்றி
  • கருத்துக்கள உறவுகள்

183/4...18.1.

மே.இந்தியா வெற்றி....!

கெய்ல்...100.

Group 1

  Team              

Last updated 16 March 2016 at 17:35

http://www.bbc.com/sport/cricket/world-twenty20/table

1 West Indies 1 1 0 0 0 0.97 2.0
2 Afghanistan 0 0 0 0 0 0.00 0.0
3 South Africa 0 0 0 0 0 0.00 0.0
4 Sri Lanka 0 0 0 0 0 0.00 0.0
5 England 1 0 1 0 0 -0.97 0.0

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

1935878_561275907367572_8481937776506582

11 minutes ago, நவீனன் said:

 

நவீனன் கெயில் இன்றைய மட்சுடன் ரி20யில் 100 ஆறுகள் அடித்த ஒரே வீரர் என்பது சரியா?
 

அத்துடன் உலககிண்ண ரி20யில் இரு சதமடித்த ஒரேயொருவரும் இவரே.

  • தொடங்கியவர்
8 minutes ago, ஜீவன் சிவா said:

நவீனன் கெயில் இன்றைய மட்சுடன் ரி20யில் 100 ஆறுகள் அடித்த ஒரே வீரர் என்பது சரியா?
 

The stats

  • Gayle has hit 93 sixes in Twenty20 international cricket, passing Brendon McCullum's previous record of 91, having played 25 fewer games
  • His 11 sixes is the most in an innings at the World T20 and the third most in all T20 internationals
  • At one point in his innings, Gayle took five sixes from 10 balls
  • His 47-ball century is the joint third fastest in T20 internationals
  • West Indies reaching 183 was the fifth highest successful run chase in a World T20 match
Batting and fielding averages
  Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
Tests 103 182 11 7214 333 42.18 11970 60.26 15 37 1046 98 96 0
ODIs 269 264 17 9221 215 37.33 10834 85.11 22 47 1038 238 114 0
T20Is 46 44 4 1506 117 37.65 1034 145.64 2 13 127 98 12 0

http://www.espncricinfo.com/westindies/content/player/51880.html

 

 

  • தொடங்கியவர்

1930434_1003286156386745_251763504937876

  • தொடங்கியவர்

நாளைய போட்டி

ஆப்கானிஸ்தான் vs ஸ்ரீலங்கா

மத்திய ஐரோப்பிய நேரம் 15.00

  • தொடங்கியவர்
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மாலிங்க விளையாடுவது உறுதியில்லை - இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ்
2016-03-17 09:23:16

(கொல்­கத்­தா­வி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

1557435.jpgசர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் நடப்பு சம்­பி­ய­னாக களம் இறங்­கு­கின்ற போதிலும் இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் பின்­னி­லையில் இருந்து வெற்­றியை நோக்கிப் பய­ணிக்க வேண்­டிய கட்­டாய நிலையில் இருப்­ப­தாக அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

அத்­துடன் லசித் மாலிங்க பூரண குண­ம­டை­யா­ததால் ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான போட்­டியில் விளை­யா­டு­வது இன்னும் உறு­தி­யா­க­வில்லை எனவும் போட்டி நடை­பெ­று­வ­தற்கு முன்னர் உடற்­கூற்று மருத்­து­வர்­களால் அவர் மீண்டும் பரீட்­சிக்­கப்­ப­டுவார் எனவும் அவர் கூறினார்.

 

ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ராக கொல்­கத்தா ஈடன் கார்ட்ன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள குழு 1 இற்­கான ஐ சி சி உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிக்­கான இலங்கை அணியின் ஆயத்­தங்கள் தொடர்­பாக கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

''மாலிங்­கவைப் பொறுத்­த­மட்­டில் புதன்­கி­ழமை காலை (நேற்று) குறு­கிய தூர ஓட்­டத்­துடன் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். வியா­ழனன்று காலை தனது வழ­மை­யான ஓட்­டத்­துடன் பந்­து­வீ­சுவார். 

 

அப்­போ­துதான் அவ­ரது ஆரோக்­கிய நிலை குறித்து திட்ட­வட்­ட­மாகத் தெரி­ய­வரும்.

