Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் தவிர்த்த இணக்க அரசியலுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவென்று சம்பந்தன் ஐயா மோசடி! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் கூட ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தயாராகவுள்ளோம் எனக் கூறக்கூடிய அளவுக்கு  நாம் நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம் என த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயா கூறியிருப்பதானது மாபெரும் மோசடியாகும். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையானது தேன் தடவிக்கொடுக்கும் ஆலகால விசத்திற்கு ஒப்பானதாகும்.

வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் கூட ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தயாராகவுள்ளோம் எனக் கூறக்கூடிய அளவுக்கு நாம் நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம் என த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயா கூறியிருப்பதானது மாபெரும் மோசடியாகும். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையானது தேன் தடவிக்கொடுக்கும் ஆலகால விசத்திற்கு ஒப்பானதாகும்.

   

ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் எதிர்காலமே சூன்யமாகிப்போன நிலையில் உலகத் தமிழர்கள் நிர்க்கதியாக நின்றது முதல் இன்றுவரை சம்பந்தன் அவர்களின் பேச்சும் செயற்பாடும் உலகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு நேர் விரோதமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், 'நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம்' என்று அதிரடியாக பேசி, ஆண்ட இனம் அதிகாரப் பகிர்வு கேட்பதில் என்ன தப்பு...? என்று மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

நாட்டைப் பிரிப்பதற்கு இடமில்லை. ஒன்றுபட்ட நாட்டுக்குள் ஒரு தீர்வை நாம் காண வேண்டும். 'இதில் இரண்டாம் கதைக்கு இடமில்லை' இதற்கு நாமெல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற ஆலகால விசத்தை உலகத்தமிழர்களிடையே திணிப்பதற்காகவே இவ்வாறு உலகத்தமிழர்களின் எண்ணங்களுக்கு அண்மித்ததான தேனொழுகும் தித்திப்பான பேச்சை பேசியுள்ளார் சம்பந்தன்.

ஒருமித்த – ஒற்றுமையான – பிரிவுபடாத நாட்டுக்குள் எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கப்பட்டு நாம் சமாதானமாக, ஒற்றுமையாக வாழ வேண்டிய நிலமை ஏற்படவேண்டும் எனக் கேட்கின்றோம். அதற்காக தமிழீழக் கோரிக்கையை நாம் கைவிட்டுள்ளோம் எனக்கூறியதுடன் நிற்காமல் புலம்பெயர் தமிழர்களையும் இதற்கு ஒத்துழைக்க வைத்துவிட்டோம் என்று பேசியதன் மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றி மாபெரும் மோசடி செய்துள்ளார்.

சிங்களம் மற்றும் சக்தி வாய்ந்த நாடுகளின் சதிகார நச்சுவட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள மதிப்பிழந்து போன சில புலம்பெயர் அமைப்புகளை மனதில் கொண்டு ஒட்டுமொத்த புலம்பெயர் மக்களையும் மாற்றிவிட்டதாக மோசடி செய்வதன் மூலம் உலகத்தமிழர்களை தம்பின்னால் வரவைத்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறார் போலும்.

தமிழினத்தின் விடுதலையில் உறுதிதளராத தமிழீழத் தேசியத் தலைவரைத் தவிர்த்து இன்னொருவரை உலகத்தமிழர்கள் தமது தலைமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வரலாறு புதிப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் சம்பந்தன் அவர்களை சிங்கள தேசமே எதிர்க்கட்சி தலைவராக்கியுள்ளதுடன் இவ்வாறெல்லாம் பேசவும் வைக்கின்றது.

தமிழீழத்திற்கு மாற்றான ஒரு தீர்வு என்பது உலகத்தமிழர்களது எண்ணங்களின் அருகில் கூட எப்போதுமே வரமுடியாது. கடந்த கால வரலாற்று படிப்பினைகள் வழிநடத்த அந்த இலக்கு நோக்கிய பாதையில் உலகத்தமிழர்களது எண்ணங்களை சுமந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பயணித்துவருகிறது.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

http://www.seithy.com/breifNews.php?newsID=154166&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்லரிகளோடு நின்றபோதே தந்தது அடி உதய் 
இப்ப கோமணத்துடன் நிற்கும்போது இந்தாங்கோ வைச்சுகொங்கோ என்று 
நாட்டையா பிரித்து தருவான் ???

சிங்களவன் ஒருவேளை புத்த மதத்தின் ஊடாக ஞானம் பெற்று 
நீங்கள் சுதந்திரமாக இருங்கள் என்று விட்டால் கூட ......
ஒட்டுண்ணி வாழ்வில் நக்கி சுகம் கண்ட எக்கால வீரர்கள் தோழர்கள் 
எஜமானியிடம் இருந்து துறவம் கொள்வாரோ ???

இனி எறிவதை எந்திவிட்டு விட்டு இருக்க வேண்டியதுதான்.

இனியாவது தமிழன் உழைத்து வாழ அடுத்த தலைமுறைக்கு கற்றுகொடுக்க வேண்டும்.
பிறர் உழைப்பில் வாழாதே என்று இனியாவது உணர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

wஅன் வாழும் நாடான பின்லாந்தில் யாரும் இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அன்றேல் எந்த ஒரு அமைப்புக்கோ இதுபற்றிக்கூறிடவில்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பின்லாந்தின் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என்பதை இத்தால் அறிவித்துக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.