Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவாய் கலைந்து போன காதல்

Featured Replies

எல்லோர் பருவத்திலும் ...
வந்த காதல் இவனுக்கும் ....
வந்து தொலைந்தது ....
யார் இவன் .....?

காதலுக்காய் காதல் ...
செய்தான் காதோடு ....
வாழ்ந்தான் இப்போ ....
காதலி இல்லாமல் ....
காதலோடு வாழ்கிறான் ....!!!

காதல் இளவரசன் ....
என்பதா ..? 
காதல் தோல்வி ....
தேவதாஸ் என்பதா ...?
இரண்டுக்கும் ....
இடைபட்டவன் தான் ...
இந்த கவிதை தொடரின் ...
நாயகன் - கதாநாயகன் ...
" பூவழகன் "

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....!!!

^
கனவாய் கலைந்து போன காதல் 
கவிப்புயல் இனியவன் 
வசனக்கவிதை 

  • தொடங்கியவர்

பூவழகன் ....
ஒரு கிராமிய இளைஞன் ....
நவ நாகரீகம்  தெரியாதவன் ....
அதிகம் பேசாதவன் .....
பெரும் படிப்பு என்றுமில்லை ....
படிப்பு இல்லையென்றுமில்லை ....
ஆனால் வறுமை என்றால் ....
நன்கு தெரிந்தவன் ....!!!

கிராம புறத்தில் சாதாரண ....
படிப்பை முடித்து நகர்புறம் .....
உயர் கல்விக்காய் போகிறான் .....
நகர புறத்தில் இருபால் பாடசாலை .....
பொதுவாகவே பெண்கள் என்றால் ....
பூவழகனுக்கு ஒருவித பயம் .....
பாடசாலையோ கலவன் .....
புதிய முகங்கள் நகர்புற பெண்கள் ....
பூவழகனை காட்டிலும் உசார் ....!!!

முதல் நாள் பாடசாலை வாழ்க்கை .....
கிராம புறத்திலிருந்து நகர்புறம் .....
இடம்மாறிய பதட்டம் ,பயம் ....
பூவழகனை சுற்றி நண்பர்கள் ....
குசலம் விசாரிப்பதில் மும்மரம் ....
பயத்தோடும் அசட்டை துணிவோடும் ...
அன்றைய நாள் முடிவுக்கு வந்தது ....!!!

^^^

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 
வசனக்கவிதை....!!!

^^^

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

பூவழகன் ....
பரீட்சை முடிவுகள் ...
அந்தளவுக்கு சிறப்பில்லை ....
இதனால் இவனை எல்லோரும் ....
விவேகம் அற்றவன் என்றே....
கருதினர் - அது கூட உண்மை ....!!!

பூவழகனின்....
ஒரு சிறப்பு இருப்பதை ...
அழகாக பாவிப்பது ....
இல்லாதவற்றை நினைத்து ....
ஏங்குவதில்லை ......
தினமும் அழகாக உடுத்து ....
வருவான் ஆனால் அவை ....
புதியதல்ல .....!!!

இந்த காலத்தில் தான் ....
பூவழகன் படிக்க சென்ற ....
பாடசாலைக்கு வெளிமாவட்ட ....
பெண் ஒருத்தி புதிய மாணவியாய் ....
வரப்போகிறாள் அந்த செய்தியுடன்.....
இந்த நாள் பாடசாலை நாளும் ....
முடிவுக்கு வந்தது ....!!!

 ^^^

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 
வசனக்கவிதை....!!!

^^^

கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

புதிய 
சினேகிதி நாளை ....
வரப்போகிறாள் ....
எப்படி இருப்பாளோ ...?
எந்தளவு படித்தாளோ...?
வெளியூர் என்பதால் ....
அழகாகவும் இருப்பாள்....
சுமாரான என்னோடு ...
பேசுவாளா .....?

இத்தனை 
மனவோட்டத்துடன் ....
பூவழகனின் இரவு ....
விடியாமல் இருண்டு ...
துடித்துகொண்டிருந்தது ...!!!

பொழுது விடிந்தது ....
தன்னுடன் இருக்கும் ஆடையை ...
இயன்றவரை அழகு படுத்தி ....
பழைய துவிசக்கர வண்டியில் ....
பாடசாலை நோக்கி சென்றான்  ...
பூவழகன்........!!!


