Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சிங்களவர், முஸ்லிம்களையும் மீளக்குடியமர்த்த ஆளுனர் முதல்வர் இணக்கம்! 
[Sunday 2016-01-31 08:00]

போர் காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்காரவும் இணங்கியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு விக்னேஸ்வரன், ஆளுனரிடம் இணங்கியுள்ளார்.

போர் காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்காரவும் இணங்கியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு விக்னேஸ்வரன், ஆளுனரிடம் இணங்கியுள்ளார்.

போர் காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்காரவும் இணங்கியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு விக்னேஸ்வரன், ஆளுனரிடம் இணங்கியுள்ளார்.

   ஆளுனருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இந்த விவகாரம் தொடர்பில் சில மாதங்களாக பேச்சு நடத்தப்பட்டுள்ளதுடன், பேச்சுகள் வெற்றிகரமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற போது வெளியேற்றப்பட்டவர்களை எவ்வாறு மீள்குடியேற்றுவது என்பது குறித்த திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் பெருமளவில் தமிழர்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேற நேரிட்டதுடன், தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கள, முஸ்லிம்களும் போர் காரணமாக வடக்கிலிருந்து வெளியேற நேரிட்டது. இந்த மீள்குடியேற்ற திட்டத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியதன் பின்னர், வடக்கின் ஐந்து நிர்வாக மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களின் ஊடாக மீள்குடியேற்ற திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் சொந்த இடங்களை இழந்து தெற்கில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள், முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு சமாந்திரமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும் மீள்குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=150381&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் மற்றும் அடாத்தான அரச பணிக்கான சிங்கள நியமனங்கள் என்று வாழ்ந்த சிங்களவர்களை எப்படி நிரந்தவதிவிடவாளர்கள் என்று கூறமுடியும். 
எடுத்துக்காட்டிற்கு, இரணைமடுக்குளத்திலே மீன்பிடித்து வாழ்வாதாரத்தை ஓட்டிய தமிழர்களைக் கலைத்துவிட்டு சிங்களவர்களை தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்து விட அவர்கள் முதலில் வாடியடித்து மீன்பிடித்து பின்னர் வீடுகட்டிக் குடியிருக்க பின்னர் அவர்களை நிரந்தரக் குடியிருப்பாளரென்று பதிவுசெய்ய …… இப்படித்தான் பல சிங்களவரது குடியேற்றம் நடைபெற்றது. இது ஒருவகை நில ஆக்கிரமிப்பு மற்றும் தொழிலாக்கிரமிப்பு உத்தியாகும். சிங்களம் தமிழ்பகுதியிலே தொழிற்சாலை அமைக்கும்போது அங்கு எத்தனை சிங்களவருக்கு வேலைகொடுக்கலாம் என்ற சிந்தனையோடுதான் நடக்கிறது. தமிழர்பகுதியிலே ஏன் முழுமையாகத் தமிழரைக்கொண்ட காவல்துறையை பணிக்கமர்த்தமுடியவில்லை. இதுகூட ஒருவகை ஆக்கிரமிப்பே. தமிழர்பகுதிகளின் சமநிலைமாற்றத்தினூடாக சிங்கள மாகாணசபைப் பிரதிநித்தவத்தை அடையும் இலக்கிலே சிங்களம் செயற்படுகிறது. கிழக்கிலே ஏற்படுத்திய மாற்றத்தைப்போன்று வடக்கிலும் அடைவதே நோக்கமாகும். எதிர்காலத்தில் சிங்கள அடக்குமுறை ஆக்கிரமிப்புக்கெதிராக எந்த ஒரு எழுச்சியும் ஏற்படாதவகையிலே சிங்களம் திட்டமிடுகிறது. சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை வாக்கெடுப்பிற்கு விடவேண்டிய சூழலொன்று வரும்போது அதனை நீர்த்துப்போகவைக்கும் வகையிலே தனது அடுத்தலைமுறைக்கு வழியமைக்கிறது சிங்கள ஆட்சியதிகாரவர்க்கம் என்பதே மெய்நிலையாகும். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளோ 1912முதல் இன்றுவரை ஏமாந்துகொண்டும் அப்பாவிமக்களை ஏமாற்றிக்கொண்டும் நகர்கிறார்கள்.
 
முதல்வரவர்கள் தொலைநோக்கோடும் தமிழினத்தின் தனித்துவத்தை சிதைத்துவரும் சிங்களத்தின் உத்திகள் குறித்தும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளியேறிய  சிங்களவர்களும் முஸ்லிம்களும் சொந்தஇடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும் மாகாண ஆளுனர் ஜீ.எஸ். பலிஹக்காரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
சில மாதங்களாக முதலமைச்சருக்கும் ஆளுனருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வடக்கில் இடம்பெயர்ந்ததுடன், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிங்கள முஸ்லிம்களும் இடம்பெயர்ந்திருந்தனர்.
மீள்குடியேற்றம் குறித்த யோசனையை ஜனாதிபதி அங்கீகரித்ததன் பின்னர் வடக்கின் ஐந்து மாவட்டச்செயலாளர்களின் ஊடாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.