Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

நாளைய போட்டிகள்

ஆப்கானிஸ்தான் vs தென்ஆப்ரிக்கா

மத்திய ஐரோப்பிய நேரம் 10.30

 

மேற்கு இந்தியதீவுகள் vs ஸ்ரீலங்கா.

மத்திய ஐரோப்பிய நேரம்  15.00

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மழையால் தாமதமாக தொடங்கியது ஆட்டம்: ஈடன் கார்டனில் ஜாம்பவான்களுக்கு பாராட்டு

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜியால் கவுரவிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள். அருகில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜியால் கவுரவிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள். அருகில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளார்.

டி 20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான கட்டத்தில் நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

ஆனால் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணியில் இருந்து ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை, மாலை நேரத்திலும் பெய்தது. இதனால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. மைதானத்தில் ரசிகர்களும் போட்டி ரத்தாகிவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்திருந்தனர்.

ஒருவழியாக 6.45 மணி அளவில் மழை ஓய்ந்த நிலையில் மைதானத்தில் இருந்த கவர்கள் அகற்றப்பட்டு, ஆடுகளத்தின் புறவெளிப்பகுதிகளில் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டது. ஆடுகளம் மற்றும் மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி, 18 ஓவர்களை கொண்டதாக நடத்தப்படும் என்றும் அறிவித் தனர்.

இதன் பின்னரே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டி ருந்தது. இமாத் வாசிம் நீக்கப்பட்டு முகமது சமி சேர்க்கப் பட்டார்.

இதற்கிடையே இந்த போட்டியையொட்டி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னாள் ஜாம்பவான்கள் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், சேவாக் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, டி 20 உலகக் கோப்பை டிராபியை எடுத்து வர இரு அணி வீரர்களும் அணிவகுத்து நின்றனர். பின்னர் இந்திய தேசிய கீதத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலி அந்நாட்டு தேசிய கீதத்தையும் பாடினர். இதையடுத்து போட்டி ஆரம்ப மானது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8377321.ece

 

  • தொடங்கியவர்

தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: தாக்குப்பிடிக்குமா ஆப்கானிஸ்தான்

 
ஆம்லா. | கோப்பு படம்: விவேக் பெந்த்ரே.
ஆம்லா. | கோப்பு படம்: விவேக் பெந்த்ரே.

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா தனது இரண் டாவது ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தன. அறிமுக அணியாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான், இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிறப்பாகவே செயல் பட்டது. கடைசி நேர பதற்றம், மோச மான பீல்டிங் காரணமாக அந்த அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. முதல் 10 ஓவர்கள் மந் தமாக ஆடினாலும் அதன் பின்னர் ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக் கும் திறனை கொண்டுள்ளது அஸ்ஹர் ஸ்டானிக்ஸாய் தலைலை யிலான ஆப்கானிஸ்தான் அணி.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் குவித்த போதிலும், ஜோ ரூட்டின் புயல் வேக அதிரடியால் தோல்வியை சந்தித்தது. அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை இன்றைய ஆட்டத்தில் தோற்கடித்து தனது வெற்றி கணக்கை தென் ஆப்பிரிக்கா தொடங்கும் முனைப்பில் உள்ளது. மேலும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் ஸ்டானிக்ஸாய், ஷென்வாரி, மொகமது ஷெஸாத், மொகமது நபி ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இன்றும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முயற்சிப்பார்கள்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் போதிய அனுபவமின்றி காணப் படுகிறது. இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் குயின்டன் டி காக், ஆம்லா, டி வில்லியர்ஸ், டுபிளெஸ்ஸி, டேவிட் மில்லர், டுமினி ஆகியோரிடருந்து மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டி 20 உலகக் கோப்பையில் பிரதான சுற்றுக்கு மூன்று முறை முயற்சி செய்து தற்போது தான் தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை வெற்றி பெற்றால் அது தென் ஆப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாக இருக்கும்.

இரு அணிகளும் இதற்கு முன்னர் கடந்த 2010ல் பார்படாஸில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 140 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் 80 ரன்களில் சுருண்டிருந்தது.

அணிகள் விவரம்:

தென் ஆப்பிரிக்கா: டுபிளெஸ்ஸி, (கேப்டன்), டிவிலியர்ஸ், ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக், டுமினி, பர்ஹான் பெஹர்தின், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்கிஸோ, இம்ரான் தகிர், டேல் ஸ்டெய்ன் , ரபாடா, ரிலீ ரோஸவ், கைல் அபாட், டேவிட் வைஸ்.