^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்போடு சம்பந்தப்பட்ட எம் ஆக்கம் ஒன்று.... மன்னிக்கவும் கவிப்புயல் இடையில் குறுக்கீடு செய்து பதிவிடுவதற்கு. tw_blush:

180395_499025182943_126776_n.jpg?oh=4828

  • தொடங்கியவர்
9 minutes ago, nedukkalapoovan said:

தலைப்போடு சம்பந்தப்பட்ட எம் ஆக்கம் ஒன்று.... மன்னிக்கவும் கவிப்புயல் இடையில் குறுக்கீடு செய்து பதிவிடுவதற்கு. tw_blush:

180395_499025182943_126776_n.jpg?oh=4828

அருமை அருமை 
வாழ்த்துகள் 

  • தொடங்கியவர்

காலை நேரம் ....
பட்டாம் பூச்சிகளும் ...
வண்டுகளும் அலையாய் ...
வருவதுபோல் பெண் ....
பிள்ளைகளும் ஆண் .....
வந்தவண்ணமே ....
பாடசாலையில் ....!!!

கனவோடு காத்திருக்கும் ...
இரவு முழுதும் தூக்கத்தை ...
கெடுத்த அந்த பட்டாம் பூச்சி ....
சில மணித்தியாலத்தில் ....
வந்து விடுவாள் .....!!!

காதல் 
இது தான் .....
முகம் தெரியாது ....
பெயர் தெரியாது ....
குணம் தெரியாது ....
ஆனால் அவளை ....
பார்க்கவேண்டும் ...
என்று மனம் துடிக்கும் ....!
காத்திருந்த அந்த நேரம் ...
வந்தது காரில் இருந்து ....
இறங்கினால் பூவரசனின் ....
கனவு தேவதை ....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பூவழகன் .....
திகைத்து நின்றான் ....
தானோ அன்றாடம் சாப்பாடுக்கு ....
திண்டாடும் வறுமை இளவரசன் ....
அவளோ காரில் வரும் வசதி ...
கொண்ட பண  இளவரசி .....
இது நமக்கு சரிவராது .....
ஒதுங்கினான் - பூவழகன்....!!!

வகுப்பறைக்கு வந்தாள் இளவரசி .....
எல்லோரும் அவளை சூழ்ந்தனர் ......
தங்கள் பெயரை சொல்லி அறிமுகம் ....
எல்லோருக்கும் கை கொடுத்து ....
பழகும் திறந்த மனம் - பரந்த மனசு ....
பூவழகனோ ஆவலுடன் இருந்தும் ....
பேசவில்லை ....!!!

பூவழகன் இதயமோ அவள் ....
மீது சுற்றி திரிய - கூச்சமும் ....
பொறாமையும் மனம் முழுதும் ...
ஏக்கத்துடன் காத்திருக்க இருக்க ....
நாளும் முடிவுக்கு நெருங்குகிறது ...!!!

எப்போது என்னோடு பேசுவாள் ...?
என்ன பேசப்போகிறாள் ....?
பூவழகனின் தவறான ஏக்கம் ....
புதிய மாணவியுடன் ...
பூவழகன் தான் பேசவேண்டும் ....
தெரிந்தும் அவள் பேசட்டும் முதலில் ...
என்று ஆணழகன் என்ற நினைப்பில் ...
காத்திருந்தான் பூவழகன் ......!!!

^^^

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 06
வசனக்கவிதை....!!!

^^^

கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பூவழகி 
சொன்ன இரு வார்த்தைகள் .....
மௌனம் எனக்கு பிடிசிருக்கு....
பெயரும் பிடித்திருக்கு .....
இதைவிட என்ன வேணும் ...?
அப்போ அவளுக்கு என் மீது ....
காதல் ஏற்படுகிறதா ...?
பூவழகனின் மனதில் ஆயிரம் ...
கேள்விகள் .....?????????

என் 
காதாலை  பூவழகி ஏற்பாளா ...?
என்னை விட அழகி, பணக்காரி ....
படிப்பும் அறிவும் கூட அதிகம் ....
ஒன்றை மட்டும் பூவழகி புரிந்து ...
கொள்வாள் ஒருநாள் அவளைவிட ...
என் காதல் பலமடங்கு உயர்வு ....
தனக்குள்ளே பேசிகொண்டான்....
பூவழகன் .....!!!

வகுப்பறையில் ....
மாணவர் தொகை அதிகரித்தது ....
வகுப்பறை இரண்டாகியது ....
பூவழகனும் பூவழகியும் வேறு....
இரு வகுப்பாக மாறியது .....
பூவழகனின் கனவுக் காதலை 
வகுப்பு சுவர் பிரித்து விட்டது ....!!!

