Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்கிய அரபு எமிரேட்ஸ்யோட கூட 14 ரன்கள் வித்தியாசத்தில் தான் இலங்கை வென்றிருக்குது...எப்படி உலகப் கோப்பையில் விளையாடப் போகிறார்கள்?

  • Replies 71
  • Views 2.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
பங்களாதேஷ் அணி 51 ஓட்டங்களால் வென்றது
2016-02-26 22:35:28

 

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை பங்களாதேஷ் அணி 51 ஓட்டங்களால் வென்றது.


பங்களாதேஷின் மீர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில்  8 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களைக் குவித்தது.  


ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முஹம்மத் மிதுன் 41 பந்துகளில் 47 ஓட்டங்களைக் குவித்தார். மொஹம்மத் மஹ்மதுல்லா 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களைக் குவித்தார்.



15201_Mohammad-Mahmudullah.jpg

மொஹம்மத் மஹ்மதுல்லா



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்துவீச்சாளர்களில் மொஹம்மத் நவீட் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


பதிலுக்குத துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 17.4 ஓவர்களில் 82 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக மொஹம்மத் உஸ்மான் 30 ஓட்டங்களைப் பெற்றார்.  


பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் மஹ்மதுல்லா 05 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.  மஸ்ரபி மோர்ட்டஸா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஸ்தபிகுர் ரஹ்மான் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக மொஹம்மத் மஹ்மதுல்லா தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15201#sthash.TLLn8h1u.dpuf
  • தொடங்கியவர்

இந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தான் பந்து வீச்சுக்கும் இடையில் இன்று பலப்பரீட்சை : ஒரு வருடத்துக்கு பின்னர் இன்று களத்தில்

Published by MD.Lucias on 2016-02-27 11:57:33

 
 
 

20 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில்  இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக இந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தானின் பந்து வீச்சும் இடையில் நடைபெறும் போராட்டமாக இப்போட்டி அமைய உள்ளது.india-vs-pakistan-t20-head-to-head.jpg

ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.

தனது தொடக்க ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்ட இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினால் இறுதிசுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். 

இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை ஓட்டம் குவிப்பது சுலபமான விடயமல்ல. எனவே இரு அணிகளுக்கும் இதுவவொரு சவாலான   விடயமாகும். 

 

ரோகித் சர்மா கருத்து

பாகிஸ்தான் அணியின் பிரதான ஆயுதமே வேகப்பந்து வீச்சு தான். அதுவும் ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் போது, அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். எனவே இந்திய துடுப்பாட்ட வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

 ‘பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் வலுவானது. ஆனால் நாங்கள் எங்களது பலத்துக்கு ஏற்ப தயார்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது பலம் துடுப்பாட்டம் தான். ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அணியும் ஏதாவது ஒன்றில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவர்களிடம் சிறந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதே போல் நம்மிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்’ என்றார்.

 

பாகிஸ்தான் வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவத்தோடு வந்து இருக்கிறார்கள். பெரிய போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வியடைவதும் உண்டு. அந்த மோசமான நிலையை மாற்ற இன்றைய போட்டியில் முயற்சிப்பார்கள். 

சூதாட்டத்தில் சிக்கி 5 ஆண்டு கால தடைக்கு பிறகு அணிக்குள் நுழைந்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அப்ரிடி பேட்டி

பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா–பாகிஸ்தான் போட்டி என்றாலே பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கும், இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். 

இங்குள்ள சூழலில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எங்களிடம் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்கள். 

இந்திய துடுப்பாட்ட வீரர்களை சீக்கிரமே வெளியேற்றி முதல் 6 ஓவர்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிப்பார்கள். இந்திய அணி துடுப்பாட்ட வரிசையில் வலிமையானது என்பதை அறிவேன். 

ஆனால் நாங்கள் வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு நல்லதாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார்.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு இரு முக்கிய அணிகள் மோதும் இந்த ஆட்டத்தை காண உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

 

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

 

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (அணித் தலைவர்) ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, நெஹரா.