ஆப்கானிஸ்தான்: அஸ்ஹர் ஸ்டானிக்ஸாய் (கேப்டன்), முகமது ஷெஸாத், நூர் அலி, உஸ்மான் ஹானி, முகமது நபி, ஹரீம் சாதிக், ஷபிக், ரஷீத் கான், அமீர் ஹம்சா, தவ்லத் ஸத்ரான், ஷாபூர் ஸத்ரான், குல்பாதின் நயிப், சமியுல்லா ஷென்வாரி, நஜிபுல்லா ஸத்ரான், ஹமீத் ஹாசன்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article8377319.ece

 

  • தொடங்கியவர்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை இன்று மோதல்: கிறிஸ் கெய்லை சமாளிக்குமா மேத்யூஸ் குழு

 
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியினர். படம்: ஏஎப்ஃபி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியினர். படம்: ஏஎப்ஃபி.

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1- ல் இடம் பெற்றுள்ள மேற் கிந்தியத் தீவுகள், நடப்பு சாம்பிய னான இலங்கை அணியுடன் இன்று மோதுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம் என்பதால் கடும் போட்டி நிலவும். டேரன் சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பந்தாடியது.

47 பந்தில் சதம் விளாசிய கிறிஸ் கெய்லிடம் இருந்து இன்று மீண்டும் சிறப்பான ஆட்டம் வெளிப் படக்கூடும். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளை யாடி வரும் கெய்ல், மைதானத்தின் தன்மையை அறிந்தவர் என்பதால் அந்த அனுபவத்தைக்கொண்டு மீண்டும் அணிக்கு வெற்றித்தேடி கொடுக்க முயற்சி செய்வார்.

பார்மை இழந்து தவித்த இலங்கை அணி டி 20 உலகக் கோப்பை தொடரில், அறிமுக அணி யான ஆப்கானிஸ்தானை வென்று தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளது. 39 வயதான மூத்த வீரர் தில்ஷான், கேப்டன் மேத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பொறுத்துதான் அணியின் வெற்றி அமையும்.

கடைசி கட்டத்தில் ரன்குவிப்பை சிறப்பான முறையில் கட்டுப் படுத்தும் திறன் கொண்ட வேகப் பந்து வீச்சாளர் மலிங்கா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு இழப்பு தான். அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரே வாண்டர்ஸே, நான்கு சர்வதேச டி 20 போட்டிகளில் தான் விளையாடி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 11 சிக்ஸர்கள் விளாசிய கெய்லுடன், மார்லோன் சாமுவேல்ஸ், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல் ஆகியோரும் அதிரடியில் மிரட்ட தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் சாமுவேல் பத்ரி, சுலைமான் பென் நெருக்கடித்தரக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/article8377314.ece

 

  • தொடங்கியவர்
 

பெரிய இலக்கை மீண்டும் துரத்த முடியும்: ஜோ ரூட் நம்பிக்கை

 
 
England's Joe Root bats against South Africa during their ICC World Twenty20 2016 cricket match at the Wankhede stadium in Mumbai, India,Friday, March 18, 2016. (AP Photo/Rajanish Kakade)
England's Joe Root bats against South Africa during their ICC World Twenty20 2016 cricket match at the Wankhede stadium in Mumbai, India,Friday, March 18, 2016. (AP Photo/Rajanish Kakade)

டி 20 உலகக் கோப்பையில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில் ரன் மழை பொழிந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. ஆம்லா, டி காக், டுமினி ஆகியோர் அரை சதம் அடித்தனர். குயின்டன் டி காக் 52, ஹஸிம் ஆம்லா 58, டுமினி 54 ரன்கள் விளாசினர்.

கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ராய், ஹெல்ஸ் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 2.3 ஓவரில் 48 ரன் விளாசியது. ஹெல்ஸ் 17 ரன்னில் வெளியேற அடுத்த ஓவரில் ராய் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். 4.3 ஓவரில் 71 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் களம் புகுந்த ஜோ ரூட் தான் சந்தித்த 13-வது பந்தில் இருந்துதான் அதிரடியாக ஆடத்தொடங்கினார்.

டுமினி வீசிய 10-வது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ஜோரூட் அதன் பிறகு சூறாவளியாக சுழன்றடித்தார். அவர் 44 பந்தில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரியுடன் 83 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழி தேடிக்கொடுத்தார். ஏறக்குறைய இடுப்பளவுக்கு புல்டாஸாக வீசப்பட்ட பந்தை ஜோ ரூட் சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு மிக அருகே மில்லர் மடக்கிப்பிடித்தார்.

