Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரக்கு கப்பல் ஒன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கரைஒதுங்கியுள்ளது

Featured Replies

விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான FARHA III என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திருப்பக் காரணம் என்று சிறிலங்கா கடற்படையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்தக் கப்பலையும் மாலுமிகளையும் விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளனர் என்றும் கப்பலையும் மாலுமிகளையும் காப்பாற்றுவதில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

www.puthinam.com

ஆயுத கப்பலாக இருக்குமோ? :unsure:

புதினம் மீண்டும் முருங்கையில்

காப்பற்றப்பட்டது கப்பல் சிப்பந்திகள். கப்பல் அல்ல.

2 ஆம் இணைப்பு) விடுதலைப் புலிகளினால் 25 மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர்

[சனிக்கிழமை, 23 டிசெம்பர் 2006, 14:23 ஈழம்] [பூ.சிவமலர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் பழுதடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலின் மாலுமிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பிலிருந்து கப்பல் ஒன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை காலை தத்தளித்துக்கொண்டிருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் அவதானிக்கப்பட்டது.

அதேவேளை சிறிலங்கா கடற்படையின் கலங்களும் அப்பகுதியில் நடமாடியுள்ளன.

அந்தப் பகுதிக்குச் சென்ற கடற்புலிகள், அந்தக் கப்பல் சரக்குக்கப்பல் என்பதையும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் அது இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்ததையும் உறுதிப்படுத்தினர்.

கப்பலில் சிக்கியிருந்த 25 மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றிக் கரைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

எனினும் கப்பலை கரைக்கு கொண்டு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால் கடல் நீரோட்டத்தில் அது கரை நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காப்பாற்றப்பட்ட மாலுமிகள் விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜோர்தானிய சரக்குக்கப்பலான "ஃபார்கா - 3" இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்துள்ளதாக அறியப்படுகின்றது.

தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகள் காப்பாற்றி மனிதாபிமானப் பணியைப் புரிந்திருக்கும் நிலையில், சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச பொய்ப் பரப்புரைக்கான ஆயுதமாக இதனைப் பயன்படுத்தி வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.

http://www.eelampage.com/?cn=30218

  • தொடங்கியவர்

2 ஆம் இணைப்பு) விடுதலைப் புலிகளினால் 25 மாலுமிகள் காப்பாற்றப்பட்டனர்.

14000 தொன் அரிசி எங்கே ? வாகரை மக்களின் பசியைப் போக்க உதவுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக கடல் போக்குவரத்து அமைப்புக்கு புலிகள் அறிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 06:32 ஈழம்] [ந.ரகுராம்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் பழுதடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலின் 25 மாலுமிகளும் தம்மிடம் பாதுகாப்பாக இருப்பதாக லண்டனில் உள்ள சர்வதேச கடல் போக்குவரத்து அமைப்புக்கு விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மாலுமிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு அனுசரணை வழங்குவது தொடர்பாக விடுதலைப் புலிகளின் ஐ.நாவிற்கான தொடர்பு அதிகாரியான பாவரசன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் லண்டனில் உள்ள சர்வதேச கடல் போக்குவரத்து அமைப்புடன் தொடர்பு கொண்டு மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்துள்ளதாக இளந்திரையன் மேலும் தெரிவித்தார்.

இயந்திரக் கோளாறு காரணமாக முல்லைத்தீவு கடல் பரப்பில் தத்தளித்த ஜோர்தானிய கப்பல் தற்போது முல்லைத்தீவு கடல் பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

-புதினம்

Sri Lanka to rescue crew of Jordanian ship from north

24 Dec 2006 08:51:00 GMT

Source: Reuters

More COLOMBO, Dec 24 (Reuters) - Sri Lanka's military will mount an operation to rescue the crew of a Jordanian ship which drifted into waters near a Tamil Tiger stronghold, truce monitors said on Sunday, the latest flashpoint in renewed fighting in the island.

The ship carrying a cargo of rice drifted off the Mullaittivu coast in the island's war-torn northeast early on Saturday after mechanical failure.

The Liberation Tigers of Tamil Eelam earlier said the 25 crew of the Farah III were safe and that they were trying to arrange for their return through the International Red Cross.

But the Sri Lankan military accused the Tamil Tigers of forcibly boarding the vessel while it was drifting in the seas, with its cargo of 14,000 tonnes of rice bound for South Africa from India.

International monitors overseeing a tattered 2004 ceasefire between the Sri Lankan military and the Tamil Tigers also weighed in, saying the rebels must respect international law.

"The Sri Lanka Monitoring Mission has conveyed to the LTTE that the government will conduct a rescue mission to salvage the ship and its crew. SLMM has strongly advised LTTE to allow for this operation to be executed without any delay," the mission said in a statement.

The military said attempts to establish contact with the ship had failed and it was believed that the LTTE's Sea Tigers had disconnected the communication systems.

The crew consisted of Jordanians and Egyptians, the military said.

...

http://www.alertnet.org/thenews/newsdesk/SP135857.htm

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.