 

பாகிஸ்தான்: முகமது ஹபீஸ், ஷர்ஜீல் கான், உமர் அக்மல், சோயிப் மாலிக், குர்ரம் மன்சூர், சர்ப்ராஸ் அகமது, அப்ரிடி (அணித் தலைவர்), முகமது நவாஸ், முகமது இர்பான், முகமது ஆமீர், அன்வர் அலி அல்லது வஹாப் ரியாஸ்.

 

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை எமது இணையத்தளத்தில் காணலாம்

 

இதுவரை...

 

இந்தியா – பாகிஸ்தான்கள் அணிகள் இதுவரை 6 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4–ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

 

சகல விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதியாக பாகிஸ்தானை 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/3651

  • தொடங்கியவர்

பாகிஸ்தான்  83

10298756_992631734118854_318425500219193

  • தொடங்கியவர்

இந்தியா  2/2

 இந்தியா   8/3  

  • தொடங்கியவர்

இந்தியா 5 விக்கெட்களால் வெற்றி

12768215_1184507548235006_67808913662707

1909718_977097452355684_7013954372211181

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் வதம் : தொடங்கி வைத்தார் 'தளபதி' முடித்து வைத்தார் 'தல'

 

சியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

டாஸ் வென்ற இந்தியா,  பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதல் போட்டியில் இந்தியாவில் இடம் பிடித்த துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில்,  தடை காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த அமீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

235337_3.jpg

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  திணறிய  பாகிஸ்தான் அணி, 17.3  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் நெஹ்ரா, பூமராஹ், யுவராஜ்  தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர். பாகிஸ்தான் தரப்பில் சர்ஃபராஸ் மட்டுமே 25 ரன் குவித்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இந்திய அணி பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும் ரஹானேவும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் விராட் கோலியும் யுவராஜ் சிங்கும் இணைந்து இந்திய அணியை தோல்வி பாதையில் இருந்து மீட்டெடுத்தனர்.

விராட் கோலி அபாரமாக விளையாடி 51 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். இதில் 7 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த தோனி 3 பந்துகளில் 7 ரன்களை எடுக்க, இந்திய அணி 15.3 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/sports/59731-asia-cup-t20-2016-india-dismiss-pakistan-for-83.art

12805724_992682697447091_584309652554148

  • தொடங்கியவர்

ஆமீரின் அச்சுறுத்தலுக்குப் பிறகு கோலியின் ‘கிளாஸ்’ : இந்தியா போராடி வெற்றி

 

 
கடினமான பிட்சில் அபாரமான பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலியின் ‘சப்லைம்’ இன்னிங்ஸ். | படம்: ஏ.பி.
கடினமான பிட்சில் அபாரமான பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலியின் ‘சப்லைம்’ இன்னிங்ஸ். | படம்: ஏ.பி.

மிர்பூரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் கடினமான பிட்சில், பாகிஸ்தானின் அச்சுறுத்தல் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி போராடியேனும் வெற்றியைச் சாதித்தது.

84 ரன்கள் இலகைத் துரத்திய போது மொகமது ஆமீரின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் அபாரமான இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆகி வெளியேற ஆட்டம் பரபரப்பானது.

முதல் பந்திலேயே யார்க்கரில் ரோஹித் எல்.பி.க்கான உரத்த அப்பீல் எழுந்தது. உண்மையில் ரோஹித் சர்மா தப்பித்தார் என்றே கூற வேண்டும். அப்போதாவது அடுத்த பந்தை இறங்கி வந்து ஆடியிருக்க முடிவெடுத்திருக்க வேண்டும், ஆனால் அவரிடம் உள்ள மிகப்பெரிய உத்தி பலவீனமென்னவெனில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வீசும் போது, அதுவும் பந்தை உள்ளே கொண்டு வரும் ஆமிர் போன்றவர் வீசும்போது முன்னங்காலை குறுக்காக முன்னே போடுதல் கூடாது.