வெற்றிக்கு 10 பந்தில் 11 ரன் தேவை என்ற நிலையில் மொயின் அலி பொறுப்புடன் ஆடி இலக்கை அடைய உதவினார். முடிவில் இங்கிலாந்து 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்து சாதனை வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைய உதிரிகள் மூலம் அதிக ரன்கள் சென்றதும் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் உதிரியாக 26 ரன்களை விட்டுக்கொடுத்தனர். இதில் 20 வைடுகள் (அகலப்பந்து) அடங்கும்.

அதிரடியாக வெற்றி தேடிக்கொடுத்த ஜோ ரூட் கூறியதாவது, இது எங்களது அணியின் முழுமையான திறமையை வெளிப்படுத்திய ஆட்டம் கிடையாது. முற்றிலும் சிறந்த வகையில் நாங்கள் விளையாடவில்லை. எங்களால் மீண்டும் இதுபோன்ற ஒரு இலக்கை துரத்த முடியும். தற்போது கிடைத்துள்ள வெற்றியானது பெரிய அளவிலான நம்பிக்கையை எதிர்வரும் ஆட்டங்களுக்கும் கொடுத்துள்ளது.

பின்கள பேட்டிங்கும் வலுவாக இருப்பதால் சிறந்த தொடக்கம் கிடைக்கும் பட்சத்தில், நிச்சயம் நாங்கள் எங்களது திறனுக்கு அதிகப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். ஆனால் தொடக்கம் சரியாக அமையாவிட்டால் கடினம் தான். ராய், ஹெல்ஸ் சிறப்பாக ஆடியதால்தான் நடு ஓவர்களில் எளிதாக பேட் செய்ய முடிந்தது.

அவர்கள் நெருக்கடிகளை எளிதாக கையாண்டனர். குறுகிய வடிவிலான போட்டிகளில் இது மிகவும் முக்கியமானது. இதுவே தொடரின் எஞ்சிய ஆட்டங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வித மாக உள்ளது.

இவ்வாறு ஜோ ரூட் கூறினார்.

கிறிஸ் கெய்ல் அடித்த சதம் தான் இந்த மைதானத்தில் எதுவும் சாத்தியமாகும் என்பதை தெளிவு படுத்தியதா என்ற கேள்விக்கு ஜோ ரூட் பதில் கூறும்போது,

‘‘ஆமாம். கெய்ல் ஆட்டம் மூலம் தான் இந்த ஆடுகளத்தில் எதுவும் சாத்தியமாகும் என்பது தெரிய வந்தது. வலிமையான பேட்டிங்கும் இருப்பது அதிக நம்பிக்கையை கொடுக்கும்’’ என்றார்.

துணுக்ஸ்

* டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை ஒரு அணி துரத்தி வெற்றி கண்டது இதுவே முதன் முறை. இதற்கு முன்பு 2007ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 208 ரன்களை தென் ஆப்பிரிக்கா துரத்தி பிடித்தது.

* முதல் இரு ஓவர்களில் இங்கிலாந்து 44 ரன்கள் விளாசியது. இதற்கு முன்னர் எந்த அணியும் இரு ஓவர்களில் இந்த ரன்களை எடுத்ததில்லை. இந்த ஓவர்களை வீசியி ரபாடா 21, ஸ்டெயின் 23 ரன் வாரி வழங்கினர். டி 20 போட்டிகளில் தொடக்க பந்து வீச்சில் இவ்வளவு அதிக ரன்கள் அடிக்கப்பட்டதும் இது தான் முதல்முறை.

* தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் 20 வைடுகள் வீசினர். டி 20 போட்டிகளில் அதிக வைடுகள் வீசப்படுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகள் 23 ரன்கள் வழங்கியுள்ளது.

* தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தில் மொத்தம் 459 ரன்கள் குவிக்கப்பட்டது. டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகள் சேர்ந்து ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த ஆட்டமாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2007ல் தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 418 ரன்கள் குவிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8377316.ece

  • தொடங்கியவர்

தெ.ஆபி....209/5....20.

12474027_1200975869921507_83307727166412

  • தொடங்கியவர்
ஆப்கானிஸ்தானை 37 ஓட்டங்களால் வென்றது தென் ஆபிரிக்கா
2016-03-20 20:05:00

உலக இரு­பது20 கிரிக்கெட் தொடரில் இன்று  நடை­பெற்ற  போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் அணியை தென் ஆபி­ரிக்க அணி 37 ஓட்­டங்­களால் வென்­றது.


