Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண்ணறிவு தேர்வில் இலங்கை சிறுமி சாதனை

Featured Replies

நுண்ணறிவு தேர்வில் இலங்கை சிறுமி சாதனை

 

நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட்  என்ஸ்டைனின் சாதனை  இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது.

 

340C893500000578-3585908-image-a-61_1463

இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால்  முன்னெடுக்கப்பட்ட  நுண்ணறிவுத் தேர்வில்  10 வயது சிறுமியான  நிஷி உக்கலே  கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

 

குறித்த இச்சிறுமி  தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

 

இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த  அவ் அமைப்பினர்  இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். 

340C894400000578-3585908-image-a-60_1463

இச்சிறுமி அல்பட்  அய்ன்ஸ்டைனை விட  2  புள்ளிகள் அதிகமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 

 

நிஷி உக்லேவின் பெற்றோரான நிலங்க மற்றும் ஷிரோமி  கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்தின் மென்சஸ்டர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். 

 

நிஷியின்  தந்தையான நிலங்க , மகளின் முன்பள்ளி  ஆசிரியர்களே எல்லாவற்றிற்கும் காரணம் என புகழ்ந்துள்ளார்.

அவர் தனது மகள் குறித்து மேலு தெரிவிக்கையில்,

340C897000000578-3585908-image-a-63_1463

அவள் எங்களுக்கு கிடைத்த வரம். வெகு சீக்கிரத்திலேயே அவள் எழுத படிக்க கற்றுக்கொண்டாள் , அத்துடன் அவள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுக்காணப்பட்டாள். 

நாங்களும் பல சுவாரஸ்யமான சோதனைகளை அவளுக்கு வழங்கினோம். எந்தப்பொற்றோரும் தமது  பிள்ளைகளின் திறமைகள் வீணாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இருப்பினும் அவர்களின் குழந்தைப்பருவத்தை சரி சமமான வகையில் பேணப்பட வேண்டும்.

அவளும்   ஏனைய சிறுவர்களைப்போல் 10 வயதுச்சிறுமி . அவளுக்கு படிக்கவும் சைக்கிள் ஓட்டவும் மிகவும் பிடிக்கும்.  அவள் குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன்.

கடந்த மாதம்  மென்சஸ்டரில் இடம்பெற்ற தேர்வை எழுதிய  முதல் குழந்தை  நிஷி ஆகும். முதல் தேர்வில் 150 கேள்விகளுக்கும்  விடையளித்தாள் , ஆனால் இரண்டாவது வினாத்தாளை சரியான நேரத்திற்குள் விடையளிக்க தவறிவிட்டாள்.

340C894900000578-3585908-image-a-62_1463

இது குறித்து சிறுமி நிஷி தெரிவிக்கையில்,

விடையளிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. அதேவேளை அவ்வளவு கடினமானதாகவும் இருக்கவில்லை . முதல் வினாத்தாள் எழுதி முடித்த பின் போதியளவு நேரம் இருந்தமையினால் விடைகளை சரி பார்க்க முடிந்தது என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/6292

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சங்கத்தில் கிட்டத்தட்ட 40 வருடங்களின்முன்  நானும் ஓர் அங்கத்தவராக இருந்துள்ளேன்.  பின்னர் அந்தத்தொடர்பு விடுபட்டுப் போய்விட்டது.    வயது ஏறஏற விவேகம் குறைவடையுமென்றே எண்ணுகிறேன்.   விவேகம் நல்ல நிலையில் இருக்கும் காலப்பகுதிக்குள் அதனை நன்கு பயன்படுத்தி முன்னுக்கு வந்துவிடவேண்டும்.  அல்லாவிடில் விவேக ஈவு குறைவடைந்து விடும்.

Edited by karu
சிறு வசனப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் இன்னுமொரு திரியில் நான் இதுபற்றி எழுதியிருந்தேன்,

இரண்டாம் வளர்முக நாடுகளிருந்து லண்டன்நோக்கி வரும் புலம்பெயர் மக்களது பணத்தினைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு அறிவுச்சலவையே இது.

இந்தச் சுத்துமாத்து நிறுவனம் எப்போது அல்பெர்ட் என்ஸ்டைனது புத்திக்கூர்மையைச் சோதித்தது

 

Albert Einstein

14 March 1879 – 18 April 1955) was a German-born theoretical physicist

Mensa was founded in England in 1946 by Roland Berrill

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.