Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து எதிர் இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

 

101 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற வேளை, தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.

அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய முஈன் அலி ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை குவிக்க அலக்ஸ் ஹெலிஸ் (Alex Hales) 83 ஓட்டங்களையும் ரூட் 80 ஓட்டங்களையும் விளாசினர்.

இதனையடுத்து, தனது முதலாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்த இலங்கை அணி, 43.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 101 ஓட்டங்களைப் பெற்ற வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

இதன்படி, 397 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்க மீண்டும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்கியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=80208

  • Replies 50
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
England 498/9d
Sri Lanka 101 & 297/5 (f/o) (81.2 ov)
Sri Lanka trail by 100 runs with 5 wickets remaining
  • தொடங்கியவர்

சதம் அடித்தார் சந்திமால்

சதம் அடித்தார் சந்திமால்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டவாது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய தினேஸ் சந்திமால் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=80240

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு இலக்கு 79

 

 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 475 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற வேளை, தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.

அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய முஈன் அலி ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை குவிக்க அலக்ஸ் ஹெலிஸ் (Alex Hales) 83 ஓட்டங்களையும் ரூட் 80 ஓட்டங்களையும் விளாசினர்.

இதனையடுத்து, தனது முதலாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்த இலங்கை அணி, 43.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 101 ஓட்டங்களைப் பெற்ற வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதன்படி, 397 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்க மீண்டும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்கியது.

இம்முறை அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய தினேஸ் சந்திமால் 126 ஓட்டங்களைக் குவித்ததோடு மெத்தியூஸ் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

எனவே இங்கிலாந்து அணிக்கு 79 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=80241

England 498/9d & 80/1 (23.2 ov)
Sri Lanka 101 & 475 (f/o)
England won by 9 wickets
  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை இலங்கையணி முன்னேறுகிறது...இனிங்ஸ்சால் தோத்து விடுவார்கள் என்று நினைத்தேன்.இங்கிலாந்து 9 விக்கெட்டுகளால் தான் வென்று இருக்கிறார்கள்

  • தொடங்கியவர்
தினேஷ் சந்திமால் அபார சதம் ; எனினும் இரண்டாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து வெற்றி
2016-05-30 21:36:20

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.


 இங்கிலாந்தின் செஸ்டர்லீஸ்ட்ரீட்டில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 498 ஓட்டங்களைக் குவித்தது.

 

16956dinesh.jpg

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்து ஃபொலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்டது.


எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 475 ஓட்டங்களைக் குவித்தது. தினேஷ் சந்திமால் 126 ஓட்டங்களைக் குவித்தார். ஏஞ்சலோ மெத்தியூஸ் 80 ஓட்டங்களையும் ரங்கன ஹேரத் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

16956_england-vs-Sri-lanka-600.jpg

 


போட்டியின் 4 ஆவது நாளான இன்று இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு 79 ஓட்டங்களே தேவையான நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.  இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து இந்த இலக்கை அடைந்தது.  

 

அலெக்ஸ் ஹேல் 11 ஓட்டங்களுடன் மிலிந்த சிறிவர்தனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அணித்தலைவர் அலஸ்டெயார் குக் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும்  நிக் கொம்ப்டன் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகனாக ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16956#sthash.i9iRbaVf.dpuf

13315734_1253511574667936_49521188138775

Tendulkar
Ponting
Kallis
Dravid
Sangakkara
Lara
Chanderpaul
Jayawardene
Border
Waugh
Gavaskar
Cook

The 10,000 Club

 

  • தொடங்கியவர்

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு தொடர்பில் சந்தேகம்

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு தொடர்பில் சந்தேகம்

 

இலங்கை அணி வீரர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்றையதினம் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது.

