Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடாகும் இலங்கை

Featured Replies

720_content_thinakkural_p21_17-04-2016_c

இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ளகடும் வெப்பநிலை, வரட்சி காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாகவும், மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் இந்த வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் உயர் வளிமண்டல வெப்பநிலையில் காணக்கூடியதாக உள்ள பிராந்திய மாற்றங்களுக்கு முக்கியமாக அகலாங்குகளை விட நெட்டாங்குகளின் மாற்றமே தாக்கம் செலுத்துகின்றது. காலத்திற்குக் காலம் சூரியனின் பயணத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட ஒருசில புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாதாந்த சராசரி வெப்பநிலை சிறிதளவு வேறுபடும். ஆனால் இம்முறை அதிகளவு வேறுபட்டுள்ளது. அதனாலேயே இலங்கை தகித்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் வருடாந்த சராசரி வெப்ப நிலையினை நோக்கும் போது தாழ் நிலப் பிரதேசத்தில் பொதுவாக சமநிலையான வெப்ப நிலையையும் மேட்டு நிலங்களில் விரைவாக குறைவடையக் கூடிய வெப்ப நிலைத் தன்மை ஒன்றினையும் வெளிக்காட்டுகின்றது.

தாழ் நிலங்களில் 27.5பாகை செல்சியஸ் வருடாந்த வெப்ப நிலையுடன், 100 மீ. முதல் 150 மீ. நெட்டாங்கு வரையில் 26.5 பாகை செல்சியஸ் முதல் 28.5பாகை செல்சியஸ் வரையில் இருப்பதுடன், வருடாந்த சராசரி வெப்பநிலை மாறுபடும். மேட்டு நிலப் பகுதியில் நெட்டாங்கு அதிகரிப்பதனால் மிகவும் விரைவாக வெப்ப நிலையானது குறைவடைகின்றது.

டல் மட்டத்திலிருந்து 1800 மீ இற்கு மேலே அமைந்துள்ள நுவரெலியாவின் வருடாந்த சராசரி வெப்ப நிலையானது 15.9பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது. மாதாந்த சராசரி வெப்ப நிலையின் பிரகாரம் மிகவும் குளிரான மாதமாக ஜனவரி மாதம் விளங்குவதுடன், மிகவும் வெப்பமான மாதங்களாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் உள்ளன.

இலங்கையிலே வளிமண்டலத்தின் வருடாந்த சராசரி வெப்ப நிலை மாற்றமானது கடந்த சில தசாப்தங்களாக குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினைக் காட்டி நிற்கின்றது.1961  1990 வரையிலான கால கட்டத்தில் சராசரி வளிமண்டல வெப்ப நிலையின் அதிகரிப்பு வேகமானது வருடாந்தம் 0.016 பாகை செல்சியஸ் முறையே அதிகரித்துள்ளது. பெரும்பாலும் அனைத்து காலநிலை அவதான நிலையங்களிலும் வளிமண்டலத்தின் சராசரி வெப்ப நிலை அதிகரிப்பில் முன்னேற்றம் ஒன்றினைக் காட்டியதுடன், ஆகக் கூடிய அதிகரிப்பு வேகமானது ஒரு வருட காலத்தில் 0.021பாகை செல்சியஸ் வீதம்  பதிவாகி இருந்தது.

இரவு காலத்தில் வருடாந்த வளிமண்டல சராசரி வெப்பநிலையானது உயர் அளவில் அதிகரிப்பொன்றினைக் காட்டியுள்ளது.  கடந்த காலத்திலே நாட்டின் பொதுவான வளி வெப்பநிலையானது அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக இரவு காலத்தின் மிகக் குறைந்த வெப்ப நிலை பகல் நேர ஆகக் கூடிய வெப்ப நிலையிலும் பார்க்க அதிகரித்தமையே என்பது தெளிவாகின்றது. இந்த அதிகரிப்பானது கடந்த நூற்றாண்டு முழுவதும் பூகோள வெப்ப நிலை அதிகரிப்பிற்கு சமமானதாகும்.