ஆனால் ரோஹித் அதைத்தான் செய்தார். அவரை ரன்னர் முனையில் இருந்து பார்த்த ரஹானேவும் அதே தவறைத்தான் செய்தார். ரஹானேயின் உத்தியைப்பற்றி லஷ்மண் வானாளவ புகழ்ந்தார். ஆனால் அவரிடம் உள்ள போதாமையை ஒருவரும் சுட்டிக் காட்டுவதில்லை, சுனில் கவாஸ்கரும் ரோஹிட் சர்மாவை உச்சியில் கொண்டு வைத்தார். ஆனால் அவரது போதாமையைப் பேசுவதற்கும் இங்கு தடைதான். ஷிகர் தவண் முக்கியமான போட்டிகளில் உட்காருவதன் புதிரும் நமக்குப் புரியவில்லை. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் மறுநாள் களமிறங்காமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதை ரசிகர்கள் மறந்திருக்க நியாயமில்லை.

சுரேஷ் ரெய்னா ஆடியது பரிதாப உணர்ச்சியையே வரவழைத்தது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை, வெளியே செல்லும் பந்திலும் பீட் ஆகிறார். உள்ளே வரும் பந்திற்கும் தடவுகிறார், காரணம் ஸ்விங் பந்து வீச்சுக்கு எதிராக இவ்வளவு அனுபவம் பெற்ற பிறகும் திணறும் உத்தி அவருடையது.

கடைசியில் அவர் 1 ரன் எடுத்து ஆமீரின் பந்தை என்ன ஆடினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். பந்துகள் ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஆமிர் அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்பிலிருந்து இடது கை பேட்ஸ்மெனுக்கு வெளியே கொண்டு செல்கிறார், ஆனால் ரெய்னாவோ ஏதோ மொயீன் அலி வீசுகிறார் என்ற நினைப்பில் ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் ஆட முயன்றார், முன் விளிம்பில் பட்டு வஹாப் ரியாஸிடம் கேட்ச் ஆனது. இந்தியா 8/3 என்று ஆனது.

யுவராஜ் சிங் இறங்கியவுடன் 2-வது பந்தில் 7 அடி உயர மொகமது இர்பானை கவர் திசையில் ஒரு அருமையான டிரைவ் அடித்து இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார்.

கோலியின் ‘கிளாஸ்’ இன்னிங்ஸ்:

கோலிக்கு அதிர்ஷ்டம் இல்லாமலில்லை. அவரும் ஸ்டம்புக்கு நெருக்கமாக ஒரு பந்தை கால்காப்பில் வாங்கினார், நடுவர் ஏனோ அவுட் தரவில்லை. அது ரீப்ளேயில் அவுட் போல்தான் தெரிந்தது, இது ஒருவேளை பாகிஸ்தானினால் நாளை எழுப்பப்படலாம். ஆனால் அதே வேளையில் கடைசியில் மொகமட் சமி பந்தில் அவர் மட்டையில் பட்டு பேடில் பட்ட பந்துக்கு நடுவர் எல்.பி. தீர்ப்பளித்தார். கோலி கடும் அதிருப்தியுடன் 49 ரன்களில் அவுட் ஆனார்.

