Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி….

Featured Replies

தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி….

 
511

 

விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை.

அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர்.

குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது.

சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப், ஆனந்த் அரவிந்தக்ஷன், சியாத் ஆகிய ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தப்போட்டியில் வெற்றி பெறுகிற போட்டியாளருக்கு அருண்எக்ஸல்லோ என்ற கட்டுமான நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடத்தில் 70 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை பரிசாக வழங்குகிறது.

அதன்படி, ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ இறுதிப்போட்டியில் ஆனந்த் அரவிந்தக்ஷன் வெற்றி பெற்று 70 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாக வென்றார்.

ஃபரீதா இரண்டாம் இடம் பிடித்து 10 லட்சம் பரிசு பெற்றார்.

ராஜகணபதி மூன்றாம் இடம் பிடித்தார்.

லட்சுமிக்கு நான்காவது இடம்.

சியாத்துக்கு ஐந்தாவது இடம்.

‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியை தொடக்கத்தில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு, ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு முதல் பரிசு வழங்கியது மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

காரணம்… முதல் பரிசுக்கு தகுதியானவர் உண்மையிலேயே ஃபரீதாதான்.

‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியை தொடக்கம் முதல் பார்த்து வருபவர்களின் எதிர்பார்ப்பும் இப்படித்தான் இருந்தது.

ஒருவேளை ஃபரீதாவுக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்றால் சியாத் அல்லது ராஜ கணபதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தநிலையில், யாருமே எதிர்பாராதவிதமாக யூகப்பட்டியலில் கூட இல்லாத ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு முதல் பரிசை அறிவித்து 70 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் வழங்கியது விஜய் டிவி.

‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியில் பல தடவை எலிமினேட் செய்யப்பட்ட ஆனந்த் அரவிந்தக்ஷன், இறுதிப்போட்டிக்கும் கூட வைல்ட் கார்ட் என்கிற மறுவாய்ப்பு மூலம்தான் உள்ளே வந்தார்.

அவருக்கு முதல் பரிசு வழங்கியபோதே பல சந்தேகங்கள் எழுந்தன.

சூப்பர் சிங்கர் போட்டியில் நடுவர்களாக இருந்த சித்ரா உட்பட பலரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

அதன் காரணமாக ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனமும் காதில் விழுந்தது.

இந்நிலையில் ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ நிகழ்ச்சியில் மிகப்பெரிய மோசடியும், கண்துடைப்பு நாடகமும் நடத்தப்பட்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ இறுதிப்போட்டியில் ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதில் மிகப்பெரிய மோசடியும், முறைகேடும் நடைபெற்றுள்ளது அம்பலமாகி இருக்கிறது.

முதல் பரிசு பெற்ற ஆனந்த் அரவிந்தக்ஷன் ஏற்கெனவே பல திரைப்படங்களில் 10க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

supersingerஆரோகணம், நீர்ப்பறவை, பாண்டியநாடு, 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, காடு, ஒன்பதுல குரு, மதயானைக் கூட்டம் உட்பட பல படங்களில் பாடியிருக்கிறார்.

இவற்றில் ஆரோகணம், நீர்ப்பறவை ஆகிய படங்கள் 2012 ஆம் ஆண்டில் வெளியான படங்கள்.
காடு, ஒன்பதுல குரு, இவன் வேற மாதிரி, மத யானைக் கூட்டம், பாண்டியநாடு ஆகிய படங்களும் கூட ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டி தொடங்கப்பட்டதற்கு முன்னரே வெளியான படங்கள்.

ஆக, பல படங்களில் பின்னணி பாடியுள்ளதை மறைத்து ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் ஆனந்த் அரவிந்தக்ஷன்.

இதில் உச்சகட்ட காமெடி அல்லது கொடுமை என்ன தெரியுமா?

10 எண்றதுக்குள்ள, பாண்டியநாடு படங்களில் ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு பாட வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் இமான், ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார்.