இந்த அதிகரிப்பிற்கு பச்சை வீட்டு விளைவானது அரைப் பகுதி அளவில் தாக்கம் செலுத்தி உள்ளதுடன், அண்மைக் காலமாக இடம்பெற்ற துரித நகரமயமாக்கலின் விளைவாக அதிகரித்த பிராந்திய வெப்பநிலை அடுத்த காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கு  எதிரான மனித நடவடிக்கைகளும் இதற்கு பிரதான காரணமாகவுள்ளன. இவ்வாறான நிலையில்தான் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாகவும், மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் இந்த வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கடந்த முப்பதாண்டு காலமாக இல்லாத வகையில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.  இதில் அதிகூடிய வெப்பநிலையாக வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதேவேளை பொலனறுவை மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. அனுராதபுரம், பொலனறுவை, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக வெப்பம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறினார்.

மலையகத்திலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை, கொழும்பில் 33 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் கடும் வரட்சியால் பயிர்கள் விவசாய நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மலையகத்தின் நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தில் 25 சதவீதம் வரை நீர்மட்டம் குறைந்துள்ளதுடன், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும், காசல்றீ, மவுசாகலை மற்றும் சமனல வௌ ஆகிய நீர்த்தேக்கங்களிலும் வெகுவாக நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் தற்போது கடும் உஷ்ணத்துடன் கூடிய வெப்பக் காலநிலை நிலவி வருவதால் மக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். காலநிலை மாற்றத்தினால் சிறுவர்கள், வயோதிபர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்ப நோய்களினால் பாதிக்கப்பட்டோரினால் வைத்தியசாலைகள் நிரம்பிவழிகின்றன. இவ்வாறான நிலையில்தான் கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்த பெப்ரவரி மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பெப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் சூழலுக்கு எதிரான செயற்பாடுகளினால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல்நினோ காரணமாகவும் இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை நிலவுகின்றது.

வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடுமென்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இத்திடீர் மாற்றம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடலும் வழமையிலும் அதிகமான வெப்பநிலையில் உள்ளது. அத்துடன் வான்வெளியில் உயர் அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாமையினாலும் மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளதென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக இக்காலப்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் வெப்பநிலை நிலவுவது வழமையாகும். எனினும் இம்முறை இந்தியாவில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வெப்பநிலை சற்று குறைவாகவே நிலவுவதாகவும் இலங்கையில் அதிகளவில் இருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் கூறுகின்றது.

 அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பொதுமக்களை அறிவுறுத்தும் பொருட்டு பல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதிக வெப்பநிலைக் காரணமாக வழமையிலும் கூடுதலான நீர் உடம்பிலிருந்து வெளியேறும் என்பதனால் சிறுவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரும் அடிக்கடி நீர் அல்லது நீராகாரங்களை பருக வேண்டும். களைப்பு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் பயிற்சிகள் செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் பழங்களை உட்கொள்ள வேண்டும். வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ் தாக்கமும் அதிகரிக்கும் என்பதனால் வைரஸ் தொற்றுக்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணிகள் இதுபோன்ற வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் தாய், சேய் இருவரும் பாதிக்கப்படுவதுடன் மருந்துகளை உட்கொள்வதும் பொருத்தமாகாது என்பதனால் அதிக சனநடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதனை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக சிறுவர்களும் குழந்தைகளும் பெருமளவில் கை,கால்,வாய் நோய்களுக்கு ஆளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளிடம் தோல் நோயொன்று பரவிவருவதாகவும் சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரை எச்சரிக்கையாக இருக்குமாறும் றுகுணு பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், இந்நோயானது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையில் மட்டும்தான் பரவும் இது வெகிர்குரு போன்று குழந்தைகளின் உடல்முழுவதும் பரவும் இதனை கிறீம் பாவிப்பதால் கட்டுப்படுத்த முடியாது, வெப்பநிலை வழமைக்குத் திரும்பும்போது தானாகவே மாறிவிடும் என்றார்.