இதன் போதே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளால், இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுனிசில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • தொடங்கியவர்
3ஆவது போட்டியை வெல்ல முயல்வோம்: மத்தியூஸ்
 
31-05-2016 05:29 PM
Comments - 0       Views - 7

article_1464685358-TamilwilltrywronLEAD-இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து, இத்தொடரை இழந்துள்ள போதிலும், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், உயர்வான மனநிலையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

முதலாவது போட்டியில் ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை அணி, 2ஆவது போட்டியின் முதல் இனிங்ஸில் இங்கிலாந்து பெற்ற 498 ஓட்டங்களுக்குப் பதிலளித்து, 101 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது. பொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, டினேஷ் சந்திமாலின் 126, அஞ்சலோ மத்தியூஸின் 80, ரங்கன ஹேரத்தின் 61, கௌஷால் சில்வாவின் 60 ஓட்டங்களின் துணையோடு, 475 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி, வெற்றியிலக்கான 79 ஓட்டங்களை, ஒரு விக்கெட்டை இழந்து அடைந்திருந்தது.

இப்போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்திருந்தாலும், முதலாவது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வி, இப்போட்டியின் முதல் இனிங்ஸில் காணப்பட்ட நிலைமையைத் தொடர்ந்து, அவ்வணி மீளப் போராடிய விதம் ஆகியன, பாராட்டைப் பெற்றிருந்தன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மத்தியூஸ், 'முதல் இனிங்ஸின் பின்னர், அணிக்குள் போராட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து நாம் கதைத்தோம். இரண்டாவது இனிங்ஸில், ஏராளமான மீளும் தன்மையை வெளிப்படுத்தினோம். முழு துடுப்பாட்டப் பிரிவாலும், அது சிறப்பான பெறுபேறாகும்" எனத் தெரிவித்தார்.

இலங்கை அணி, போட்டிகளில் தோற்றாலும், அவற்றில் போராடியே தோற்றும் வழக்கத்தைக் கொண்ட அணி என்ற பெருமையைக் கொண்டிருந்தாலும், முதலாவது போட்டியில் போராட்டமே இல்லாமல் தோல்வியடைந்திருந்ததோடு, இரண்டாவது போட்டியின் முதல் இனிங்ஸிலும் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது. இதன்படி, இத்தொடரில் அவ்வணி முதலில் துடுப்பெடுத்தாடிய 3 இனிங்ஸ்களிலும் போராட்டத்தை வெளிப்படுத்தாது, 150 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெறாமை குறித்துக் கலந்துரையாடியதாகவும், இலங்கையின் போராட்டக் குணத்தை மீளக் கொண்டுவருவது குறித்துக் கலந்துரையாடியதாகவும், மத்தியூஸ் தெரிவித்தார். இந்தப் போட்டியில் தோல்வியடைந்து, இத்தொடரை இலங்கை தோற்றுள்ள நிலையில், 3ஆவது போட்டி தொடர்பாக, இங்கிலாந்துக்கு அவர் எச்சரிக்கையை வழங்கினார்.

'இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. நாங்கள் தொடரை ஏற்கெனவே இழந்துள்ளோம். எனவே, நாம் சாதாரணமாகச் சென்று, (மூன்றாவது) போட்டியை வெல்ல முயல வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில், இலங்கையின் ரங்கன ஹேரத்தின் 300 விக்கெட்டுகள், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சனின் 450 விக்கெட்டுகள், அலஸ்டெயர் குக்கின் 10,000 ஓட்டங்கள் ஆகிய மைல்கல்கள் அடையப்பட்டிருந்த நிலையில், அம்மூவருக்கும் தனது வாழ்த்துகளையும், அஞ்சலோ மத்தியூஸ் வெளிப்படுத்தினார்.

- See more at: http://www.tamilmirror.lk/173463#sthash.B0dO2xuQ.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை அணியில் மீண்டும் தரங்க, மஹ்ரூப்

 

இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின்  ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ்  ஆகியோர் இணைத்துக்  கொள்ளப்பட்டுள்ளனர்.

Srilanka.jpg

இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த வீரர்கள் விரைவில் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

http://www.virakesari.lk/article/7324

  • தொடங்கியவர்
மூன்றாவது டெஸ்ட் நாளை: வெள்ளையடிப்பைத் தவிர்க்குமா இலங்கை?
 