இப்போதெலாம் ....
பூவழகன் பூவழகியை.....
பாடசாலை ஆரம்ப நேரம் ....
பாடசாலை இடைவேளை நேரம் ....
பாடசாலை முடியும் நேரம் ....
இடை இடையே இரு வகுப்பை ...
சேர்த்து எடுக்கும் போது மட்டுமே ....
கண்ணால் பார்ப்பான் மனத்தால் ...
காதலிப்பான் ......!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 08
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பூவழகன் வகுப்பறையில் ....
அவன்தான் வகுப்பு தலைவன் .....
பூவழகி வகுப்பறையில் ....
அவள் தான் வகுப்பு தலைவி ....
வகுப்பறை போட்டிகள் ....
வழமைபோல் இவர்களுக்கும் ...
அடிக்கடி சண்டை ஏற்படும் ....!!!

காலாண்டு பரீட்சை வந்தது .....
ஒவ்வொருவரும் தமது ஹீரோ ...
தன்மையை காட்டவேண்டும் ....
பரீட்சை புள்ளியே இதன் கருவி ....
பதட்டத்தோடு மண்டபத்தில் ....
பூவழகன் இருந்தான்......
ஏதோ உதவி கேட்பதுபோல் ....
அருகில் வந்தாள் பூவழகி .....!!!

நிச்சயம் பூவழகா நீதான் ....
முதல் மாணவனாய் வருவாய் ....
அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ...
யாரும் பார்க்காத போது மெல்ல ...
கையில் கிள்ளிவிட்டு போனாள் ....!
அந்த உற்சாகம்சொன்னதுபோல் ....
பூவழகன் முதல் மாணவனானான் ....
பூவழகி அவள் வகுப்பில் முதல் நிலை ....!!!

தவணை விடுமுறை நாள் வந்தது .....
அன்று பூவழகன் எதிர் பாராத ஒரு ....
நிகழ்வு நடந்தது ......
பூவழகன் சகவகுப்பு நெருங்கிய ....
நண்பன் " வினோத் " பூவழகா ....
எனக்கு ஒரு உதவி செய்யணும் ....
உன்னால் மட்டும்தான் இது ....
முடியும் என்று கூறிய படி ....
மௌனமானான் பூவழகனின்....
பதிலுக்காய் .......??????????

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல்  09
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பூவழகன் .....
என்னடா வினோத் ஒருநாளும் ....
எந்த உதவியும் கேட்காத -நீ 
என்னிடம் உதவிஎன்கிறாய்....
எதை கேட்டாலும் நான் செய்வேன் ....
தயங்காமல் கேள் என்றான் 
பூவழகன் ....!!!

மச்சி அதடா மச்சி அது .....
என்று தயங்கியபடி சொன்னான் ...
பூவரசன் அதிர்ந்து போனான் ....!!!

எனக்கு 
பூவழகியை பிடிசிருக்கடா ...
அவளிட்ட நீதான் இதை எடுத்து ....
சொல்லி அவளை சம்மதிக்க ....
வைக்கணும் அவள் உன்னோடு ....
அப்பப்போ பேசுறாள் - நீ சொன்னால் ...
அவளும் ஏற்றுக்கொள்வாள் ....
என்றான் " வினோத் ".....!!!

பூவழகனால் 
ஒன்றும் பேச முடியல்ல .....
பூவழகனுக்கு பூவழகியில்காதல்.....
பூவழகிக்கு இருக்கிறதா ...?
அவள் யாரையும் காதலிக்கிறாளா ..?
எதுவுமே தெரியாத போது .....
வினோத்துக்கு எனக்கும் அவள் ....
மீது காதல் என்று எப்படி சொல்வது ...?

யோசிக்காதையடா வினோத் ....
நிச்சயம் நான் இதைபற்றி ....
சந்தர்ப்பம் வரும் போது ...
கதைக்கிறேன் ஜோசிக்காதே.....
ஆறுதல் சொல்லி அனுப்பினான் ...
வினோத்தை .......!!!

தவணை விடுமுறை நாள் ....
ஒருமாத கால விடுமுறை ....
இப்போதெலாம்  உள்ளதுபோல் ...
கைபேசி எதுவும் இல்லாத காலம் ....
மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் ...
போதுதான் எல்லோரும் பேச முடியும் .....
இன்னும் ஒருசில மணி நேரம் ...
பாடசாலை முடியபோகிறது ....

