Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டுக்கோட்டை தீர்மானம் - விட்டுக்கொடுக்க முடியாத தீர்மானம். ஈழத்தமிழ் இனத்தின் வெகுமானம் காக்கும் தீர்மானம். - மா. க. ஈழவேந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வட்டுக்கோட்டை தீர்மானம் - விட்டுக்கொடுக்க முடியாத தீர்மானம். ஈழத்தமிழ் இனத்தின் வெகுமானம் காக்கும் தீர்மானம். இது வரலாற்றின் திருப்புமுனையாக அமையும் வரலாறு படைக்கும் தீர்மானம்.     மா. க. ஈழவேந்தன்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (இலங்கை)   நாடு கடந்த தமிழீழ அரச உறுப்பினர் (கனடா பேராளர்)     இலங்கை என்பது ஒரு நாடு அல்ல. மாறாக இரு நாடுகளின் உள்ளடக்கம்- ஒரு தீவு. இலங்கையின் தென்பகுதி சிங்கள உடன்பிறப்புக்களுக்கு சொந்தம் என்பதை ஏற்கும் நாம் வடக்கை, கிழக்கை, வடமேற்கை கட்டி ஆண்டவன் தமிழன் என்பதற்கு வரலாறு தரும் சான்றுகள் கொண்டு நிலை நாட்டுகிறோம். விரிவஞ்சி மேலும் விளக்க விரும்பவில்லை.

வட்டுக்கோட்டை தீர்மானம் - விட்டுக்கொடுக்க முடியாத தீர்மானம். ஈழத்தமிழ் இனத்தின் வெகுமானம் காக்கும் தீர்மானம். இது வரலாற்றின் திருப்புமுனையாக அமையும் வரலாறு படைக்கும் தீர்மானம்.

மா. க. ஈழவேந்தன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (இலங்கை)

நாடு கடந்த தமிழீழ அரச உறுப்பினர் (கனடா பேராளர்)

இலங்கை என்பது ஒரு நாடு அல்ல. மாறாக இரு நாடுகளின் உள்ளடக்கம்- ஒரு தீவு. இலங்கையின் தென்பகுதி சிங்கள உடன்பிறப்புக்களுக்கு சொந்தம் என்பதை ஏற்கும் நாம் வடக்கை, கிழக்கை, வடமேற்கை கட்டி ஆண்டவன் தமிழன் என்பதற்கு வரலாறு தரும் சான்றுகள் கொண்டு நிலை நாட்டுகிறோம். விரிவஞ்சி மேலும் விளக்க விரும்பவில்லை.

   

விஜயன் இலங்கைக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பேயே கேதீஸ்வரம், கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம், முனீஸ்வரம் போன்ற தொன்மை வாய்ந்த கோயில்கள் வளமுடன் எழுந்திருந்தமைக்கு இந்து மதம் தழுவிய தமிழ் வணிகச் செல்வந்தர்கள் இந்நாட்டில் வாழ்ந்தமைக்கு வரலாற்று சான்றாய் விளங்குகின்றன என்று நடுநிலை வழுவாத சிங்கள வரலாற்று ஆசிரியர் சேர். போல் பீரிஸ் அவர்களின் கூற்று தலை சிறந்த சான்றாய் அமைகிறது.

எண்ணிலடங்காத புதைபொருள் ஆய்வுகள்- கல்வெட்டுகள் ஈழத்தி்ல் தமிழன் வாழ்ந்த இனம் மட்டுமல்ல ஆண்ட இனம் என்பதையும் ஏற்றமுற எடுத்துக் காட்டுகிறது. “ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு” என்று தமிழ் ஈழத்தின் அரசவைக் கவிஞர் காசி ஆனந்தன் விடுக்கின்ற வினா பொருள் பொதிந்ததாகும். 1926ல் முன்னால் நீதியரசர் ஐசக் தம்பையா தலைமையில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா நிகழ்த்திய உரை வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. “இலங்கை என்பது ஒரு நாடு அல்ல.

பல அரசுகளை உள்ளடக்கிய தீவு என்பதை நிலை நாட்ட வடகிழக்கை தமிழன் ஆண்டதையும், கண்டிய அரசை சிங்களவர் ஆண்டதையும், கோட்டை அரசை கரையோரச் சிங்களவர் ஆண்டதையும்” புட்டுக்காட்டும் பண்டாரநாயக்கா அவர்கள் ”இவ்வரசுகளை ஒன்றாக்கலாம் என்று ஒருவன் கூறுவானாயின் அவன் பொறுப்பற்ற கற்பனை வாதி” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “பொது எதிரியாகிய வெள்ளையனை எதிர்க்க இங்குள்ள இனங்கள் ஒன்றுபடக் கூடும். ஆனால் வெள்ளையன் வெளியேறும் நிலையில் ஒவ்வொரு இனமும் தத்தம் தனித்துவத்தை நிலை நாட்ட பிரிந்து போவது தவறில்லை. அது இயற்கையானது” என்று கூறிச் சென்ற கூற்றை யாம் அனைவரும் ஏற்றே ஆகவேண்டும்.

ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயன்றதன் விளைவாக தெளிவோடு சிந்தித்து அரசியல் நெறியை கடைப்பிடித்தார். பின்பு பதவி வெறி பிடித்து அலைந்த நிலையில் அரசியலில் குத்துக்கரணம் அடித்ததற்கு நாம் பொறுப்பில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் தம் அரசியல் வேட்டைக்காக- வெறிப் போருக்காக தடம் புரள்வதற்கு தமிழர்கள் பலிக்கடாக்கள் ஆக மாற முடியாது. 2002ம் ஆண்டு கொழும்பில் வெளிவரும் “சுடர் ஒளி இதழில் தமிழன் ஏமாந்த வரலாறும், தமிழன் ஏமாற்றப்பட்ட வரலாறும்” யான் எழுதிய 22 தொடர் கட்டுரைகள் தமிழனை விழிப்போடு இருக்கச் செய்யும் என்பது என் நம்பிக்கை.

