Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை புதியநகர் அபிவிருத்தித் திட்டத்தினை தமிழர் ஒருமித்து எதிர்ப்பு

Featured Replies

3525_1460387837_12988133_842710572523716

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமோர் நடவடிக்கையாக 11.04.2016 திங்கள் இன்று கல்முனை தமிழ் பிரதேசசெயலக கோட்போர் கூடத்தில் பிரதேசசெயலாளர் திரு.கே.லவநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு நகரஅபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விளக்கமளிப்பதற்காக வந்திருந்தனர்.

கல்முனை புதியநகர் அபிவிருத்தி என்ற வேலைத்திட்டத்தின் கீல் விவசாயம் செய்கை பண்ணப்படுகின்ற குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய காணிகளையும் கிராமங்களாகவும் உள்வாங்கி கடைத்தொகுதிகள், வீட்டுத்திட்டங்கள் ,விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை அமைத்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற ஒரு பாரிய திட்டமொன்று கல்முனையில் முஸ்லீம் அரசியல் வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதனை எதிர்த்து எதிர்ப்பதற்கான சரியான ஆதாரங்களையும் கல்முனை ஒட்டுமொத்த தமிழர்களால் முன்வைக்கப்பட்டதுடன் இதுவிடயமாக சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள்,அதிகாரிகள் ஆகியோருக்கு எழுத்து மூலமாகவும் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும், பயிரங்க ஆர்ப்பாட்ட மூலமாகவும் வெளிப்படுத்தி இருந்தனர்.

எனினும் இன்றுவரை ஏற்கனவே எடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த பதிலையும் எவரிடமிருந்தும் அறிவிக்காமல் அத்திட்டத்தின் மாதிரிப்படத்துடன் இன்று விளக்கமளிக்க முற்பட்டபோது அங்கே வருகை தந்திருந்த மாநகரசபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் உறுப்பினர்கள், பெண்கள் அமைப்பின் எல்லோரும் ஒரேமுகமாக இத்திட்டத்தினை எதிப்பதாகவும், ஏற்கனவே நாம் பலரிடம் பல வழிகளிலும் எதிப்பை தெரிவித்திருந்த நிலையிலும் அவர்கள் அரசியல் அதிகாரத்தை செலுத்தி எம்மை அடக்கி இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த எத்தனிக்கின்றனர் எனவே நாம் ஒட்டுமொத்த தமிழர்களும் இதனை எதிர்க்கின்றோம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தினை நடாத்தமுடியாமல் போகவே இடைநடுவில் கூட்டம் நிறைவுற்றது.

3525_1460387837_12966353_842710385857068   

3525_1460387837_12966029_842710435857063   

3525_1460387837_12968747_842710342523739   

3525_1460387837_12992979_842710472523726   

3525_1460387837_12966643_842710369190403  

http://battinaatham.com/description.php?art=3525

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

விடமாட்டோம் ....கடைசி வரை இந்த திட்டத்தை செயற்படுத்தமுடியாது 
...நகர அழகு படுத்தல் என்று காணி உருவும் முயற்சி ......நன்றாக கவனித்துப்பாருங்கள் பொதுமக்கள் மட்டுமே இதனை ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள் 
கூத்தமைப்பின் எந்தத்தலையும் தட்டுப்படவில்லை... ....நாளை இதே கூத்தமைப்பு வரும் நாங்கள் தான் எதிர்த்தோம் என்று ..அப்போது இவர்களின் மொள்ளமாரி அரசியலுக்கு பதிலடி கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கிழக்கு மாகாண தமிழனின் கடமை 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கண்ணியா பறிபோனதற்கோ அல்லது கோணேஸ்வரம் பறிபோனதற்கோ தனது எதிர்ப்பை காட்டனவரே இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

விடமாட்டோம் ....கடைசி வரை இந்த திட்டத்தை செயற்படுத்தமுடியாது 
...நகர அழகு படுத்தல் என்று காணி உருவும் முயற்சி ......நன்றாக கவனித்துப்பாருங்கள் பொதுமக்கள் மட்டுமே இதனை ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள் 
கூத்தமைப்பின் எந்தத்தலையும் தட்டுப்படவில்லை... ....நாளை இதே கூத்தமைப்பு வரும் நாங்கள் தான் எதிர்த்தோம் என்று ..அப்போது இவர்களின் மொள்ளமாரி அரசியலுக்கு பதிலடி கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கிழக்கு மாகாண தமிழனின் கடமை 

திராய்கேணி அட்டைப்பள்ளம் ஆலங்குளம் புதிய வளத்தாப்பிட்டி அம்பாறையில் மட்டக்களப்பிலும்  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பறி போகிறது 

கல்முனை நகரை 2004 ம் ஆண்டு புதிய நகராக அதாவது மார்கட் பகுதியை புதிய கட்டிடங்களாக அமைத்துக் கொடுக்க செல்வேசன் ஆர்மி முன் வந்தது ஆனால் அப்போது சிலரால் அது தடுக்கப்பட்டது காரணம் கல்முனை நகர் தமிழர்களின் கையில் சென்று விட கூடாது என்று அது இன்னும் தொடர்ந்து கொண்டு செல்கிறது 

கல்முனை நகர் தமிழர்களின் கையில் இருந்து பறி போனது பல காலம்  இப்ப கவலைப்பட்டு என்ன ஆக போகிறது ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

விடமாட்டோம் ....கடைசி வரை இந்த திட்டத்தை செயற்படுத்தமுடியாது 
...நகர அழகு படுத்தல் என்று காணி உருவும் முயற்சி ......நன்றாக கவனித்துப்பாருங்கள் பொதுமக்கள் மட்டுமே இதனை ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள் 
கூத்தமைப்பின் எந்தத்தலையும் தட்டுப்படவில்லை... ....நாளை இதே கூத்தமைப்பு வரும் நாங்கள் தான் எதிர்த்தோம் என்று ..அப்போது இவர்களின் மொள்ளமாரி அரசியலுக்கு பதிலடி கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கிழக்கு மாகாண தமிழனின் கடமை 

கூட்டமைப்பை இன்னும் நம்பிக் கொண்டு இருக்கின்றீர்களா? அக்னியஷ்த்ரா.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, முனிவர் ஜீ said:

கல்முனை நகரை 2004 ம் ஆண்டு புதிய நகராக அதாவது மார்கட் பகுதியை புதிய கட்டிடங்களாக அமைத்துக் கொடுக்க செல்வேசன் ஆர்மி முன் வந்தது ஆனால் அப்போது சிலரால் அது தடுக்கப்பட்டது காரணம் கல்முனை நகர் தமிழர்களின் கையில் சென்று விட கூடாது என்று அது இன்னும் தொடர்ந்து கொண்டு செல்கிறது 

கல்முனை நகர் தமிழர்களின் கையில் இருந்து பறி போனது பல காலம்  இப்ப கவலைப்பட்டு என்ன ஆக போகிறது ??

இருப்பதையாவது காத்துக்கொள்ள வேண்டும் பாருங்கோ ...விட்டால் முழுதாக டோசர் போட்டு எங்களை மூடி விட்டுவிடுவினம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.