பூவழகி பூவழகனை நோக்கி ....
வந்தாள் " பூவா" உன்னோடு ...
மிக முக்கிய விடயம் பேசணும் ....
இப்போ நேரம் இல்லை -பாடசாலை ...
தவணை ஆரம்பிக்கும் போது ...
சொல்கிறேன் என்று மீண்டும் ....
பூவழகனுக்கு ஒரு குழப்பத்தை ....
ஏற்படுத்தி விட்டு சென்றாள்.....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 10
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பாடசாலை ...
தவணை ஆரம்பிக்கும் போது ...
சொல்கிறேன் என்று மீண்டும் ....
பூவழகனுக்கு ஒரு குழப்பத்தை ....
ஏற்படுத்தி விட்டு சென்றாள்.....!!!
(கடந்த கவிதையின் இறுதி )
*
*
*
பாடசாலையின் விடுமுறை ,,,,
ஜோடிகளுக்கு தண்டனை காலம் ....
கைபேசி இல்லை ...
முகநூல் இல்லை எதுவுமே இல்லை ....!!!
மீண்டும் பாடசாலை ஆரம்பித்தால் ...
மட்டுமே பேச முடியும் ,பார்க்க முடியும் ....
ஒருநாள் போவது ஒரு ஜென்மம் ....
போவதுபோல் நரக வேதனையாய் ....
கழிந்துபோகும் ......!!!

ஒரு மாதிரி காலம் கடந்தது ....
பாடசாலை ஆரம்பமாகியது .....
விடிந்தால் பாடசாலை ஆரம்பம் ....
பூவழகன் முகத்தில் பூவின் அழகு ....
இரவு முழுவதும் ஏக்கத்துடன் நிறைவு ....
கதிரவன் உதித்தான் பூவழகன் 
மலர்ந்தான் ...!!!

பாடசாலை ஆரம்பமாகியது .....
எல்லோரும் வந்துவிட்டார்கள் ....
பூவழகியை காணவில்லை ....
பூவழகன் வாடிப்போனான் ,,,,,
பூவா என் ஆளை காணேல்ல ...
என்ற படி வந்தான் வினோத் ....
கடுப்பான பூவழகன் எனக்கு ...
என்ன தெரியும் என்று சின்ன ....
கோபத்தோடு சொன்னான் .....
மச்சி அவள் வந்த்தவுடன் -நீ 
உதவவும் என்று மீண்டும் ....
நினைவூட்டினான் "வினோத்" 

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 11
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பாடசாலை வந்தாள் பூவழகி .....
பூவரசனுக்கு தர்ம சங்கடம் .....
வினோத்தின் நெருக்குதல் ....
மறுபக்கம் பூவழகன் காதல் .....
இன்று முடிவு எடுப்போம் .....
மனதுக்குள் முடிவடுத்தான் ....!!!

பூவழகா உன்னோடு ....
ஒன்று பேசணும் என்றபடி ....
வந்தாள் பூவழகி ......
அந்தநேரம் வினோத்தும் ....
வந்தான் - பூவழகி - பூவா ....
உன்னால் தான் முடியும் ....
எனக்கு ஒரு கிக்கல் அதை ....
நீதான் தீர்க்கணும் என்று ....
பிரச்னையை சொன்னாள் ....!!!

என் 
வகுப்பில் ஆகாஸ் .....
புத்தகங்கள் எல்லாவற்ரையும் .....
எனக்கு தெரியாமல் எடுத்து ....
என் பெயரையும் தன் பெயரையும் ....
எழுதி வைசுறிகிறான்....
அம்மா பார்த்தா... பாடசாலைக்கே .....
அனுப்பமாட்டாங்க ...
பாடசாலை முடிந்தவுடன் 
என் பின்னாடியே வீடுவரை ....
வருகிறான் ......!!!

எனக்கு 
காதல் பிடிக்காது பூவா .....
எனக்கு அப்பா இல்லை ....
அம்மா சாதாரண ஆசிரியை ....
மாமா உதவியுடன் வாழ்கிறோம் ....
மாமா மகனுக்கு என்னை ....
சின்ன வயதிலிருந்து பேசி ....
வைச்சிருகிறாங்க .....
இப்படி பல பிரச்சனையில் ....
நான் படிக்கும்போது ஆகாஸ் ....
ஒருபுறம் பிரச்சனை தாரான் ....!!!!