அப்போது, இமானும் கூட தன்னுடைய இசையமைப்பில் ஆனந்த் அரவிந்தக்ஷன் ஏற்கனவே பாடியிருக்கிறார் என்ற உண்மையை சொல்லாமல் மறைத்ததுதான்.

ஆனந்த் அரவிந்தக்ஷன் ஏற்கனவே பல படங்களில் பாடியிருக்கிறார் என்ற உண்மை விஜய் டிவிக்கு தெரியாமல் இருக்குமா?

நிச்சயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

தெரிந்தே இப்படியொரு மோசடியில் விஜய் டிவி ஈடுபட்டது ஏன்?

supersinger1விஜய் டிவி செய்த இந்த மோசடி விவகாரம் வெளியே தெரிந்ததும், சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பல பாடல்களைப் பாடிய ஒரு பின்னணிப் பாடகரை சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொள்ள வைத்ததே முதல் அயோக்கியத்தனம்.

அதன் பின், சரியாகப் பாடவில்லை என்று காரணம் சொல்லி அவரை போட்டியிலிருந்து நீக்கிவிட்டு, மீண்டும் ‘வைல்ட் கார்டு’ மூலம் அவரை உள்ளே வரவைத்து, இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட அயோக்கியத்தனம்.

விஜய் டிவி இப்படி ஒரு மோசடியை செய்து ரசிகர்களை மட்டும் ஏமாற்றவில்லை, 70 லட்சம் மதிப்புள்ள வீட்டை இலவசமாக வழங்கிய அருண் எக்ஸல்லோ நிறுவனத்தையும் சேர்த்தே ஏமாற்றி இருக்கிறது.

இதற்கிடையில், வேலைவெட்டியில்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப்பார்த்த அப்பாவி பொதுமக்கள் பலரும், ஆனந்த் அரவிந்தக்ஷன் மிகப்பெரிய மோசடியைச் செய்திருப்பதால், அவரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, உண்மையான திறமைசாலியான (இரண்டாவது பரிசை வென்ற) ஃபரீதாவுக்கு முதல் பரிசைக் கொடுக்க வேண்டும் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிய ஆனந்த் அரவிந்தக்ஷனும், விஜய் டிவியும் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மோசடிக்கு விஜய் டிவி என்ன விளக்கம் சொல்லப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே தமிழர்களின் பொருண்மியத்தை விழுங்கும் வியாபார மோசடின்னு எத்தினை தரம் சொல்லியாச்சு. திரும்பத் திரும்ப தெரிஞ்சு கொண்டும் தப்புப் பண்ண தமிழன் முட்டாளாக இருப்பதற்கு விஜய் ரீவியை குற்றம் சொல்லி ஒரு பிரயோசனமும் இல்லை.

தமிழனா பார்த்து திருந்தா விட்டால்.. இந்த பகற்கொள்ளையர்களை துரத்தவே முடியாது. tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்
சூப்பர் சிங்கர் தேர்வில் மோசடியா? விஜய் டிவி விளக்கம்!
 
Vijay TV's explanation on Super Singer 5 results
 
 சூப்பர் சிங்கர் போட்டித் தேர்வில் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் கலந்து கொள்ளத் தடை ஏதுமில்லை. எனவே விதி மீறல் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து ரூ 75 லட்சம் பரிசு வென்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
 
 
சென்ற வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆலுமா டோலுமா பாடலைப் பாடிய ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், ராஜ கணபதிக்கு நடுவர்களின் விருது மட்டுமே கிடைத்தது.
 
 
வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள். முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. முதல் இரு இடங்களைப் பிடித்த ஆனந்த், பரீதாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் ஆனந்தின் தேர்வு குறித்து இணையத்தில் சர்ச்சை உருவாகியது.
 
 
ஆனந்த் ஏற்கெனவே சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, போன்ற 10 தமிழ்ப் படங்களில் பாடியுள்ளவர் என்கிற தகவல் அதில் வெளியானது. இதனையடுத்து, ஏற்கெனவே பின்னணிப் பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் எழுப்பினார்கள். இந்த சர்ச்சை குறித்து விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர், அளித்துள்ள விளக்கத்தில், "எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்தோ பாடகராக உள்ளவரோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று கூறப்படவில்லை.
 