ஒருவேளை கோலி உள்ளே சென்று தனது முந்தைய நாட் அவுட் எல்.பி.தீர்ப்பை ரீப்ளேயில் பார்த்தார் என்றால் நிச்சயம் தனது அதிர்ஷ்டம் பற்றி ஒருவேளை மகிழ்ச்சியடைந்து கடைசியில் கொடுக்கப்பட்ட எல்.பி.தீர்ப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இதற்கிடையே கோலி ஆடியது உண்மையில் ‘சப்லைம்’- அசாதாரண இன்னிங்ஸ். அதுவும், பவர் பிளே முடிந்த பிறகு 7-வது ஓவரை ஆமிர் வீச வந்த போது கோலி ஆடிய 2 ஷாட்கள் கண்களில் ஒத்திக் கொள்ளக்கூடிய ஷாட்களாகும். முதலில் இடுப்புயர பந்தை பிளிக் செய்தார், அது பீல்டருக்கு வைடாக பவுண்டரி சென்றது, அடுத்ததாக ஆஃப் ஸ்டம்ப் பந்தை அழகாக முன்னால் வந்து அடித்த கவர் டிரைவை எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த ஓவர் ஒருவிதத்தில் திருப்பு முனையாக அமைந்தது என்றால், பாகிஸ்தானின் மற்றொரு அச்சுறுத்தல் பவுலர் வஹாப் ரியாஸ் ஓவரை கோலி பதம் பார்த்தது ஆட்டத்தை இந்திய வெற்றியின் உறுதிப்பாட்டை நோக்கி நகர்த்தியது. 150 கிமீ ஆஃப் ஸ்டம்ப் பந்தை அருமையான கவர் டிரைவ் அடித்து பவுண்டரிக்கு தரையோடு தரையாக விரட்டினார். அடுத்த பந்தை அலட்சியமாக ஆஃப் திசையில் சற்றே நகர்ந்து பிளிக் செய்து 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து மீண்டும் 146 கிமீ ஆஃப் திசை பந்தை முன்னால் வந்து கவர் திசையில் மீண்டும் ஒரு அற்புதமான பவுண்டரியை விளாசினார். கவர் டிரைவின் கடவுளாகவே விராட் கோலி இப்போதைக்குத் தெரிகிறார்.

அதே ஓவரில் யுவராஜ் சிங் பிளிக்கில் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் வந்ததோடு 9-வது ஓவர் முடிவில் இந்தியா 50 ரன்களை எட்டியது.

51 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த விராட் கோலி, கடைசியில் மொகமட் சமியின் பந்தில் மட்டையில் பட்ட பந்துக்கு எல்.பி.தீர்ப்பாகி கடுப்பில் வெளியேறினார். அதே ஓவரில் ஹர்திக் பாண்டியா அவுட் ஸ்விங்கரை இளம் வீரருக்கே உரிய முறையில் எட்ஜ் செய்து வெளியேறினார்.

கடைசியில் தோனி, வஹாப் ரியாஸ் பந்தை கவரில் பளார் பவுண்டரி அடித்தது வெற்றி ஷாட்டானது.

யுவராஜ் சிங் 30 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இந்த வெற்றியில் இவரது இந்த 14 ரன்கள் பெரிய பங்களிப்பு என்பதோடு, இவர் ஒரு முனையில் திக்கித் திணறி நின்றாலும் இவரது இருப்பினால் கோலி தைரியமாக ஆட முடிந்தது.

இவரும் கோலியும் இணைந்து 68 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது வெற்றிக்கான மிக முக்கிய பங்களிப்பாக அமைந்தது. வஹாப் ரியாஸ் 3.3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்டார், இவரை கோலி அலட்சியமாகவே ஆடினார். ஒருவேளை ஆமிருடன் தொடக்கத்தில் புதிய பந்தில் வஹாபிடம் கொடுத்திருந்தால் ஏதாவது ஆகியிருக்கலாம். மொகமது இர்பான் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்தார், அவ்வப்போது யுவராஜை அச்சுறுத்தினாரே தவிர பெரிய பவுலிங் இல்லை. கடைசியில் இந்திய அணி 15.3 ஓவர்களில் 85/5 என்று வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக விராட் கோலி மிகச்சரியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8289995.ece?homepage=true

  • தொடங்கியவர்

12803034_976066739107186_194490474956333

  • தொடங்கியவர்
 
"ஆமிரைப் பாராட்டினேன்"
 

article_1456647745-TamilPaaAmir.jpgஇந்தியாவுக்கெதிராக இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிருக்கு, தனது பாராட்டை வெளிப்படுத்துவதாக, இந்திய அணியின் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது, இந்திய அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட போது, அற்புதமான முதலாவது ஓவரை வீசிய ஆமிர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். மீண்டுமொரு விக்கெட்டை ஆமிர் கைப்பற்ற இந்திய அணி ஒரு கட்டத்தில், 3 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்தது.

