Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஸ்ரீலங்கன்: நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கு உள்ளது : பலவந்தமாக முகாமுக்குள் செல்லவில்லை: சம்பந்தன் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. ஏன் என்றால் நான் இந்நாட்டு குடிமகன். எனினும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று என்னால் கூற முடியாது. அவ்வாறு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நினைத்தால் அதற்கான உரிமை எனக்கும் உள்ளது. நான் இலங்கையன் எனும் போது ஏன் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.r.sambanthan-army-camp22.jpg

நாட்டை பிரிக்கவோ துண்டாக்கவோ நாம் கோரவில்லை. ஒரே நாட்டுக்குள்ளே அதிகாரத்தை கோருகின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

தனி மாகாணம் வேண்டும் என கேட்பது ஒரே நாட்டுக்குள் தான். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை. 

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனவே அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும். இதேபோன்றே தெற்கில் சிங்களவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நாட்டை பிரிக்க வேண்டும் என யாரும் கோரவில்லை. எல்லோரும் இலங்கையர்களே. நாட்டை யாரும் பிரிக்க முடியாது. 

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்காக சென்றிருந்தேன். கலந்துரையாடல் முடிவின் போது சிலர் என்னிடம் வந்து, எமது இடத்தின் ஒரு பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது.   இதனை நேரடியாக சென்று பாருங்கள் என்றனர்.

இதனையடுத்து நான் இராணுவ முகாமுக்குள் சென்றேன். என்னை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. நானும் பலவந்தமாக செல்லவில்லை. அங்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் நான் அங்கு சென்று பார்த்தேன். மக்கள் கூறியது போல அவர்களின் இடம் சூறையாடப்பட்டிருந்தது. நான் ஒன்றும் கூறவில்லை. இவ்விடயம் தொடர்பாக  அரசாங்கத்திடம் கதைக்கின்றேன் எனக்கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கு இரண்டு மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர்.

நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு சென்று அவதானிப்பது வழமை.  இதேபோன்று கடந்த காலப்பகுதியில் வலிகாமத்துக்கும் சென்று பார்த்து வந்தேன். அங்கு இராணுவத்தினரும் இருக்கவில்லை. மக்களும் இருக்கவில்லை. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து பொதுமக்கள் பாவனைக்கு இடத்தை பெற்றுகொடுத்தேன். 

நான் நேரில் சென்று அவதானிப்பது எனது உரிமை. நான் பலவந்தமாக செல்லவில்லை. நான் வாகனத்தில் ஏறி வரும்போது இராணுவ அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம், சேர் நீங்கள் வருவீர்கள் என்று முன்னதாகவே அறிவித்து இருந்தால் நான் அதற்கென ஒருவரை ஏற்பாடு செய்து எல்லாவற்றையும் காணப்பித்து இருப்பேன் என்றார். ஆனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போகவில்லை. 

நாட்டைப் பிளவுப்படுத்தும் நபர்களே இவ்வாறான கதைகளை கூறுகின்றனர். நான் பலவந்தமாக செல்லும் மனிதன் அல்ல. நாட்டை இல்லாமல் செய்ய எத்தணிக்கும் உதயன்கம்பன்பிலவே இதனை முதலில் கூறியிருந்தார். அந்த மனிதரின் முகத்தை கூட பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதுதொடர்பில் எவருக்காவது விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் வந்து கதைக்க சொல்லுங்கள். அதைவிடத்து பொய் கூற வேண்டாம்.

 

http://www.virakesari.lk

நான் இலங்கையன்: நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமைகூட எனக்குண்டு!



நான் இலங்கையன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நினைத்தால் அதற்கான உரிமை எனக்கும் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை பிரிக்கவோ துண்டாக்கவோ நாம் கோரவில்லை. ஒரே நாட்டுக்குள்ளே அதிகாரத்தை கோருகின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனி மாகாணம் வேண்டும் என கேட்பது ஒரே நாட்டுக்குள் தான். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் கூறினார். 

