Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனாமா ஆவணத்திலுள்ள 68 ஸ்ரீலங்கா பிரஜைகளின் பெயர்கள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனாமா ஆவணத்திலுள்ள 68 ஸ்ரீலங்கா பிரஜைகளின் பெயர்கள் வெளியீடு

[ Tuesday,10 May 2016, 04:54:34 ]   
the-panama-papers.jpg

சர்ச்சைக்குரிய பனாமா ஆவண புலனாய்வின் ஒர் பகுதியாக வெளிநாட்டு வங்கி கணக்குகளை வைத்துள்ள 65 ஸ்ரீலங்கா பிரஜைகள் தொடர்பான விபரங்களை புலனாய்வு ஊடகவிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

மூன்று வெளிநாட்டு துணை நிறுவனங்கள், ஏழு இடைதரகர்கள் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள 53முகவரிகள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ள ஆவணங்களில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக அவன்கார்ட் பாதுகாப்பு சேவை நிறுனத்தை சேர்ந்த மூவரின் பெயர்கள் இந்த ஆணங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க யாப்பா சேனாதிபதி, வை.ஏச்.பீ கித்சிறி மஞ்சுள குமார யாப்பா மற்றும் செனரத் பண்டார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் இந்த ஆவணங்களில் உள்ளமை தெரியவந்துள்ளது.

அவன்காட் நிறுவனம் தனது வெளிநாட்டு நடவடிக்கைகளை பிரித்தானியாவின் வேர்ஜின் தீவுகளில் முன்னெடுப்பதற்கு சிங்கப்பூரில் செயற்பட்ட மொஸிக் பொன்சேக்கா நிறுவனம் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா ஆவணங்களில் உள்ள ஸ்ரீலங்கா பிரஜைகள் குறித்து விசாரணை செய்வதற்கென விசேட குழுவொன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஏற்கனவே அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நவாடாவில் இருந்து கொங்ஹொங் மற்றும் பிரித்தானியாவின் வேர்ஜின் தீவுகள் வரை 21 அதிகார வரம்புகளுக்குள் இரண்டு இலட்சத்து 14 ஆயிரம் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டமை தொடர்பான இரகசியத்தை தகர்தெறியும் வகையில் தேடக் கூடிய தரவுத் தளமொன்றை புலனாய்வு ஊடகவிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.

பனாமா ஆவண புலனாய்வின் ஒர் பகுதியாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அதன்பின்புலத்தில் செயற்படும் நபர்கள் தொடர்பில் முன்எப்போதும் இல்லாத வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

2013 ஆம் ஆண்டு விசாரணைகள் மூலம் கசிந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மேலதிக வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான தகவல்களும் குறித்த தரவுத் தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தகவல்கள் வெளியிடப்படுவதாக புலனாய்வு ஊடகவிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

http://ibctamil.com/news/index/23415


பனாமா ஆவணங்களில் 53 பேர் இலங்கையர்
 
 

article_1462850368-5A.jpgபனாமாவில் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில், வரி ஏய்ப்புச் செய்வதற்காக பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படும் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரிவினர்களில், இலங்கையைச் சேர்ந்த 53 பேரும் இருப்பதாக துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை அறிவித்துள்ளது.

முன்னதாக அம்பலமாகாத இலங்கையர்களும் இதில், உள்ளடங்குவதாக பொன்சேகா சட்ட ஆலோசனை நிறுவனத்தில், 11.5 மில்லியன் ஆவணங்கள் வெளியாகியிருப்பதாகவும், கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக்குவதற்கும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் வரிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு இந்த நிறுவனம் உதவிபுரிந்துள்ளது.  

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இலங்கையைச் சேர்ந்த 46 பேர், அந்நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர் என்று தகவல் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/171823/%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%B0-#sthash.DUzvK18e.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

3 கொம்பனிகள்தான் ஸ்ரீலங்கா பெயரில் இருக்கிறது 
68பேர்கள் என்பது ?
உண்மையானதா ?
லிஸ்ட்டில் தேடினேன் பெரிதாக ஒன்றும் இல்லை 
 ஒருவேளை கிறிஸ்தவ பெயர்களாக இருக்குமா ??

நேற்று 2லட்சம் பெயர்  வெலியிட்டு இருக்கிறார்கள் எல்லோரும் பார்க்கலாம்.
நம்ம ஐஸ்வர்யா ராய் பொண்ணு ஒரு அரிசி கொம்பனி வைத்திருந்து இருக்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.