நாடு கடந்த தமிழீழ அரசு வெளிப்படையாக மக்கள் ஆட்சியில் நம்பிக்கை வைத்து உலகளாவிய அளவில் இயங்கும் ஓர் அரசாங்கம். புகலிட அரசு (Government in Exile) ஒரு நாட்டில் மட்டும் இயங்கும் அரசு. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் புகலிட அரசாங்கத்திற்கும் நிறைய அடிப்படை வேறுபாடுகள் உண்டு. புகலிட அரசு ஒரு நாடு தழுவியது. நாமோ உலகம் தழுவிய அரசியல் அமைப்பு. குரல் அற்ற மக்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பு எம் அமைப்பு (we are the voice of voiceless people at home) இலங்கையில் வெறி கொண்ட சிங்கள அரசு 6வது திருத்தத்தை தன் கையில் வைத்துக் கொண்டு ஈழம் என்ற சொல்லையே எம் தமிழன் உச்சரிக்க விடாது எம் வாயைப் பூட்டியுள்ளது.

அந்த வெற்றிடத்தை நிரப்பி தமிழரின் விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுக்கின்ற அரசாங்கமே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். எவரும் தாங்க தயங்கும் மிகப்பெரிய பொறுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுள்ளது. உண்மையில் எம் இனம் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் அரசாங்கமே எம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (we are providing the leadership in a crisis- our function is unsurpassed in history and we must be proud of our performance)

தமிழீழம் என்பது நாம் இல்லாத ஒன்றை கேட்கவில்லை. இருந்ததை, இழந்ததை மீண்டும் நிலை நாட்டுகிறோம். பிரிவினை என்பது தப்பான சொல்லாட்சி. சிங்களவர் நம்மை ஆண்டதும் இல்லை. நாம் அவர்களால் ஆளப்பட்டதும் இல்லை. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் தமிழகம் 55,000 சதுர மைல் கொண்ட நிலப்பரப்பு. அங்கு ஏறக்குறைய 8 கோடி தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும் பெரிய எல்லைப்பரப்பு கொண்ட தமிழகம் 1337ல் 14ம் நூற்றாண்டில் அந்நிய படைக்கு அடிபணிந்த பின்பு மீண்டும் தலை தூக்கவில்லை.

ஆனால் தமிழீழம் எல்லைப்பரப்பு சிறியதாயினும் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைந்ததாயினும் 1619ல் போர்த்துக்கேயர் படையெடுப்பின் விளைவாக நல்லூர் சங்கிலி மன்னருடைய ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அதே வேளையில் பண்டார வன்னியனின் வழங்கா வன்னி மண் 1803ம் ஆண்டு - 19ம் நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சியில் நிலைபெற்று இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. எனவே தமிழகத்தை மிஞ்சுகின்ற அளவுக்கு ஈழத்தில் தமிழர் ஆட்சி நிலைத்து நின்றதற்கு இது சான்று கூறுகின்றது. எனவே ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் எதுவித குற்றமோ, குறையோ இல்லை.

தேசியம், தாயகம், தன்னுரிமை நிலை நாட்டல் எமது இயக்கத்தின் அடிப்படை கோட்பாடு. எமது உயிர் கோட்பாட்டை வட்டுக்கோட்டை மாநாடு 40 ஆண்டுகளுக்கு முன் மே 14ல் நிறைவேற்றியுள்ளது. தமிழனின் வெகுமானம் காக்கும் இத் தீர்மானத்தை எம்மவர் மறந்துவிடாது இருக்கவே நாமும் இவ்வாண்டு கூட்டத்தை கூட்டுகிறோம். தமிழீழ தந்தை செல்வா முன்மொழிய இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது நாம் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய வரலாற்று குறிப்பாகும். இதையொட்டி ஆண்டு மலர் வெளியிடுகிறோம். தமிழ் இனத்தின் அழிவை தடுக்கும் இம் மாநாட்டையும் நாம் வெளியிடும் மலரையும் ஒன்றுபட்ட நிலையில் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்.

நாம் உடலினால் பலராயினும் நாம் உள்ளத்தால் ஒருவர் என்பதை உலகிற்கு உணர்த்துகின்ற முறையில் வெள்ளம் போல் தமிழர் கூட்டம்- வீரம் கொள் தமிழர் கூட்டம் ஒன்று கூட வேண்டும். இங்குள்ள தமிழர் ஒன்றாக கண்டே எங்கோ பகைவர் மறைந்தார் என்ற நிலையை நாம் நம் சிந்தனையாலும், செயலாலும் உருவாக்கி வரலாறு படைக்கும் தலையாய பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=154367&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

வட்டுக்கோட்டை தீர்மானம் - விட்டுக்கொடுக்க முடியாத தீர்மானம். ஈழத்தமிழ் இனத்தின் வெகுமானம் காக்கும் தீர்மானம். 

 

நாங்கள் இப்படி சொல்ல சிறிலங்காவும் ,சர்வதேசமும் துட்டு க்கு இரண்டு கொட்டைபாக்கு என்று எங்களுக்கு திருப்பி சொல்லியினம்....நாங்கள் என்ன செய்யிறது...:rolleyes:

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.