மும்­பையில் நடை­பெற்ற இப்­போட்­டியில் துடுப்­பெ­டுத்­தா­டிய தென் ஆபி­ரிக்க அணி 20 ஓவர்­களில் 5 விக்கெட் இழப்­புக்கு 209 ஓட்­டங்­களைக் குவித்­தது.


டி வில்­லியர்ஸ் அதி­ர­டி­யாக துடுப்­பெ­டுத்­தாடி 29 பந்­து­களில் 5 சிக்­ஸர்கள், 4 பவுண்டறிகள் உட்­பட 63 ஓட்டங்­களைக் குவித்தார்.  குயின்டன் டி கொக் 31 பந்­து­களில் சிக்­ஸர்கள் உட்­பட 45 ஓட்­டங்­க­ளையும்  அணித்­த­லைவர் பவ் டூ பிளேசிஸ் 27 பந்­து­களில் 41 ஓட்­டங்­க­ளையும் குவித்­தனர்.
 ஜீன் போல் டுமினி 20 பந்­து­களில் ஆட்­ட­மி­ழக்­காமல் 29 ஓட்­டங்­களைப் பெற்றார்.


ஆப்­கா­னிஸ்தான் அணியின் பந்­து­வீச்­சா­ளர்­களில் அமிர் ஹம்ஸா, தவ்லத் ஸத்ரன், ஷபூர், ஸர்தான், மொஹம்மத் நபி ஆகியோர் தலா ஒரு விக்­கெட்டை வீழ்த்­தினர்.

15632chris-moris2.jpg


பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்­கா­னிஸ்தான் அணி  20 ஓவர்­களில் 172 ஓட்­டங்­க­ளுடன் சகல விக்­கெட்­க­ளையும் இழந்­தது.


அவ்­வ­ணியின் சார்பி ல் ஆகக்­கூ­டு­த­லாக மொஹம்மத் ஷஹ்ஸாத் 19 பந்­து­களில் 44 ஓட்­டங்­களைப் பெற்றார்.  குல்­பதீன் நயீப் 18 பந்­து­களில் 26 ஓட்­டங்­களைப் பெற்றார்.


தென் ஆபி­ரிக்க பந்­து­வீச்­சா­ளர்­களில்  கிறிஸ் மொறிஸ் 27 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­களை வீழ்த்­தினார்.  இப்போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் மொறிஸ் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15632#sthash.IzMoRk6g.dpuf
  • தொடங்கியவர்

10400591_567088323454497_799973195336238

டில்ஷானின் ஆட்டமிழப்பு பற்றி மஹேலவின் Twitter கருத்து

 

 
கிரிக்கெட் எமோஷனல்s Foto.
 
 

Chris Gayle - 100 runs in just 47 balls against England 

 

 

  • தொடங்கியவர்

ஜீவன் மேல உள்ள வீடியோ பார்க்க கூடியதாக இருக்கா?

 

 

 

 

 

பங்களாதேஷுக்கெதிராக அவுஸ்திரேலியாவில் மாற்றங்கள்
 
 

article_1458475212-TamilfinLehmann.jpgநியூசிலாந்து அணிக்கெதிரான உலக இருபதுக்கு-20 போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணியிலிருந்து, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளும் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கெதிரான போட்டியில், அவுஸ்திரேலிய இருபதுக்கு-20 அணியின் முன்னாள் தலைவரும் உலக இருபதுக்கு-20 துடுப்பாட்டத் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளவருமான ஆரொன் பின்ச் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டிருந்தார். அப்போட்டியில் கவாஜா, 27 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றதோடு, ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பயிற்றுநர் டெரன் லீமன், 'கவாஜா சிறப்பாக விளையாடினார். அவர் சிறப்பாக விளையாடினார். ரண் அவுட் முறையில் அவர் ஆட்டமிழந்ததையென்பது, துரதிர்ஷ்டவசமானது அன்று. ஓட்டங்கள் தேவையில்லையென அவரால் கூற முடியும். விக்கெட்டுகளுக்கிடையில் ஓடுவதில் அவர் சிறப்படைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

'அவர் அழகாக விளையாடினார். ஆனால், நிலைமையைப் பொறுத்துத் தான் முடிவெடுக்கப்படும். பங்களாதேஷுக்கெதிராக பெங்களூரில் விளையாட வேண்டும். அப்போட்டிக்குச் சிறந்த அணி எதுவென்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அணியிலிருந்து நீக்கப்படுவது குறித்த தகவல், மைதானத்தை வந்தடைந்த பின்னரே பின்ச்சுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்த டெரன் லீமன், அதை அவர் எடுத்துக் கொண்ட விதம் குறித்து, மிக உயர்வாகப் பாராட்டினார்.