08-06-2016 08:20 PM
Comments - 0       Views - 51

article_1465390297-Tamil3epreLEAD.jpgஇங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, இங்கிலாந்தின் பிரசித்திபெற்ற மைதானமான லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி மாலை 3.30க்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று, இலங்கையை வெள்ளையடிக்க எதிர்பார்த்திருக்கும் நிலையில், அதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அணி, கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிரண்டு போட்டிகளில், 2ஆவது போட்டியின் 2ஆவது இனிங்ஸைத் தவிர, ஏனைய 3 இனிங்ஸ்களிலும் இலங்கை அணியின் துடுப்பாட்டம், மிகவும் மோசமாகக் காணப்பட்டது. எனினும், 2ஆவது போட்டியின் 2ஆவது இனிங்ஸில் இலங்கை அணி விளையாடிய விதம், அவ்வணிக்குத் தன்னம்பிக்கையை வழங்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, லோர்ட்ஸ் மைதானத்தில் ஆடுகளம், துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள், சிறப்பாக விளையாட எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை, இப்போட்டியில் குசால் பெரேரா விளையாடலாம் என்ற தகவல், அதிக நம்பிக்கையை வழங்கியிருக்கும். அவர் விளையாடுவாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்காத போதிலும், இலங்கையின் மோசமான துடுப்பாட்டப் பெறுபேறுகள் காரணமாக, அவரைச் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காணப்படுகிறது.

அத்தோடு, பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷமின்ட எரங்க, இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக, சமின்ட பண்டார, தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை - திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தனஃலஹிரு திரிமான்ன, குசால் பெரேரா, ரங்கன ஹேரத், சமின்ட பண்டார, நுவான் பிரதீப், சுரங்க லக்மால்.

இங்கிலாந்து - அலஸ்டெயர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் கொம்ப்டன், ஜோ றூட், ஜேம்ஸ் வின்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ‡பின், ஜேம்ஸ் அன்டர்சன்.

- See more at: http://www.tamilmirror.lk/174258#sthash.NcZ9hPnM.dpuf
  • தொடங்கியவர்

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையிலேயே இப்போட்டி இடம்பெறுகின்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பாக குஷல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோரும் விளையாடுகின்றனர்.
 
  • தொடங்கியவர்

  இங்கிலாந்து  174/5 (59.0 ov)

  • தொடங்கியவர்

முதலாம் நாள்  ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி

279/6 (90.0 Ovs) Bairstow 107*, Woakes 23* - Lakmal, Pradeep & Herath with 2 wickets each

13415586_1846734845357714_81468770602605

  • தொடங்கியவர்
நிதானமான நிலையில் இங்கிலாந்து
 
10-06-2016 03:11 AM
Comments - 0       Views - 0

article_1465551789-Tamilh5zqoxjw.jpgஇலங்கைக்கெதிராக லோர்ட்ஸில் ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட்டின் முதலாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்று, நிதானமான நிலையில் உள்ளது.

தற்போது களத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 107 ஓட்டங்களுடனும் கிறிஸ் வோக்ஸ் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக, நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தது. இலங்கையணி சார்பாக காயமடைந்த மிலிந்த சிரிவர்தனவுக்கு பதிலாக, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்டு, தற்போது மீண்டும் திரும்பியுள்ள குஷால் பெரேரா அணியில் இடம்பெற்றார். தவிர, பந்தை வீசியெறிகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட ஷமின்ட எரங்கவும் இலங்கையணியில் இடம்பெற்றிருந்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/174396/ந-த-னம-ன-ந-ல-ய-ல-இங-க-ல-ந-த-#sthash.XP96ogFs.dpuf
  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணி 416 ஓட்டங்கள்: முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இலங்கை

Published by Pradhap on 2016-06-10 19:32:03

 

இலங்கைக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 416 ஓட்டங்களை பெற்றுள்ளது.

A6.jpg

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி பெயர்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் பெற்ற 167 ஓட்டங்களின் உதவியுடன் மொத்தமாக 416 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி சார்பாக பெயர்ஸ்டோவ் 167 ஓட்டங்களையும், குக் 85 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் சார்பாக ஹேரத் 4 விக்கட்டுக்களையும், லக்மால் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதேவேளை தற்பொது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி 7 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 32 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.virakesari.lk/article/7423

  • தொடங்கியவர்
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்
 
இங்கிலாந்து  416
ஸ்ரீலங்கா  162/1 (49.0 ov)
 
 
  • தொடங்கியவர்

உறுதியான பதிலடியை வழங்கும் இலங்கை
 
 

article_1465633011-Tamil5gkjdb9s.jpgஇலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லோர்ட்ஸில் இடம்பெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்துக்கு உறுதியான பதிலடியை வழங்கியுள்ளது.