எனினும், தனது 49 ஓட்டங்களின் துணையுடன் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராத் கோலி, வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த போது, 'மொஹமட் ஆமிர் பந்துவீசிய விதத்துக்கு, நான் அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில் நான், அவர் பந்துவீசும் போதே பாராட்டியிருந்தேன். அவ்வாறான பந்துவீச்சை விளையாடுவது அற்புதமாக இருந்தது" என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/167062/-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%A9-#sthash.mYDPOsn7.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்து ஆட உள்ளது.

மலிங்கா இந்த போட்டியில் இல்லை. Mathews அணிதலைவர்.

மலிங்காவின் இடத்துக்கு  Thisara Perera

  • தொடங்கியவர்

பங்களாதேஷ்  2/2

26/3

  • தொடங்கியவர்

பங்களாதேஷ்   147/7

12795216_977661445632618_599288625147776

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் 23 ஓட்டங்களால்  வெற்றி

12794707_977708705627892_673814301181308

12799462_1114358258583414_26220983842400

ஆசிய கிண்ண கிரிக்கெட்: பங்களாதேஷிடம் இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வி
2016-02-28 22:29:31

ஆசிய கிண்ண இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி 23 ஓட்டங்களால் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

 

148 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்க 124 ஓட்டங்களையே பெற்றது.


பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைக் குவித்தது.

 

15221BANGALADESH-VS-SRI-LANKA.jpg


பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மொஹம்மத் மிதுன், சௌம்ய சர்கார் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமல் முறையே மெத்யூஸ், நுவன் குலசேகரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

 

முஸ்பிகுர் ரஹ்மானும் 4 ஓட்டங்களுடன் ரண் அவுட்டானார். எனினும், ஷபீர் ரஹ்மான் 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்ட்றிகள் உட்பட 80 ஓட்டங்களைக் குவித்தார்.


ஷகீப் அல் ஹசன் 32 ஓட்டங்களையும் மொஹம்மத் மஹ்மதுல்லா 12 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.  

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் துஷ்மந்த சமீர 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஏஞ்சலோ மெத்யூஸ், நுவன் குலசேகர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

15219sri-lanaka--Bangaladesh.jpg


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8  விக்கெட் இழப்புக்கு124  ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

 

இலங்கை அணியின் சார்பில் ஆகக்கூடுதலாக தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 21 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

கடைசி ஓவரில் 32 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டது. நான்கு விக்கெட்டுகள் கைவசமிருந்தன. ஆனால், அந்த ஓவரில் மேலும் இரு விக்கெட்களை  வீழந்த நிலையில் மேலும் 8 ஓட்டங்களையே இலங்கை அணி பெற்றது.

 

இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. அதனால் ஏஞ்சலோ மெத்யூஸ் இன்றைய போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை  தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15221#sthash.4XbaRZW8.dpuf
  • தொடங்கியவர்

 

இலங்கை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும் தருணம் இது: குமார் சங்கக்கார

 

15221_kumar300.jpgஇதேவேளை இப்போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இலங்கை அணிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

 

"தவறிழைக்காமல் கற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அணிக்கு உங்கள் ஆதரவு உண்மையில் தேவைப்படும் தருணம் இது. அவர்கள் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கை ரசிகர்களும் நம்பிக்கை கொள்வார்கள் என நம்புகிறேன்" என டுவிட்டரில் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

 

15221_kumar-sangakkara2.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15221#sthash.4vaXiiPA.dpuf

தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: மேத்யூஸ் வருத்தம்

இலங்கை அணியின் தோல்விக்கு தான் பொறுப்பெற்றுக் கொள்வதாக அந்த அணியில் தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை- வங்கதேசம் அணிகள் மோதியது.

இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 23 ஓட்டங்களால் வங்கதேசத்திடம் முதன்முறையாக தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், 10-12 ஓட்டங்களை ஓடி எடுக்கும் போது, பவுண்டரிகளுக்கு பந்தை விரட்ட நாங்கள் அதிகமாக சிரமப்பட்டோம். இதுவே அணியின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

அதேபோல் நாங்கள் சிறப்பான ஷாட்டுக்களை ஆடவில்லை. சிறப்பாக தொடங்கிய போதும் சில தவறுகளால் ஆட்டத்தின் போக்கு மாறியது. இலங்கை அணியில் நல்ல துடுப்பாட்ட வரிசை உள்ளது.

வங்கதேச அணி நிர்ணயித்த இலக்கு எளிதில் எட்டக் கூடியதே. நாங்கள் பெரிய அளவினான ஷாட்டுகளை ஆட முயற்சி செய்த போது விக்கெட்டுகளை அதிகமாக இழந்து விட்டோம். நாங்கள் மிகவும் மோசமான ஒரு ஆட்டத்தை ஆடியுள்ளோம்.

இறுதிப் போட்டிக்கு நுழைய நாங்கள் பாகிஸ்தான், இந்தியா அணிகளை வீழ்த்த வேண்டும். கண்டிப்பாக இது கடினமான சூழலாக இருக்கப் போகிறது. போராடி வெற்றி பெற முயலுவோம் என்று கூறியுள்ளார்.

http://www.lankasrisports.com/view.php?22YOlR2bcc40C34edKMMa020AmD4dd3XDm4203oqAO2e4C04y2cbclOSe3

  • தொடங்கியவர்

சபீர் ரஹ்மானின் அபார பேட்டிங்கும், மேத்யூஸின் மோசமான அணுகுமுறையும்

 
வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேசம். | படம்: ஏ.பி.
வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேசம். | படம்: ஏ.பி.

மிர்பூரில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேசத்திடம் இலங்கை அணி தோல்வி தழுவியது.

வங்கதேச அணி 26/3 என்று இருந்த போது சபீர் ரஹ்மான் அற்புதமான ஒரு இன்னின்ஸை ஆடி 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுக்க வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சமீரா அபாரமாக வீசி 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை 124 ரன்களுக்கு வங்கதேசத்தினரால் மட்டுப்படுத்தப்பட்டது. காரணம் கடைசியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் அற்புதமான ஒரு வேகப்பந்து வீச்சை மேற்கொண்டு 4 ஓவர்களில் 19 ரன்களையே விட்டுக் கொடுத்து திசர பெரேரா விக்கெட்டை முக்கியத் தருணத்தில் கைப்பற்றி திருப்பு முனை ஏற்படுத்தினார்.

இந்தியா விளையாடும் பிட்ச்களுக்கு பசுந்தரையை இடும் வங்கதேச மைதான நிர்வாகிகள் மற்ற போட்டிகளுக்கு ஸ்பின் சாதக, மந்தமான ஆட்டக்களங்களை இட்டு பாரபட்சம் காட்டியது நேற்றும் தொடர்ந்தது.

இலங்கை விரட்டலும் மேத்யூஸின் புரியாத அணுகுமுறையும்:

148 என்ற வெற்றி வாய்ப்புள்ள இலக்கை துரத்தக் களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே சவுமியா சர்க்கார், டஸ்கின் அகமட் பந்தில் தினேஷ் சந்திமாலுக்கு கேட்ச் விட்டார். தில்ஷானுக்கும் ஒரு கடினமான வாய்ப்பு நழுவ விடப்பட்டது. பிறகு 2 பவுண்டரிகளை அடித்த தில்ஷன் 12 ரன்களில் சவுமியா சர்க்காரின் நல்ல கேட்சுக்கு ஷாகிப் அல் ஹசனிடம் ஆட்டமிழந்தார். ஷார்ட் தேர்வு மிக மோசம்.