- See more at: http://www.tamilmirror.lk/168490/%E0%AE%AA%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B7-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-#sthash.Rhxhd5Hi.dpuf

Edited by நவீனன்

12 minutes ago, நவீனன் said:

ஜீவன் மேல உள்ள வீடியோ பார்க்க கூடியதாக இருக்கா?

எனக்கு யாழ்களத்தில் பார்க்க கூடியதாக இருக்கு

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
1 minute ago, ஜீவன் சிவா said:

பார்க்க கூடியதாக இருக்கு

நீங்கள் உங்கு இருப்பதால் பார்க்க கூடியதாக இருக்கு..

ஆனால் இங்கு பார்க்க முடியாது.. star sports india வின் வீடியோ என்றும் அது இங்கு தடை செய்யபட்டுள்ளது என்று வருகிறது

  • தொடங்கியவர்

மேற்கு இந்தியதீவுகள் வெற்றி

1916431_567122236784439_5662387560972305

Group 1

  Team              
Last updated 20 March 2016 at 17:13
1 West Indies 2 2 0 0 0 0.89 4.0
2 South Africa 2 1 1 0 0 0.82 2.0
3 Sri Lanka 2 1 1 0 0 -0.17 2.0
4 England 2 1 1 0 0 -0.41 2.0
5 Afghanistan 2 0 2 0 0 -1.25 0.0

Group 2

  Team              
Last updated 20 March 2016 at 17:13
1 New Zealand 2 2 0 0 0 1.38 4.0
2 Pakistan 2 1 1 0 0 1.00 2.0
3 India 2 1 1 0 0 -0.90 2.0
4 Australia 1 0 1 0 0 -0.40 0.0
5 Bangladesh 1 0 1 0 0 -2.75 0.0

http://www.bbc.com/sport/cricket/world-twenty20/table

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: இலங்கை அணிக்கு முதல் தோல்வி

 

இந்தியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

160320170821_lanka_westindies_cricket_t2
 மகிழ்ச்சியில் துள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள்

நடப்புச் சாம்பியனான இலங்கை அணி இந்தப் போட்டியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாயின் அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும்.

பெங்களூரு சின்னஸ்வாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் சார்பில் திஸ்ஸர பெரேரா அதிகபட்சமாக 40 ஓட்டங்களை எடுத்தார். அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதர இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களையே எடுத்தனர்.

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தினேஷ் சண்டிமல் மற்றும் திலகரட்ண தில்ஷன் ஜோடியால் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க முடியவில்லை. இருவரும் ஜோடியாக 28 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.

160320170929_lanka_westindies_cricket_t2  மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சில் இலங்கை அணி தடுமாறினர்

பின்னர் ஆடிய லாஹிரு திருமான்ன, கப்புகெதர, நுவான் குலசேகர ரங்கண ஹேரத் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களையே எடுத்தனர்.

சிறிவர்தன, , ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் ஏ டி ரசல் நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் தமது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர். இலங்கை அணி ஆப்கானிஸ்தானையும், மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியையும் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றன.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர் பிளெட்சர் அதிரடியாக ஆடி 84 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாகும்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160320_wct20_lankaloss?ocid=socialflow_facebook

 

  • தொடங்கியவர்

நாளைய போட்டி

அவுஸ்திரேலியா vs பங்களாதேஷ்

15.00 மணிக்கு

  • தொடங்கியவர்

கெயிலை இழுத்துச் சென்ற நடுவர்..! (காணொளி இணைப்பு)

 

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் நேற்று சின்னசாமி அரங்கில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

 

கடந்த 16 ஆம் திகதி மும்பையில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 11 சிக்சர்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பல்லாயிரம் கணக்கான இந்திய ரசிகர்கள் கெயிலுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். நேற்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் இறுதி வரை களமிறங்கவில்லை. 

மேற்கிந்திய தீவுகள் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதால் கெயிலால் களமிறங்க முடியாமல் போனது. இதனால் கெயில் களமிறங்குவார் என எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் போட்டியில் கமிறங்குவதற்காக ஆயத்தமாக இருந்த கிறிஸ் கெயிலை, நடுவர் இயன் கோல்ட் நகைச்சுவையாக இழுத்துச் செல்லவது வீடியோவில் பதிவானது. அந்த காணொளி உங்களுக்காக,

http://www.virakesari.lk/article/4390

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அயர்லாந்து மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி வென்றது
2016-03-20 23:01:58

மகளிர் உலக இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி 14 ஓட்டங்களால் வென்றது.


மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றது.  

 

15635chamari-atapattu-600.jpg

சமரி அத்தபத்து


 

இஷானி லொக்குசூரியகே 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களைக் குவித்தார். சமரி அத்தபத்து 22 பந்துகளில்  34 ஓட்டங்களையும்  திலானி மொனோதரா 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

அயர்லாந்து மகளிர் அணியின் பந்துவீச்சாளர்களில் சியரா மெட்கல்வ் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ஓட்டங்களையே பெற்றது.  சிசிலியா ஜோய்ஸ், கிளேரா டிலானி ஆகியோர் தலா 29 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சாளர்களில்  சுகந்திகா குமாரி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15635#sthash.fD93JpTI.dpuf
  • தொடங்கியவர்

வெற்றிக்கணக்கை தொடங்குமா ஆஸ்திரேலியா? - வங்கதேசத்துடன் இன்று மோதல்

 

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்க தேசத்தை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது. இதில் வங்க தேசத்தை வென்று தங்கள் வெற் றிக்கணக்கை தொடங்கவேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்கள் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்ற ஆஸ்திரேலியா, இன்று வங்கதேசத்தை எதிர்த்து ஆடு கிறது. இத்தொடரின் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழையவேண்டு மென்றால் வங்கதேசத்தை வென்றாகவேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. பந்துவீச்சில் சற்று பலவீனமாக உள்ள ஆஸ்திரேலிய அணி, தங்கள் பேட்டிங்கையே இந்த தொடரில் பெரிதும் நம்பியுள்ளது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்ஸன், ஹவாஜா ஆகியோர் நியூஸிலாந் துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மார்ஷ், ஆகியோரும் சிறப்பாக ஆடினால் வங்கதேச அணியை நிலைகுலைய வைக்கலாம் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்த ஆரோன் பிஞ்சை இன்று ஆடவைப்பது குறித்தும் அந்த அணி ஆலோசித்து வருகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை பாக்னர், நாதன் கோல்டர் நைல் ஆகியோரை அந்த அணி பெரிதும் சார்ந்துள்ளது.

இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் “வங்கதேச அணி தற்போது கிரிக்கெட்டில் மிகவும் முன்னேறிய அணியாக உள்ளது. நாங்கள் மிகச் சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணியை வெல்ல முடியும். இந்த தொடரில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால்தான் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். அதற்கேற்ற முறையில் செயல்படுவோம்” என்றார்.

ஆசிய கோப்பையை வென்ற தால் உற்சாகத்தில் உள்ள வங்க தேச அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையில் தங்கள் கணக்கை தொடங்க தயாராக உள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக ஆடி வருவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவருடன் கைகோர்த்து சவுமியா சர்கார், ஷாகிப் அல் ஹசன், சபீர் ரஹ்மான், மொகமதுல்லா ஆகியோரும் சிறப்பாக ஆடினால் எத்தகைய அணியையும் அவர்களால் நிலைகுலையச் செய்ய முடியும்.

2 வீரர்களுக்கு தடை

அதே நேரத்தில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமதுக்கும், சுழற்பந்து வீச்சாளரான அராபத் சன்னிக்கும் ஐசிசி தடை விதித்திருப்பது அந்த அணிக்கு பலத்த அடியாக உள்ளது. “ஒரே நேரத்தில் 2 முக்கிய வீரர்களை இழப்பது மிகப்பெரிய அடியாக உள்ளது. தஸ்கின் அகமதுக்கு எதிரான தடையை ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வங்கதேச அணி யின் கேப்டன் மோர்டசா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8380462.ece

  • தொடங்கியவர்
திரிமான்ன மீது மஹேல காட்டம்
 
21-03-2016 12:42 PM
Comments - 0       Views - 12

article_1458555298-TamilMahelaTHiriLEAD.இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான உலக இருபதுக்கு-20 போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில், இலங்கையின் இளைய வீரர்கள் மீது, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், அணியின் முன்னாள் உப தலைவரான லஹிரு திரிமான்ன மீது, விசேடமான விமர்சனத்தை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன முன்வைத்தார்.

இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில், காயம் காரணமாகத் துடுப்பெடுத்தாடாது போன போதிலும், அவ்வணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்திருந்தது.