 

அதன் பின்­னரே மாலிங்­கவால் விளை­யாட முடி­யுமா? இல்­லையா? என்­பதை உடற்­கூற்று மருத்­து­வர்கள் தீர்­மா­னிப்பர்'' என மெத்யூஸ் மேலும் குறிப்­பிட்டார்.

 

''அண்மைக் காலங்­களில் எமது அணி எதிர்­பார்த்த வெற்­றி­களை சுவைக்­க­வில்லை. அதற்­காக ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான போட்­டியில் அழுத்­தங்­களை எதிர்­கொள்ள மாட்டோம். தோல்­வி­களை புறந்­தள்­ளி­வைத்­து ­விட்டு உலக இரு­பது 20 போட்­டி­களில் முன்­னோக்கி நகர்­வ­தற்கு முயற்­சிப்போம்'' என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

பயிற்சிப் போட்­டி­களில் அடைந்த தோல்­விகள் அணிக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­துமா? எனக் கேட்­ட­போது, ''விளை­யாட்டில் வெற்றி தோல்வி சகஜம்.

 

அது பயிற்சிப் போட்­டி­யாக இருக்­கட்டும் அல்­லது நிஜப் போட்­டி­யாக இருக்­கட்டும் வெற்­றியும் தோல்­வியும் சகஜம். ஆனால் நாம் தொடர்ச்­சி­யாக தோல்வி அடைந்தோம். 

 

1557434.jpgஎமது அணியைப் பொறுத்­த­மட்டில் தோல்­வியில் ஒரு­போதும் துவண்­டு­வி­ட­வில்லை. அதன் பின்­னரும் நாங்கள் அனை­வரும் ஓர­ணி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம்'' என்றார்.

 

இந்த தோல்­விகள் ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான போட்­டியில் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­துமா என்று வின­வி­ய­போது,

 

''சில போட்­டி­களில் தோல்வி அடைந்த போதிலும் ஆப்­கா­னிஸ்­தானை நாங்கள் நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்ளத் தயா­ரா­க­வுள்ளோம்.

 

ஆப்­கா­னிஸ்தான் அணியின் திற­மையை திட்­ட­வட்­ட­மாக அனு­மா­னிக்க முடி­யாது. அவ்­வ­ணியை இல­கு­வாக எம்மால் கரு­தவும் முடி­யாது. இவ்வருட உலக இரு­பது 20 கிரிக்­கெட்டில் இது எமது முதல் போட்டி என்­பதால் சிறப்­பாக செயல்­பட்டு வெற்­றி­பெ­ற­வேண்டும். 

 

வெற்­றி­பெற முடியும் என்ற நம்­பிக்­கை­யுடன் இந்தப் போட்­டியை எதிர்­கொள்­ள­வுள்ளோம். அத்­துடன் ஒவ்­வொரு போட்­டி­யாக கவ­னத்தில் எடுத்து விளை­யா­டு வோம்.'' என ஏஞ்­சலோ மெத்யூஸ் குறிப்­பிட்டார்.

 

இலங்கை அணியின் துடுப்­பாட்ட வரிசை தொடர்­பாக கேட்­ட­போது, ''எமது துடுப்­பாட்ட அணு­கு­முறை சிறப்­பாக இருக்­கின்­றது.

 

தற்­போ­தைய நிலையில் துடுப்­பாட்ட வரி­சையில் மாற்றம் அவ­சி­ய­மில்லை. என்­றாலும் ஆட்­டத்தின் தன்­மையைக் கருத்­தில்­கொண்டு மாற்றம் செய்­யப்­ப­டலாம்.

 

தினேஷ் சந்­தி­மாலும் மீள் வருகை தந்து 3ஆம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தாடும் லஹரு திரி­மான்­னவும் சிறப்­பாக செயற்­ப­டு­கின்றார். 

 

ஆசிய கிண்ணப் போட்­டி­களில் சந்­திமால் மிகத் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டினார்.

 

அதே­போன்று பயிற்சிப் போட்­டி­களில் திரி­மான்ன திற­மையை வெளிப்­ப­டுத்­தினார்.

 

அவர்­களில் நாங்கள் தங்­கி­யி­ருப்­ப­துடன் அவர்கள் தொடர்ந்து ஓட்­டங்­களைக் குவிப்பர் என எதிர்­பார்க்­கின்றோம்.

