Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டம் இலங்கையில் அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டம் இலங்கையில் அறிமுகம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 12:29.32 AM GMT ]
law.jpg
பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்று இலங்கையிலும் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரச சார்பற்ற நிறுனங்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியுள்ளன.

பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய அதிகாரமுண்டு.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செயற்பாடுகளினால் பிரித்தானிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டுமென கோரப்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் சிங்கள பத்திரிகை பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.tamilwin.com/show-RUmuyCTaSWgr3B.html

இச்சட்டம் பௌத்த சிங்கள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதாகவும் அமைந்தால் பாராட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் இனி எந்த வடிவிலும் பயங்கரவாதம் அனுமதிக்கப்படமாட்டாது. அது எவராக இருந்தாலும் கிண்டிக் கிழங்கெடுக்கப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இந்த நாட்டில் இனி எந்த வடிவிலும் பயங்கரவாதம் அனுமதிக்கப்படமாட்டாது. அது எவராக இருந்தாலும் கிண்டிக் கிழங்கெடுக்கப்படும்!

அரசியல்வாதிகள் வடிவிலும், புத்தபிக்குகள் வடிவிலும் நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை எப்போது கிண்டிக் கிழங்கெடுக்கப்போகிறீர்கள்.....??

"புலிகளைப் பயங்கரவாதிகள் என அறிவித்தது தவறு" --- ஏரிக் சொல்கைம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல எழுதியிருக்கிறீர்கள் பாஞ்ச்! <_<

நான் இங்கு புலிகள் என்று எங்குமே குறிப்பிடவில்லை.  இதுக்குள் எரிக்சொல்கைமின் கூற்றை மேற்கோள் காட்டியதன் மூலம் உங்கள் உள்ளக் கிடக்கை வெளிப்பட்டு நிற்கின்றது. மீண்டும் சொல்கிறேன் பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் கிண்டிக் கிழங்கெடுக்கப்படும். இதற்கு அரசியல்வாதிகளோ, புத்த துறவிகளோ அல்லது வேறு எவருமோ விதிவிலக்கல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளக்கிடக்கையை அறிந்து வெளிப்படுத்தியதற்கு நன்றி! 

நீங்கள் எழுதியுள்ளபடி இந்த நாட்டில் "இனி எந்த வடிவிலும் பயங்கரவாதம் என்பதற்கு என்னபொருள்"..? அந்தப் பயங்கரவாதத்திற்கு உரியவர்களாகத் தோற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் யார்?? உங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லிவிடாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

இனி அவருக்கு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறையும் விலாவாரியாச் சொல்லவேணுமாக்கும். தெளிவாகத்தானே அழகு தமிழில் எழுதி இருக்கிறன். இனி எந்த வடிவிலும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று. அதுதான் மேலே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என தடித்த எழுத்தில் குறியிட்டுகாட்டிவிட்டீர்களே! இனியென்ன நான் சொல்லக் கிடக்கு!

17 minutes ago, வாலி said:

உங்கள் தமிழிற்கு ஒரு கும்பிடு. என்ன இந்த பச்சையைத்தான் போட்டு தொலைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இனி அவருக்கு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறையும் விலாவாரியாச் சொல்லவேணுமாக்கும். தெளிவாகத்தானே அழகு தமிழில் எழுதி இருக்கிறன். இனி எந்த வடிவிலும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று. அதுதான் மேலே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என தடித்த எழுத்தில் குறியிட்டுகாட்டிவிட்டீர்களே! இனியென்ன நான் சொல்லக் கிடக்கு!

அழகு தமிழுக்கு ஈடு இணையில்லை, உண்மைதான். அண்டங்காக்கா கொண்டைக்காரிக்கும் அது பொழிப்புரை எழுதவல்லது. உங்கள் உள்ளக்கிடக்கையை மறைப்பதற்கும் அது உதவியுள்ளது.

"அந்தப் பயங்கவாதத்திற்கு உரியவர்களாகத் தோற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் யார்??" பதில்தர அழகுதமிழ் உதவிக்கு வரவில்லையா?

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.