தற்போது களத்தில், கௌஷால் சில்வா 79 ஓட்டங்களுடனும் குஷால் மென்டிஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முன்னதாக, திமுத் கருணாரட்ன 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஸ்டீவன ஃபின் வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில், இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜொனி பெயார்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 167 ஓட்டங்களையும் அலிஸ்டியர் குக் 85 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, ரங்கன ஹேரத் நான்கு விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் மூன்று விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் இரண்டு விக்கெட்டுகளையும் ஷமின்ட எரங்க ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/174431/உற-த-ய-ன-பத-லட-ய-வழங-க-ம-இலங-க-#sthash.EEpoqxKU.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்ததுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 288 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இலங்கை சார்பாக ரங்கன ஹேரத் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குஷல் சில்வா 79 ஓட்டங்களையும் கருணாரட்ன 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையிலேயே இப்போட்டி இடம்பெறுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=80580

  • தொடங்கியவர்

நடுவரிடம் மரியாதை குறைவாக நடந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எச்சரிக்கை

 
வெறுப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ஏ.பி.
வெறுப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ஏ.பி.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது நடுவர் எஸ்.ரவியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதையடுத்து இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கப்பட்டார்.

இதனை ஜேம்ஸ் ஆண்டர்சனே ஒப்புக் கொண்டதால் விசாரணை தேவையில்லை என்று கூறிய மேட்ச் ரெஃப்ரீ ஆன்டி பைகிராப்ட், ஆண்டர்சனை எச்சரித்து விடுவித்தார்.

இலங்கை அணியின் குசல் பெரேரா, ரங்கனா ஹெராத் இணைந்து ஆடிக் கொண்டிருந்த போது விக்கெட்டுகளை எதிர்பார்த்த வேகத்தில் வீழ்த்த முடியவில்லை. இதனால் வெறுப்படைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இலங்கை வீரர் ஹெராத்தை கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கி தனது வெறுப்பைக் காட்டினார்.

நடுவர் எஸ்.ரவி தலையிட்டு ஹெராத்தை ஸ்லெட்ஜ் செய்ய வேண்டாம் என்று ஆண்டர்சனை கண்டித்தார். ஆனால் ஆண்டர்சன் நடுவர் ரவியின் அறிவுரையை மதிக்கவில்லை.

அப்போது அலிஸ்டர் குக் மைதானத்தில் இல்லாததால் ஜோ ரூட் இங்கிலாந்து அணியை வழிநடத்திச் சென்றார். நடுவர் எஸ்.ரவி, தொடர்ந்து ரூட்டிடம் இது குறித்து ஆலோசனை நிகழ்த்தினார்.

இதனையடுத்து எஸ்.ரவி, ராட் டக்கர் ஆகிய கள நடுவர்கள், 3-வது நடுவர் அலீம் தார், 4-வது நடுவர் மைக்கேல் காஃப் ஆகியோர் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பினர். இதனையடுத்து ஆண்டர்சன் எச்சரிக்கப்பட்டார்.

ஜடேஜாவை ஒருமுறை ஓய்வறை அருகே கீழேதள்ளிய விவகாரம் உட்பட ஜேம்ஸ் ஆண்டர்சன் மைதானத்தில் தனது ஆக்ரோஷத்தை கிரிக்கெட் உணர்வுகளுக்கு எதிராக காட்டி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இலங்கை வெற்றி பெற 362 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் 32/0 என்று ஆடி வருகிறது, 5-ம் நாளான இன்று மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமாகி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/நடுவரிடம்-மரியாதை-குறைவாக-நடந்த-ஜேம்ஸ்-ஆண்டர்சனுக்கு-எச்சரிக்கை/article8724319.ece?homepage=true