 

அத்துடன் ஏனை­ய­வர்­களும் துடுப்­பாட்­டத்தை ஸ்திரப்­ப­டுத்­த­ வேண்டும். குறிப்­பாக மத்­திய வரி­சையில் ஓட்­டங்கள் கணி­ச­மாகப் பெறப்­ப­ட­வேண்டும்'' என அவர் பதி­ல­ளித்தார்.

 

ஆப்­கா­னிஸ்தான் அணித் தலைவர் கருத்து வேகப்­பந்­து­வீச்சு பயிற்­றுநர் மனோஜ் பிர­பாகர், தலை மைப் பயிற்­றுநர் இன்­ஸமாம் உல் ஹக் ஆகி­யோரின் பயிற்­று­விப்­பின்கீழ் ஆப்­கா­னிஸ்­தான பெரு முன்­னேற்றம் அடைந்­துள்­ள­தாக அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரி­வித்தார்.

 

இவர்கள் இரு­வரும் சர்வதேச அரங்கில் மிகுந்த அனுபவசாலிகள் என்பதால் நிறைய கற்றுக்கொள்ளக் கிடைத்ததாகவும் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டி யில் வெற்றிபெற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

 

“கடந்த தடவை இலங்கைக்கு நாங்கள் கடும் சவால் விடுத்தபோது, சங்கக்கார, மஹேல போன்றவர்கள் இருந்தனர்.

 

ஆனால் இம்முறை அவர்கள் இல்லை. எனவே, வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது” என்றார் அவர்.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15574#sthash.sNc47Ykr.dpuf
  • தொடங்கியவர்

உ.கோ.டி20: கிறிஸ் கெயிலின் 47 பந்து சதத்தில் சீரழிந்த இங்கிலாந்து

 

 
மும்பையில் வான் கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் மே.இ.தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் | படம்: ஏ.எஃப்.பி.
மும்பையில் வான் கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் மே.இ.தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் | படம்: ஏ.எஃப்.பி.

மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் சதமடித்து தாண்டவமாட, இங்கிலாந்தை நசுக்கியது மே.இ.தீவுகள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் டி20யில் கெயிலின் இந்த 47 பந்து சதமே அதிவேக அதிரடி சதமாகும்.

மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சமி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் இங்கிலாந்து மிக அருமையாக பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 11 அசுர சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மே.இ.தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மொத்தத்தில் கெயிலின் ஆக்ரோஷ மட்டை சுழற்றலுக்கு சிக்கிய இங்கிலாந்து அணி, வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் ‘இரட்டை டயர் லாரியில மாட்டிக்கிட்ட எலிக்குஞ்சு’ போல் ஆனது. ஆனால் பனிப்பொழிவு நிச்சயம் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு பெரிய ஒரு தடையாக இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. பந்தை கிரிப் செய்ய முடியவில்லை இதனால் புல்டாஸ்கள் அதிகம் விழுந்தன.

தென் ஆப்பிரிக்க வீரர் லெவி 45 பந்துகளில் அடித்த சதம்தான் டி20 உலக சாதனையாகும், இவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் உள்ளார், இவர் 46 பந்துகளில் சதம் எடுத்துள்ளார். தற்போது வான்கடேயில் கெயில் 47 பந்துகளில் சதம் கண்டு 3-ம் இடத்தில் உள்ளார். மேலும் உலகக்கோப்பை டி20-யில் 11 சிக்சர்கள் அடித்து கெயில் அதிக சிக்சர்களை அடித்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது 2007 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தான் அடித்த 10 சிக்சர்கள் சாதனையை அவரே நேற்று முறியடித்தார்.

கெயில் மட்டைக்கு சிக்கியவர் மொயின் அலி, இவரது 14 பந்துகளில் 33 ரன்கள் விளாசப்பட்டது. இதில் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள். அதுவும் எல்லாமே நேராக அடிக்கப்பட்ட சிக்சர்கள்.

