Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் தோல்விக்கு பசில் தான் காரணம்! - எஸ்.பி.திசநாயக்க குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவின் தோல்விக்கு பசில் தான் காரணம்! - எஸ்.பி.திசநாயக்க குற்றச்சாட்டு
[Tuesday 2016-03-01 07:00]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கு பிரதானகாரணம் பஷில் ராஜபக் ஷ தான் என்று சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கு பிரதானகாரணம் பஷில் ராஜபக் ஷ தான் என்று சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

அங்கு அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க மேலும் குறிப்பிடுகையில், விடுதலை புலிகளை இல்லாமல் செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த ஆட்சியை கவிழ்ப்பது பெரிய விடயமல்ல என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்து உண்மை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். விடுதலை புலிகளை இல்லாதொழித்த பெருமையும் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுதந்திரக்கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்த பெருமையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷயே சாரும். எனினும் முன்னாள் ஜனாதிபதி அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஆகுவதற்கு பசில் ராஜபக்ஷவே பிரதான காரணமென நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இதுவும் உண்மையாகும். மஹிந்த ராஜபக்ஷவின் மீது கட்சிக்குள் அதிருப்தி ஏற்படுவதற்கு பசில் ராஜபக்ஷவின் பலவந்தமான போக்குகளே பிரதான காரணமாக அமைந்தன.

வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க பசில் ராஜபக்ஷவின் திட்டங்களையும் மோசடிகளையும் வன்மையாக எதிர்த்தவராகும். இதனால் பசில் ராஜபக்ஷ கோடிகணக்கில் பணம் செலவிட்டு பேர்ட்டி பிரேமலாலை தோற்கடித்தார். குறைந்த விருப்பு வாக்கு இருப்பினும் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதன் மூலமாக கட்சிக்குள் மஹிந்த ராஜபக்ஷ மீது அதிருப்தி ஏற்பட்டது.இது போன்று தேர்தல் காலங்களில் சுவரொட்டி உள்ளிட்டவைகளுக்கு பல இலட்சக்கணக்கில் செலவிட்டார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இலட்ச கணக்கில் பணம் வழங்கினார். இது மக்களிடையே அதிருப்தி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

இதேவேளை சிறிமாவோ பண்டாரநாயக்க தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் தமிழர்களின் வாக்கு வங்கி 40 சதவீதம் இருந்தது. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்தும் கூட சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி குறையவில்லை. எனினும் மஹிந்த ராஜபக்ஷவினால் வடக்கு தமிழ் மக்களிடம் காணப்பட்ட வாக்குகளிலும் 40 வீதம் அளவில் காணப்பட்ட முஸ்லிம் வாக்குகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. இதற்கு யார் காரணம். ராஜபக்ஷவின் சகோதர்களேயாகும். இனவாதம் மதவாதம் தூண்டப்பட்டதன் விளைவாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. மஹிந்த மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால் வடக்கின் தமிழரினதோ அல்லது முஸ்லிம்களினதோ வாக்கு எமக்கு கிடைக்காது. தனி பெளத்த வாக்கினால் எம்மால் வெற்றிப்பெற முடியாது.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பசில் ராஜபக்ஷ பொறுப்பாக இருந்து செயற்பட்டார் என்பதில் உண்மையில்லை. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மாத்திரமே பசில் ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது. ஆரம்ப காலங்களில் மஹிந்தவின் வெற்றிக்கு பின்னால் சுதந்திரக் கட்சியினரே இருந்தனர். 2005 தேர்தலில் கூட இறுதி தருவாயில் வந்தே பசில் ராஜபக்ஷ தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

ஆகவே பசில் ராஜபக்ஷவின் மோசமான நடத்தைகளே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைவதற்கு காரணமாகும். இந்நிலையில் சுதந்திரக் கட்சியினருக்கு பசில் ராஜபக்ஷவின் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. புதிய கட்சி அமைக்கும் வேலைத்திட்டத்தில் பசில் ராஜபக்ஷ பிரதான அங்கம் வகிப்பது எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியினர் பசில் ராஜபக்ஷ இருக்கும் காரணத்தினால் ஒருபோதும் புதிய கட்சியி்ல் இணைந்து கொள்ள போவதில்லை. எனவே சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகப்போவது தனிக்கட்சியா அல்லது குடும்ப கட்சியா என்பதனை கட்சி அங்கத்தவர்கள் தீர்மானிக்க வேண்டும். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்தால் கட்சியிலிருந்து எவரும் விலக மாட்டார்கள் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152426&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.