பிறகு ஷேஹன் ஜெயசூரியா, சந்திமால் இணைந்து 8 ஓவர்களில் 56 ரன்களைச் சேர்த்தனர். ஸ்கோர் 11-வது ஓவர் முடிவில் 76/1 என்று ஆரோக்கியமாகவே இருந்தது. சந்திமால் 37 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அப்போது தேவையில்லாமல் மஹமுதுல்லா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷேஹன் ஜெயசூரியாவை உடனேயே ஷாகிப் வீழ்த்தினார், இறங்கி வந்து ஆட வைடாக ஷாகிப் வீச ஸ்டம்ப்டு ஆனார் ஜெயசூரியா. இவர் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4 ஓவர்கள் பவுண்டரியே வராதது நெருக்கடியை அதிகரித்ததால் சந்திமால், ஜெயசூரியா அவுட் ஆயினர். திசர பெரேராவை அற்புதமான யார்க்கரில் முஸ்தபிசுர் எல்.பி. செய்ய இலங்கை 15-வது ஓவரில் 92/5 என்று ஆனது.

அஞ்சேலோ மேத்யூஸ் அடிக்க வேண்டிய பந்துகளை சிங்கிள் எடுத்தும் அடிக்க முடியாத பந்துகளை வெறுமனே காற்றில் சுழற்றியும் சோடை போனார், தேவைப்படும் ரன் விகிதம் எகிறிக் கொண்டிருக்க இவர் அந்த நினைப்பேயில்லாத அணுகுமுறையை ஒரு கேப்டனாகக் கடைபிடித்தது நிச்சயம் இலங்கை ரசிகர்களை கடுப்பேத்தியிருக்கும்.

20 பந்துகளில் அவர் ஒரு பவுண்டரியைக் கூட அடிக்க முடியாமல் 8 ரன் இல்லாத பந்துகளுடன் 12 ரன்கள் எடுத்து அல் அமின் ஹுசைன் பந்தில் ஷாகிபிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், மீண்டும் ஷார்ட் தேர்வு படுமோசம்.

இவர் கிரீசில் இருந்த காலக்கட்டத்தில் 7 ஓவர்கள் பவு|ண்டரியே வரவில்லை. இதற்கு முஸ்தபிசுர் ரஹ்மானின் அற்புதமான பந்து வீச்சும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

கடைசியில் ஷனகா ஒரு சிக்ஸ் அடித்து வறட்சியை நீக்கினாலும், 2 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

19-வது ஓவரில் முஸ்தபிசுர் மீண்டும் அபாரமாக வீசி 5 ரன்களையே கொடுக்க, கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து வங்கதேச வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 76/1 என்ற நிலையிலிருந்து தோல்வி தழுவியது.

ஆட்ட நாயகனாக பேட்டிங்கில் 80 ரன்களை எடுத்த சபீர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக சபீர் ரஹ்மான் 4-வது ஓவரில் நுவன் குலசேகராவை 3 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார். தொடக்க வீரர்கள் மிதுன், சவுமியா சர்க்கார் இருவருமே ரன் எடுக்காமல் வெளியேறிய பிறகு சபீர், குலசேகராவை பதம் பார்த்தார்.

முஷ்பிகுர் ரன் அவுட்டுக்கு ஒரு விதத்தில் கார|ணமான சபீர் அடுத்த பெரேரா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி தன் உறுதிப்பாட்டை நிரூபித்தார். 13-வது ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்து சபீர் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். சிக்ஸுக்குப் பிறகு 2 பவுண்டரிகளையும் விளாசி ஜெயசூரியாவின் ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது சிக்சரை அடித்த சபீர் 54 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 80 அடித்து ஆட்டமிழந்தார்.

