Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை!

Featured Replies

தமிழக மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை!

 

fish.jpgராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து உள்ளனர். இன்று அதிகாலை இவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சில விசைப்படகுகளை வழி மறித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன் பின் தங்களிடம் சிக்கிய விசைபடகு ஒன்றினையும் அதில் இருந்த மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான இந்த விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்னாசிராஜ், தவசி, ராஜாராம், பிரபு, ஆஸ்லின், ராஜ், அந்தோணி, லிட்டன், கிறிஸ்து ஆகிய 9 பேரையும் இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைககு அழைத்து சென்றுள்னர்.

இதனிடையே, தூத்துககுடியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 20 பேர் புதுககோட்டை கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிகக சென்றிருந்தனர். இவர்கள் நேற்று இரவு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் அவர்களது 3 நாட்டுப்படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களையும், 81 படகுகளையும் விடுவிக்க கோரி மீனவர்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/60110-sri-lanka-navy-arrested-29-tamil-fishermens.art

8 hours ago, நவீனன் said:

தமிழக மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளது.

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் கயஸ் பல்டானோ இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
 
தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில்   இராமேஸ்வரத்தைச்  சேர்ந்த  9 மீனவர்கள்  நேற்று சனிக்கிழமை நள்ளிரவு  ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும்,  இன்று காலை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  

http://onlineuthayan.com/news/10143

இதெப்படி அட்டூழியமாகும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.