போட்டிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இலங்கையின் லஹிரு திரிமான்ன, டினேஷ் சந்திமால் போன்ற வீரர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

'உண்மையில், எந்தவித சாக்குப்போக்குகளும் இல்லை. ஏனெனில், திரிமான்ன, கிட்டத்தட்ட 4, 5 ஆண்டுகளாக, அனைத்து வகையான போட்டிகளிலும் பங்குபற்றிய ஒருவர். அதன் காரணமாகத்தான், புதிய தேர்வாளர்கள் அவரை, அணிக்குள் கொண்டுவந்தனர். மத்தியவரிசை, சிறிது தடுமாற்றமானதாக இருந்தது. அதனால், லஹிரு திரிமான்னவை மூன்றாமிடத்தில் துடுப்பெடுத்தாட வைப்பதன் மூலம், 10 தொடக்கம் 12 ஓவர்கள், அவரைத் துடுப்பெடுத்தாட வைக்கும் பணியையே வழங்கினர்.

அதன் காரணமாக, அஞ்சலோ மத்தியூஸ், கப்புகெதர, சிரிவர்தன போன்ற வீரர்கள், களமிறங்கிய, அடித்தாட முடியும். ஆனால், அவர் (திரிமான்ன) ஆட்டமிழந்த விதம் குறித்து நான், மிகவும் ஏமாற்றமடைந்தேன்" எனத் தெரிவித்தார். அத்தோடு, அனுபவமிக்க வீரரான கப்புகெதர ஆட்டமிழந்த விதம் குறித்தும், மஹேல விமர்சனங்களை வெளியிட்டார்.

ஆசியக் கிண்ணத்துக்கும் உலக இருபதுக்கு-20 தொடருக்குமாக முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கை குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டிருக்காத நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்குப் புறப்படும் அன்று அறிவிக்கப்பட்ட புதிய குழாமில், திரிமான்ன சேர்க்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற பயிற்சிப் போட்டிகளில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கெதிராக முறையே 41, 45 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கையளித்த திரிமான்ன, உலக இருபதுக்கு-20 தொடரின் போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கெதிராக 6 ஓட்டங்களையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 5 ஓட்டங்களையும் மாத்திரமே பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான இயன் சப்பல், தற்போதுள்ள இளைய வீரர்களில் அனேகர், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோரோடு இணைந்து விளையாடியிருந்த நிலையில், அவர்களிடமிருந்து பாடங்களைக் கற்பதற்குத் தவறவிட்டதாகச் சுட்டிக்காட்டியதோடு, அவர்களை விட்டுவிட்டு, புதிய வீரர்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி கவனஞ்செலுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/168551#sthash.A0jVQgs4.dpuf
  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவுக்கு மரண பயத்தை காட்டிய ஆப்கான் வீரர் சஷாத்! (வீடியோ)

 
 

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சஷாத் தென்ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
 

Afghanistan+Mohammad+Shahzad.jpg

நேற்றைய லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா டிவில்லியர்சின் (64) அதிரடியால் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக முகமது சஷாத் களமிறங்கினார்.

இவர் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் வீசிய பந்தை பவுண்டரி, சிக்சர் என அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இவரது அதிரடியால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் விழுபிதுங்கினர்.

இவரை கட்டுப்படுத்த முடியாமல் தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் திணறிய நிலையில், ஒரு வழியாய் மொரிஸ் பந்தில் போல்ட் ஆனார். இவர் 19 பந்தில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரி என 44 ரன்கள் விளாசி எடுத்து நல்ல தொடக்க கொடுத்தார்.

28 வயதான இளம் வீரர் சஷாத், 2009ம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு ஐசிசி நடத்திய போட்டியின் போது கனடாவுக்கு எதிராக 214 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் இரட்டை சதம் விளாசியது அதுவே முதன் முறையாகும். நேற்றையப் போட்டியில் சஷாத் அதிரடி காட்டினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள்களில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 37 ரன்னில் தோல்வி அடைந்தது.

http://www.vikatan.com/news/sports/60972-icc-wt20-afghanistan-vs-south-africa.art

  • தொடங்கியவர்

சந்திமாலின் பிடியெடுப்பு, டில்சானின் எல்.பி.டபிள்யு : மஹேல, இயன் செப்பல் அதிருப்தி : காணொளி இணைப்பு

 

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டில்சானின் ஆட்டமிழப்பு மற்றும் சந்திமாலின் பிடியெடுப்பு தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் இயன் செப்பல் ஆகியோர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.Evidence-confirms-Chandimal-catch-was-cl

நேற்றைய போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் ரசல் நான்கு ஓட்டங்களுடனும் பிளெட்சர் 71 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

இதன்போது 16 ஓவரை துஷ்மிந்த சமிர வீசினார். ஓவரின் முதல் பந்தை பிளெட்சர் எதிர்கொண்ட பந்து மட்டையில் பட்டு சந்திமாலின் கைகளுக்கு சென்றது. அந்த பிடியெடுப்பில் சந்தேகம் நிலவ மூன்றாவது நடுவருக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

 

 

 

பந்து நேரடியாக சந்திமாலின் கைகளுக்குள்ளே சென்றது. எனினும் மூன்றாவது நடுவராக இருந்த சைமன் பிரை ஆட்டமிழப்பை  வழங்கவில்லை.