ஷாகிப் அல் ஹசன் 32, மஹ்முதுல்லா 23 ஆகியவை வங்கதேசத்துக்கு 147 ரன்களை வெற்றி ஸ்கோராக மாற்றியது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8295988.ece

 

  • தொடங்கியவர்

ஜக்கிய அரபு எமிரேட்ஸ்  130

 பாகிஸ்தான்        17/3

  • தொடங்கியவர்

ஆசியக்கிண்ணத்தில் இருந்து மலிங்கா விலகல்

February 29, 2016

இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்படுக் கொண்டிருப்பதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று நடந்த டி20 போட்டியில் இலங்கை- வங்கதேச அணிகள் மோதியது. இதில் வங்கதேசம் இலங்கை அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தியது.

Lasith-Malinga1

இந்தப் போட்டியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் மலிங்கா இடம்பெறவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவரான மேத்யூஸ் டி20 அணியை வழிநடத்தினார்.  போட்டி முடிந்த பிறகு மலிங்காவின் நிலை தொடர்பாக மேத்யூஸ் அளித்த பேட்டியில், “மலிங்காவை பற்றி உண்மையாக ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவர் காயம் குணமடையாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனாலே அவர் இன்றையப் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதேபோல் அடுத்த இரண்டுப் போட்டியிலும் அவர் இடம்பெறுவார் என்று கண்டிப்பாக கூற முடியாது. இதனால் அணியில் இருப்பவர்களை வைத்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9920&cat=2

  • தொடங்கியவர்

தோல்வியால் கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள்

February 29, 2016

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் மோதியது.

ஒரு ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மோதியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போட்டியை காண மிகவும் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் மோசமாக ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி, “இந்தியாவிடம் தோற்றது ஒன்றும் பெரிய விடயமல்ல” என்று கூறியது அந்நாட்டு ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்தது.

இதனால் நகரின் முக்கிய பல இடங்களில் ஒன்றுதிரண்ட ரசிகர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தவிர பல இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்தும், பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி அவரது உருவ பொம்மைகளைக் கொளுத்தியும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=9923&cat=2

  • தொடங்கியவர்

விராட் கோலிக்கு ஐ.சி.சி அபராதம்

February 29, 2016

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விராட் கோலிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மிர்புரில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோஹ்லி 51 பந்தில் 49 ஓட்டங்கள் குவித்தார்.

kholi

இந்தப் போட்டியில் அவர் மொகமது சமி பந்தில் எல்.பி.டபிள்.யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் பந்து தனது துடுப்பாட்ட மட்டையில் உரசிச் சென்றதை நடுவரிடம் துடுப்பாட்ட மட்டையை உயர்த்திக் காட்டினார். மேலும், சில தகாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இது ஐ.சி.சி.-யின் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. அவர் தனது தவறை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=9934&cat=2

  • தொடங்கியவர்
ஐ.அ.எமிரேட்ஸை 7 விக்கெட்களால் வென்றது பாகிஸ்தான்
2016-02-29 22:47:36

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வென்றது.

 

15242pakistan-vs-UAE.jpg


பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றது. சைமன் அன்வர் 42 ந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.


பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில்  மொஹமட் ஆமிர் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் இர்பான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


சொஹைப் மாலிக் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும்  உமர் அக்மல் 46 பந்துகளில் 50  ஓட்டங்களையும் பெற்றனர்.  


பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் அம்ஜத் ஜாவிட்  36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15242#sthash.7qUUykQQ.dpuf
  • தொடங்கியவர்

12799075_993979050650789_336915723736711

  • தொடங்கியவர்

இலங்கை  138/9

1656210_978858578846238_3741474053189839

  • தொடங்கியவர்

ஆசியக்கிண்ணத் தொடரில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் விலகல்

March 01, 2016

Mustafizur

ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக தமிம் இக்பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அந்தப் போட்டியில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9957&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.