Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையின் தீர்வுத் திட்டம் தாமதம்! முழுமை பெறாமையால் 29ஆம் திகதியே சபைக்கு வரும்!

Featured Replies

வடமாகாண சபையின் தீர்வுத் திட்டம் தாமதம்! முழுமை பெறாமையால் 29ஆம் திகதியே சபைக்கு வரும்!
 
வடமாகாண சபையின் தீர்வுத் திட்டம் தாமதம்! முழுமை பெறாமையால் 29ஆம் திகதியே சபைக்கு வரும்!
வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வுத் திட்டம், நாளை நடைபெறும் மாகாண சபை அமர்வில் சமர்பிக்கப்படாது என்று தெரிய வருகின்றது. அரசியல் தீர்வுத் திட்டம் இன்னமும் முழுமைப்படுத்தப்படாமையால் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்விலேயே சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
அரசினால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வடக்கு மாகாண சபையும், புதிய அரசமைப்புக்கான கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. 
 
இந்தக் குழுவினர் மூன்று உப பிரிவுகளாகப் பிரிந்து அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வரலாறு சார்ந்த விடயம், அரசியல் ரீதியான விடயம், அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விடயம் என்று மூன்று குழுக்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தது. 
 
மூன்று குழுக்களும் தமது வரைபுகளை முன்வைத்து நேற்று மாலை, முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தது. இதன்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன. வழங்கக் கூடிய அதிகாரப் பகிர்வையே கோர வேண்டும் என்று ஒரு தரப்பினர் இதன் போது கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
13 ஆவது திருத்தத்தை தாண்டிய அதேவேளை சமஷ்டியை ஒத்த வகையில் தீர்வுத் திட்டம் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சியை மையமாக வைத்தே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூன்று குழுக்களினதும் வரைபுகளை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் தீர்வு தயாரிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவை என்பதால், இதனை நாளை நடைபெறும் அமர்வில் எடுத்துக்கொள்ளாமல் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்வில் எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

வழங்கக் கூடிய அதிகாரப் பகிர்வையே கோர வேண்டும் என்று ஒரு தரப்பினர் இதன் போது கருத்துத் தெரிவித்துள்ளனர்.

யாரப்பா அது அவங்கள் தாறதை மட்டும் கேட்போம் என்பது. இன்றைய நிலையில்  சுமத்திரனின் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களா? அல்லது ஈபிடிபியா என்று குழப்பமாயிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வுத்திட்டம் எதையும் முன்வைக்காது ,கடந்த தேர்தல்களில் முன்வைக்கப்பட்டு மக்கள் ஆணை பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் தான் TNA யின் முன்மொழிவு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.