Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீள்குடியேற்றம் கோரி போராட்டம்

Featured Replies

வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீள்குடியேற்றம் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்களாக முகாம்களில் வசித்து வரும் மக்கள் தங்களை தமது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு கோரி வெள்ளியன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

160304164129_valikamam_protest_640x360_b
 பலாலி விமான தள அபிவிருத்திக்காக தங்கள் நிலம் பயன்படுத்தப்படலாம் என்பது தங்களுக்கு அச்சமூட்டியிருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

சுன்னாகம் கண்ணகி முகாம் பகுதியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வடமாகாண சபையினர் உள்ளிட்ட பலரிடமும் தமது கோரிக்கையைத் தெரிவித்த போதிலும் எந்தப் பலனும் ஏற்படவில்லை என அவர்கள் கூறினர்.

அத்துடன் இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரான், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலருக்கும் தமது வேண்டுகோளை முன்வைத்திருந்த போதிலும் பிரச்சினைக்கு முடிவு ஏற்படவில்லை என்றார் போராட்டத்தில் கலந்து கொண்ட கோணப்பிலவு முகாம் தலைவர் பொன்னுத்துரை இன்பராசா.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமது முகாமுக்கு வந்தபோது, ஆறு மாத காலத்தில் தங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்த போதிலும், தங்களுடைய காணிகள் பலாலி விமான தள அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் என்று வெளியாகியுள்ள அறிக்கை தங்களுக்கு அச்சத்தை மூட்டியிருக்கின்றது என்கிறார் அவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன், மீள்குடியேற்ற சங்கத் தலைவர் கஜீபன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160304_valikamam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.