இதனை இயன் செப்பல் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அதாவது களத்தில் உள்ள நடுவர்களால் இந்த பிடியெடுப்பு தொடர்பில் தீரமானம் எடுப்பது கடினம். எனினும் மூன்றாவது நடுவருக்கு இலகுவாக தீர்மானத்தை எடுக்கலாம்;. மேலும் டி.வி. தொழினுட்பம் தொடர்பில் அறிவும் அவசியம் என்பதோடு பந்து பவுண்ஸ் ஆகுவதும் தொடர்பிலும் பொதுவான அறிவு வேண்டும். இந்த தீர்மானம் நடுவரின் அசமந்த போக்கினாலே வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோன்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்சான் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பிரைத்வைட் வீசிய 3.1 ஓவரில் டில்சான் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பு மூன்றாவது நடுவர் ஊடாக பார்க்கப்பட்ட போது ஆட்டமிழப்பு இல்லை. எனினும் கள நடுவரால் முன்னதாகவே ஆட்டமிழப்பு வழங்கப்பட்டதால் டில்சான் அரங்குக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆட்டமிழப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன,

டில்சானுக்கு எதிரான ஆட்டமிழப்பை ஏற்றுகொள்ள முடியாது. இந்த ஆட்டமிழப்பையடுத்து இலங்கை அணி தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை இழந்தது. இதனாலேயே இலங்கை அணி தோல்வியை தழுவியது எனவும் கூறலாம். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் மீள் பரிசோதனை இருக்கும் போது ஏன் இருபது-20 போட்டிகளில் இந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாது. இருபது-20 தொடர் என்பது முக்கியமான ஒன்றாகும். கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் டில்சான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால். மேலும் நேற்றை போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை பெற்று கொடுத்தார். இந்த ஆட்டமிழப்பையடுத்து அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே இருபது-20 போட்டி கட்டாயம் மீள்பரிசோதனை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். மேலும் தான் இந்த தீர்மானத்தால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இருபது-20 போட்டிகளில் கட்டாயம் மீள்பரிசோனை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இயன் செப்பலும் வலியுறுத்தினார்.

http://www.virakesari.lk/article/4403

  • தொடங்கியவர்

1899_567646496732013_3278966693961431891

12063726_567646506732012_726909260158628

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலிய மகளிர் அணியை நியூஸிலாந்து மகளிர் அணி வென்றது
2016-03-21 19:09:22

நியூஸிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் குழு ஏயிற்கான போட்டியில் 6 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

 

15651_Ellyse-Perry.jpg

 

இந்த மூன்றாவது நேரடியான வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை நியூஸிலாந்து அதிகரித்துக்கொண்டுள்ளது.

 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா முதல் நான்கு விக்கெட்ளை வெறும் 4 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டது.

 

15651_nz.jpg

ஆனால் மத்திய வரிசை வீராங்கனைகளின் சிறப்பான துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

 

எல்சி பெரி (42), ஜெஸ் ஜோனசென் (23), பெத் மூனி (15 ஆ.இ.), அலெக்ஸ் பிளெக்வெல் (10) ஆகிய நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

 

நியூஸிலாந்து மகளிர் பந்துவீச்சில் லெய் கஸ்பெரெக் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் எரின் பேர்மிங்ஹாம் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

 

அணித் தலைவி சுசி பேட்ஸ் (23), விக்கெட் காப்பாளர் ரச்செல் ப்ரீஸ்ட் (34) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

 

தொடர்ந்து சொஃபி டிவைன் (17), சாரா மெக்லஷான் (11), அமி சட்டர்த்வெய்ட் (16 ஆ.இ.) ஆகியோர் ஒரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

 

ஆட்டநாயகியாக நியூஸிலாந்தின் லெய் கெஸ்பரிக் தெரிவானர். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15651#sthash.7XEhE9Sm.dpuf
  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா வெற்றி...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.