Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (Video)

Featured Replies

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (Video)

 


 
 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (Video)

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜயானந்த மூர்த்தி கலந்து கொண்டிருந்தார்.

லண்டனில் தமக்கு வாழ்வதற்கான சகல வசதிகளும் உரிமைகளும் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கிலேயே மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார்.

இவரையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் அவருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.

காணொளியில் காண்க…

http://newsfirst.lk/tamil/2016/04/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9/

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயனந்த மூர்த்திக்கு லண்டனில் வாழ ராணி கூப்பிட்டு வசதி எல்லோ செய்து கொடுத்தவா. உவரும் மனிசியும் அசைலம் அடிக்க.. லண்டனில் லோயர் லோயரா அலைஞ்ச செய்தி ஊருக்கு எங்க தெரியப் போகுது என்ற துணிவில்.. எடுத்து விடுறார் போல. tw_angry::rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

ஜெயனந்த மூர்த்திக்கு லண்டனில் வாழ ராணி கூப்பிட்டு வசதி எல்லோ செய்து கொடுத்தவா. உவரும் மனிசியும் அசைலம் அடிக்க.. லண்டனில் லோயர் லோயரா அலைஞ்ச செய்தி ஊருக்கு எங்க தெரியப் போகுது என்ற துணிவில்.. எடுத்து விடுறார் போல. tw_angry::rolleyes:tw_blush:

அரசியலில்,  இது எல்லாம் சகஜமப்பா.... tw_blush:

3649_1461226234_index.jpg

மூக்குடைபட்ட கிழக்குமாகாண உறுப்பினர் ஐனா

 

வாழைச்சேனை மீராவோடை புதுவருடவிளையாட்டு விழா 20/04/2016 புதன்கிழமை மீராவோடை யில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்தியும்,கிழக்குமாகாண ரெலோ உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் எனும் ஐனாவும் கலந்து கொண்டனர்.
முதலில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி உரையாற்றினார்.

அவர் தமது உரையில் கடந்தகாலத்தில் தாம் மேற்கொண்ட தமிழ்தேசிய அரசியல்பணிகள் அதனூடாக தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அதனால் தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாம் தமிழ்தேசிய அரசியல்பணிகளையும் 
மாவீர்ர் களின் தியாத்தினையும் வெகுவாக பாராட்டி பேசினார் இதனால் ஜெயானந்தமூர்த்தியின் பேச்சுக்கு மக்கள் பாராட்டுதலும் கைதட்டல்களும் இடம்பெற்றன பொன்னாடை மாலைகளும் ஜெயானந்தமூர்த்திக்கு வரவேற்பை கொடுத்தன.

இவரின் பேச்சுக்கு அடுத்தபடியாக மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஐனா) உரையாற்றினார் அவரும் ஜெயானந்தமூர்தியின்பாணியில் தாமும் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடியதாகவும்
அதனாதான் சிலகாலம் பிரித்தானியாவில் புலம்பெயர நேர்ந்ததாகவும் கூறினார்.

இதைகேட்டுக்கொண்டிருந்த ஒரு இளைஞன் மேடையில் திடீரென ஏறி அவரின் ஒலிவாங்கியை பறித்து ஐனாவின் களுத்தை பிடித்து இளுத்து  நீர் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்துத்தான் லண்டன் போனீர் உமக்கு மாவீர களையும் புலிகளையும் கதைக்க  எந்த தகுதியும் இல்லை 2009 மேமாதம் புலிகள் மௌனித்த பின்பு தான் நாட்டுக்கே வந்தாய் உன்னைபற்றி உமது ரெலோவை பற்றி எப்படியானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் நீர் புலிகளைபற்றி தமிழ்தேசியத்தைபற்றி கதைக்காமல் உமது மாகாணசபையைபற்றி கதையும் என கூறுனார்.

உடனே ஜனாவுக்கு அசடுவடிந்த நிலையில் மேடையில் இருந்து இறங்கியதை நேரடியாக காணமுடிந்தது.

ஜனா தாமும் ஒரு தேசிநவாதியென பலமுறை காட்டமுயன்றாலும் மட்டக்களப்பு மக்கள் இவரின் கடந்தகால துரோகத்தை இன்னும் மறப்பதற்கில்லை என்பதை இந்த சம்பவம் கோடிட்டுக்காட்டியது.

இந்த நிகழ்வில் ஜெயானந்மூர்திக்கு அமோகவரவேற்பும்,ஜனாவுக்கு ஏனோதானோ என்ற வரவேற்பும் இடம்பெற்றதை எமது நிருபர் சுட்டிக்காட்டினார்.

 

3649_1461226234_IMG_0919.JPG  

http://battinaatham.com/description.php?art=3649

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.