Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிகாமம் புகையிரத நிலையம் வதை முகாமாக இயங்கியது. - ஆணைக்குழு முன் சாட்சியம்.

Featured Replies

கொடிகாமம் புகையிரத நிலையம் வதை முகாமாக இயங்கியது. - ஆணைக்குழு முன் சாட்சியம்.

கொடிகாமம் புகையிரத நிலையம் இராணுவ வதை முகாமாக இயங்கி வந்ததாக சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார் 
 
யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 
 
விடுதலை புலிகளுடன் தொடர்பு எனும் சந்தேகத்தில் என்னை கொடிகாமம் பகுதியில் இயங்கி வந்த இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவத்தினரின் சிவில் காரியாலயம் இயங்கி வந்தது. அதில் இரண்டு நாளைக்கு ஒரு நாள் நான் சென்று கையெழுத்து வைக்க இராணுவத்தினர் பணித்து இருந்தனர்.
 
அதனால் நான் இரண்டு நாளுக்கு ஒரு தடவை அங்கு சென்று கையெழுத்து வைத்து விட்டு வருவேன். ஒருநாள் நான் இராணுவத்தினரிடம் கூறினேன் நான் புலிகளுடன் தொடர்பு என்றால் என்னை சுட்டு படுகொலை செய்து விடுங்கள் அல்லது எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் இரண்டு நாளுக்கு ஒரு தடவை நான் இங்கு வந்து போவதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளேன். என கூறினேன்.
 
உடனே இராணுவத்தினர் அதுக்கு உனக்கு நாள் இருக்கு என கூறி கொடிகாமம் புகையிரத நிலையத்திற்குள் அழைத்து சென்றனர். அங்கு நிலத்தில் கம்பிகள் வளைத்து கம்பிகளுக்கு கொங்கிறீட் இடப்பட்டு நிலத்தில் கூரான கற்கள் பதிக்க பட்டு இருந்தன.
 
அங்கு கொண்டு செல்ல படுபவர்கள் நிலத்தில் கூரான கற்கள் மேல் படுக்க வைத்து அவர்களின் கைகள் மற்றும் கால்களை அங்குள்ள கம்பிகளில் இழுத்து கட்டி விட்டு அவர்களை சித்திரவதை செய்வார்கள். அவ்வாறு சித்திரவதை செய்தமைக்கு சான்றாக நிலத்தில் பதித்து இருந்த கூரான கற்கள் மீது இரத்த கரைகள் காணப்பட்டன.
 
அங்கே வைத்து என்னை விசாரணை செய்து விட்டு அனுப்பி வைத்தனர். 
 
இரண்டு நாளுக்கு ஒரு தடவை கையெழுத்து வைத்து வந்த என்னை சில மாதங்களின் பின்னர் ஒரு நாள் " உனக்கு விசாரணை முடிந்து விட்டது இனி நீ கையெழுத்து வைக்க வரவேண்டாம் " என கூறி அனுப்பினார்கள். அவ்வாறு கையெழுத்து வைக்க வரவேண்டாம் என கூறி அனுப்ப பட்டவர்கள் சில நாட்களில் சுட்டு படுகொலை செய்யப்பட்டு விடுவார்கள்.
 
எனவே எனக்கு புரிந்தது என்னையும் சுட போகின்றார்கள் என அதனால் நான் மிக அவதானமாக இருந்தேன் இரவுகளில் வீட்டில் படுப்பது இல்லை தினமும் உறவினர்கள் நண்பர்கள் என வேறு வேறு வீடுகளில் இரவுகளை கழித்தேன்
 
அந்நிலையில் 2007ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் திகதி என் வீட்டுக்கு மூவர் பிஸ்டலுடன் வந்து என்னை விசாரித்து உள்ளனர். அவ்வேளை நான் வீட்டில் உள்ளை மனைவி மட்டுமே வீட்டில் இருந்தார்.  அவரிடம் விசாரித்து விட்டு வீட்டை சோதனை செய்து விட்டு சென்று விட்டனர். 
 
அந்த சம்பவத்தின் பின்னர் தலை மறைவு வாழ்கையே வாழ்த்து வந்தேன்.
 
புலி என்றால்  சுட தானே  வேண்டும்.- டக்ளஸ்.
 
சில உறவினர்கள் கூறினார்கள் அவ்வேளை அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா வை சந்தித்து கதையுங்கள் அவர் உங்களை காப்பாற்றுவார் என அதனை அடுத்து நான் அவரை  சந்திக்க 16ம் திகதி 8ம் மாதம் 2007ம் ஆண்டு சென்று இருந்தேன்.
 
அவ்வேளை மனைவியையும் கூட்டி சென்று இருந்தேன். ஸ்ரீதர் தியட்டரில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு சென்ற போது அங்கே என்னை சுட வந்த மூவரும் நின்றனர். அவர்களை மனைவி எனக்கு அடையாளம் காட்டினார்.
 
நாம் அவர்களை காணாதது போல இருந்தோம். அவ்வேளை எம்மை டக்ளஸ் தேவானந்தா அழைத்து இருந்தார் நான் அவரிடம் சென்று எனது பிரச்சனையை கடிதம் மூலம் சமர்பித்தேன்.  அந்த கடிதத்தை வாங்கி படித்தவர் அதில் விடுதலை புலிகள் என இருந்ததும் புலி என்றால் உன்னை சுட தான் வேண்டும் என கூறி கடிதத்தை தூக்கி வீசினார்.
 
அந்த கடிதத்தைஅவரின் செயலாளர் தூக்கி வாசித்து விட்டு விடுதலை புலிகளுடன் தொடர்பு என சந்தேகம் என அதில் எழுதப்பட்டு இருந்ததை சுட்டி காட்டினார். அதன் பிறகு அப்ப நீ  புலி இல்லையா என கேட்டார். நான் இல்லை என மறுத்தேன்.
 
உடனே நீ தென்மராட்சி தானே என கேட்டார் நாம் ஆம்  என்றேன் அப்ப சாள்ஸ் இருக்கான் போய் கதை என்று அனுப்பி வைத்தார்.
 
விசாரணை செய்த ஈ.பி.டி.பி, தென்மராட்சி பொறுப்பாளர் சாள்ஸ்.
 
சாள்ஸ் என்னை விசாரணை செய்து விட்டு இனி நீ பயப்பட வேண்டாம் இனி உன்னை தேடி யாரும் வர மாட்டாங்க , இப்ப அமைச்சர் அன்றைக்கு சுட வந்தது யார் என்று கேட்டால் தெரியாது என்று கூறு என கூறி அழைத்து சென்றார். 
 
சாள்சின் விசாரணை முடிய டக்ளஸ் தேவானந்தாவிடம் அழைத்து சென்றார். அப்ப டக்ளஸ் சாள்சிடம் என்னவாம் என கேட்டார். அதற்கு சாள்ஸ் ஆள் பிரச்னை இல்லை என கூறியதுடன் சுட போனது சிங்கமோ புலியோ என்று தெரியாதாம் என கூறினார்,
 
அதனை தொடர்ந்து எம்மை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் என்னை தேடி யாரும் வீட்டுக்கு வந்தது இல்லை என சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.