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனவே அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும். இதேபோன்றே தெற்கில் சிங்களவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

நாட்டை பிரிக்க வேண்டும் என யாரும் கோரவில்லை. எல்லோரும் இலங்கையர்களே. நாட்டை யாரும் பிரிக்க முடியாதுஎன்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்காக சென்றிருந்தவேளையில் கலந்துரையாடல் முடிவின் போது சிலர் என்னிடம் வந்து, எமது இடத்தின் ஒரு பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இதனை நேரடியாக சென்று பாருங்கள் எனக் கோரியதாக குறிப்பிட்டார். 

இதனையடுத்து நான் இராணுவ முகாமுக்குள் சென்றேன். என்னை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. நானும் பலவந்தமாக செல்லவில்லை. அங்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. மக்கள் கூறியது போல அவர்களின் இடம் சூறையாடப்பட்டிருந்தது. நான் ஒன்றும் கூறவில்லை. இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்திடம் கதைக்கின்றேன் எனக்கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கு இரண்டு மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர் எனக் குறிப்பிட்டார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு சென்று அவதானிப்பது வழமை என்றும் இதேபோன்று கடந்த காலப்பகுதியில் வலிகாமத்துக்கும் சென்று பார்வையிட்டதாகவும் குறிப்பிட்ட அவர் இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து பொதுமக்கள் பாவனைக்கு இடத்தை பெற்றுகொடுத்ததாகவும் கூறினார்.

நான் நேரில் சென்று அவதானிப்பது எனது உரிமை. நான் பலவந்தமாக செல்லவில்லை. நான் வாகனத்தில் ஏறி வரும்போது இராணுவ அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம், சேர் நீங்கள் வருவீர்கள் என்று முன்னதாகவே அறிவித்து இருந்தால் அதற்கென ஒருவரை ஏற்பாடு செய்து எல்லாவற்றையும் காணப்பித்து இருப்பேன் என்றார். ஆனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டைப் பிளவுப்படுத்தும் நபர்களே இவ்வாறான கதைகளை கூறுகின்றனர். நான் பலவந்தமாக செல்லும் மனிதன் அல்ல. நாட்டை இல்லாமல் செய்ய எத்தணிக்கும் உதயன்கம்பன்பிலவே இதனை முதலில் கூறியிருந்தார். அந்த மனிதரின் முகத்தை கூட பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதுதொடர்பில் எவருக்காவது விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் வந்து கதைக்க சொல்லுங்கள். அதைவிடத்து பொய் கூற வேண்டாம் என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார். 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131548/language/ta-IN/article.aspx

முன்னறிவிப்பின் பின்னரே இராணுவ முகாமுக்குள் நுழைந்தார் சம்பந்தன்!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள், முன்னறிவிப்புச் செய்து விட்டே சென்றார் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் தகவல் வெளியிடுகையில்,

”எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சரியான நெறிமுறைகளுக்கு ஏற்பவே பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றிருந்தார்.

அதுபற்றி இலங்கை இராணுவத்தினால் எந்த காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்படவில்லை.

அவர் தனது பயணத்துக்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார். தமது வருகை தொடர்பாக, யாழ். படைகளின் தளபதிக்கு, தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை. அதனால் எந்த காவல் நிலையத்திலும், முறைப்பாடு செய்யப்படவில்லை.

முக்கிய பிரமுகர்களின் வருகை தொடர்பாக, முன்கூட்டியே அறிவிப்பது பற்றி, கிளிநொச்சிப் படைகளின் தளபதி, வடக்கு பிரதிக்காவல்துறை மா அதிபருடன் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அது முறைப்பாடு அல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : Puthinappalakai

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Athavan CH said:
நான் இலங்கையன்: நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமைகூட எனக்குண்டு!


எவருக்காவது விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் வந்து கதைக்க சொல்லுங்கள். அதைவிடத்து பொய் கூற வேண்டாம் என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார். 

 

 

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.