  • தொடங்கியவர்
ஐ.சி.சியிடம் முறையிடுகிறது இலங்கை: அகற்றப்பட்டது கொடி
 
13-06-2016 10:13 AM
Comments - 0       Views - 1

article_1465818294-TamilslbreLEAD-Box.jpநுவான் பிரதீப் வீசிய பந்து, தவறான முறையில் முறையற்ற பந்தாக அழைக்கப்பட்டமை குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இந்தச் சுற்றுலாவில் இடம்பெற்ற அணி முகாமைத்துவம், இந்த முடிவு குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்த சுமதிபால, அது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு, இந்த முடிவை, ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதும், இலங்கையின் தேசியக் கொடியை, இலங்கையின் அணி முகாமைத்துவத்தினர், அணி தங்கியிருந்த மேல் மாடத்தில் காட்சிப்படுத்தினர்.

எனினும், லோர்ட்ஸ் மைதானத்தில் கொடிகளின் பயன்பாட்டுக்குத் தடை காணப்படுவதாக, லோர்ட்ஸ் மைதானத்தை நிர்வகிக்கும் எம்.சி.சி அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கொடியை, இலங்கை அணியினர் அகற்றியிருந்தனர்.

இலங்கை வீரர்கள் போராடிய போதிலும், இலங்கை வீரர்களுக்கு அதிர்ஷ்டம் காணப்பட்டிருக்கவில்லையென உணர்ந்ததாகத் தெரிவித்த பயிற்றுநர் கிரஹம் போர்ட், வீரர்களுக்குத் தங்களது ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவே, தேசியக் கொடியைக் காட்சிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

ஆனால், திலங்க சுமதிபால, அதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தினார். 'தேசியக் கொடியென்பது, ஒரு குறியீடு. அந்தத் தீர்ப்புக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பதைக் காட்டவே அது" என அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/174592/ஐ-ச-ச-ய-டம-ம-ற-ய-ட-க-றத-இலங-க-அகற-றப-பட-டத-க-ட-#sthash.y7e53722.dpuf
  • தொடங்கியவர்
England 416 & 233/7d
Sri Lanka 288 & 78/1 (24.2 ov)
Match drawn
  • தொடங்கியவர்

மூன்றாவது டெஸ்ட் சமநிலை: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழைக் காரணமாக சமநிலையில் முடிவடைந்தது.

jjjjj.jpg

362 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1 விக்கட்டினை இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மழைக் குறுக்கிட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி  2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகனாக  பெயர்ஷ்டோவ் தெரிவுசெய்யப்பட்டதுடன் இலங்கை அணி சார்பாக கவுஷால் சில்வா தொடர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/7528

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டில் இது புதுசு..! நடுவரின் முடிவுக்கு இலங்கை நூதன எதிர்ப்பு

Srilanka-Englandcricketmatchissue.jpg

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் உள்ள பால்கனியில் இலங்கை தேசிய கொடியை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் வீரர்கள் இப்படி எதிர்ப்பு காட்டியது இதுதான் முதன் முறையாகும்.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்னும், இலங்கை அணி 288 ரன்னும் எடுத்தன. 4வது நாளில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்த இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் 58 ரன்னில் இருக்கையில் நுவான் பிரதீப் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஆனால் நடுவர் ராட் டக்கர் (ஆஸ்திரேலியா) அதனை நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீபிளேயில் பந்து வீசுகையில் நுவான் பிரதீப்பின் கால் கிரீசை தாண்டவில்லை என்பது தெரிந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அணியின் மானேஜர் செனநாயகே, பயிற்சியாளர் கிரகாம் போர்டு ஆகியோர் போட்டி நடுவரை அணுகி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதற்கிடையில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் உள்ள பால்கனியில் இலங்கை தேசிய கொடியை பறக்கவிட்டனர். சுமார் 45 நிமிடம் தேசிய கொடி பறந்தது. மைதானத்துக்குள் தேசிய கொடியை அணி நிர்வாகம் பறக்க விடக்கூடாது. இது பற்றி அறிந்ததும் போட்டி அமைப்பு குழுவினர் இலங்கை அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடியை அகற்றினர்.