ஆனந்த், ஆரம்பத்தில் அளித்த பேட்டியிலேயே தான் படங்களில் பாடியுள்ளதாகவும் ஆனால் தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் ஒரு மாற்றத்துக்காக சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
 
திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம்," என்று கூறியுள்ளார். இந்த விதிமுறை நீக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்திருந்தால், ஓரிரு பாடல்களோடு வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிறைய 'சிங்கர்கள்' பங்கேற்றிருப்பார்களே!

Read more at: http://tamil.filmibeat.com/television/vijay-tv-s-explanation-on-super-singer-5-results-039400.html
  • தொடங்கியவர்

கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி!

 

தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன்.

ஆனால் இவர் புதிய போட்டியாளர் அல்ல.ஏற்கனவே ஆரோகணம் திரைப்படத்தில் இந்த வான்வெளி விடியாதோ நீர்ப்பறவையில் யார் வீட்டு மகனோ,பத்து எண்றதுக்குள்ள படத்தில் கானா கானா உள்ளிட்ட பல பாடல்களை ஏற்கனவே திரைப்படங்களில் பாடியிருக்கிறார்.

lakshmi+2.jpg

இதையெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லாமல் மறைத்து நள்ளிரவு வரை காத்திருந்து ஓட்டு போட்ட ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறது விஜய் டிவி. பொது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் போட்டியில் பங்கேற்ற நடுவர்களுக்கு கூடவா இது தெரியாது. இல்லை விஜய் டிவி மறைத்திருக்குமா?

போட்டி என்பது புதியவர்களுக்கானது என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருக்கை நுனியில் உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்.ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்று மேற்படிப்பும் முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒருவன் மீண்டும் அதே தேர்வில் கலந்து கொண்டு அத்தனை மாணவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மறுபடியும் அந்த தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினார் என்கிற செய்தி வந்தால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிதான் இருக்கிறது விஜய் டிவியின் இந்த ஏமாற்று வேலையும்.

lakshmi+1.jpg

ஆரோகணம் படத்தில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன் பாடியது குறித்து படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘’ஆனந்த் அரவிந்தக்‌ஷன் ரொம்ப திறமையானவர்.ரொம்ப சின்சியரானவர்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் பாடப் போறதா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.எனக்கும் இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானதுனு அப்ப தெரியாது. அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். இப்ப அவரை பத்தின செய்திகள் வருவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் விஜய் டிவிக்கு தெரியாம நடந்திருக்காதுனு நான் நினைக்குறேன்.

ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சூப்பர் சிங்கர்னு டைட்டில் வாங்குறதுக்கு அவரோட நேரத்தையும் உழைப்பையும் கொட்டியிருக்கார். ஆனா அதெல்லாம் இன்னைக்கு ஒரு நொடியில மறைஞ்சுப் போச்சு. மக்களை மட்டுமில்ல... போட்டியாளர்களும் இப்ப பாதிக்கப்பட்டிருக்குறது வருத்தமா இருக்கு.

lakshmi+.jpg

வெளிநாட்டில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்திருக்கேன்.ஆனால் அங்கே என்னோடு போட்டியிட்டு ஒரு செஃப் வெற்றிப் பெற்றார். இதை நான் அப்பவே கண்டிச்சேன். இது போல நிறைய நிகழ்ச்சிகள் உதாரணம் சொல்லலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

ரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வதெல்லாம் உண்மை தானா?

http://www.vikatan.com/cinema/tamil-cinema/television/61041-lakshmi-ramakirshnan-says-about-vijaytv-super-sing.art

 

லக்ஸ்மி அக்கா, விஜய் டிவி மீதான கடுப்பை காட்டுகிறார்? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

விஜய் டிவி தமிழகத்தின் செல்லக்குரலுக்காண தேடல் என்ற பெயரை மாற்றிவிட்டு என்னவேணுமெண்டாலும் செய்யட்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி…

தமிழ் தொலைகாட்சிகளில் தரங்கெட்ட தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.