மைதானத்தில் பனிப்பொழிவு இருந்ததால் மே.இ.தீவுகள் 85/2 என்ற நிலையில் வலுவாக இருந்த போது, மைதானத்தில் ஈரம் காய வைக்கும் எந்திரம் வரவழைக்கப்பட்டது, வழக்கத்துக்கு மாறான ஒரு இடையூறாக அமைந்தது. ஆனால் ஆட்டம் ஒருதலைபட்சமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக இது செய்யப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் ஒரு ஓவரில் பந்தின் ஈரம் காரணமாக சரியாக வீச முடியாமல் மர்லன் சாமுயெஸ்ல்ஸுக்கு 3 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். இதில் ஜோர்டான் பனிப்பொழிவு காரணமாக மிக மோசமாக மிஸ் பீல்ட் செய்து பவுண்டரி விட்டதும் அடங்கும்.

சாமுயெல்ஸ் அடித்துக் கொண்டிருக்கும் போது கிறிஸ் கெயில் ரன்னர் முனையில் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. முதல் ஓவரில் டோப்லியை இரண்டு பவுண்டரிகள் அடித்ததோடு சரி. 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த சாமுயெல்ஸ், அடில் ரஷித் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகுதான் அடில் ரஷீத்தை 2 சிக்சர்கள் விளாசினார் கெயில். இதில் ஒன்று மிகப்பெரிய சிக்ஸ், 89 மீட்டர்கள் சிக்ஸ் என்று டிவியில் காண்பிக்கப்பட்டது. தினேஷ் ராம்தின், டிவைன் பிராவோ ஆகியோர் இடையில் ஆட்டமிழந்தனர், பிராவோ புல்டாஸில் அவுட் ஆனார். பந்து வழுக்கியதால் இங்கிலாந்து நிறைய புல்டாஸ்களை வீசியது.

கடைசியில் ஆந்த்ரே ரசல், கெயிலுடன் நின்றார். அவர் 16 நாட் அவுட், கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் 100 நாட் அவுட். பென் ஸ்டோக்ஸ் பாவம் 3 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார். காரணம் பந்தின் ஈரத்தினால் புல்டாசாக விழுந்தது. கிறிஸ் ஜோர்டான் மட்டுமே 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். பந்து வழுக்கிய போதும் இவர் கெயிலுக்கு யார்க்கர்களை துல்லியமாக வீசினார். ஆனால் கெயில் இந்த யார்க்கர்களை தடுத்தாடி விட்டார். அதில் ஏதாவது ஒன்றை அவர் விட்டிருந்தால் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் கூட திரும்பியிருக்கலாம், ஆனால் கெயில் நேற்று முடிவுகட்டிவிட்டார்.

முன்னதாக இங்கிலாந்து டாஸ் வென்று நன்றாக ஆடியது, பார்க்க பசுந்தரை ஆடுகளம் போல் தெரிந்தாலும் ஸ்விங் இல்லவே இல்லை. அலெக்ஸ் ஹேல்ஸ், சாமுயேல் பத்ரீயை 3 பவுண்டரிகள் அடித்தார். ஜேசன் ராய், ஆந்த்ரே ரசல் பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹேல்ஸை அருமையான யார்க்கரில் வீழ்த்தினார் சுலைமான் பென். ஜோ ரூட் மிக அருமையான தனது பார்மை மீண்டும் நிரூபித்தார், ஹேல்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து 12-வது ஓவரில் 92 ரன்களில் இருந்தது என்றால் அதற்குக் காரணம் ஜோ ரூட்டின் அருமையான ஆட்டமே. 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். கிறிஸ் பட்லர் 3 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். மோர்கன் 14 பந்துகளில் 27 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 2 பந்துகளில் 1 சிக்சருடன் 7 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து 182 ரன்கள் எடுத்தது.

ஆனால் பனிப்பொழிவும், கிறிஸ் கெய்லும் நேற்று இங்கிலாந்து விதியை தீர்மானித்தனர். கெயில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

எந்த அணியும் இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை, அது இம்முறை நிகழ்ந்ததென்றால் மே.இ.தீவுகள் அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-47-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8364366.ece

  • தொடங்கியவர்

டி20: சௌம்யா சர்க்கார் எல்லை கோட்டில் பிடித்த அசத்தல் கேட்ச்! (வீடியோ)

 

டி20 உலக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும் வங்கதேசமும் மோதின. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அஃபீஸ், பந்தை எல்லைக்கோட்டை நோக்கி தூக்கி அடித்தார். எல்லை கோட்டை தாண்டி சென்ற அந்த பந்தை, சௌம்யா சர்க்கார் அசத்தலாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

அந்த அசத்தல் வீடியோ... 