362 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், குஷல் சில்வா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தான் ஆட்டம் தொடங்கியது. குஷல் சில்வா 16 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்டு ஆனார். 24.2 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது.

http://www.vikatan.com/news/sports/65172-england-sri-lanka-3rd-test-match-drawn.art

  • தொடங்கியவர்

லோட்ஸில் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை தேசியக்கொடி ; விளக்கமளித்தார் மஹேல 

 

நடுவரின் தவ­றான தீர்ப்­பிற்கு எதிர்ப்புத் தெரி­வித்து லோர்ட்ஸ் மைதா­னத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை அங்­கி­ருந்து அகற்­று­மாறு லோர்ட்ஸ் மைதான நிர்வா­கிகள் கோரி­க்கை விடுத்ததையடுத்து தேசியக் கொடி அங்கி­ருந்து அகற்­றப்­பட்­டது.

Sri_Lanka_flag.jpg

இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 45 நிமிடங்களின் பின்னர் இலங்கை தேசியக்கொடி அகற்றப்பட்டுள்ளது.

 

இலங்கை - இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வதும் இறுதியுமான டெஸ்ட் போட்­டியின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் ஆடிக்­கொண்­டி­ருந்த இங்­கி­லாந்து அணி வீரர் ஹேல்ஸின் விக்­கெட்டை, நுவன் பிரதீப் வீழ்த்­தினார்.

போல்ட் முறையில் இந்த ஆட்­ட­மி­ழப்பு எடுக்­கப்­பட்­டது. ஆனால் நடு­வ­ரினால் நோபோல் என சைகை காட்­டப்­பட் ­டது. 

 

ஆனால்  ரீப்­ளேயில் அது நோபோல் அல்ல என்­பது தெளிவாகத் தெரிந்­தது. ஆனாலும் நடுவர் அந்தத் தீர்ப்பை மாற்­றிக்­கொள்­ள­வில்லை.

 

இதற்காகத்தான் இலங்கை தேசியக் கொடி லோட்ஸ் மைதானத்தின் இலங்கை அணியினர் அமர்ந்திருந்த பார்வையாளர் பகுதியில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த சம்­பவம் தொடர்பாக சர்­வ­தேச கிரிக்கெட் சபைக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியால் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

இதேவேளை, கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் MCC கொடியைத் தவிர வேறெந்தக் கொடிகளும் பறக்கவிட முடியாது எனும் சட்ட வரையறையை, இலங்கை அணியினர் மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

இதேவேளை, லோர்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தக்கூடிய நுவன் பிரதீப்பின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

 

3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த நுவன் பிர தீபின் 2 வாய்ப்புகள் அடுத்தடுத்து தவறவிடப்பட்டன. 

அதுமட்டுமல்லாது நடுவரின் தவறான நோபோலினால் வீழ்த்தப்பட்ட விக்கெட் இல்லாமல் போய்விட்டது என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகம் போர்ட் தெரிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன ஈஎஸ்பிஎன் கிரிக்கின்போ இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

 

 

நடுவர்களின் தீர்ப்புக் குறித்து கவலையை வெளிப்படுத்தியிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டவசமாக  நடுவர்களின் தீர்ப்பு இவ்வாறு நடப்பது வழமை.  இருப்பினும் நான் தேசியக் கொடி தொடர்பில் நிறைய கதைக்கவிரும்பவில்லை.

தீர்ப்பு தொடர்பில் அவர்கள் அவ்வாறு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பமில்லை. போட்டியின் இறுதிநாள் என்பதால் போட்டியில் வெற்றிபெறவேண்டும் மற்றும் அணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே அவ்வாறு கொடியை கட்டியிருக்கலாம். 

 

எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு செய்திருக்க முடியாது. இது ஒரு எதிர்ப்பாக இருக்க முடியாதென நான் நினைக்கின்றேன்.

 

அவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமானால் அது தொடர்பில் தரவுகளைப் பெற்று, கடிதமொன்றை எழுதி போட்டி நடுவரிடம் கையளிக்க முடியும்.

 

ஒன்றை மட்டும் சொல்ல முடியும் நாம் விளையாடுவது நம் தாய் நாட்டிற்காகத் தான். MCC ஒரு பாரம்பரியமான பிரதேசம் என்பதால் எந்தவொரு கொடியையும் அங்கு பறக்கவிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/7538

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.