Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை சபையில் உரையாற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் இனஅழிப்பில் மென்போக்கைக் கடைப்பிடிக்கப் போகிறாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா. மனித உரிமை சபையில் உரையாற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் இனஅழிப்பில் மென்போக்கைக் கடைப்பிடிக்கப் போகிறாரா?
[Tuesday 2016-03-01 11:00]
47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமை அமைப்பான யு.என்.எச்.ஆர்.சி. யில் இவ்வாரம் கலந்துகொள்ளுகின்ற கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஸ்ரெஃபான் டியோன் அவர்கள் உலகின் அதிஉச்ச மனித உரிமை மீறல்களையும் இனஅழிப்பின்பாற்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நாடுகள் மட்டில் மென்போக்கைக் கடைப்பிடிக்கப்போகிறாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. சவூதி அரேபியா வெனசுவேலா சீனா ரஸ்யா அல்ஜீரியா எத்தியோப்பியா நைஜீரியா வியட்னாம் சிறீலங்கா என மிக மோசமான மனித உரிமை மீறல் பெண்ணுரிமை மீறல் சிறுபான்மை இனங்களை நசுக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நாடுகள் மட்டில் கடந்த காலத்தில் கனடா கடைப்பிடித்த இறுக்கமான கொள்கைகளைத் தளர்த்தி மென்போக்கான கருத்துக்களை முன்வைப்பார் என வெளியான தகவல்கள் பாதிக்கப்பட்ட இனங்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளன.

47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமை அமைப்பான யு.என்.எச்.ஆர்.சி. யில் இவ்வாரம் கலந்துகொள்ளுகின்ற கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஸ்ரெஃபான் டியோன் அவர்கள் உலகின் அதிஉச்ச மனித உரிமை மீறல்களையும் இனஅழிப்பின்பாற்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நாடுகள் மட்டில் மென்போக்கைக் கடைப்பிடிக்கப்போகிறாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

சவூதி அரேபியா வெனசுவேலா சீனா ரஸ்யா அல்ஜீரியா எத்தியோப்பியா நைஜீரியா வியட்னாம் சிறீலங்கா என மிக மோசமான மனித உரிமை மீறல் பெண்ணுரிமை மீறல் சிறுபான்மை இனங்களை நசுக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நாடுகள் மட்டில் கடந்த காலத்தில் கனடா கடைப்பிடித்த இறுக்கமான கொள்கைகளைத் தளர்த்தி மென்போக்கான கருத்துக்களை முன்வைப்பார் என வெளியான தகவல்கள் பாதிக்கப்பட்ட இனங்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளன.

சிறீலங்காவில் புதிதாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசுää இனஅழிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளித்தபடி கைதிகள் விடுதலை காணி மீட்புää அரசியல் தீர்வு என்று எதிலும் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழர் பிரதிநிதிகள் பலரும் தங்களது சுயலாபம் கருதி சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையில் நல்லாட்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறி கனடிய அரசை நம்பவைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கனடா வெளிவிவகார அமைச்சில் பாரதூரமான மனிதஉரிமை மீறல்களைப் புரிந்த நாடுகள் வரிசையில் சர்வதேச ரீதியாக முதல் ஐந்து நாடுகளுக்குள் இடம்பிடித்திருந்த சிறீலங்காவை உயர் கவனத்திற்குரிய முதல் ஐந்து நாடுகளிலிருந்து நீக்கி ஆபத்துள்ள நாடுகள் வரிசையில் பின்னகர்த்தியிருப்பதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஆட்சியிலுள்ள லிபரல் கட்சியில்ää சட்டத்தரணியும் மனித உரிமை விடயத்தில் அதிகம் குரலெழுப்பியதாக தன்னைக் காட்டிக்கொண்டவருமான திரு. கரி ஆனந்தசங்கரியும் நாடாளுமன்ற அங்கத்தவராக உள்ள நிலையில் சிறீலங்கா குறித்து ஐ.நா. மனித உரிமை சபையில் கனடிய வெளிவிவகார அமைச்சர் எந்தக் கருத்தையும் முன்வைக்கப் போவதில்லை என்று வெளியாகும் தகவல்கள் கவலை தருவதாக அமைந்துள்ளது.

கனடாவில் வாழும் தமிழ் மக்கள்ää தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுகுறித்து விசாரிப்பது அவசர தேவையாக உள்ளது. அத்துடன் கனடாவில் லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கும் தமிழ் அமைப்புக்களிடமும் இதுகுறித்து கேள்வியெழுப்புவது தமிழர்களின் அவசர தேவையாகவுள்ளது.

Minister Dion to address United Nations:
http://www.international.gc.ca/media/aff/news-communiques/2016/02/26a.aspx?lang=eng

Stephane Dion Urged To Challenge Countries With Poor Rights Records On UN Panel
http://www.huffingtonpost.ca/2016/02/29/dion-urged-to-challenge-countries-with-poor-rights-records-on-un-panel_n_9346042.html

http://www.seithy.com/breifNews.php?newsID=152440&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.