Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கான தீர்வை நாமே கேட்க வேண்டும்! கருத்தறியும் அமர்வே அதற்கு சிறந்த வழி! சரவணபவன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எமக்கான தீர்வை நாமே கேட்க வேண்டும்! கருத்தறியும் அமர்வே அதற்கு சிறந்த வழி! சரவணபவன் எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 05:01.00 AM GMT ]
saravapavan_mp_001.jpg
எங்களுக்கான தீர்வை நாம்தான் கேட்க வேண்டும். தற்போது அரசு நடத்துகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது எங்களுக்கான தீர்வு இதுதான் என்று சொல்லாமல் விட்டுப் பின்னர் வருந்துவதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். 

தனிநாடு வேண்டுமா? சமஷ்டிவேண்டுமா? இல்லை சமஷ்டியிலும் கூடிய அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமா? எதுவாக இருப்பினும், புதிய அரசமைப்புக்கான மக்கள் கருத்தறியும் அமர்வில் சகலரும் பங்கெடுத்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனித ஜோண் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையின் இல்ல மெய்வன்மைப் போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு - தனிநாட்டுக்கு - தமிழீழத்துக்கு, வடக்கு - கிழக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கினர். இதனை அடிப்படையாக வைத்துதான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் இறுதி வரை தனிநாட்டுக்காகப் போராடினார். ஆனால், தலைவர் பிரபாகரன் போராடிய காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி இலங்கை அரசு, தலைவர் பிரபாகரனே தனிநாடு கோரினார் என்றும், தமிழ் மக்கள் கோரவில்லை என்றும் பரப்புரை செய்து வந்தது - வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையிலேயே புதிய அரசமைப்பு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழ் மக்கள் பங்கெடுத்து தமது கருத்துக்களைச் சொல்லவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய சமஷ்டி அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்துகின்றது. தற்போது நடைபெற்று வருகின்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் தமிழ் மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்காவிட்டால், இந்த அரசு, தமிழ் மக்கள் அதிகாரப் பரவலாக்கலைக் கோரவில்லை. கூட்டமைப்பே கோரிக் கொண்டு இருக்கின்றது என்று சொல்லி, எங்களுக்கு எதையுமே தராமல் விட்டு விடுவார்கள்.

எனவே, தமிழ் மக்கள் என்ன தீர்வு அமைய வேண்டும் என்பதை இந்த அமர்வில் கலந்துகொண்டு தெரிவிக்க வேண்டும்" - என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyCSWSWgxzJ.html

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே தமிழ் மக்கள் பேரவை சொன்னது. அப்ப இவர் அது பிழை என்றார்.. இப்ப இவர் சொல்லுறது சரி. முதல்ல.. உங்க மட்டத்தில ஒரு தெளிவுக்கு வாங்கடா.. அப்புறம் சிங்களவனட்ட யார் தமிழர்கள் தொடர்பில் என்ன தீர்வைக் கேட்பது என்று தீர்மானிப்பம். :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.