Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தார் பிரபாகரன்? போர் விதிகளை மீறி கொல்லப்பட்டாரா? விசாரணைகளுக்கு தயாராகிறது அரசாங்கம்!

Featured Replies

போர் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தார் பிரபாகரன்? போர் விதிகளை மீறி கொல்லப்பட்டாரா? விசாரணைகளுக்கு தயாராகிறது அரசாங்கம்!
 
 
போர் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தார் பிரபாகரன்? போர் விதிகளை மீறி கொல்லப்பட்டாரா? விசாரணைகளுக்கு தயாராகிறது அரசாங்கம்!
போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? அவர் உயிருடன் பிடிபட்டாரா? என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 
 
இறுதிப் போரில் இடம்பெற்றவை எனக்கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன. 
 
இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டபோது, அவர் தெரிவித்தவை வருமாறு,
 
போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே சர்வதேச தரப்பினர் அவதானித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துகள் மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சரியான நடவடிக்கைகளை எடுக்கும். 
 
இறுதிப் போரில் இடம்பெற்றவை எனக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலும் வெள்ளைக்கொடி விவகாரத்திலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மூலமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அவ்வாறான தேவை இப்போது அரசாங்கத்திற்கு இல்லை. இப்போதிருக்கும் நிலையில் நாம் உள்ளக விசாரணைகள் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த விசாரணைகளில் இராணுவத்தை இலக்கு வைக்கும் நோக்கம் இல்லை.  போரின் போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் என்பதும் உண்மை. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் பலமாக முன்னெடுக்கப்படும். இப்போது சரத் பொன்சேகா பல இரகசிய தகல்களை கூறுகிறார். இப்போது அவரிடம் இருந்து உண்மைகளை அறியும் விசாரணையை ஆரம்பித்தல் மிகவும் சாதகமாக இருக்கும்.
 
இறுதிப் போர் சமயத்தில் பிரபாகரன் குறித்தும் ஆராய வேண்டியது அவசியம். அவர் போர் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா? அவர் பிடிக்கப்பட்டு போர் விதிமுறைகளுக்கு முரணாக கொல்லப்பட்டாரா என்பது குறித்து உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் 
 
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க,“இத்தனை காலமாக வெளிவராத உண்மைகள் இன்று உரிய நபரின் மூலமாக வெளிவந்திருப்பது முக்கியமான திருப்புமுனையாக உள்ளது.

இறுதி போரை வழிநடத்திய அப்போதைய இராணுவ தளபதியான சரத் பொன்சேகா மூலமாக இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றதையிட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது ஆரோக்கியமானது.

ஆனால் போரை எவ்வாறு முடித்தனர் என்பதில் தான் அனைத்துலக தரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது. போரின் இறுதி தருணங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, இதுவரை மகிந்த ராஜபக்ச தரப்பு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், போரை முன்னெடுத்து சென்ற தளபதியே இறுதி தருணத்தில் குற்றங்கள் இடம்பெற்றன வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் எனவும் கூறுவதை சாதாரணமாகக் கருதக்கூடாது.அனைத்துலக தரப்பின் பரிந்துரைகள் தொடர்பாக நாம் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இறுதி போரில் மோசமான தவறுகள் நடைபெற்றிருந்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என இனங்காணப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சரத் பொன்சேகா  முன்வைத்துள்ள கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். இறுதி போரில் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தால் அவை தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

இறுதிக் கட்டத்தில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலோ அல்லது புகழையும் பெயரையும் தக்கவைக்கும் வகையிலோ, ஒருசிலர் மோசமான வகையில் செயற்பட்டிருந்தால், சரத் பொன்சேகா கூறியதைபோல் மோசமான வகையில் இவர்கள் மக்களை கொன்று குவித்திருந்தால், அந்த குற்றங்கள் தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒருசிலர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றவாளிகளாக நிறுத்த முடியாது. இராணுவத்தை தலைமை தாங்கும் எவரேனும் தமது தனிப்பட்ட அதிகாரத்தில் மக்களை அழித்திருந்தால் அதை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டியது எமது கடமையாகும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த உண்மைகள் அனைத்தையும் கண்டறிய அரசாங்கம் முன்வரும். சமாதானம், நாட்டின் அமைதியான சூழல் மீண்டும் பாதிக்கப்படக் கூடாது. இப்போது வெளிவரும் உண்மைகளினால் மீண்டும் குழப்பகரமான சூழல் ஒன்று உருவாகிவிடக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

http://www.ntamil.com/30136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.