VIKATAN

  • தொடங்கியவர்

கொல்கத்தா பிட்சில் பாகிஸ்தான் அணியின் பரிச்சயம் இந்திய அணியை பாதிக்கும்: சுனில் கவாஸ்கர்

 
Sunil_Gavaskar_181_2778039f.jpg
 

கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டம் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சுனில் கவாஸ்கர் இது பற்றி கூறும்போது, “பாகிஸ்தான் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளனர். பயிற்சி ஆட்டத்தையும் கொல்கத்தாவில் ஆடியுள்ளனர்.

எனவே இந்தியாவுக்கு பரிச்சயமான நிலைமைகள் என்றாலும் இப்போதைக்கு பாகிஸ்தான் அணியும் நிலைமைகளை நன்கு அறிந்த அணியாகவே உள்ளது. வரும் சனிக்கிழமை இந்திய அணியை எதிர்கொள்ளும் போது இது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பது இந்திய அணிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தங்களை நிரூபிக்க விரும்புவர். ஷாகித் அப்ரிடி மற்றும் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் நன்றாக விளையாட முனைப்பும், ஊக்கமும் காட்டி வருகின்றனர்” என்றார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததில்லை. எனவே அந்த அணி தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருக்கும், மாறாக இந்திய அணி எதிர்பாராத தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்கிறார் சுனில் கவாஸ்கர்

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்து ஆட உள்ளது

  • தொடங்கியவர்
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 154 ஓட்ட இலக்கு
2016-03-17 21:11:43

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணிக்கு 154  ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

15584afg-lanka-600.jpg

 

கொல்கத்தாவில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைக் குவித்தது,

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15584#sthash.sMJuR3x2.dpuf

10400310_565394733623856_305958649144019

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா 6 விக்கெட்களால் வெற்றி

8659_985982974782229_8102184594602007572

10600570_565443903618939_427529927218973

1917515_561852827309880_9834586988152543

Group 1

  Team              
Last updated 17 March 2016 at 17:27
1 West Indies 1 1 0 0 0 0.97 2.0
2 Sri Lanka 1 1 0 0 0 0.58 2.0
3 South Africa 0 0 0 0 0 0.00 0.0
4 Afghanistan 1 0 1 0 0 -0.58 0.0
5 England 1 0 1 0 0 -0.97 0.0

Group 2

  Team              
Last updated 17 March 2016 at 17:27
1 Pakistan 1 1 0 0 0 2.75 2.0
2 New Zealand 1 1 0 0 0 2.35 2.0
3 Australia 0 0 0 0 0 0.00 0.0
4 India 1 0 1 0 0 -2.35 0.0
5 Bangladesh 1 0 1 0 0 -2.75 0.0

http://www.bbc.com/sport/cricket/world-twenty20/table

  • தொடங்கியவர்

நாளைய போட்டிகள்

அவுஸ்திரேலியா vs நியூசீலாந்து

மத்திய ஐரோப்பிய நேரம் 10.30

 

இங்கிலாந்து vs தென்ஆப்ரிக்கா

மத்திய ஐரோப்பிய நேரம் 15.00

  • தொடங்கியவர்
ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்களால் வென்றது இலங்கை அணி; டில்ஷான் 83 7*
2016-03-17 22:59:54

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி 6  விக்கெட்களால் வென்றது.

 

15585dilshan-600.jpg

 

கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைக் குவித்தது. 

 

அணித்தலைவர் அஸ்கர் ஸ்டெனிக்ஸாய்  47 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் திசர பெரேரா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

15585_afg-lanka-600.jpg

 

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5  ஓவர்களில்  6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

திலகரட்ன டில்ஷான்  56 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்படஆட்டமிழக்காமல் 83  ஓட்டங்களைக் குவித்தார்.  அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றர்ர.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15585#sthash.HbpAR9lm.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.