பூவழகியின் வாழ்க்கை....
வினோத்துக்கும் பூவனுக்கும் ....
ஒரு முடிவை எடுத்து சொல்லிடு ....
பூவழகி காதலிக்க மாட்டாள் .....
ஓகேடா மச்சி நான் போகிறேன்....
என்று சொல்லிக்கொண்டு ...
விடை பெற்றான் வினோத் .....!!!


^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 12
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பூவழகியின் வாழ்கையும் ....
அவளின் காதல் பதிலும் ....
பூவழகனை மனகுழப்பதில்....
தள்ளிவிட்டது .......!!!!

படிப்பையே நிறுத்தி விடுவமோ ....
அடிக்கடி குழப்பம் அடைந்தான் ......
பாடசாலை வருவான் யாருடனும் ....
பேசமாட்டான் தானும் தன் பாடும் ....
என்று பாடசாலை வந்து போனான் .....!!!

பூவழகன் வகுப்பில் பூமகள் .....
எப்போதுமே பூவழகன் மீது ....
உண்மை பாசமும் அன்பும் ...
கொண்டவள் கொண்டுவரும் ....
உணவை பூவழகனுக்கும்....
கொடுத்து சாப்பிடும்  உள்ளம் ...!!!

பூமகள் வந்தாள் .....
பூவழகா வெட்கத்தை விட்டு ....
கேட்கிறேன் எந்த பெண்ணும் ...
உடனே கேட்கவும் மாட்டாள் ....
பூவழகா உன்னை எனக்கு ....
ரெம்ப பிடிக்கும் ஆனால் ....
உனக்கும் என்னை பிடிக்கணும் ....
நீ நல்ல பதிலை சொல்வாய் ...
நம்புகிறேன் உன் பதிலை ...
ஆழ்ந்து ஜோசித்து சொல் ......
ஏக்கப்பார்வையுடன் சென்றாள்....!!!

பூவழகன் மீண்டும் ஒரு ....
சங்கடத்தில் அகப்பட்டான் ....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 13
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு 
பூமரத்தில் ஆயிரம் பூக்கள் .....
பூக்கலாம் ஆனால் மரம் ....
ஒன்றுதான் அதற்கு எந்த பூ ...
அழகு அழகில்லை என்றெல்லாம் ....
வேறுபடுத்த தெரியாது ....
பூவழகன் இப்போ இதே ....
நிலையில் தான் இருக்கிறான் ....!!!

" பூவழகி"  " பூமகள்" இரட்டை பூக்கள் ....
இரண்டையுமே தூக்கி எறிய முற்பட்டான் ...
ஆனால் முதல் பூத்த பூவுக்கு ....
மரத்துக்கு ஒரு இச்சை இருக்கத்தான் ....
செய்யும் அந்த மரத்தை முதல் முதல் ...
அழகு படுத்துவது முதல் பூக்கும் பூதான் ....!!!

முடிவெடுத்தான் 
பூமகளை அழைத்தான் .....
பூமகள் நானும் சுற்றி வளைத்து பேசல்ல ....
உன்னில் எந்த குறைபாடும் இல்லை ....
உன்னை விரும்பும் பாக்கியத்தை ....
நான் பெறவில்லை அதிஸ்ரசாலியில்லை ....
என் மனதில் இன்னொருத்தியின் இதயம் ...
பதிந்து விட்டது அதை அழிக்க முடியாது ...
தயக்கத்தோடு சொன்னான் பூவழகன் ....!!!

அதிர்ச்சியடைந்த பூமகள் ....
கையால் முகத்தை மறைத்தபடி அழுதாள் ....
அவளுக்கு ஆறுதல் சொல்லும் பக்குவம் ....
பூவசகனுக்கு இல்லை அவளை கட்டி பிடித்து ...
முதுகில் தட்டி ஆறுதல் சொல்லும் பக்குவ ...
வயது பூவனுக்கு இல்லை அவளோடு ....
இவனும் மௌனவித்தான் .....!!!

சரி விடு பூவா 
நான் கொடுத்து வைக்கல்ல .....
அதுசரி உன் அந்த அதிஸ்ரசாலி யார் ...?
பூவழகன் சொன்னான் அய்யோ அதை ....
இப்போ சொல்லமாடேன் காரணம் ....
அவள் என்னை விரும்புகிறாளா .....?
தெரியல்ல என்று தயங்கினான் ....
எனக்கு சொல்லடா நான் உதவுகிறேன் ...
சிரித்த முகத்தோடு கனத்த இதயத்தோடு ...
சென்றால் பூமகள் .....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 14
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.