இலங்கையில்  தற்போது நிலவி வரும்  வழமைக்கு மாறான வெப்ப நிலை தொடர்பில் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்ப்பிணி பெண்களின் சாதாரண உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது கருவை பாதிக்கும் என மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

கர்ப்பிணி தாய்மாரின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. 38 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கர்ப்பிணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும்.

அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க கர்ப்பிணித் தாய்மார் அதிகளவு நீரை பருக வேண்டும் என்றார். அதிகரித்துள்ள வெப்பநிலைகாரணமாக பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டிய விழிப்புணர்வு செயற்பாடுகள் குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை டாக்டர் எஸ். கோகுலேந்திரா கூறுகையில்,

அதிக வெப்பநிலை காரணமாக வழமையிலும் கூடுதலான நீர் உடம்பிலிருந்து வெளியேறும் என்பதனால் சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார் உள்ளிட்ட அனைவரும் அடிக்கடி நீர் அல்லது நீராகாரங்களை பருக வேண்டும். களைப்பு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் பயிற்சிகள் செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார். இதேவேளை வரலாறு காணாத வகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பம் மற்றும் வரட்சி காரணமாக இலங்கையில் அதிக வருமானத்தை பெற்று தரும் மூல பயிர்ச்செய்கையான தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை பயிர்ச் செய்கையில் 50 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் இதனால் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.மேலும் சில தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் தமது நிறுவன நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று கடும் வெப்பநிலையாலும் பருவமழை பொய்த்துப் போயுள்ளதாலும் விளைச்சல் நிலங்கள் வறண்டு பயிர்ச்செய்கைகள் கருகிப் போயுள்ளதால் விவசாயிகள் பாரிய நஷ்டங்களுக்குள்ளாகியுள்ளனர். சுற்றுச் சூழலுக்கு மனிதன் செய்த கேட்டின் விளைவுகளை தற்போது நாம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். தற்போது வெப்பத்தின் வடிவில் எம்மைத் தாக்கும் காலநிலை இன்னும் எத்தனை வடிவங்களில் எம்மை மிரட்டப்போகின்றது என்பதனை போகப் போகத் தெரிந்து கொள்ளவும் அனுபவித்துக் கொள்ளவும் முடியும்.

720_content_thinakkural_p21_17-04-2016_c

http://www.thinakkural.lk/article.php?article/9vpswywarf6870e474e8520814460zkddr50a6f3d13f268666736f33wfviv#sthash.KIU23NMn.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன ஏக்கர் கணக்கில காட்டை வெட்டி இராணுவ முகாம்கள் அமைச்சால்.. மழையா பெய்யும்.... சொறீலங்காவில் மாதனமுத்தாக்களின் ஆட்சி உள்ள வரை இலங்கைத் தீவு வெப்பமாகிக் கொண்டே போகும். ஒரு நாள் பாலைவனமாகும். சிங்களவன் கதி அம்போ. கூட அவனுக்கு அடிவருடும் பிறரும் அம்போ. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வெயில் தாங்க முடியாத நிலை மத்திய கிழக்கு போல இருக்கிறது வட கிழக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

ரியாலின் பெறுமதிக்கு ருபாயும் இருந்தால் வெய்யில் சுப்பர்... ஜீ...!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ரியாலின் பெறுமதிக்கு ருபாயும் இருந்தால் வெய்யில் சுப்பர்... ஜீ...!

அட ஆமாப்பா 

ஆனால் உப்பு பை ஒன்றின் விலை ஐம்பது ரூபாய்யப்பா ??

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் குழாய் போட்டு பாருங்க தண்ணிக்கு பதிலா ஒயில்  தான் வருதோ தெரியல வல்லிபுரம் மணல்காட்டு பக்கம் இப்பவே  ஒட்டகம் இருந்தால் அரபி டென்ட் அடிச்சு இருந்திடுவான் tw_anguished:tw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.